Tag Archives: Cosmos Stories

சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 9

ஸ்மால்வில்லே, அமெரிக்கா.

க்ளார்க் கெண்ட்டின் 14 வயதில்…

மற்ற சிறுவர்களோடு விளையாட ஆசைப்படுவதை க்ளார்க் மறந்திருந்த காலம். பலரும் அவனை புறக்கணித்த நிலையில் அவனும் அவர்களை புறக்கணித்து தனியாக வாழ பழகிக் கொண்டிருந்தான். பள்ளிக்கு போகாமல் ஸ்மால்வில்லே வயல்களில் உலாவிக் கொண்டிருந்தான் அல்லது அப்பாவின் கேரேஜில் கிடந்த எந்திரங்களை சரிசெய்து பழகிக் கொண்டிருந்தான். அன்று மரத்தடியில் ஓய்வாக அமர்ந்து தனக்கு விருப்பமான ஹோப் மேன் காமிக்ஸை படித்துக் கொண்டிருந்தான். திடீரென அவனது காமிக்ஸ் புத்தகத்தை பிடுங்கியது ஒரு சிறுவர் கும்பல்.

“உக்காந்திருக்கது.. யார் பாத்தியா?” என்று நக்கலாக கேட்டான் ஒருவன்.

இன்னொருவன் ஒரு சிறு குச்சியை ஒடித்துக் கொண்டு வந்து க்ளார்க்கை அடிக்க தொடங்கினான். சுற்றியிருந்த மற்ற சிறுவர்கள் அதை பார்த்து சிரித்தனர்.

“என்னை அடிக்காதீங்க..தயவு செஞ்சு அந்த புக்கை என்கிட்ட குடுங்க.. ஏன் என்னை இப்படி பண்றீங்க?” க்ளார்க் கண்களில் அழுகையோடு கெஞ்சினான்.

“ஏன்னா.. உன்னை எங்களுக்கு புடிக்கலைடா!” என்றவாறே ஹோப்மேன் காமிக்ஸை கிழிக்க தொடங்கினான் ஒருவன். தனது தந்தை பரிசளித்த காமிக்ஸை கிழிப்பதை பார்த்த க்ளார்க் கோபமடைந்தான். மின்னல் வேகத்தில் மற்றவர்களை தள்ளிவிட்டு அவனை நெருங்கிய க்ளார்க் ஓங்கி ஒரு குத்துவிட்டான். க்ளார்க் அடித்த வேகத்தில் சில மீட்டர்கள் காற்றில் பறந்து வயலில் சென்று விழுந்தான் அந்த சிறுவன். அதை கண்ட மற்ற சிறுவர்கள் மிரட்சியுடன் க்ளார்க்கை பார்த்தனர்.

”நீ ஒரு சாத்தான்..” என்று கத்திவிட்டு அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடினர். க்ளார்க் மனதில் அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவன் தன் கைகளையே கோபத்தோடு பார்த்தான். அழுதுகோண்டே ஸ்மால்விலேயின் வயல்களில் ஓடி மறைந்தான்.

சிஐஏ ரகசிய அலுவலகம், டெல்லி

”சார் விஷயம் ரொம்ப சீரியஸ் ஆயிட்டு.. சூப்பர்மேனுக்கு எதிரா இந்தியா பிறப்பிச்சிருக்க உத்தரவுக்கு ஆதரவு தருவதா அமெரிக்காவும் தெரிவிச்சிருக்கு” சோகத்தோடு சொன்னார் ஆலன்.

“அப்படின்னா அமெரிக்க ராணுவ படைகள் இந்தியாக்குள்ள நுழைய போறாங்களா?” பென்

“இல்லை.. அதுக்கு இந்தியா ஒத்துக்க மாட்டாங்க. அமெரிக்காவோட எந்த பகுதியில சூப்பர்மேனை பார்த்தாலும் தாக்க உத்தரவு கொடுத்திருக்காங்க”

”உங்களால இதை தடுக்க முடியும் சார்.. நீங்க நிர்மல் ஜிட் சிங்கிட்ட பேசுங்க”

”அதுக்கு நமக்கு ஆதாரம் வேணும் பென். அவர்கிட்ட போய் ஸ்பேஸ்ஷிப் கதையை சொன்னா கை கொட்டி சிரிப்பார்”

“ஆனா சக்திமானையும், சூப்பர்மேனையும் நம்புறவங்க.. இதை நம்ப மாட்டாங்களா?”

”அவர் நம்ப மாட்டார் பென்.. அவருடைய எண்ணம் இந்த அழிவுகளை ஏற்படுத்துனது சூப்பர்மேன். பயங்கரவாதிகள் குடுத்த வாக்குமூலமும் அதைத்தான் சொல்லுது….”

”எஸ்க்யூஸ் மீ சார்.. டெல்லி அட்டாக் பத்தி புதுசா சில தகவல்கள் கிடைச்சிருக்கு” என்றபடி உள்ளே நுழைந்தார் பெண் அதிகாரி ஒருவர்.

ஆலனும், பென்னும் அந்த பெண் சொல்ல போவதை கேட்க தயாரானார்கள்.

“பயங்கரவாதிகள் டெல்லிக்குள்ள எப்படி வந்தாங்கன்னு ட்ரேஸ் பண்ணுன போது.. அவங்க விமானத்துலயோ, எல்லை வழியாகவோ ஊருறுவி வரலைன்னு தெரிஞ்சிருக்கு சார். சோ.. அவங்க கடல் மார்க்கமா உள்ள நுழைஞ்சிருக்கலாம்.”

அதை கேட்டதும் ஆலனுக்கு பொறி தட்டியது.

“பென்.. டெல்லி அட்டாக்ல நீ பாத்த ஸ்பேஸ்ஷிப் எந்த இடத்துல ஹைட் ஆனுச்சு?”

“மஹாராஷ்ட்ரா வரைக்கும் போறதை ட்ரேஸ் பண்ண முடிஞ்சது சார்”

“சரி.. உடனே நம்ம ஸ்பை சேட்டிலைட்டை மும்பை ஹார்பர் பக்கம் அனுப்புங்க.. மும்பை ஹார்பர் அப்புறம் அதை சுத்தி இருக்க பகுதிகள்ல கடந்த சில வாரங்கள்ல எந்த கப்பல்கள் வந்து போச்சுன்னு டேட்டாவை ரெடி பண்ணுங்க.. இல்லீகலா யாராவது வந்திருந்தா கூட நமக்கு தெரியணும். டூரிஸ்டா சுத்திட்டு இருக்க நம்ம ஏஜெண்டுகளுக்கு தகவல் குடுத்துடுங்க”

ஆலன் சொல்லிக் கொண்டிருந்தபோதே பென் எதையோ கண்டுபிடித்திருந்தான்.

”இதுக்கு மேல அவனை கண்டுபிடிக்க நாம கஷ்டபட தேவையில்லை சார்.. அவன் இங்கதான் இருக்கான்” என்றபடி ஒரு இமேஜை பெரிய திறையில் ஸூம் செய்து காட்டினான். அதில் லெக்ஸ் கார்ப் கப்பல் துறைமுகத்துக்கு அப்பால் நங்கூரமிட்டு நின்றதை அந்த படங்கள் காட்டியது.

ஆலன் சின்ன சிரிப்புடன் சொல்லிக் கொண்டார் “எதிர்காலத்துல நம்மளோட தொழில்நுட்பங்களை ரொம்ப டெவலப் பண்ண வேண்டியிருக்கு பென். எதிரிகள் நம்மை விட வேகமா இருக்காங்க”

”சார்.. அந்த ரிப்போர்டர்ஸை அங்கதான் அவங்க ஒளிச்சு வெச்சிருக்கணும். நாம உடனே நம்ம ஸ்குவாடை அங்க அனுப்பலாம்”

“லெக்ஸ் ஒரு பைத்தியம் பென். அவனை நம்ம யூகிக்க முடியாது.. ஆனா சிக்க வைக்கலாம்..!” ஆலனின் உள்ளத்தில் ஒரு திட்டம் தோன்றியிருந்தது.

மும்பை துறைமுகம்

ஒரு மிகப்பெரும் நாசகார செயலுக்கு லெக்ஸ் கப்பலில் பலர் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தனர். அவர்களிடையே லூயிஸையும், கீதாவையும் ஒரு ராட்சத ரோபோவின் முன்னாள் அழைத்து வந்து நிறுத்தியிருந்தான் லெக்ஸ் லூதர்.

”ஹே.. கீதா.. நேத்து போரடிக்கிதுன்னு ஒரு இந்திய படம் பாத்தேன். அதுல வில்லன் தான் செஞ்ச தப்பையெல்லாம் முழு மூச்சாய் விடாமல் ஹீரோவை கட்டிப்போட்டு சொல்லிக்கிட்டு இருப்பான். அதை பாத்ததும் எனக்கு சிரிப்புதான் வந்துச்சு” என்று சொல்லிவிட்டு லெக்ஸ் தனக்கு தானே சிரித்துக் கொண்டான்.

ஆனால் கீதா, லூயிஸ் முகத்தில் இருந்த கடுப்பு மாறவில்லை.

”சரி.. நானும் அந்த மாதிரி மணி கணக்கா பேசபோறதில்ல.. ஜஸ்ட் ஒரு சின்ன க்ளூ மட்டும் கொடுக்கிறேன். இந்த இயந்திர ரோபோதான் சூப்பர்மேன்கிட்ட இருந்தும், சக்திமான்கிட்ட இருந்தும் உலகத்தை காப்பாத்த போகுது.. ஆனா அதுக்கு எனக்கு கொஞ்சம் பவர் தேவை..”

“ஆமா..பவர்ர்ர்ர்” என்று அருகிலிருந்து கொண்டு கத்தினான் டாக்டர் ஜக்கால்.

அப்போது கப்பலில் அலாரம் ஒலிக்க தொடங்கியது. லெக்ஸின் வாக்கி டாக்கியில் அழைப்பு வந்தது.

”சார்.. சிஐஏ நம்ம தகவல்களை திருட முயல்றாங்க.. அதுவுமில்லாம கப்பலை சுத்தி ஆட்கள் நடமாட்டம் அதிகமா தெரியுது.”

“ஓ… ஆட்டத்தை தொடங்கிட்டாங்க போல நாமளும் நம்ம ஆட்டத்தை தொடங்க வேண்டியதுதான்”

லெக்ஸ் பேசுவதை துறைமுகத்தில் இருந்த ஹாம் தொழில்நுட்பம் மூலம் ட்ரேஸ் செய்து கேட்டுக் கொண்டிருந்தது சிஐஏ உளவு அமைப்பு.

அதன் படைவீரர்களில் ஒருவன் ஆலனை தொடர்பு கொண்டான். “சார் நம்ம ட்ரேஸ் பண்றது லெக்ஸுக்கு தெரிஞ்சிட்டு. அநேகமாக நம்ம மேல தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கு”

தனது அலுவலகத்தில் இருந்து அதை கேட்டுக் கொண்டிருந்தார் ஆலன். சிஐஏ ரகசிய படை சிறிய அளவிலான படகுகளில் லெக்ஸ் கப்பலை சுற்றி வளைத்திருந்தன. திடீரென லெக்ஸ் கப்பலில் இருந்து கடலுக்கு கீழிருந்து சில ஏவுகணைகள் தோன்றி ரகசிய படைகளின் படகுகளை நோக்கி விரைந்தன.

”டீம் மிசைல் அலர்ட்..” கரையிலிருந்த படை வீரர்கள் அலர்ட் செய்தனர். ஆனால் அதற்குள் ஏவுகணைகள் சுற்றியிருந்த படகுகளை தாக்கி அழித்திருந்தன. சில வீரர்கள் மட்டும் உடனடியாக கடலில் குதித்ததால் தப்பியிருந்தனர். ஆலனுக்கு செய்தி வந்தது.

”பென் உடனே சக்திமான் எங்க இருந்தாலும் கனெக்ட் பண்ண முயற்சி செய்” என்றார் ஆலன்.

சக்திமான் சூப்பர்மேனை தேடும் பணியில் தீவிரமாக இருந்தார். ஒருவேளை சூப்பர்மேன் அமெரிக்காவிற்கே சென்று விட்டாரோ என்று கூட நினைத்தார். எங்கு தேடியும் சூப்பர்மேனை காணாத நிலையில் தனது ரகசிய குகைக்கு செல்வதென்று முடிவெடுத்தார். எந்தவித பராமரிப்பும் இன்றி பாழடைந்து கிடந்தது அந்த குகை. அதன் வாயிலை பெரிய பாறையை வைத்து மூடியிருந்தார் சக்திமான். பாறையை அவர் விலக்கவும் சூரிய ஒளி குகைக்குள் பரவ தொடங்கியது. திடீர் வெளிச்சத்தால் மிரட்சியடைந்த எலிகளும் மற்ற பூச்சிகளும் தங்களது மறைவிடத்தை நோக்கி ஓடி மறைந்தன. சூரியனின் ஒளிக்கதிர்கள் அங்கு எந்தவித சலனமும் இன்றி இருந்த ஒரு உருவத்தின் மீது விழுந்ததை சக்திமான் கவனித்திருக்கவில்லை அல்லது கவனிக்காதது போல கடந்து சென்றார். சக்திமான் தான் உருவாகி வந்த அக்னி பீடத்தின் முன்பு அமர்ந்து சிறிது நேரம் அமைதியாக தியானம் செய்ய தொடங்கினார்.

”உலகத்தை காப்பாற்றுவதும் மக்களின் நன்மதிப்பை பெறுவதும் துறவிகளால் மட்டுமே ஆன காரியம் சக்திமான்”

சூப்பர்மேனின் குரல் கேட்டும் சக்திமான் முகத்தில் சலனமில்லை. சூப்பர்மேன் தொடர்ந்தார்.

“எனக்குன்னு உலகம் எதுவும் இல்லை துறவியே.. இந்த உலகம் என்னை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை. செத்துவிட முடிந்தால் நன்றாக இருக்கும்”

“அது உன்னால முடியாது க்ளார்க்.. சாவு இல்லாத வாழ்க்கை சில சமயங்களில் வரம்.. பல சமயங்களில் சாபம்.. இது மனிதர்களின் உலகம் க்ளார்க். இங்க வாழ நம்பிக்கைகள் தேவை.. உன்னோட நம்பிக்கை எதுன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா?”

”என்னுடைய நம்பிக்கை, ஆசை எல்லாம் இந்த உலகத்துல மனுஷங்களோட சக மனுஷனா வாழணும் என்பதுதான்.. ஆனால் ஒவ்வொரு தடவையும் நான் இந்த உலகத்தை சேந்தவன் கிடையாது வேற ஒருத்தன் என ஒதுக்கும்போதும் என் நம்பிக்கையை நான் இழக்கிறேன்”

”க்ளார்க் கெண்ட்டை உலகம் எப்போதும் ஏத்துக்கும் கால் எல். மக்களுக்கு நண்பனாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கது சூப்பர்மேன்தான். ஆனால் நீ யாரக இருப்பதில் நிறைவு அடைகிறாய் என்பதில்தான் உனது நம்பிக்கைகளும் இருக்கு. ஒரு க்ரிப்டோனியனாய் நீ சூப்பர்மேன். அதை மறைக்கும் வெளி வேஷம்தான் க்ளார்க் கெண்ட். நீ சூப்பர்மேனாய் இருக்கதானே விரும்புகிறாய்..”

“இல்ல.. இனி வெளி வேஷம்தான் முழு வாழ்க்கையும்.. இந்த உலகம் சூப்பர்மேன் இல்லாமலும் இயங்கதான் போகுது. உங்களை போல எத்தனையோ சூப்பர்ஹீரோக்கள் மக்களுக்கு உதவ இருக்காங்க. இனிமேல் இந்த உலகிற்கு சூப்பர்மேன் தேவையில்லை”

“அவசரத்தில் எடுக்குற எந்த முடிவும் ஆக்கப்பூர்வமானதா இருக்காது க்ளார்க். நீ வித்தியாசமானவனா இருக்கலாம். உன்னை பழி சொல்லவும், வாழ்த்தவும் உலகத்தில் மனிதர்கள் இருந்து கொண்டே இருப்பாங்க. நீ பழிகளை தாங்க பழகணும் க்ளார்க். கடவுளின் மகன்களும் பழிகளை தாங்க பழகியுள்ளனர் என்பதை மறந்துவிடாதே”

“இல்லை.. நான் கடவுளின் மகன் இல்லையே! நான் ஒரு சாத்தான்.. என்னால இந்த உலகத்திற்கு நன்மையை விட ஆபத்து அதிகம்”

“நன்மை தீமை என்பதே கற்பனைதான் க்ளார்க்..உனது சக்திகளை கட்டுப்படுத்த கற்று கொண்ட அளவிற்கு உனது மனதை கட்டுப்படுத்த நீ பழகவில்லை. உலகில் நன்மை, தீமை என்று எதுவும் இல்லை…” என்று தனது குரு அருளிய வாசகத்தை சொல்ல தொடங்கினார் சக்திமான்.

