Category Archives: Comics News

Powers of Shazam

  1. The Wisdom of Solomon Shazam என்னும் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒரு கடவுளை குறிக்கும் . இந்த பெயரில் உள்ள முதல் எழுத்து குறிப்பது S-Solomon. இவரிடமிருந்து Shazamகு கிடைத்த சக்தி Wisdom of Solomon அதாவது சாலமொனின் ஞானம். இந்த சாலமோன் என்பவர் கடவுளா?. இல்லை கடவுளிடமிருந்து வரம் பெற்ற அரசர்.இவர் இஸ்ரேல் நாட்டின் இரண்டாம் அரசர். பேரரசர் டேவிட்டின் மகன்.இவருக்கு ஞானம் கடவுளிடமிருந்து கிடைத்தது(bible 1அரசர்,அதிகாரம்3)இந்த கதை நமக்கு தற்போது தேவையில்லை. நாம் இந்த சாலமோனின் ஞானத்தால் Shazamகு கிடைத்த ஞானம்தான் என்ன? என்று இதற்கு மேல் பார்க்கலாம்.

Billy shazamஆக மாறும் போது இவ்வுலக வரலாறு முதற்கொண்டு அனைத்தும் அவருக்கு தெரியும் என்னதான் தெரிந்தாலும் billyயின் சுட்டித் தனத்திற்கு முன்னால் சாலமோனின் சக்தியே தினறிவிடும் இதனாலேயே சில(பல) தவறுகளும் செய்வதுண்டு. அவ்வளவு குறும்புக்கார கதாப்பாத்திரம் billy.

Shazamஆல் இதனைப் பயன்படுத்தி எந்தவித கண்டுபிடிப்புகளையும் சுலபமாக உருவாக்க

Shazamஆல் பூமியில் உள்ள அனைத்து மொழிகளையும் புரிந்துகொள்ளவும், பேசவும் முடியும்.

Shazamவுடைய ஒவ்வொரு attackயிலும் ஒவ்வொரு யுக்தி இருக்கும். இதற்கு காரணமும் அதே wisdomதான்.

என்னும் இதே போன்று 5 உள்ளன அவற்றை வரப் போகும் பதிவுகளில் பார்க்கலாம். ஏப்ரல் துவக்க வாரத்தில் வெளியாகவிருக்கும் shazam திரைப்படத்தை end gameஐ பற்றி பேசிக்கொண்டே விட்டுவிட வேண்டாம்.

Marvel ரசிகர்களுக்கும் DCயின் வளர்ச்சி முக்கியமே. அப்போதுதான் இரு நிறுவனங்களிடமிருந்தும் என்னும் தரமான சம்பவங்களை நம்மால் காண முடியும்.

  1. Strength of Hercules சென்ற பதிவில் Shazamவுடைய S என்ற எழுத்திலுள்ள சக்தியான Wisdom of Solomonஐ பற்றி பார்த்தோம் தற்போது இரண்டாம் சக்தியான Strength of Hercules பற்றி பார்க்கலாம்

Shazamவுடைய வலிமை Herculesயிடமிருந்து கிடைத்தது. இந்த Herculesகு அப்படி என்ன Strength இருக்கு அவர் யார் என்று முதலில் பார்த்துவிடலாம்.

இவர் கிரேக்க கடவுளாகிய Zeusற்கும் Alcmeneற்கும் பிறந்தவர். இவர்தான் God of Strength. இவருடைய வலிமைக்கு சிறந்த எ.கா: இவருக்கு apolloவால் கொடுக்கப்பட்ட 12 labors எனப்படும் 12 Taskகளை முடித்ததுதான். அவை ஒவ்வொன்றும் மிகக் கடினமானவை.

Nemean Lion எனப்படும் சிங்கத்தை கொல்லனும்.
Lernaean Hydra எனப்படும் 9 தலைகளைக் கொண்ட பாம்பைப் போட