ஆனால் எதிர்பாராத விதமாக சக்திமான் சொல்லி முடிக்கும் முன்னரே அதை க்ளார்க் சொல்ல தொடங்கினான் ”உண்மை, பொய் என்றும் எதுவும் இல்லை. பார்க்கும் மனங்களில்தான் அது இருக்கிறது. நீ ஒன்றை எதைக் கொண்டு பார்க்கிறாயோ அதுவாகவே அது தெரியும். அழிக்க வேண்டியது தீமையைதானே தவிர தீமை செய்பவர்களை அல்ல” என்று க்ளார்க் முடித்தான்.

அதை கேட்டதும் சக்திமான் அதிர்ந்து போய் எழுந்து நின்றார். இது குரு மெய்ஜியின் தத்துவமல்லவா என்று குகை மறைவில் கூனி குருகி அமர்ந்திருந்த க்ளார்க்கை உற்று நோக்க தொடங்கினார். மெல்ல எழுந்து நின்ற க்ளார்க் இருளிலிருந்து ஒளி படும் பகுதிக்கு மெல்ல நகர தொடங்கினான். அவனது சிவப்பு நீல சூப்பர்மேன் உடை அவனிடம் இல்லை. வெள்ளை அங்கியை அணிந்திருந்தான். கண்ணாடி அணியவில்லை. உடலில் வெள்ளை அங்கியை தவிர வஸ்திரம் ஏதுமின்றி ஒரு முழு துறவியாய் சூரியனின் ஒளியில் பிரகாசித்தான் க்ளார்க் கெண்ட்.

சக்திமானின் முகத்தில் ஏற்பட்ட வியப்பும், அதிர்ச்சியும் இன்னும் குறைந்தபாடில்லை. சக்திமானால் வியப்பில் பேச முடியாமல் “நீ… நீ…” என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது வியப்புக்கு பதில் சொன்னான் க்ளார்க்.

“ஆமாம்.. நான் யோதா.. குரு கெல்சாங்கின் சீடன்”

தொடரும்

சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 8

ஒளி புக முடியாத இருள் சூழ்ந்த பாதாள சிறை ஒன்றில் மஞ்சள் நிற பல்புகள் வரிசையாக தொங்கி கொண்டிருந்தன. அதன் நடுவே தனது சக அதிகாரிகளுடன் கண்களில் கோபம் கொப்பளிக்க வந்து கொண்டிருந்தார் ஜெனரல் நிர்மல் ஜிட் சிங். மிகவும் பாதுகாப்பாக பூட்டப்பட்ட அறை ஒன்றின் முன்னால் ஆயுதமேந்திய காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஜெனரலை பார்த்ததும் சல்யூட் செய்த அவர்கள் கதவை திறந்து விட்டார்கள். உள்ளே கைகளில் விலங்கு மாட்டப்பட்டு மர நாற்காலி ஒன்றில் உட்கார வைக்கப்பட்டிருந்தான் லிடர் பயங்கரவாதிகளில் ஒருவன். ராணுவத்தினரால் பயங்கரமாக தாக்கப்பட்டதில் வாய் உடைந்து ரத்தம் வெளியேறி உறைந்திருந்தது. ஒரு கண் மட்டும் பலமாக வீங்கி இருந்தது. வேகமாக உள்ளே நுழைந்தார் நிர்மல் ஜிட் சிங்.

”இங்க பாரு உன்கிட்ட மானே தேனேன்னு கொஞ்சி பேசி இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு கேக்குற அளவுக்கு எனக்கு பொறுமை கிடையாது. என் கேள்வி ஒன்னே ஒன்னுதான். உங்க கூட்டத்தோட தலைவன் யாரு? சொன்னினா சாவறதுக்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். இல்லைன்னா..” என்றபடி தனது துப்பாக்கியை உருவினார்.

”நான் சொல்லிடுறேன்.. எங்க தலைவர்… அவர்.. பேரு.. சூப்பர்மேன்”

அந்த வார்த்தையை கேட்டதும் நிர்மல் ஜிட் சிங்குடன் வந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். ஆனால் நிர்மல் ஜிட் சிங் முகத்தில் கோபம் கொப்பளிக்க தொடங்கியது. அப்போது அவரது வாக்கி டாக்கி “பீப்..பீப்” என ஒலிக்க தொடங்கியது. அதை ஆன் செய்தார்..

“சார்.. நீங்க உடனே மேல வந்து இதை பாக்கணும்!”

அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகம், டெல்லி

உளவுத்துறை அதிகாரி ஆலன் இரண்டு கைகளிலும் காஃபி ஏந்தியபடி அவரது அறைக்குள் நுழைந்தார். அறையின் மற்றொரு பக்க மேசையில் பெஞ்சமின் அமர்ந்திருந்தான். குண்டு துளைத்ததில் காயம்பட்டவனுக்கு அதிர்ஷ்டவசமாக பெரிய இழப்பு ஏதுமில்லை. குண்டு எலும்பு பகுதி வரை தாக்கியதால் குண்டை எடுத்து விட்டு தையல் போட்டு வலதுகையில் கட்டுப்போட்டு விட்டிருந்தார்கள். ஆலன் ஓய்வெடுக்க சொல்லியும் கேட்காமல் பென் தீவிரமாக கணிப்பொறியில் மூழ்கியிருந்தான். ஆலன் காபி கப்பை கொண்டு வந்து அவன் டேபிளில் வைத்தார்.

”சார்.. நீங்க ஏன் இதெல்லாம் செஞ்சிகிட்டு..” பென் பதறினான்..

“பரவாயில்ல பென்.. இட்ஸ் ஓகே.. உனக்கு கை சரியானதும் நீதான் எனக்கு காபி வாங்கி தரணும்.. மறந்துடாத.. அந்த ரிப்போர்ட்டர்ஸ்க்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க முடிஞ்சதா?”

“அதைதான் சார் தேடிட்டு இருக்கேன்.. அங்க வெடி விபத்து நடந்தப்போ ஏற்பட்ட ரேடியேஷன்னால சாட்டிலட் இமேஜஸ் சரியா பதிவாகலை.. அதை இன்னும் கொஞ்சம் ப்ராசஸ் பண்ணியாக வேண்டி இருக்கு சார்.. சூப்பர்மேனும், சக்திமானும் என்ன ஆனாங்க சார்?”

“அவங்கள கொல்ல சொல்லி ஜெனரல் உத்தரவிட்டுருக்காரு.. ஆனா அதிகாரப்பூர்வமா இல்ல. இந்த தாக்குதலுக்கு அவங்களும் ஒரு காரணம்னு இந்திய ராணுவமும், உளவுத்துறையும் நினைக்குது..” ஆலன் மௌனமானார்.

”சார் அந்த தீவிரவாதிகள் பத்தி தேடுனதுல செர்பியால லிடர்னு எந்த அமைப்பும் இல்ல.. அது தன்னிச்சையா உருவாக்கப்பட்ட அமைப்புன்னு தோணுது” என்ற பென் தனது காபியை கொஞ்சம் குடித்துக் கொண்டான்.

”யாரோ திட்டம் போடுறாங்க பென்.., மிகப்பெரிய சதித்திட்டம்!” ஆலன் சிந்தனையில் மூழ்கியவராய் சுவரை பார்த்தப்படி உறைந்து நின்றார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த தொலைக்காட்சியில் அவசர செய்தி ஒன்று ஒளிபரப்பாக தொடங்கியது. “முக்கிய செய்திகள். டெல்லியில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து எங்கள் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த முக்கியமான வீடியோவை உங்களுக்காக ஒளிபரப்புகிறோம்” என்றபடி அதில் ஒரு வீடியோ ஒளிபரப்பானது. சூப்பர்மேன் கட்டுக்கடங்காமல் லேசர் கதிர்களை வீசி கட்டிடங்களை தாக்கும் காட்சிகள் திரையில் தெரிந்தன. “விமானத்தை காப்பாற்றியதாக புகழப்பட்ட இந்த சூப்பர்மேன் தான் இந்த தாக்குதல்களை செய்தவர் என்பது கண்கூடாக நிரூபனமாகியுள்ளது. மேலும் மக்களை காப்பாற்றிய சக்திமானையும் இவர் தாக்கியுள்ள காட்சிகள் பதிவாகியுள்ளன”… அளவில்லாத லேசர் கதிர் வெளிப்பட்டு சக்திமானை தூக்கி வீசும் காட்சிகள் தெரிய தொடங்கின.

அங்கே ராணுவ தளத்தில் நிர்மல் ஜிட் சிங்கும் இதை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தொலைக்காட்சிகளிலும், வணிக வளாகங்களில் உள்ள தொலைக்காட்சிகளிலும் இதுவே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. மக்கள் பயத்தோடு அதை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தோடு கூட்டமாக கண்ணாடி போட்டுக் கொண்டு சாதுவாக நின்ற கங்காதரும் அதை பார்த்துக் கொண்டிருந்தார்.

நியூஸ்..”அதுமட்டுமல்ல.. டெல்லியில் விபத்துக்குள்ளான விமானத்தை தாக்கியதும் சூப்பர்மேன் என தெரிய வந்துள்ளது” என்றதும் சூப்பர்மேன் வீசிய லேசர் கதிர்கள் விமானத்தை தாக்கும் வீடியோ ஒளிபரப்பானது. அதை கண்டதும் ஆலன் அதிர்ச்சியடைந்தார்.

”சார் அது நம்ம சர்வரை ஹேக் பண்ணி எடுத்த வீடியோ” பென் அதிர்ச்சியாக சொன்னான்.

நியூஸ்.. “இதன்மூலம் இங்கு நடந்த தாக்குதல் சம்பவங்களை சூப்பர்மேன் தான் செய்தார் என்பது நிரூபணமாகியுள்ள நிலையில் அரசு இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என மக்கள் கேட்டு வருகின்றனர்………” என்றபடி நியூஸ் போய் கொண்டிருக்க நிர்மல் ஜிட் சிங் யோசனையாக நின்று கொண்டிருந்தார்.

”சார்.. இப்போ என்ன பண்ணலாம்?” என்று கேட்டார் சக அதிகாரி ஒருவர்.

” இந்த வீடியோவெல்லாம் அந்த டிவி சேனலுக்கு எப்படி கிடைச்சதுன்னு விசாரிங்க. அப்புறம் பிரெஸிடெண்ட்கிட்ட டெத் வாரண்ட் அப்பீல் பண்ண சொல்லி கேப்போம்”

”சக்திமான், சூப்பர்மேன் ரெண்டு பேருக்குமா சார்?”

“இல்ல சூப்பர்மேனுக்கு மட்டும்”

அங்கே அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில்..

“சார்.. யாரோ வேணும்னே சூப்பர்மேனை பயங்கரவாதியா காட்ட நினைக்கிறாங்க”

“எது எனக்கு மட்டும் தெரியாதுன்னு நினைக்கிறியா பென்.. முதல்ல நமக்கு ஆதாரம் தேவை. உடனே தேவை.. பாரன்சிக் ஆளுங்களை கனெக்ட் பண்ணு” என்றபடி தனது போனை எடுத்து சிம்ம குரலில் பேசத் தொடங்கினார் “வெடிக்குண்டு வெடிச்ச இடத்துல கலெக்ட் பண்ணுன சோர்ஸை செக் பண்ணி யார் ஆயுதம் குடுத்தான்னு கண்டுபிடிங்க.. உடனே கண்டுபிடிங்க” கட் செய்து விட்டு மற்றொரு எண்ணை தொடர்பு கொண்டார் “இந்திய ராணுவம் என்னென்ன நடவடிக்கை எடுத்துட்டு இருக்குன்னு உடனே எனக்கு தெரியப்படுத்துங்க. இது பிரெஸிடெண்ட்டோட உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்” மீண்டும் காலை கட் செய்தார்.

”பென்.. நம்ம சர்வரை யார் ஹேக் பண்ணுனான்னு கண்டுபிடி.. அட்லீஸ்ட் சாட்டிலைட் இமேஜசையாவது ப்ராசஸ் பண்ணு”

”நீங்க எவ்ளோ பண்ணுனாலும் எதிரியை கண்டுபிடிக்கலாம்.. ஆனா அவனை நெருங்க முடியாது.. அதுக்கு உங்களுக்கு உதவி தேவை” அறையின் இருட்டான பகுதி ஒன்றிலிருந்து சத்தம் கேட்க பதட்டமாக திரும்பி பார்த்தனர் பென்னும், ஆலனும். இருட்டிலிருந்து வெளியே தங்க சக்கரங்கள் மின்ன சக்திமான் தோன்றினார். இருவர் முகத்திலும் டென்சன் மறைந்து ஒரு புன்னகை தோன்றியது.

மும்பை துறைமுகம்

ஒரு கைதிகளை போல அல்லாமல் சகல வசதிகள் கொண்ட அறை ஒன்றில் லூயிஸையும், கீதாவையும் அடைத்து வைத்திருந்தான் டாக்டர் ஜக்கால். டிவியில் சூப்பர்மேன் குறித்து வெளியான வீடியோவை அவர்களும் பார்த்திருந்தார்கள்.

”இவங்க என்ன திட்டம் போடுறாங்க? சூப்பர்மேனை அழிக்கவா? இல்லை இந்தியாவை அழிக்கவா?” வருத்தமாக கேட்டாள் கீதா.

”ரெண்டும் இல்ல.. இவங்க ப்ளான் பிரெஸிடெண்டை கொல்றதா இருக்கணும். பழியை சூப்பர்மேன் மேல போட்டுட்டா ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்”

“அதுனால இவங்களுக்கு என்ன லாபம் இருக்க முடியும்?”

“இருக்கு கீதா.. கார்கில் போர் சமயத்துலதான் அமெரிக்க ஜனாதிபதி ஒருத்தர் முதல் தடைவையா இந்தியாவுக்கு ஆதரவா நிலைபாடு தெரிவிச்சிருக்கார். இப்போ ரெண்டு நாடுகளுக்கு இடையிலான சமாதனத்துக்கு வர அவர் செத்தா என்னாகும்?”

“கண்டிப்பா பெரிய போர் உருவாகும்”

“அதேதான்.. முதல் உலக போரும் இப்படியான ஒரு கொலையிலதான் தொடங்குனுச்சு.. இப்போ போர் உருவானா அது லெக்ஸுக்கு கொள்ளை லாபம்”

“எப்படி அவனுக்கு லாபம்?”

“ரெண்டு தரப்புக்கும் ஆயுதங்களை லெக்ஸ் கார்ப்பரேஷன் விற்பனை செய்வாங்க.. அது ஒன்னு போதும் அவன் உலக கோடீஸ்வரன் ஆக..”

“வாவ்.. வாவ்.. வாவ்.. நீங்க உண்மையாலுமே புலிட்சர் அவார்டுக்கு தகுதியானவங்கதான் மிஸ் லேன்” என்றபடி உள்ளே நுழைந்தான் லெக்ஸ் லூதர்.

”ஆனா.. என்னைப்பத்தி இப்படி அநியாயமான குற்றச்சாட்டுகளை நீங்க வைக்கக்கூடாது. பிரெஸிடெண்டை கொல்ற அளவுக்கு நான் மோசமானவன் கிடையாது. நான் ஒரு பிஸினஸ்மேன் அவ்வளவுதான்”

“லெக்ஸ் நீ எவ்ளோ பெரிய மேதையா வேணாலும் இருக்கலாம். ஆனா யானைக்கும் அடி சறுக்கும் அதை மறந்துடாத” கோபமாக சொன்னாள் கீதா.

“ஓ இண்டியன் ரிப்போர்ட்டர்.. சக்திமானை பத்தி கதை எழுதுறவங்கதானே.. சீ.. எப்போதும் ஏன் இந்த மாதிரி அரைவேக்காடு சூப்பர்ஹீரோக்களுக்கு மக்கள் இவ்ளோ சப்போர்ட் பண்ராங்க.. அங்க பாருங்க ஒரு பெரிய கட்டிடத்தை இடிக்க கிலோ கணக்குல ஆர்டிஎக்ஸ் தேவை. ஆனா அவன் வெறும் கண்ணால அழிக்கிறான்.. அவனுக்கா சப்போர்ட் பண்றீங்க?”

”போர் உருவாக்கி ஆயுதம் விக்கிற உன்ன மாதிரி ஆட்கள் சூப்பர்மேனை பத்தியோ, சக்திமானை பத்தியோ பேச தகுதியே கிடையாது” கத்தினாள் லூயிஸ் லேன்.

”ஆமா.. எனக்கு தகுதி கிடையாதுதான். என்ன பேச யாருக்கு தகுதி இருக்கு. நான் வித்த ஆயுதங்களால செத்தவங்களை விட இந்த சூப்பர்ஹீரோக்களால செத்தவங்க அதிகம் பாப்பா. ஆனா நீங்க அவங்களுக்குதானே சப்போர்ட் பண்றீங்க. சோ இதை நிறுத்தியாகணும். நான் பிரெஸிடெண்டை கொல்ல போறதில்ல. சூப்பர்மேன் மாதிரியான் ஆட்களால தேச தலைவர்களுக்கு ஆபத்துன்னு உணர்த்தியிருக்கேன்.

”அதுல உனக்கு என்ன அவ்ளோ அக்கறை”

“அக்கறை இல்லாம பின்ன.. சூப்பர்ஹீரோக்கள் இல்லாத உலகம்.. அதுதான் என்னோட கனவு..”

அதேசமயம் அமெரிக்க சிஐஏ ரகசிய அலுவலகத்தில்..

பெஞ்சமின் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துவிட்ட தோரணையில் ஆலனை நோக்கி ஓடி வந்தான். “சார்.. சாட்டிலைட் இமேஜஸை பிராசஸ் பண்ணுனதுல ஒரு விஷயம் தெரிய வந்திருக்கு. நீங்க இதை பாக்கணும்”

ஆலன் வந்து பார்த்தார். பென் விவரிக்க தொடங்கினான். “சார்.. இது டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தப்போ கிடைச்ச இமேஜஸ். இதுல ஒரு ஸ்பேஷ்ஷிப் தெரியுது. இது தாண்டி மறையும்போது கீதாவும், லூயிஸும் மறைஞ்சி போயிருக்காங்க. அப்புறம் இது அன்னைக்கு விமான விபத்து நடக்குறதுக்கு முன்னாடி கிடைச்ச இமேஜஸ். இதுலயும் அந்த ஸ்பேஸ்ஷிப் தெரியுது”

பென் விவரித்துக் கொண்டிருக்க ஆலன் சிந்தனையில் ஆழ்ந்தார். சக்திமான் இந்த உரையாடலை திரை மறைவாய் அமர்ந்தபடி கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது மற்றுமொரு அதிகாரி உள்ளே நுழைந்தார்.

“சார்.. நீங்க சொன்னது போலவே குண்டுவெடிப்பு பத்தி நம்ம டீம் ரிசர்ச் பண்ணுனதுல அதுல இருந்த ஆயுதங்கள் யார் தயாரிச்சதுன்னு கண்டுபிடிக்க முடியலை. அதுபோல ஆயுதங்கள் ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் உட்பட நிறைய ஆயுத கம்பெனிகள் வசம் இருக்கு”

ஆலன் பெரிதாய் எதிர்பார்க்க அதிகாரியின் பதிலால் ஏமாற்றம் அடைந்தார்.

”ஆனா.. வித்தியாசமான ஒரு பொருள் கிடைச்சிருக்கு சார்.. அதுல இருந்து அதிகமான பவர் சோர்ஸ் வெளிப்படுறதா சொல்றாங்க” என்றபடி கண்ணாடி குடுவைக்குள் இருந்த ஒரு கல்லை காட்டினார் அதிகாரி. ஆலன் அதை வாங்கி பார்த்தார்.

அதிகாரி சென்றதும் திரை மறைவிலிருந்து வெளியே வந்த சக்திமான் அந்த கல்லை வாங்கி பார்த்தார். “க்ரிப்டோனைட்” என்று சொல்லிக் கொண்டார்.

பிறகு ஆலனிடம் “லெக்ஸ் லூதர்.. நீங்க உடனே லெக்ஸ் லூதரை தேடியாகணும். அந்த ஸ்பேஸ்ஷிப் எங்க போனுச்சுன்னு ட்ரேஸ் பண்ண பாருங்க” என்றபடி நகர தொடங்கினார் சக்திமான்.

“நீங்க எங்க போறிங்க மிஸ்டர் சக்திமான்?” என்றான் பென்

“நமக்கு ஒரு ஆபத்தான ஆயுதம் தேவை.. அதை தேட போறேன்” என்றவர் சூறாவளி போல சுற்றி மறைந்தார்.

தொடரும்

சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 7

கெல்சாங் மடாலயம், இமயமலை

இருள் போர்த்திய இமயமலையின் மீது பௌர்ணமி நிலவின் ஒளி பட்டு வெள்ளி போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. கெல்சாங் மடாலயத்தின் வாசல் காவல் கோபுரத்தின் மீது வீசும் குளிரில் காவலுக்கு நின்றிருந்தான் 16 வயது சிறுவன் யோதா. வீசிய பனிக்காற்று மடாலயத்தையே நடுங்க செய்து கொண்டிருந்தது. ஆனால் யோதாவிடம் துளி நடுக்கமில்லை. அவன் நெஞ்சம் வஞ்சனையால் வீழ்த்தப்பட்டதை எண்ணி நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது. அதற்குமுன் இமயமலையின் பனி எம்மாத்திரம்…

”நீ ரொம்ப கோபமாக இருக்கிறாயா யோதா?” காவல் கோபுரத்தின் மீது ஏறி வந்தார் மடாலய நிர்வாகிகளில் ஒருவரான மெய்ஜி.

”கோபமாய் இல்லை குருவே.. ஏமாற்றத்தில் இருக்கிறேன்!” கைகளை முறுக்கிக் கொண்டான் யோதா.

“குரு கெல்சாங் உன்னை தண்டித்ததை எண்ணி கவலைப்படுகிறாயா?”

“நான் அந்த மாணவர்களை தாக்கவில்லை என்று அவருக்கு தெரிந்தும் என்னை தண்டிக்கிறார்!” யோதாவின் கண்களில் நீர் அரும்பியது.

”யோதா உன் கோபம் காரணமற்றது. குரு கெல்சாங் எதையும் காரணமின்றி செய்பவர் அல்ல. நீ உனது சக்திகளையும், மனதையும் கட்டுப்படுத்த இன்னமும் பயிற்சி தேவை”

”உண்மை ஒன்றிருக்க பொய்தான் வெல்கிறது. பிறகெதற்கு பயிற்சி?” யோதாவின் கோபம் மெய்ஜிக்கு புரிந்தது.

”யோதா உனது சக்திகளை கட்டுப்படுத்த கற்று கொண்ட அளவிற்கு உனது மனதை கட்டுப்படுத்த நீ பழகவில்லை. உலகில் நன்மை, தீமை என்று எதுவும் இல்லை. உண்மை, பொய் என்றும் எதுவும் இல்லை. பார்க்கும் மனங்களில்தான் அது இருக்கிறது. நீ ஒன்றை எதைக் கொண்டு பார்க்கிறாயோ அதுவாகவே அது தெரியும்”

“அப்படின்னா தீமை இல்லாத உலகம் என்பதெல்லாம் வெறும் கற்பனைதானா குருவே”

“தீமைகளை அழிக்கதான் கெல்சாங் உன் போன்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார் யோதா. சரியாக நினைவில் கொள் அழிக்க வேண்டியது தீமையைதானே தவிர தீமை செய்பவர்களை அல்ல”

”எது நன்மை, எது தீமை என்பதை எப்படி புரிந்து கொள்வது குருவே?”

“அதற்கு நீ இன்னும் தயாராக வேண்டும் யோதா”

டெல்லி, தலைநகர்

சிஐஏ அதிகாரி ஆலன் கீதாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது தீடீரென டெல்லியின் புறநகர் பகுதியில் விழுந்து வெடித்தது ஒரு மர்ம பொருள். அதனால் ஏற்பட்ட அதிர்வலைகளால் கார் கண்ணாடிகள் நொறுங்கி காற்றில் பறந்தன. ஹோட்டல் முகப்பில் நின்றிருந்த ஆலன், பெஞ்சமின் உள்ளிட்ட அனைவரும் காற்றில் தூக்கியெறியப்பட்டனர். சிறிது நேரத்தில் நிதானம் திரும்பி அவர்கள் எழுந்தபோது மக்கள் பலர் பயத்தில் ஹோட்டலை நோக்கி தஞ்சம் புக ஓடி வந்து கொண்டிருந்தார்கள். தொலைவில் குண்டு விழுந்த பகுதி புகை மூட்டமாக தெரிந்தது.

”பெஞ்சமின் உடனே நம்ம டீம்க்கு தகவல் கொடு” என்றபடி பாய்ந்து சென்று காரின் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து புறப்பட்டார் ஆலன். பின் இருக்கையில் கீதாவும், லூயிஸும் அமர்ந்தார்கள்.

“நீங்க எங்க வறீங்க?”ஆலன் குழப்பமாக கேட்டார்.

“சக்திமான் பத்தி கேட்டீங்கல்ல.. எங்களை அந்த இடத்துக்கு கூட்டிப் போங்க.. அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்றாள் கீதா.

“க்ளார்க்கும், கங்காதரும் எங்க?” என்றாள் லூயிஸ்.

ஹோட்டலுக்குள் ஓடிக்கொண்டிருந்த மக்களோடு அவர்களை போலவே யாரோ ஓடிக்கொண்டிருப்பதை இருவரும் பார்த்தனர். நால்வருடன் கார் மின்னலென குண்டு வெடித்த இடம் நோக்கி வேகமாக புறப்பட்டது.

சக்திமானும், சூப்பர்மேனும் ஏற்கனவே குண்டு வெடித்த இடத்தை அடைந்திருந்தார்கள்.

“ஹலோ… எமெர்ஜென்சி.. இங்க அவுட்டோர்ல குண்டு வெடிப்பு நடந்திருக்கு.. தீவிரவாதிகள் வேளையா இருக்கலாம்.. எங்களுக்கு உடனே படைகள் தேவை, செண்ட்ரல் டெல்லில இருக்க சோல்ஜர்ஸை உடனே அனுப்பி வைங்க” ஹெலிகாப்டரில் விரைந்து கொண்டிருந்தார் இந்திய ராணுவ அதிகாரி நிர்மல் ஜிட் சிங்.

சூப்பர்மேனும், சக்திமானும் அங்கிருந்த மக்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். பெரும் கட்டிடம் ஒன்றின் அடிவாரத்தில் மூதாட்டி ஒருவர் கான்க்ரீட் கற்கள் அடியில் சிக்கியிருந்தார். நொடிப்பொழுதியில் அருகே நிலைக்கொள்ளாமல் இருந்த கட்டிடம் சரிந்து கீழே விழத் தொடங்கியது. சட்டென பாய்ந்த சூப்பர்மேன் அந்த கட்டிடத்தை தடுத்து நிறுத்தினார். அதற்குள் சக்திமான் கான்க்ரீட் கற்களுக்குள் சிக்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார்.

இருவரும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது ஆலனின் கார் சம்பவ இடத்தை வந்தடைந்தது.

“சக்திமான்” காரிலிருந்து இறங்கிய வேகத்தில் கீதா கத்தினாள். சக்திமான் அருகே வந்தார்.

”ஹலோ ஆலன் உடனடியாக உங்க ஆட்களை வர சொல்லி இந்த மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போக சொல்லுங்க” என்றார் சக்திமான்.

”இங்க என்ன நடந்திட்டிருக்கு.. நீங்க.. ஒரு நிமிஷம் என் பேரு எப்படி உங்களுக்கு தெரியும்” குழப்பமாக கேட்டார் ஆலன்.

அதற்குள் சக்திமான் எதையோ கண்டு உஷார் அடைந்தார். “எல்லாரும் கீழ குனிங்க” என்றபடி காரை மறித்து நின்றார் சக்திமான் எங்கிருந்தோ வந்த சில தோட்டாக்கள் அவர் முதுகில் மோதி சிதறி கொட்டின. சக்திமான் உற்று நோக்கினார். சுற்றுப்பகுதிகளிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று உள்ளே நுழைந்தது. அவர்கள் தீவிரவாதிகள் போல உடை அணிந்திருந்தனர்.

அவர்களை கண்டதும் வானத்திலிருந்த சூப்பர்மேன் வேகமாக அவர்களை நோக்கி விரைந்தார். ஆனால் அதற்குள் அவரை பின்னாலிருந்து பச்சை நிற ஒளி ஒன்று தாக்கியது அதனால் நிலைகுலைந்த அவர் ஒரு கட்டிடத்தில் மோதினார். உடனடியாக செயல்பட்ட சக்திமான் ஆலன், பெஞ்சமின், கீதா மற்றும் லூயிஸை பாதுகாப்பான ஒரு பகுதியில் தூக்கி சென்று நிறுத்தினார்.

பிறகு வேகமாக சூப்பர்மேன் விழுந்த இடத்தை நோக்கி விரைந்தார். அதற்குள்ளாக அந்த தீவிரவாத குழு அவரை சரமாரியாக சுடத்தொடங்கினர். ஆனால் தோட்டாக்கள் அவர்மீது மோதி சில்லறை காசுகள் போல கீழே கொட்டிக்கொண்டிருந்தன. அதற்குள் தன்னிலை அடைந்த சூப்பர்மேன் கட்டிடத்தை உடைத்துக் கொண்டு வெளியேறினார். மேலே வானத்தில் சூப்பர்மேனை தாக்க தயாராக நின்றது டாக்டர் ஜக்காலின் ஸ்பேஸ்ஷிப். சூப்பர்மேன் ஷிப்பை நோக்கி வரவும் மீண்டும் பச்சை நிற கதிர்களை சூப்பர்மேனை நோக்கி செலுத்தியது ஸ்பேஸ்ஷிப். உடனடியாக குறுக்கே வந்த சக்திமான் அந்த பச்சை ஒளியை தன் நெஞ்சில் தாங்கி கொண்டார்.

“சூப்பர்மேன் நீ தீவிரவாதிகளை பாத்துக்கோ.. ஜக்காலை நான் கவனிச்சிக்கிறேன்” என்றார் சக்திமான்.

அதற்குள்ளாக தீவிரவாத கும்பல் மக்களை நோக்கி சுடத் தொடங்கியிருந்தார்கள். தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொண்டே முன்னேறிக் கொண்டிருக்க மறைவாய் ஒரு தூணின் அருகே காத்திருந்தான் பெஞ்சமின். தூணை நெருங்கியதும் சட்டென்று பெஞ்சமின் தாவி தீவிரவாதியை தாக்கினான். அதேசமயம் தீவிரவாதி துப்பாக்கி விசையை அழுத்திவிட ரத்தம் சிதற கீழே சரிந்தான் பெஞ்சமின். அதேசமயம் அவன் விட்ட குத்து சரியாக சென்று சேர்ந்ததால் தீவிரவாதியும் மயங்கி கிடந்தான்.

பெஞ்சமினுக்கு ஏற்பட்ட இந்த நிலையை கண்டு அலறி ஓடி வந்தார் ஆலன். பெஞ்சமினை நிமிர்த்தி பார்த்தார் நல்லவேளையாக குண்டு வலது கையில் துளைத்து சென்றிருந்தது. அப்போதுதான் தீவிரவாதியின் சட்டையில் இருந்த பேட்ஜை பார்த்தார் ஆலன். ஃபைல்கள் திருடப்பட்டபோது தெரிந்த அதே ஸ்டார் முத்திரை. “லிடர்” என தனக்குள் சொல்லிக் கொண்டார் ஆலன்.  தீவிரவாதியின் துப்பாக்கியை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மறுபக்கம் தோளில் பெஞ்சமினை தாங்கி கொண்டு நகரத் தொடங்கினார் ஆலன்.

தீவிரவாதிகளுக்கு அஞ்சிய மக்கள் அறை ஒன்றில் ஒளிந்திருந்தனர். கதவை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அப்போது உத்திரத்தை உடைத்துக் கொண்டு ஏதோ ஒன்று அவர்கள் முன் விழுந்தது. புழுதி அடங்க தொடங்கிய போது எஸ் முத்திரை தெளிவாக தெரியத் தொடங்கியது. மக்கள் நம்பிக்கையோடு சூப்பர்மேனை பார்த்தனர். உஷாரான பயங்கரவாதிகள் துப்பாக்கி விசையை அழுத்துவதற்குள் மின்னல் வேகத்தில் அவர்கள் முகத்தில் பயங்கரமாக ஏதோ மோதியது போல இருந்தது. அடுத்த நோடி வாய்களில் ரத்தம் கொப்பளிக்க அவர்கள் தரையில் சரிந்தனர்.

அதேசமயம் வானத்தில் சக்திமான் டாக்டர் ஜக்காலிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.

“ஹே..சக்திமான்.. சூப்பர்மேனுக்கு நீ வக்காலத்தா.. இந்தா வாங்கிக்கோ” என்றபடி லேசர் கதிர்களை சக்திமான் மேல் பாய்ச்சினான். அது சக்திமானை பெரிதாக தாக்கவில்லை. பவரை அதிகப்படுத்தி மீண்டும் தாக்கினான். இப்போது கொஞ்சம் வேலை செய்தது. சக்திமான் நிலைகுலைந்து விழ போனார். பிறகு சமாளித்து மீண்டும் ஸ்பேஸ்ஷிப்பை நோக்கி பறந்தவர் தன் கைகளை ஸ்பேஸ்ஷிப்பை நோக்கி நீட்டினார். அதிலிருந்து பாய்ந்த லேசர் கதிர்கள் ஜக்காலின் ஷிப்பை தாக்கின. ஆனால் ஷிப்பை சுற்றி பாதுகாப்பு கவசம் இருந்ததால் அது பெரிதாக எடுபடவில்லை.

கீழே ஆலன் ஒருபக்கம் போராடிக் கொண்டிருந்தார். ”ஹலோ.. டீம் உடனே டிசாஸ்டர் ஏரியாவுக்கு வாங்க.. ஆபத்து” தனது சேட்டிலைட் போன் மூலமாக தகவல் அனுப்பினார்.

”சார் என்னைப்பத்தி கவலைப்படாதீங்க.. ரிப்போர்டர்ஸ கூட்டிக்கிட்டு நீங்க இங்கிருந்து போங்க” என்றான் பெஞ்சமின். கையில் குண்டடி பட்டு ரத்தம் விரயமாகி இருந்ததால் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தான். கீதாவும், லூயிஸும் அவனது கைகளில் கட்டுப்போட்டு முடிந்தளவு ரத்தப்போக்கை குறைக்க முயற்சித்தனர்.

”என்ன பென்.. வந்ததுமே இந்திய படம் ஏதாவது பாத்தியா.. க்ளைமேக்ஸ்ல சைடு ஹீரோ பேசுற மாதிரி பேசுற.. ஒழுங்கா எழுந்து எங்க கூட வா.. நீ இல்லைனா எனக்கு யார் காஃபி வாங்கி தருவா” என்றபடி கை கொடுத்து பென்னை தூக்கினார் ஆலன்.

துப்பாக்கியோடு வந்த பயங்கரவாத கும்பலை சூப்பர்மேன் சிதறடித்த நிலையில் ஒரு சிலரே எஞ்சியிருந்தனர். அதேசமயம் வானில் ஜக்காலின் ஷிப் நடத்தும் தாக்குதலை சக்திமான் சமாளித்தாலும் திரும்ப தாக்க முடியாமல் சோர்ந்து போக தொடங்கினார். சக்திமானுக்கு உதவ சூப்பர்மேன் வானத்தை நோக்கி விரைந்தார்.

”வா.. சூப்பர்மேன்.. உனக்கு ஒரு சிறப்பு பரிசு வெச்சிருக்கேன்” என்றபடி சூப்பர்மேனை குறி வைத்தான் ஜக்கால். பிறகு ஒரு பட்டனை அழுத்தியதும் ஷிப்பிலிருந்து கிளம்பிய பந்து போன்ற ஒரு பொருள் சூப்பர்மேன் அருகே சென்று திறந்தது. அதிலிருந்து வெளியான சிலந்தி போன்ற ஒன்று சூப்பர்மேனின் கழுத்தில் பதிந்தது. உடனே சூப்பர்மேன் நிலை குலைந்து பூமியை நோக்கி விழ தொடங்கினார்.

அதை பார்த்த லூயிஸ் “சூப்பர்மேன்” என கத்திக்கொண்டு ஓடி வந்தாள். அவளோடு கீதாவும் ஓடினாள். “நோ.. அந்த பக்கம் போகாதீங்க” என்று கத்தினார் ஆலன். அதற்குள் அவர்கள் இருவர் மீதும் வானிலிருந்து ஒரு ஒளி பாய்ந்தது. நொடி பொழுதில் அவர்கள் நின்ற இடத்திலிருந்து அவர்கள் மறைந்து போயிருந்தார்கள். சக்திமான் தனது முழு சக்தியையும் திரட்டி ஜக்காலின் ஷிப்பை தாக்க முன்னே சென்றார்.

அதற்குள் கீழே விழுந்த சூப்பர்மேனிடம் இருந்து வெளிப்பட்ட கட்டற்ற லேசர் ஒளி மேலே பறந்து கொண்டிருந்த சக்திமானை தாக்கியதால் தூக்கி வீசப்பட்டார். மேலும் சூப்பர்மேனின் லேசர் கதிர்கள் பட்டு அருகே இருந்த கட்டிடங்கள் நொறுங்கி விழத் தொடங்கின. கட்டிடம் இடிந்து விழும் முன்பாக பெஞ்சமினுடன் அங்கிருந்து வெளியேறி தப்பிதார் ஆலன்.

சூப்பர்மேனின் கதிர்கள் பட்டு வான்வழியாக குண்டு வெடித்த பகுதிக்கு விரைந்துக் கொண்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் தாக்கப்பட்டு நிலைகுலைந்து பூமியை நோக்கி சென்றது. சூப்பர்மேனால் தாக்கப்பட்ட சக்திமான் நிதானமடைந்து வேகமாக சென்று ஹெலிகாப்டர் பூமியில் மோதாமல் நிறுத்தினார். தன்னுடன் வந்த சக ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதை கண்ட இந்திய ராணுவ அதிகாரி நிர்மல் ஜிட் சிங் “இங்க ஏதோ ஆபத்தான ஒன்னு இருக்கு. ராணுவ படைகள் முடிஞ்ச வேகத்துல வாங்க” என்று தகவல் அளித்தார். பிறகு ஹெலிகாப்டர் இயக்கிய வீரரிடம் சூப்பர்மேனை தாக்குமாறு சைகை செய்தார்.

அதற்குள் ஒருவழியாக கழுத்தில் இருந்த சிலந்தியை பிடுங்கி எறிந்த சூப்பர்மேன் தனது லேசர் சக்தியையும் கட்டுப்படுத்தினார். அப்போது இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வெளியான குண்டுகள் சூப்பர்மேன் மீது மோதி வெடித்தன. இதனால் அந்த பகுதியே அணுகுண்டு வெடித்தது போல காணப்பட்டது. சூப்பர்மேனால் காப்பாற்றப்பட்ட மக்கள் தொலைவிலிருந்து சோகமாக அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு குண்டுகள் வெடித்த நெருப்பு அடங்கியபோது சூப்பர்மேன் அங்கு இல்லை. ராணுவ துருப்புகள் அங்கு காயம்பட்டு கிடந்த பயங்கரவாதிகளை கைது செய்து கொண்டு சென்றனர். அந்த பகுதியில் சூப்பர்மேன் மட்டும் இல்லை.

”அவன்.. செத்திருப்பானா சார்?” என்றான் ஹெலிகாப்டரில் வந்த ராணுவ வீரன்.

”இல்ல.. ஆனா சாக போறான்..” என்றபடி தந்து ரிசீவரை எடுத்த நிர்மல் ஜிட் சிங் “எல்லா படைகளுக்கும் அவசர வார்னிங்.. இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து. சக்திமான் அப்பறம் சூப்பர்மேன்.. இவங்களால இந்த நாட்டுக்கு அச்சுறுத்தல். அவங்களை எங்க பாத்தாலும் பிடிக்கவோ அல்லது சுட்டுக் கொல்லவோ எல்லா படைகளுக்கும் உத்தரவிடுறேன்”

தொடரும்

சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 6

நள்ளிரவு நேரம். வானில் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்க அவற்றின் நடுவே யார் கண்ணுக்கும் அகப்படாமல் நகர்ந்து கொண்டிருந்தது ஒரு உருவம். கீழே மலை ஒன்றின் உச்சியில் இருந்த குகையின் முகப்பில் நின்றபடி அந்த உருவத்தை உற்று நோக்கி கொண்டிருந்தார் சக்திமான். மெல்ல மலைக்கு அருகே நெருங்கியதும் அந்த உருவம் சூப்பர்மேன் என தெரிய வந்தது.

”ரெண்டு பேருமே தப்பா புரிஞ்சிகிட்டு எதிரியை விட்டுட்டோம்” சூப்பர்மேன் குரலில் ஒரு வருத்தம்.

”டாக்டர் ஜக்கால் இந்த மாதிரியான வேலைகளை பண்றது இது ஒன்னும் புதுசு இல்ல. அவனை பத்தி நீ கவலைப்பட வேணாம்” நட்புடன் பேசினார் சக்திமான்.

பறந்து கொண்டிருந்த சூப்பர்மேன் தரைமீது இறங்கி குகையின் அருகே இருந்த பாறையில் அமர்ந்தார்.

”நான் கவலைப்படுறது அந்த பைத்தியக்கார டாக்டரை பத்தி மட்டுமில்ல. அவன்கிட்ட கிர்ப்டோனைட் படிகம் இருக்கத பாத்தேன். அது என்னோட கிரகத்தை சேர்ந்தது”

“உன் கிரகமா? நீ ஒரு வேற்றுகிரகவாசியா?” சக்திமான் கேள்விக்கு பதில் அளிக்காமல் சூப்பர் மேன் அமைதியாக இருந்தார்.

சக்திமான் தொடர்ந்தார் “நீ உன்னோட கிரகத்துக்கு போறதுக்கு அந்த படிகம் தேவையா?”

“இல்ல.. எனக்குன்னு எந்த கிரகமும் இல்ல.. க்ரிப்டான் அழிஞ்சிட்டு.. அதோட கடைசியா எஞ்சின உயிரினம் நான் மட்டும்தான்” என்றபடி சூப்பர்மேன் வானில் மின்னும் நட்சத்திரங்களை நோக்கினார். அவரை ஆறுதல் படுத்த அவர் அருகில் வந்து தோல் மீது கை வைத்தார் சக்திமான்.

”கவலைப்படாத க்ளார்க் இந்த உலகத்துல வாழ்றதுக்கு நிறையவே இடம் இருக்கு”

சூப்பர்மேன் பேச்சை மாற்ற முயன்றார் “சரி சொல்லுங்க கங்காதர். நீங்க ஒரு துறவி. ஆனா சூப்பர்ஹீரோவா மாறுனது எப்படி?”

“அதைவிடு க்ளார்க். அந்த க்ரிப்டோனியம் படிகத்தால உலகத்துக்கு ஏதாவது ஆபத்து இருக்கா?” சக்திமான் க்ரிப்டோனைட் குறித்த சிந்தனையிலேயே இருந்தார்.

“உலகத்துக்கு ஆபத்து இல்ல.. எனக்கு! அது என் பக்கத்துல இருந்தா என் சக்தி குறைஞ்சிடும். சாதாரண மனுஷன் கூட என்னை அடிச்சிடுவான். இந்த ரகசியம் ஒருத்தனுக்கு ரொம்ப நல்லா தெரியும்! அவனுக்கும் டாக்டர் ஜக்காலுக்கும் சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறேன்”

“யார் அவன்?”

“லெக்ஸ் லூதர்”

மும்பை துறைமுக பகுதி

மும்பையின் பரபரப்பான துறைமுகத்திற்கு சற்றுத் தொலைவில் நங்கூரமிட்டு நின்றது லெக்ஸ் கார்ப்ஸ் நிறுவனத்தின் கப்பல். கப்பலின் உள்ளே பெரும் ஆராய்ச்சி கூடமே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு ஒரு அறையில் டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தான் லெக்ஸ் லூதர். டிவியில் சக்திமான், சூப்பர்மேன் விமானத்தை காப்பாற்றிய செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும் வேகமாக எழுந்து வெளியே சென்றான் லூதர்.

”ஹே.. டாக்டர்! இந்தியாவுக்கு இன்னொரு சூப்பர்ஹீரோவும் கிடைச்சிட்டான் போல இருக்கே” என்றான் லெக்ஸ்.

அந்த ஆய்வகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த எந்திரத்தின் உள்ளிருந்து வெளியே எட்டி பார்த்தான் டாக்டர் ஜக்கால்.

”சூப்பர்ஹீரோக்கள் அழியா பிறவிகள்னு மக்கள் நினைச்சிட்டுருக்காங்க லெக்ஸ். அவங்க எல்லாம் சீக்கிரமே ஏமாற போறாங்க.. அப்ப அவங்க புரிஞ்சிப்பாங்க.. அழியாதது ஒன்னே ஒன்னுதான்… பவர்ர்ர்ர்…”

டாக்டரின் உணர்ச்சிவசமான பேச்சு லெக்ஸுக்கு எந்த விதத்திலும் பிடிக்கவில்லை. இருந்தாலும் சமாளித்துக் கொண்டான்!

”சரி டாக்டர்.. அந்த சக்திமான் எப்படிப்பட்ட ஆளு. ரெண்டு பேரும் விமானத்தை சேர்ந்து காப்பாத்துறதை பாத்தா தெரிஞ்சவங்க போல இருக்கே!” ஆர்வமாக கேட்டான் லெக்ஸ்.

”அவங்க தெரிஞ்சவங்களா இருக்க வாய்ப்பில்ல. ஆனா ஒரு விஷயத்துல ஒத்து போறாங்க. ரெண்டு பேருமே மக்களை காப்பாத்துற அரைவேக்காடுங்க.. அதுவும் அந்த சக்திமான் இருக்கானே..” டாக்டர் கண்கள் கோபத்தில் கொப்பளித்தன. “பவர்ர்ர்ர்” என்று கத்திக் கொண்டு எதிரே இருந்த உலோக பலகையில் ஒரு குத்து விட்டார்.

அப்போது லெக்ஸ் கடிகாரத்தில் இருந்த பிரத்யேக அலாரம் ஒலித்தது. உடனே பேச்சை நிறுத்தி விட்டு வேகமாக தனது அறைக்கு சென்றான். அங்குள்ள தனது கணினியை ஆன் செய்தான். அதில் ஸ்டார் முத்திரை ஒன்று தோன்றியது. அதன் கீழே Lider என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. பிறகு தானாக சில கோப்புகள் டௌன்லோட் ஆகின. கோப்புகளை திறந்து பார்த்த லெக்ஸின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

டெல்லி, இந்திய தலைநகரம்

டெல்லியின் பிரதான சாலை ஒன்றின் ஓரமாக ஒதுங்கி நின்றது சிஐஏ அதிகாரி ஆலனின் கார். பெஞ்சமின் அங்கிருந்த காஃபி பார் ஒன்றிலிருந்து ஸ்ட்ரா போட்ட காபி கோப்பைகளை வாங்கி வந்து காரில் அமர்ந்தான். சூடான காபியை குடித்ததும் ஆலனின் மூளைக்கு ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. பெஞ்சமின் காரை ஓட்டத் தொடங்கினான்.

”Lider.. யார் இவனுக.. இந்த மாதிரி பயங்கரவாத கும்பல் பேர் கூட கேள்விப்பட்ட மாதிரி இல்லையே!”

”சார்.. லிடர்னா செர்பியன் மொழிப்படி லீடர்.. அதாவது தலைவன்னு வருது”

”செர்பியன்ஸா.. அவங்களுக்கு இந்தியால என்ன வேலை? யார் நம்ம சர்வரை ஹேக் பண்ணுன்னாங்கன்னு தெரிஞ்சதா?”

”நம்ம டெக்னீஷியன்ஸ் ட்ரேஸ் பண்ணிட்டு இருக்காங்க சார். கண்டுபிடிச்சா எனி டைம் சாட்டிலைட் போன் மூலமா மட்டும் சொல்ல சொல்லி இருக்கேன்”

“நம்ம சேட்டிலைடஸ் ஹேக் பண்ண முடியாத அளவுக்கு பாதுகாப்பா இருக்கா?”

“யாரலையும் ஹேக் பண்ண முடியாது.. அப்புறம் ஒரு சின்ன சந்தேகம்.. கேக்காலாமா?” தயங்கினான் பெஞ்சமின்.

“குடாக்குத்தனமான சந்தேகமா இல்லாம இருந்தா சரி”

”நீங்க ஒரு உயர் அதிகாரியா இருக்கும்போது.. இந்த ரிப்போர்டர்ஸை விசாரிக்க சின்ன லெவல் அதிகாரிகளை அனுப்புனா போதுமே! ஏன் நீங்களே மெனக்கெடனும்”

“ஒன்னு சொல்லவா பென். எந்த ஒரு விஷயத்துலயும் எது பிரச்சினையா இருக்கும்னு தோணுதோ அதை நானே நேரடியா போய் விசாரிச்சாதான் எனக்கு திருப்தியா இருக்கும். இந்த விவகாரத்துல செர்பியன்ஸ் பத்தின ஆர்வத்தை விட அந்த புது ஆளு சக்திமான் பத்தி எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகமாவே இருக்கு..”

ஆலன் சொல்வதையே பென் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு சாலை பக்கம் கவனத்தை திருப்பவும், சரியாக ஒரு ஆள் குறுக்கே வராவும் சடார் என கார் அந்த மனிதனை மோதியது. சுதாரித்த பென் உடனடியாக ப்ரேக்கை அழுத்தினான்.

“என்ன காரியம் பண்ணிட்ட பென்..” கண்டித்தபடி ஆலன் காரிலிருந்து வேகமாக வெளியேறி விழுந்தவரை தூக்கினார். பென்னும் ஒருவழியாக பதட்டத்திலிருந்து விடுபட்டு வெளியே வந்தான். கீழே விழுந்தவர் தன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு நிதானம் அடைந்தார்.

”சாரி சார்.. உங்களுக்கு மோசமா எதுவும் அடிபடலையே?” நலம் விசாரித்தான் பென்.

”இது என்ன பிரமாதம்.. நான் மும்பையில் இருக்கும்போது ஒரு பெரிய லாரி என் மேல மோத வந்துச்சா.. கரெக்டா நான் நடுரோட்டுல..” என அந்த மனிதர் தன் கதாகாலட்ஷேபத்தை தொடங்கவும் ஆலன் அவரை இடைமறித்தார்.

”உங்க பேரு என்ன சார்? உங்கள நாங்க எங்கயாவது ட்ராப் பண்ணனுமா?”

”என் பேரா.. என் பேரு.. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கர்நாத் சாஸ்திரி. நான் ஆஜ் கி ஆவாஸ்ல போட்டோகிராபரா இருக்கேன்” என்றபடி தனது கழுத்தில் மாட்டியிருந்த கொடாக் கேமராவை காட்டினார்.

ஆஜ் கி ஆவாஸ் பெயரை கேட்டதும் ஆலனுக்கு பொறி தட்டியது.

“கீதா விஸ்வாஸ், லூயிஸ் லேன் கூடதான் நீங்களும் வந்தீங்களா?”

“இல்ல.. அவங்க என்னை விட்டுட்டு முதல்லயே வந்துட்டாங்க. நான் இப்போதான் வந்தேன்”

“சரி வாங்க நானே அவங்கக்கிட்ட உங்களை அழைச்சிட்டு போறேன்!” என்றபடி கங்காதரை காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் ஆலன்.

தி மேனர், டெல்லி

”என்ன சொல்றீங்க கங்காதர் காணாம போயிட்டாரா?” அதிர்ச்சியாக கேட்டாள் லூயிஸ்.

“ஆமா.. ரெண்டு பேரும் ஒன்னாதான் வந்தோம். ஏர்போர்ட்ல இருந்து வெளியே வந்தப்போ அவரை காணோம்” என்றான் க்ளார்க்.

“இதுக்குதான் எங்க கூடவே வாங்கன்னு சொன்னோம். சரி பரவாயில்ல. ஹோட்டல் அட்ரஸ் அவருக்கு தெரியும். எப்படியும் தேடி கண்டுபிடிச்சி வந்துடுவார்” கீதா க்ளார்க்கை ஆறுதல் படுத்த முயன்றாள்.

”அவர் விவரம் இல்லாதவரா இருக்கார். ஏதாவது போக்கிரி கும்பல்கிட்ட மாட்டிக்கிட்டார்னா என்ன பண்றது” பாவமாக சொன்னாள் லூயிஸ்.

”அப்படி அவரை யாராவது பிடிச்சிட்டு போனா ஆபத்து அவங்களுக்குதான். பேசியே ஆளை காலி பண்ணிடுவார். நாம ஜனாதிபதி மாளிகைக்கு கிளம்பலாம். இன்னைக்கு ரிப்போர்ட்டர்ஸ் மீட்டிங் இருக்கு” என்றபடி கீதா மற்ற இருவருடன் ஹோட்டல் முகப்பிற்கு வந்தாள்.

சரியாக அதே நேரம் ஆலனின் கார் அவர்களுக்கு குறுக்கே வந்து நுழைவாயிலில் நின்றது.

”… அப்புறம் அந்த திருட்டு பசங்கள நான் துறத்திக்கிட்டு போனேன். அப்போ ஒருத்தன் பின்னாடி துப்பாக்கி கொண்டு வந்து..” கங்காதர் கார் நின்றும் தனது கதையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆலன் மற்றும் பென் இருவரும் கங்காதரின் கதையால் களைத்து போயிருந்தனர். புதிய ஆட்களுடன் கங்காதர் வந்து இறங்குவதை கீதாவும், லூயிஸும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

”ஹலோ மிஸ் கீதா அண்ட் லூயிஸ் நான் ஆலன். அமெரிக்க உளவுத்துறை சிறப்பு அதிகாரி. விமான விபத்து பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

“அதை பத்தி எங்கக்கிட்ட பேச என்ன இருக்கு.. எல்லா பயணிகளுக்கும் என்ன தெரியுமோ அதேதான் எங்களுக்கும் தெரியும்” எதையோ மறைக்க முயல்பவள் போல பேசினாள் கீதா.

“சரி நான் ஓப்பனாவே சொல்றேன். சூப்பர்மேன்.. அப்புறம் அந்த சக்திமான் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு எனக்கு தெரியணும்”

ஆலனின் கேள்வியால் கீதாவும், லூயிஸும் ஆலனை குழப்பமாக பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு பின்னால் க்ளார்க்கும், கங்காதரும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டதை யாரும் கவனிக்கவில்லை. அந்த சமயத்தில் வானத்திலிருந்து பூமி நோக்கி வந்துக் கொண்டிருந்த அந்த ஆபத்தை க்ளார்க்கும், கங்காதருமே கவனிக்கவில்லை. டெல்லியின் புறநகர் பகுதியில் வேகமாய் வீழ்ந்த அது பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது.

தொடரும்

சூப்பர்மேன் வெர்சஸ் சக்திமான் – பகுதி 5

ஸ்மால்வில்லே, அமெரிக்கா

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சோள வயல்கள் படர்ந்து விரிந்திருந்த அந்த கிராமத்தில் புள்ளி வைத்தாற்போல ஓரமாய் இருந்தது ஒரு சிறிய மரவீடும் அதையொட்டி சின்ன கேரேஜும். மார்த்தா உள்ளே சமையல் வேளையில் தீவிரமாக இருந்த போது கரடுமுரடான வயல்பாதையில் குலுங்கி குலுங்கி வந்து நின்றது அந்த சிறிய ரக ட்ரக். வீட்டிற்குள் சென்ற ஜோனதன் சமையலறையில் இருந்த மார்த்தாவை சென்று கட்டியணைத்தான்.

“ஹே.. டார்லிங்! இன்னைக்கு என்ன சமையல்?”

ஜோனதனின் கேள்விக்கு பதில் சொல்லும் மனநிலையில் மார்த்தா இல்லை. அவள் முகம் வாடியிருந்தது. ஜோனதனால் என்ன நடந்திருக்குமென்று யூகிக்க முடிந்தது.

“மறுபடி க்ளார்க் ஏதாவது பிரச்சினை பண்ணிட்டானா?” என்றார்.

”அவனுக்கு  ஸ்கூலுக்கு போக பிடிக்கலைனு சொல்றான். மத்த பசங்க அவன் கூட சரியா பழகுறது இல்லையாம்! அவன் பயப்படுறான் ஜோனதன். நீங்க அவன்கிட்ட கண்டிப்பா பேசணும்” மார்த்தா கண்கள் கலங்கின. ஜோனதன் அவளை கட்டியணைத்து தேற்றினார்.

கேரேஜூக்குள் இருட்டில் கண்கள் கலங்க அமர்ந்திருந்தான் க்ளார்க். ஜோனதன் கதவை திறந்ததால் வீசிய சூரிய வெளிச்சம் க்ளார்க் முகத்தில் பட்டு மறைந்தது. ஜோனதன் க்ளார்க் அருகில் வந்து அமர்ந்தார். சின்னஞ்சிறுவனான க்ளார்க் ஜோனதன் மடியில் ஏறி அமர்ந்து அவரை கட்டியணைத்துக் கொண்டான்.

”உனக்கு அவங்களோட பழக ரொம்ப கஷ்டமா இருக்கா க்ளார்க்?”

”நான் பழக முயற்சி பண்ணுனேன். ஆனா அவங்க என்னை ஒதுக்குறாங்க. எனக்கு ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல. செத்துடலாம் போல இருக்கு”

”இப்படியெல்லாம் பேச எங்க கத்துக்கிட்ட க்ளார்க்? சாகறது வாழ்றதை விட கஷ்டமான விஷயம் இல்ல! அதுக்காக எல்லாரும் செத்துக்கிட்டா இருக்காங்க”

க்ளார்க் கண்களை ஜோனதன் துடைத்துவிட்டார். அவனது நெற்றியில் முத்தமிட்டார்.

”எல்லாரும் ஏதோ ஒரு நம்பிக்கையின் பேர்லதான் வாழ்ந்துட்டு இருக்காங்க க்ளார்க். உனக்கு வாழ பிடிக்கலைனா உனக்கு ஒரு நம்பிக்கையை நீ உருவாக்கிக்கணும்!” என்றபடி அவனது கையில் ஒரு புதிய காமிக்ஸ் புத்தகத்தை அளித்தார்.

அதை பார்த்ததும் க்ளார்க் உதடுகள் புன்னகைக்க தொடங்கின. “ஹோப் மேன்” காமிக்ஸ் பெயரை ஒருமுறை சொல்லி பார்த்தான். நெஞ்சில் H முத்திரையுடன் திடகாத்திரமான வீரன் ஒருவன் குழந்தைகளை தூக்கி கொண்டு வானில் பறந்துக் கொண்டிருந்தான்.

புதுடெல்லி, இந்தியா

தனியார் விடுதி ஒன்றிலிருந்த டிவியில் முக்கிய செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது “டெல்லி விமான நிலையம் அருகே விமானம் விபத்துக்குள்ளானபோது எங்களது கேமராமேன் அதை அதிர்ஷ்டவசமாக படம் பிடித்துள்ளார். அந்த விமானத்தை சக்திமான் காப்பாற்றுவதும் உடன் வேறு ஒருவர் இருப்பதும் அதில் பதிவாகியுள்ளது”

செய்தியை கேட்டதும் கீதாவும், லூயிஸும் தொலைக்காட்சியை கவனிக்க தொடங்கினார்கள். ”ஆனால் உடன் இருப்பவர் யார் என கேமராவில் துல்லியமாக தெரியவில்லை. அவர் யார் சக்திமான் போல மற்றுமொருவரா அல்லது விரோதியா?” டிவி நிருபர் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.

”அமெரிக்காவுக்கு மட்டுமே தெரிஞ்ச சூப்பர்மேன் இந்தியாவுக்கு எதுக்காக வந்திருக்கார்” சந்தேகமாக கேட்டாள் கீதா.

”எனக்கும் தெரியலை. ஆனா அது சூப்பர்மேன்தான் அப்படின்னு யாருக்கும் உறுதியா தெரியாது. உன்னையும் என்னையும் தவிர!” என்றால் லூயிஸ் லேன்.

”இதுக்கும் பிரெஸிடெண்ட் வரதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?” குழப்பமாக கேட்டாள் கீதா.

”பிரெஸிடெண்டுக்கு தீவிரவாதிகள்னால வேணும்னா ஆபத்து வரலாம். அதுவும் சிஐஏ, வெளியுறவு துறையோட பாதுகாப்புகளை மீறி வர முடிஞ்சா..!”

”தீவிரவாதிகளை வளர்த்து விடுறதே அமெரிக்காதானாம்! எல்லாரும் சொல்றாங்களே!” லூயிஸை சீண்டி பார்க்க ஆர்வமானாள் கீதா.

“எதை வெச்சு அப்படி சொல்ற?” லூயிஸ் கண்களில் ஒரு சந்தேகம் தென்பட்டது.

”எதை வெச்சு சொல்லணும்? அதான் நடமாடும் உதாரணமா முன்னாடியே இருக்கே வியட்நாம் யுத்தம்!”

”கீதா நீ என்ன தப்பா புரிஞ்சிட்டு இருக்க. நான் எந்த தத்துவங்கள் மேலயும் ஈடுபாடு கொண்டவள் இல்ல. உண்மையாவே அமெரிக்கா மேல தப்பு இருக்குனா அதை பத்தியும் எழுதக் கூடிய பத்திரிக்கையாளராதான் நான் இருந்திருக்கேன்” விளக்க முயன்றாள் லூயிஸ் லேன்

“நான் இதை சீரியசா கேட்கல லூயிஸ். நாம ஒன்னா வேலை செய்ய வேண்டியிருக்கதால ஒருத்தரோட அரசியல் நிலைபாடு பத்தி தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. அதான் அப்படி பேசினேன். சரி சொல்லு உங்க பிரெஸிடெண்ட் இங்க வரதை பத்தி என்ன நினைக்கிற. அவர் பாகிஸ்தான் – இந்தியா நடுவுல உண்மையாவே அமைதியை ஏற்படுத்த போறாரா? இல்ல ஆபத்தை குடுக்க போறாரா?”

”அவர் அமைதியை உண்டாக்க முயற்சி பண்ணலாம்.  ஆனா அவருக்கு இங்க ஏதாவது ஆச்சுனா அது எல்லாருக்கும் ஆபத்தா முடியும்”

”அவரை யார் என்ன பண்ண போறா.. சூப்பர்மேனை வெச்சு அப்படி சொல்றியா?”

”ஆபத்து சூப்பர்மேனாலயோ, சக்திமானாலயோ இருக்க போறதில்ல. அவங்க இங்க இருக்காங்கன்னா வேற ஆபத்தும் கூட இங்க இருக்கலாம்” லூயிஸ் எண்ணங்கள் எங்கெங்கோ சுழல தொடங்கின.

திடீரென சுயநினைவு பெற்றவளாய் “இப்போ நாம இதை பத்தி யோசிக்கிறதை விடவும் கங்காதர், க்ளார்க் என்ன ஆனங்கன்னு யோசிக்க வேண்டியது அவசியம்” என்றாள் லூயிஸ்.

“உனக்கு கங்காதர் பத்தி தெரியாது. அவரோட சேர்ந்தாலே செய்ய வேண்டிய எல்லா விஷயத்தை பாழாக்கிடுவார். எப்படியும் விடியுறதுக்குள்ள ஏதாவது ஃப்ளைட்டை புடிச்சி வந்திடுவாங்க. அப்போ பேசிக்கலாம்” என்றபடி படுக்கையில் வீழ்ந்தாள் கீதா.

அமெரிக்க தூதரகம், டெல்லி

இரவு நேரமென்றும் பாராமல் தூதரகத்தின் அடிதளத்தில் தீவிரமாக பணிபுரிந்து கொண்டிருந்தனர் அமெரிக்க ஊழியர்கள் சிலர். கட்டுப்பாட்டு அறையினுள் விமான விபத்தின் காட்சிகளை ஆராய்ந்து கொண்டிருந்தார் சிஐஏ அதிகாரி மைக் ஆலன். அவருக்கு விபத்து காட்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தான் இளம் ஊழியரான பெஞ்சமின்.

“பேஞ்சமின் நம்ம ஸ்பை சேட்டிலைட்ல பதிவான Footagesஐ எடு.. விமானத்தை எது தாக்குனுச்சுன்னு எனக்கு தெரிஞ்சாகணும்!”

சாட்டிலைட் காட்சிகள் முன்னாள் இருந்த பெரிய திரையில் தெரிந்தது. அதில் சூப்பர்மேனும், சக்திமானும் விமானத்தை நோக்கி பறந்து வரும் காட்சிகள் தெரிந்தன.

”சூப்பர்மேனோட இருக்கது யாரோ சக்திமான்னு சொல்றாங்க.. யார் அந்த சக்திமான்? ஏதாவது டீட்டெய்ல்ஸ் கிடைச்சுதா?”

“நம்ம ஏஜெண்ட்ஸ் அவரை பத்தி தேடிட்டு இருக்காங்க சார்.. சக்திமான் பத்தி ஒரு பெண் ரிப்போர்ட்டர்தான் அதிகம் எழுதி இருக்காங்களாம்” பெஞ்சமின் தெரிந்த அளவு பதிலை சொன்னான்.

”அந்த ரிப்போர்ட்டர் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சா சொல்லு பென். இவங்க ரெண்டு பேரும் ஒன்னா வந்து விமானத்தை காப்பாத்தறத பாத்தா நண்பர்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றபடி குறுந்தாடியை சொறிந்து விட்டுக் கொண்டார் ஆலன்.

”சார்.. அவசரப்பட வேணாம். இதையும் கொஞ்சம் பாருங்க! இது ஃப்ளைட் ஆக்ஸிடெண்ட் ஆகுறதுக்கு கொஞ்ச முன்னாடி ரெக்கார்ட் ஆனது” என்று ஒரு வீடியோவை பெரிய திரையில் காட்டினான் பெஞ்சமின்.

அதில் சூப்பர்மேன் சக்திமான் மீது லேசரை பாய்ச்சுவதும் அது தவறி விமானத்தை தாக்குவதும் தெரிந்தது. ஆலன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

“ஓ மை காட்.. இது இன்னும் பெரிய தலைவலியா இருக்க போகுது” ஆலன் நொந்துக் கொண்டார். அப்போது கதவை திறந்து கொண்டு ஒரு அதிகாரி உள்ளே நுழைந்தார்.

”சார் சக்திமான் பத்தி எழுதுன அந்த ரிப்போர்ட்டர் பேரு கீதா விஸ்வாஸ்” என்றார் நுழைந்த வேகத்தில்..

“இப்போ அந்த ரிப்போர்ட்டர் எங்க இருக்காங்க?”

”சார் அவங்களும் டெல்லியிலதான் இருக்காங்க.. இன்னைக்கு சூப்பர்மேன் காப்பாத்துன அதே விமானத்துலதான் அவங்க வந்திருக்காங்க..!”

“சூப்பர்மேன் காப்பாத்துன விமானத்துலயா?’ மறுபடி எதிரே இருந்த திரையை நோக்கினார் ஆலன். சூப்பர்மேனின் லேசர் சக்திமானை நெருங்கி கொண்டிருந்தது அந்த வீடியோவில்..

“சார் அந்த ரிப்போர்ட்டரோட டெய்லி ப்ளானட் ரிப்போர்ட்டர் லூயிஸ் லேனும் பயணம் பண்ணி இருக்குறதா டாக்குமெண்ட்ஸ்ல இருக்கு சார்”

“சரி.. அந்த ரிப்போர்டர்ஸ் மேல ஒரு கண்ணு வெச்சிக்கோங்க”.. ஆலன் சொல்லிக் கொண்டிருக்கும்போது திரையில் தெரிந்த வீடியோக்கள் சிதைந்து தெரிய தொடங்கின.

“பெஞ்சமின் என்னாச்சு?”

“யாரோ நம்ம சிஸ்டத்தை ஹேக் பண்றாங்க சார்.. அவங்க இந்தை வீடியோ ஃபைல்ஸை திருடுறாங்க”

“உடனே ஏதாவது பண்ணு பென்” உரக்க கத்தினார் ஆலன்.

ஆனால் திரையில் இருந்த வீடியோக்கள் முழுவதுமாக மறைந்து போனது. இருட்டு திரையில் ஒரு முத்திரை தெரிந்தது. அதன் கீழே Lider என்று இருந்தது.

ஆலனும், பெஞ்சமினும் அதிர்ச்சியாய் அந்த திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்

சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 4

டாக்டர் ஜக்காலால் தாக்கப்பட்டு கீழே விழுந்த சூப்பர்மேனை சக்தி வாய்ந்த ஒன்று வானத்தை நோக்கி வீசியது. வானத்தை நோக்கி வீசப்பட்ட சூப்பர்மேன் மேகக்கூட்டத்தை தாண்டி சென்றார். சூரிய ஒளி அவர்மேல் விழ தொடங்கியதும் இழந்த சக்தியை மீள பெற்று கண் விழித்தார். தன்னை தாக்கியது எதுவென்று தேட தொடங்கினார்.

“நீ யார்? டாக்டர் ஜக்கால் ஷிப்ல உனக்கு என்ன வேலை?”

மேகக்கூட்டத்திற்கு நடுவே இருந்து கனீரென ஒலித்தது ஒரு குரல். மேகங்கள் விலக தொடங்கியபோது சூரிய ஒளியில் அந்த சக்கரம் கண்களை கூசியது. கம்பீரமான தோற்றத்தோடு சக்திமான் சூப்பர்மேன் முன்னே தோன்றினார்.

”நீ யாரு?” சக்திமான் கேட்டார்.

“அதையேதான் நானும் கேக்கறேன்” என்றபடி வேகமாக பாய்ந்து வந்தார் சூப்பர்மேன்.

சூப்பர்மேனும், சக்திமானும் வேகமாக வந்து ஒருவரை ஒருவர் தாக்கினார்கள். அவர்கள் மோதிக் கொண்டதில் அணுகுண்டு வெடித்தது போல மேகக் கூட்டங்கள் நாலா திசையிலும் சிதறின. சூப்பர்மேன் சக்திமானை கீழே தள்ளினார். பிறகு வேகமாக அவரை நோக்கி சென்றார் சூப்பர்மேன். ஆனால் சக்திமானை காணவில்லை. சூப்பர்மேன் சுற்றும் முற்றும் பார்த்தபோது மேலிருந்து திடீரென வந்து தாக்கினார் சக்திமான். அவர் தாக்கிய வேகத்தில் மின்னெலென பூமியை நோக்கி சென்ற சூப்பர்மேன் சரிஸ்கா புலிகள் காப்பகத்தின் காட்டு மரங்களில் மோதி உடைத்துக் கொண்டு எறிக்கல் வீழ்வதுபோல காட்டின் நடுவே இருந்த குளத்தில் வீழ்ந்தார். நாலா பக்கமும் தண்ணீர் சிதறி தெறிக்கவும், நீர் அருந்தி கொண்டிருந்த காட்டு விலங்குகள் அந்த சத்தம் கேட்டு பீதியில் சிதறி ஓடின. சற்று நேரம் பெரும் அமைதி நிலவியது. திடீரென தண்ணீரை கிழித்துக் கொண்டு ராக்கெட் போல வானத்தை நோக்கி சீறினார் சூப்பர்மேன்.

சக்திமான் வானத்திலிருந்தபடியே சூப்பர்மேனை தேடிக் கொண்டிருந்தார். திடீரென பக்கவாட்டிலிருந்து பயங்கரமாக வந்து மோதி தள்ளினார் சூப்பர்மேன். இதனால் நிலைக்குலைந்த சக்திமான் ஜெய்ப்பூர் தாண்டியுள்ள தாரக் கோட்டையின் அருகே உள்ள மலைப்பகுதியில் மோதினார். சூப்பர்மேன் மோதிய வேகத்தை சக்திமானால் கட்டுப்படுத்த முடியாததால் குளத்தில் வீசப்பட்ட தவளைக்கல் போல தரையில் மோதி மோதி பந்து போல தவ்வி தவ்வி சில மீட்டர்கள் தூரம் சென்று விழுந்தார். தட்டுத்தடுமாறி எழுந்து நின்றார் சக்திமான். சூரியஒளி கண்ணை கூசியது. அப்போது ஒரு நிழல் தன்மேல் படர்வதை சக்திமான் உணர்ந்தார். வானத்திலிருந்து வந்திறங்கிய சூப்பர்மேனின் நிழல் சக்திமான் மேல் விழுந்துக் கொண்டிருந்தது.

சூப்பர்மேன் முகத்தில் அப்படி ஒரு கடுமை. ”உன்னை போல நிறைய பேரை பாத்துட்டேன்.. உண்மையை சொல்லு உங்களுக்கு க்ரிப்டானைட் எங்கிருந்து கிடைச்சது”

”நீ எதை பத்தி கேக்குறேன்னு புரியலை.. நீ ரொம்ப ஆபத்தானவனா தெரியிற”

“ஆமா.. நான் ஆபத்தானவன்தான்.. அதுனால உண்மையை சொல்லிடுறது உனக்கு நல்லது”

சூப்பர்மேனின் பேச்சு சக்திமானுக்கு புரியவில்லை. அதேசமயம் தன்னை நிலைக்குலைய செய்தவனுடன் விவாதம் செய்வது உதவாது என நினைத்தார் சக்திமான். சட்டென பாய்ந்து சூப்பர்மேனின் கழுத்தை பிடித்த சக்திமான் மென்னியை முறிக்க தொடங்கியவாறே மிகவேகமாக வானில் சூப்பர்மேனை இழுத்து செல்ல தொடங்கினார். புயல்வேகத்தில் பலநூறு கிலோமீட்டர்களுக்கு நொடிப்பொழுதில் சக்திமான் இழுந்து சென்றதால் இப்போது சூப்பர்மேன் நிலைக்குலைந்தார். ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு சட்டென திரும்பி சக்திமானின் பிடியிலிருந்து விலகி பயங்கரமாக சக்திமானை உதைத்தார் சூப்பர்மேன். பிறகு தனது கடைசி அஸ்திரத்தை பயன்படுத்த முடிவெடுத்த சூப்பர்மேன் கண்கள் கனல் போல சிவக்க தொடங்கியது. சக்திமானை நோக்கி தனது கண்களில் இருந்து சிவப்பு நிற லேசரை உமிழ்ந்தார். மின்னல் வேகத்தில் வந்த அந்த கதிலிரிலிருந்து சக்திமான் நூல் இழையில் நழுவினார்.

சக்திமானை கடந்து சென்ற அந்த லேசர் கதிர் அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த விமானத்தை தாக்கியது. விமானத்தின் ஒரு பக்க எஞ்சினை அது தாக்கியதால் விமானம் செயல் இழந்து பூமியை நோக்கி விழ தொடங்கியது. விமானத்தின் உள்ளே பயணிகள் அனைவரும் பயத்தில் அலறிக்கொண்டிருந்தனர். கீதாவும், லூயிஸ் லேனும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

விமானிகள் விமானத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டனர். “கண்ட்ரோல் ரூம்.. கண்ட்ரோல் ரூம்.. விமானத்தை ஏதோ தாக்கிருக்கு. வலதுபக்க எஞ்சின் பத்தி எரியுது.. நாங்க கட்டுப்பாட்டை இழந்துட்டோம்”

விமானம் வீழ்வதை பார்த்ததும் சக்திமானும், சூப்பர்மேனும் அதை நோக்கி விரைந்தனர்.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை ஸ்தம்பித்தது.

“ஹலோ.. ஹலோ.. பைலட்ஸ்.. நாங்க ஃபயர் செர்வீஸை ரெடி பண்றோம்.. உங்களால விமானத்தை தரையிறக்க முடியுமா?” கட்டுப்பாட்டு அறை உதவியாளர் விமானிகளிடம் பேசிக் கொண்டிருக்க, மொத்த கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் வானத்தை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை விலக்கி கொண்டு வந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரியும் வானத்தை பார்த்தார். வானத்திலிருந்து விமானம் பூமியை நோக்கி செங்குத்தாக வந்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையில் பலர் “அது சக்திமான்.. சக்திமான் வந்துட்டார்” என வானத்தை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.ஆனால் அவர்கள் இன்னொன்றை பார்க்க மறந்து விட்டார்கள். விமானத்தின் பின்னால் ஏதோ வருவதை பார்த்தார் கட்டுப்பாட்டு அதிகாரி. அதிர்ச்சியில் கத்த தொடங்கினார்.

”விமானத்துக்கு பின்னாடி பாருங்க… பெரிய பறவை மாதிரி ஏதோ வருது!”

”இல்ல.. அது சூப்பர்மேன்” சத்தம் கேட்ட திசையை நோக்கி திரும்பியபோது அமெரிக்க வெளியுறவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூலாக நின்றுக் கொண்டிருந்தார்.

வானத்தில் விமானத்தை நெருங்கிய இருவரும் விமானத்தின் இறைக்கைகளில் ஆளுக்கு ஒன்றை பிடித்துக்கொண்டு செங்குத்தாக சென்ற விமானத்தை கிடைமட்டமாக உயர்த்தினார்கள். விமானத்தின் ஜன்னல் வழியாக கீதா சூப்பர்மேனை பார்த்தாள். அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அப்போது அருகிலிருந்த லூயிஸ் லேன் கீதாவின் தோள்பட்டையில் தட்டி அழைத்து மறுபக்க ஜன்னலை ஆச்சர்யத்தோடு சுட்டிக்காட்டினாள். அந்த பக்கம் சக்திமான் எஞ்சினை தாங்கி கொண்டிருந்தார்.

புகையை கக்கிக்கொண்டு வானத்திலிருந்து வரும் அந்த விமானத்தை பார்த்ததும் டெல்லி விமான நிலைய தீயணைப்பு வண்டிகளின் சத்தம் கேட்கத் தொடங்கியது. வானத்திலிருந்து விமான தளத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த அந்த விமானம் சாலைகளில் உள்ள மக்களின் கண்களுக்கும் தெரிந்தது. அதை பார்த்தப்படி மக்கள் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மேம்பாலம் அருகே பைக்கில் கடுப்பாக உட்கார்ந்திருந்த டிவி கேமராமேன் விமானம் விழுவதை பார்த்ததும் உடனே கேமராவை எடுத்து அதை ரெக்கார்ட் செய்ய தொடங்கினான்.

ஒரு வழியாக விமானம் மெல்ல இறங்கு தளத்தில் வந்து நின்றதும் காற்று வேகமாக சுழன்றடித்தது. மின்னல் வெட்டுவது போல சில ஒளிக்கீற்றுகள் தோன்றின. பிறகு அந்த இடம் அமைதியானது. கதவு திறந்து பயணிகள் வெளியே வர தொடங்கினர். கீதாவும், லூயிஸ் லேனும் வெளியே வந்த மாத்திரத்தில் சக்திமானையும், சூப்பர்மேனையும் தேடினார்கள். ஆனால் அங்கு அவர்கள் இல்லை.

தொடரும்

#Yugen

THOR VS AQUAMAN பகுதி- 5

முன்கதை சுருக்கம்
Thor ரும் Aquaman னும் சண்டை போட்டு சமாதானம் ஆனா பிறகு , Mera தான் janeக்கு விஷம் கொடுத்துருப்பால் என்று சந்தேகம் எழுந்தது Aquaman க்கு .
அதனால் Aquamanனும் Thor ரும் jane னை குணப்படுத்துவதற்காக்கவும்
உண்மை என்னவென்று அறிந்து
கொள்வதற்க்காகவும் Atlantis நோக்கி செல்லவுள்ளனர்….

இனி
” இப்போ எப்புடி Jane அ அழைச்சிக்கிட்டு தண்ணிக்கு அடியில இருக்குற உன்னோட Atlantis க்கு போகப்போறோம் ” – Thor" அதுக்கு ஏன்கிட்ட ஒரு வழி இருக்கு நீ கவலைப்படாத " என்று Aquaman கூறி ஒரு திரவமருந்தை கொடுத்தார்.... "இது Atlantis ல உருவான ஒரு மருந்து...

கடல் வாழ் உயிரினங்கலை ஆராய்ச்சி சென்ஞ்சி உறுவஙக்குனது….இத எந்த ஒரு உயிரினம் சாப்பிட்டாலும்…அது ஆழ்கடல்ல சகஜமாக வாழக்கூடிய ஒரு உயிர்ரா மாறிடும்….
இது உங்கள கொஞ்சம் நேரம் atlantians அ மாத்தும்….அந்த நேரம் போதும் நமக்கு…. “ சரி இது jane அ குணப்படுத்துமா என்று Thor கேக்க... Aquaman நின் பதில் " இல்ல முழுசா இல்ல அனா இத சாப்பிட்டதுக்கு அப்புறம் அவளால கொஞ்சம் பேசமுடியும்..." " இந்த மருந்தை எப்போதும் உன் குடையே வச்சுருப்பிய " - Thor "அப்புடி சொல்லிடமுடியாது...அத நான் எடுத்துட்டு வந்த உண்மையான காரணத்தைசொன்ன உனக்கும் எனக்கும் திரும்பவும் பெரிய போரே நடக்கும் அதனால சீக்கரம் புறப்படலாம் வா...." கடற்கரை பகுதியில் : Aquaman குடுத்த மருந்தை Thor எடுத்துக்கொள்ள jane கும் அதை கொடுக்கிறார்..

மருந்தை சாப்பிட்ட பின்…கொஞ்ச நேரத்திலேயே….jane…மெதுவாக…கண்விழித்து பேச..தொடங்கினாள்….
பேச தொடங்கிய jane Thor , thor என…முனங்கினாள்… "Jane , jane ... இங்க பாரு ...உனக்கு ..ஒன்னும்...ஆகாது....நான்

உனக்கு ஒன்னும்..ஆக விடமாட்டேன்…”
” Thor i am sorry….உண்ண…நான்…ரொம்ப அழ வச்சிட்டேன்..” – jane " இல்ல..இல்ல..jane..நான் தான்...உனக்கு sorry சொல்லியாகனும் நான்தான்..உண்ண தப்பா நினைச்சுட்டேன் அதுவும் இல்லாம..இத்தன

வருஷம் உன்னை பார்க்க வராம இருந்ததுக்கும் .
” I am Sorry Jane ” i am sorry …..
என கண்கலங்கியபடி….thor jane நிடம்
கூறிக்கொண்டிருக்குறார்.. " Its...ok...Thor..நீ ஒரு நாள் எனக்காக என்ன..பார்க்க...வருவேங்குர நம்பிக்கை எனக்கு இருந்துச்சு.....என் நம்பிக்கை வீணாகல...."

என்று கூறி சிறிதாக புன்னகைதால்…jane ( அந்த சிறு புன்னகையய் பார்த்ததும்..thor க்குள்..ஒரு பெரிய நம்பிக்கை வந்தது...)

தன் இரண்டு கைகளால் jane…நை ஏந்தி..நீருக்குள்..இருங்க..தயாராக நின்றார் Thor

‘இப்போ பரவாயில்லையா jane ” – Aquaman " Yeah கொஞ்சம் பரவால்ல....thanks Arthur.."

“இந்த மருந்தை வந்த உடனையே…உனக்கு குடுத்துருக்கணும்…ஒரு சில சம்பவங்கலாள..கொஞ்சம் தாமதம் ஆகிட்டு
இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்துக்கோ jane உன்னை முழுசா குணப்படுத்திடுறேன்”
என்று aquaman கூற…
மூவரும்..கடலுக்குள் செல்கின்றனர்…
நீருக்குள் சென்றதும் jane கண்ணை முடிக்குகொண்டு Thor ரை கெட்டியாக புடித்துக்கொண்டால்… இதனை பார்த்த...Aquaman " பயப்புடாத jane கொஞ்சம் தூரம் தான் இருள் இருக்கும்...அதுக்கு அப்புறம் உங்களாளையும் எல்லாத்தையும்...தெளிவா பார்க்க முடியும்....

சுலபமாக பேசவும் முடியும்… கடலின் அழைத்து நெருங்க....jane நாள் அனைத்தையும்...தெளிவாக பார்க்க முடிந்தது....

கடலின் ஆழமும் அழகும்…jane நை வியக்கவைத்து….
” oh my God …இது ரொம்ப ரொம்ப ரொம்பவே….அழகா இருக்கு ” – jane..
Jane அந்த அழகை ரசித்து வர…
Aquaman நிடம் கூறிய சில விஷயங்கள் நினைவுக்கு வருகிறது…. "நான் உங்கள் பத்தி தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன், உங்களால எப்புடி தண்ணிக்கு அவுளோநேரம் இருக்க முடியுது....

நீங்க எங்கிருந்து வரிங்க ….ஆழ்கடல்ல அப்புடி என்னதான்..இருக்கு…” இது போன்ற சில நினைவலைகள் ஓடிக்கொண்டிருக்கும் போது Jane னுக்கு ஒரு விஷயமும் அப்போதுதான் புரிந்தது... Aquaman தன்னுடைய ஆசையையும்.நிறைவேதத்தி தன்னுடைய ஆராய்ச்சிக்கு பதில் அளிக்கத்தான் அந்த திரவமருந்தை கொண்டுவந்தார் என்பது.... மூவரும் atlantis சை நெருங்க

Atlantis க்குள் நுழைவதற்கு…முன்..
ஒரு பெரிய பாழடைந்த கோட்டையின் மீது
Mera லேசாக மயங்கிய நிலையில் கட்டிபோடப்பட்டுள்ளல்…
அதனை பார்த்ததும் Aquaman னுக்கு சற்று அதிர்த்தியக இருந்தது வேகமாக Mera விடம் செல்ல…
ஒரு பெரிய sea Monster வந்து வேகமகா Aquaman னை தாக்கிச்சென்றது….
இதன்னை பார்த்த Thor Jane னை அந்த கோட்டையின் மேல்புறத்தில் பத்திரமாக அமர வைத்தார்
” நீ இங்கையே இரு jane அவனு இப்போ என்னோட உதவி தேவை “ அந்த Sea Monster திரும்பவும் Aquaman னை தாக்க வர...Thor தனது mjolnir சுத்திவிட்டு அந்த monster ரை நோக்கி விட... Mjolnir monster தலையில் அடித்து , Monster மயங்கி விழுந்தது... பிறகு Aquaman கோட்டை அருகில் வந்து கட்டிப்போடப்பட்டிருந்த Mera வை விடுவிக்கிறார்

Mera வும் மயங்கிய நிலையில் இருந்து கண்விழித்து பார்க்கிறாள்…… இப்போது Mera , Aquaman ,Thor , Jane நால்வரும் ஒரே இடத்தில் இருக்க இருள் நிறைந்த நீருக்குள்லிருந்து ஒரு மிகப்பெரிய சிரிப்பு சத்தம் கேட்க்க..... Loki யும் ocean Master ரும் அதிலிருந்து வருகிறார்கள்.... Aquaman ,Thor இருவர் முகத்திலும் மிகப்பெரிய அதிர்ச்சி " Loki நீ எப்புடி இங்க " " விடை தெரியாத உன் கேள்விகளுக்கு விடையளிக்க வந்துள்ளேன் சகோதரா..." தொடரும்..........

சூப்பர்மேன் வெர்சஸ் சக்திமான் – பகுதி 1

ஓமனுக்கும், இந்தியாவிற்கும் இடையே பரந்து விரிந்த அரபிக்கடல் பகுதியில் விரைந்து கொண்டிருந்தது கப்பல் ஒன்று. கப்பலின் மேற்பரப்பில் துப்பாக்கி சகிதம் ஆட்கள் சிலர் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்தனர். வீசும் கடல்காற்றை கிழித்துக் கொண்டு கப்பலில் வந்திறங்கியது ஹெலிகாப்டர் ஒன்று. அதிலிருந்து கோட் சூட் போட்ட திடகாத்திரமான ஆசாமி ஒருவன் இறங்கி உள்ளே சென்றான்.

”சார்.. ஹார்பர்ல கப்பலை நிறுத்துறதுக்கு பெர்மிஷன் வாங்கியாச்சு.. இல்லீகல்தான். கப்பல் ரிப்பேர் சரி பண்ண ஒரு வார காலம் ஆகும்னு சொல்லிருக்கேன்”

திடகாத்திர ஆசாமி சொல்லிக் கொண்டிருக்க அறையின் நிழலில் இருந்து வெளி வந்தது அந்த உருவம், மொட்டை தலையுடன், கண்களில் விஷமத்துடன்.. லெக்ஸ் லூதர்தான் அது.

‘வெல் டன் ஜேம்ஸ்.. ஒரு வாரம் போதும்.. என் திட்டத்தை செயல்படுத்த..!”

அப்போது மற்றொரு குரல் குறுக்கிட்டது.

“என்னது உன் திட்டமா? நம்ம திட்டம்னு சொல்லு..” முன்னாள் சுருண்டு விழும் முடி, குறுந்தாடியுடன் கண்ணை பறிக்கும் வண்ணத்தில் கோர்ட் அணிந்திருந்த அந்த நபர் கத்தினான் “பவர்ர்ர்…”

அமெரிக்காவின் மெட்ரோபோலிஸ் நகரம் வழக்கம்போல சுறுசுறுப்பாக இயக்கி கொண்டிருந்தது. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டதை உணர்ந்தபடி க்ளார்க் கெண்ட் வேகமாக மாடிப்படிகளில் ஏறி சென்று “டெய்லி ப்ளானட்” அலுவலகத்துக்குள் நுழைந்தான்.

“வாப்பா கெண்ட்.. இன்னைக்காவது ஏதாவது உருப்படியான நியூஸ் வெச்சிருக்கியா?” வந்த உடனே கேள்விகளால் துழைத்தார் சீஃப் எடிட்டர் பெர்ரி வொயிட்.

”ம்ம்.. அதுவந்து.. நகரத்துல கட்டபோற புது பூங்கா பத்தி..” சமாளிக்க முயன்று கொண்டிருந்தான் க்ளார்க்.

”நீ பூங்கா பத்தியும் எழுத வேணாம்.. தேங்காய் பத்தியும் எழுத வேணாம்.. என் கேபினுக்கு வா” என்று சொல்லிவிட்டு வேகமாக போனார். க்ளார்க் மெதுவாக பின் தொடர்ந்து சென்றான்.

பெர்ரி கேபினில் ஏற்கனவே லூயிஸ் லேன் காத்துக்கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் க்ளார்க் மெல்ல சிரித்துவிட்டு கண்ணாடியை சரி செய்து கொண்டான்.

“உங்க ரெண்டு பேரையும் ஏன் வர சொன்னேன்னு சுருக்கமா சொல்லிடுறேன். ஏன்னா நமக்கு நேரம் இல்ல. நீங்க ரெண்டு பேரும் உடனே இந்தியா போயாகணும்”

க்ளார்க், லேன் இருவரும் வியப்புடன் சீஃபை பார்த்தார்கள்.

அவர் தொடர்ந்தார் “யூ.எஸ் பிரெசிடண்ட் க்ளிண்டன் அடுத்த வாரம் இந்தியா போக இருக்கார். அதுக்கு முன்னால நீங்க அங்க போய் இதுபத்தின டாக்குமெண்ட்ரி ஒன்னு ரெடி பண்ணனும். இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு நிலையில இது முக்கியமான சந்திப்பு. இன்னைக்கு நைட்டே நீங்க கிளம்புறீங்க”

லேன் குறுக்கிட்டாள், “இப்படி டக்குன்னு போக சொன்னா எப்படி? அங்க எங்களுக்கு யாரையும் தெரியாது….”

அவள் சொல்லி முடிப்பதற்கு சீஃப் தொடர்ந்தார் “இந்தியாவுல இருக்க ஆஜ் கி அவாஸ் பத்திரிக்கை உங்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுப்பாங்க. உங்களுக்கு தேவையான பொருட்கள எடுத்துக்கிட்டு கிளம்புற வழிய பாருங்க” சொல்லிவிட்டு வேகமாக போய்விட்டார்.

”இந்தியா போறது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்க போகுது” க்ளார்க் கெண்ட் ஜன்னல் வழியே வானத்தை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தான்.

பரபரப்பான மும்பை நகரத்தின் ஆசாத் மைதானத்தின் கிழக்கு பக்கத்தில் அமைதியாக குடிக்கொண்டிருந்தது “ஆஜ் கி அவாஸ்” பத்திரிக்கை அலுவலகம். உள்ளே பலரும் சுறுசுறுப்பாக பணியாற்றி கொண்டிருக்க ஒரு ஆள் மட்டும் கும்ப கர்ண தூக்கம் போட்டு கொண்டிருந்தார். அவரது குறட்டை சத்தம் ஆபீஸ் முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது.

”ஹலோ மிஸ்டர் கங்காதர்.. வீட்டுல தூங்க உங்களுக்கு நேரமில்லையா என்ன?” சீஃப் எடிட்டர் சத்யபிரகாஷ் தனக்கே உரிய கிண்டலுடன் கேட்டார்.

அவரின் குரலை கேட்டு துள்ளி எழுந்தார் கங்காதர் “இல்ல சார்.. நான் தூங்கவே இல்ல.. எல்லா நேரமும் சக்திமான எப்படி போட்டோ எடுக்கலாம்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். இப்பக்கூட கண்ணை மூடி அதைதான் யோசிச்சிட்டு இருந்தேன்”

“பரவாயில்லை கங்காதர் இனிமேல் நீங்க அதைபத்தி யோசிக்க வேணாம். நமக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு” கீதா விஸ்வாஸ் உள்ளே நுழைந்தாள்.

”யூ.எஸ் ல உள்ள டெய்லி ப்ளானட் பத்திரிக்கையில் இருந்து நம்ம நாட்டுக்கு ரெண்டு பத்திரிக்கைக்காரங்க வராங்க. அவங்களோட கீதாவும், நீயும் போய் டாக்குமெண்டரிக்கு அவங்களுக்கு தேவையான உதவிய செய்ங்க! புரிஞ்சதா கங்காதர்?” மூஞ்சை கடுமையாக வைத்துக்கொண்டு கேட்டார் சூர்யபிரகாஷ்.

“சார் டாக்குமெண்டரி எடுக்க நாங்க ஏன் போகணும்? போரடிக்கும். சினிமா ஸ்டார்ஸ இண்டர்வியூ பண்ண அனுப்புனீங்கன்னா நாலு போட்டோவாவது எடுத்துட்டு வருவேன்” வழக்கம்போல மொக்கை ஜோக் அடித்துவிட்டு சிரித்துக் கொண்டிருந்தார் கங்காதர்.

அப்போது க்ளார்க் கெண்ட்டும், லூயிஸ் லேனும் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். “வாங்க மிஸ்டர்.கெண்ட் அண்ட் மிஸ்.லூயிஸ்” என்றபடி அவர்களை உள்ளே வரவேற்றார் சூர்யபிரகாஷ்.

“இவங்கதான் உங்க டாக்குமெண்ட்ரிக்கு ஹெல்ப் பண்ண போற ரிப்போர்டர் மிஸ்.கீதா விஸ்வாஸ். அப்புறம் இவர் போட்டோகிராஃபர் கங்காதர்”

“இல்லை கங்காதர் இல்ல. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கர்நாத் சாஸ்திரி. அதான் என் முழு பேரு”

”இவர் இப்படிதான் கொஞ்சம் காமெடியா பேசுவார். நீங்க கங்காதர்னே கூப்பிடலாம்” கீதா லூயிஸிடம் விளக்கிக் கொண்டிருந்தாள்.

கங்காதருக்கு க்ளார்க் கெண்ட்டை பார்த்த மாத்திரத்திலேயே மனதிற்கு ஏதோ தவறாய் பட்டது. “இவன் மனிதன் போல தெரியலையே” என மனதுக்குள் நினைத்தவர் அவனை ஊடுருவி பார்த்தார். இவன் கண்டிப்பாக மனிதன் இல்லை, ஏதோ சதி இருக்கிறது என யோசித்தார். க்ளார்க் கெண்ட்டும் கங்காதரை எக்ஸ்ரே செய்து பார்க்க முயற்சி செய்தான். ஆனால் அவனால் ஊடுறுவ முடியவில்லை. எதிரே இருப்பது சாதாரண ஆசாமி இல்லை என்பதை க்ளார்க் உணர்ந்தான்.

“வெல்கம் டூ இந்தியா மிஸ்டர்.கெண்ட்” கை கொடுத்த கங்காதர் முகத்தில் கொஞ்சம் கடுப்பு தெரிந்தது. அதே கடுப்புடன் “தாங்க்ஸ்” என்றான் கெண்ட்

தொடரும்

#SupermanVsSakthimaan

#Yugen

God Emperor Doom Part Two

சென்ற பதிவில்‌ Doom எவ்வாறு கடவுளானான் எனப்‌பார்த்தோம்‌ அதனைத் தொடர்ந்து‌ இப்பதிவு

Doom தற்போது தன்னால் அழிக்கப்பட்ட Beyonders realm முன் அங்கு உடல் சிதறி இறந்து கடக்கும் beyndersயின் பயங்கரமான சக்திகளோடு நின்று கொண்டுள்ளான். Beyondersஐ அழிக்க doom பயன்படுத்திய molecule man doomயிடம் பேச வருகிறான்.

“Doom எனக்குள்ள நீ என்ன பன்ன? நான் Beyondersஓட Realmகுள்ள போன உடனே வெடிச்சு செதறுனது அட்டகாசமா இருந்துச்சு”

“உன்னை உருவாக்குனவங்களுக்கு உன்னையே எமனா மாத்திட்டேன்”

“அப்போ beyondersஓட சக்திகள் என்னாச்சு இந்நேரம் அது வெளிய வந்து Universeஓட கலந்திருக்குமே”

“அது எனக்குள்ள கலந்திடுச்சு”

“Wow……அப்போ marvel and dc universeஓட collisionஅ உன்னோட புது powersஅ use பன்னி தடுத்துட்டியா இல்ல ரெண்டும் பஸ்பமாகிடுச்சா?”

“தடுத்துட்டேன் இனிமேல் இப்பிரபஞ்சங்களின் கடவுளும் நான்தான் இவற்றை ஆளும் அரசனும் நான்தான்”

“ஓ….. சாரு கடவுளாகிட்டிங்க இந்த ரெண்டு உலகங்களுக்கும் என்னலாம் பன்னப் போற”

“இந்த இரண்டு உலகங்களும் இப்போ எனக்கு கடமைப்பட்டிருக்கு. நான் அவங்களுக்கு கடமைப்படல. அதோட நான் இந்த இரண்டு உலகங்களுக்குதான் கடவுளே தவர மூனாவதா ஒரு உலகம் எனக்கும் அப்பாற்பட்டதா இருக்கு அதையும் நான் என்னோட அரசாட்சில சேக்கப் போறேன்.”

“சரி மொத்த multiverseஐயும் நீயே ஆளனும்னு முடிவு பன்னிட்ட உனக்குனு ஒரு சொந்த planetஅ உருவாக்கி அதுல உனக்குனு ஒரு armyஐயும் create பன்னேன்.”

இதை கேட்ட உடனே molecule manஅ ஏதோ பலி ஆட்டைப் பார்ப்பது போல் பார்க்கிறார் doom

Doom “அப்படியே ஆகட்டும்” னு சொல்ல molecule manஐ சுத்தியும் ஒரு கவர்ச்சி விசை உருவாகுது. அந்த கவர்ச்சி விசை பல விண்கற்களையும் பல சிறிய planetsஐயும் molecule manஐ நோக்கி ஈர்க்க. Molecule man அவற்றிற்கு நடுவில் சிக்கிக்கொள்கிறான்

அதிலிருந்து தப்பிக்க molecule man தன்னுடைய முழு சக்திகளையும் பயன்படுத்த அங்கு அவனைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களும் அவனது சக்திகளால் உருகி ஒன்றாக இணைந்து ஒரு பிரம்மாண்டமான planetஆக மாறுகிறது. அதன் நடுவில் உள்ள melted lave coreயில் god emperor doomஆல் சிறைபடுத்தப்படுகிறான் molecule man. இப்போது உருவாகி இருக்கும் அந்த planetயிற்கு energy sourceயே molecule manதான்.

God Emperor Doom வெறும் பாறையாகவும் நெருப்புக் குழம்பாகவும் உள்ள அந்த planetஐ உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றார் போல் மாற்றுகிறார். அந்த planetயிற்கு doom வைத்துள்ள பெயர் Latveria.

Latveriaவில்தான் தனது பெரும் படையை உருவாக்க Doom திட்டமிட்டுள்ளார்.ஆனால் தற்போது அந்த இடம் வெறுமையாக உள்ளது


சில மணி நேரங்களுக்கு பிறகு

Black Quadrant (Kingdom of Thanos)

Thanos அங்கு தனது சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார் Corvous Glaive thanosயை நோக்கி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வருகிறான்.

“Master…..Master Thanos உங்களைத் தேடி Doom வந்திருக்கான்”

“அவனை என் முன் இழுத்து கொண்டு வா”

Carvous Glaive அடுத்த வார்த்தைகளை சொல்லத் துவங்குவதற்குள் ஒரு கை அவனது கழுத்தைப் பிடிக்கிறது உடனே கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடல் எரிந்து சாம்பலாகி காற்றோடு காற்றாக கலக்கிறது.

Carvous Glaiveயின் உடல் முழுவதுமாக அங்கிருந்து மறைந்ததும் Thanosயிற்கு வந்திருப்பது யார் எனத் தெரிய வருகிறது அது God Emperor Doomதான்.

“நான் அவனிடம்‌ உன்னை என் முன் அழைத்து வர சொல்லி சரியாக 123 வினாடிகள் அவகாசம் கொடுத்தேன் ஆனால் அவன் அதை செய்யவில்லை அதற்கான தண்டனையை வாங்கிக்கொண்டான்.”

Doom தன்முன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக நிற்பதைக் கண்ட thanosயிற்கு பயம் பதற்றம் வியப்பு போன்ற எதுவும் ஏற்படவில்லை.

Thanos Doomஐ பார்த்து “நீ என்னோட Black Order எல்லாரையும் வீழ்த்திட்டனு தெரியும் அவங்கள தாண்டி யாரும் இவ்ளோ தூரம் நடந்து வர முடியாது. சரி சொல்லு எப்ப இங்கிருந்து கெளம்புற”

“Mad titanங்குறத அப்பப்போ நிரூபிக்குறியே நான் Carvous Glaiveஅ தவிர வேற யாரையும் கொல்லல எல்லாரும் கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க. எனக்கு இப்போ தேவை ஒரு நல்ல படைத் தளபதி. நீயும் நானும் ஒன்னா சேந்து மொத்த Multiverseஐயும் அதோட சமநிலைய இழக்காமல் பாதுகாக்கலாம்”

“பாதுகாக்கலாம் victor von doom. ஆனால் அதற்கு முன் நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும். என் முன் மண்டியிடு”

Thanosயிடமிருந்து இந்த வார்த்தைகள் வெளிய வந்த அடுத்த வினாடியே ஒரு பயங்கரமான energy blastயின் மூலம் thanosஐ தாக்குகிறான் doom.

Thanosஆல் beyonders மூலம் Doomகு கிடைத்த சக்திகளை கொஞ்சம் கூட சமாளிக்க முடியவில்லை. ஆனாலும் doomயிற்கு அடங்க மறுக்கிறார் Thanos. உடனே Doom தன்னுடைய Magical Spell ஒன்றை Thanos மேல் பயன்படுத்த அங்கேயே மயங்கி விழுகிறார் Thanos.

ஆனால் அடுத்த சில வினாடிகளில் black quadrantயிலுள்ள படை வீரர்களும் black orderவும் மயக்கம் தெளிந்து God Emperor Doomயை சுற்றி வளைக்கின்றனர்.

Ebony Maw, black dwarf, proxima midnight, super giant நால்வரும் கொஞ்சம் கொஞ்சமாக Doomஐ நெருங்குகின்றனர். உடனே thanosவும் மயக்கத்திலிருந்து எழுந்திரிக்கிறார்.ஆனால் Doomயிற்கு கொஞ்சம் கூட அவர்களைக் கண்டு பயம் இல்லை.

Black Quadrant படைவீரர்கள் அனைவரும் Thanosயின் கட்டளைக்காக காத்திருக்க (சிறிது நேரம் அமைதி நிலவுகிறது)……………………………………… Thanos திடீரென்று God Emperor Doom முன் மண்டி இடுகிறார். இதனைக் கண்ட thanosயின் படைவீரர்கள் அனைவரும் மிரண்டு போகிறார்கள். பின் தனது masterஐ போல ebony Mawவும் Doomயிற்கு தலை வணங்க thanosயின் மொத்த படைகளும் doomயிற்கு தலை வணங்குகிறது

தொடரும்…………………

SUPERMAN : GOD AMONG US(PART -4)

முன்கதை சுருக்கம்
Informer கொடுத்த MicroDrive Chip ஐ ஆராயந்த lois தொழிற்நுட்ப வசதி போதாததால் Clarke அதை Bruce இடம் கொடுக்க செல்கிறார். அங்கு Bruce இல்லை மாறாக Alfred இடம் அதை கொடுத்து Decrypt செய்கிறார்.

BIONIC LABS Switzerland

“Hello Clarke” “Pleasure to Meet You””Welcome to Switzerland” னு கை கொடுக்குறார் Santino.

“Nice to Meet you” Santino

“Please Have a seat” னு Sofa கை காட்டுறார்

“What do you like to have”

“இல்ல வேண்டாம்னு I.D card தூக்கி காமிக்கிறார்

நீங்க கொஞ்சம் இங்க wait பண்ணுங்க. சில Formlaities முடிஞ்ச உடனே நாம Lab குள்ள போலாம்.

“கண்டிப்பா” சொல்றார் Clarke. Santino உள்ள போறார். Clarke அவனோட Enhanced vision வெச்சு சுத்தியும் பாக்குறார். So Far Normal Lab மாறியே தெரிந்சுது.

“CLARKE” இந்தாங்க இந்த lead Bagde மாட்டிகோங்க னு கொடுக்குறார். Clarke அத மாட்டிட்டு உள்ள வர தயார் ஆகுறார். இந்த Chamber வழியா உள்ள போங்கனு சொல்றார். Clarke ம் வர்றார்.

இந்த மாறி இடத்துல எப்படி BIONIC LAB வெச்சுருக்கீங்க னு கேக்குறார்.

Of Course உலகம் பூரா எங்க Lab இருந்தாலும் இந்த Lab exclusively for CERN.

CERN க்கான Special Instruments, Cores எல்லாமே இங்க தான் Produce பன்றோம்.

Clarke Santino கிட்ட கேள்வி கேட்டுட்டே உள்ள Lab அ full and full analyse பன்றார். Sudden அவர் பார்வை அந்த Gate கிட்ட போகுது.

“RADIOACTIVE ZONE”

Sorry Clarke இது வரைக்கும் தான் உங்க access its Okனு Formality க்கு சில photos எடுக்குறார்.

Sudden அ EMERGENCY SNOWSTORM APPROACHING

EVACUATE THE AREA னு வருது

இது தான் சமயம்னு Clarke க்கு தோனுச்சு

I am Sorry Clarke நீங்க எங்க கூட வரனும்னு அவர் பாதுகாப்பா Escort பன்னி கொண்டு போய் விடுறாங்க. கொஞ்ச நேரத்துல எல்லாருமே வெளியே வந்துட்டாங்கனு உறுதிப்படுத்திட்டு Clark உள்ள போறார். LAB EMERGENCY power ல ஓடிட்டு இருக்குறதால Survellaince இல்லை. அந்த Radioactive zone உள்ள போறார். அங்க ஒண்ணுமே இல்ல அப்படியே Ground அ ஒரு Punch பண்ணி உடச்சுட்டு கீழ இறங்குறார். அதுவும் காலி ஆயிடுச்சு முன்னாடி இங்க ஏதோ இருந்துருக்குனு அவருக்கு தெரிஞ்சுடுச்சு. Enhanced Visionல சுத்தி பாக்குறப்ப ஒரு சின்ன Piece of Cloth கிடைக்குது. அத எடுத்துக்குறார்.

திடீர்னு எங்க பெரிய ஆபத்து வருதுனு உணருரார் அந்த Second ல பெரிய பாறை Factory வந்து தாக்குது. கீழ Factory Workers கொண்டு போயிட்டு இருக்குற Van பாறைகள் உருண்டு வரது பாத்து அதிர்ச்சியாகுறாங்க.

ஒரு பெரிய பாறை உருண்டு வந்து அவங்க Van மேல தாக்குது. அந்த Van உருளுது உள்ள மாட்டி இருக்குற Workers கூச்சலிடுறாங்க. அது கிட்டதட்ட ஒரு Cliff கிட்ட போய் விழுக போக சூப்பர்மேன் அத தாங்கிட்டு வந்து கீழ இறங்கிட்டு விடுறார். CONTINUOUS அ பாறைகள் உருண்டு வறத பாக்குறாங்க. அந்த LAB ல இருந்து இன்னொரு set of people winch ல இறங்குறாங்க. அந்த Supporting Tower அ பாறைகள் இடிச்சதால Winch Container கீழ விழுந்து Sledge ஆயிட்டே வேகமா வருது. சூப்பர்மேன் அத தடுத்து நிறுத்திட்டு அந்த இடத்த விட்டு போறார்.

CRIME BRANCH OFFICE

Door அ துரந்துட்டே வாய்ல Pizza ஓட Barry பேச ஆரம்பிக்குறான்.

“அந்த Race ல நான் 0.5 Nanosecond ல ஜெயிச்சுட்டேன்”

Clarke “அப்படியா”

ஆனா நாம பேசுன மாறி Treat எ வெக்கல ஆனா பரவாயில்ல இந்த Pizza எல்லாத்தையும் Tally பண்ணிடுச்சு.

“சொல்லுங்க Clarke நான் உங்களுக்கு என்ன உதவி செய்யனும்?”

எனக்கு இந்த Cloth piece பத்தி தெரியனும்னு அந்த Cloth கொடுக்குறார்.

Barry Gloves வாங்கி போட்டு அத வாங்கி பாக்குறார்

இது புது Material என் Database இந்த மாறி Cloth பத்தி இருக்காது. எனக்கு டைம் வேனும்.

No problem Barry கண்டுபிடிச்சுட்டா எனக்கு Call பண்ணுனு கைக்கொடுக்குறாங்க.

After 3 days

Barry Office ல அந்த Cloth Research பன்றார்.

Carbon Date பன்ன Result பாக்குறான்.

5000 வருஷ Cloth இங்க எப்படி.

Structural Analysis பன்ன Report எடுத்தப்ப ஏதோ Fishy ஆ இருக்குனு மட்டும் தெரியுது.

Cloth ல Radiation இருக்கு. ரொம்ப சின்ன Level ல Radiation இருக்கு.

ஆனா 5000 வருஷ Cloth ல எப்படி Radiation னு குழம்புறான்.

Sudden அ

Wait i can feel the Vibrations

Somebody is trespassing Timeline

அவன் அந்த உருவத்தை Ultraslow Motion ல பாக்குறார். இவன் கிட்ட அது ஒரு விஷயம் சொல்லிட்டு போகுது.

அதிர்ச்சில உறையுறான்..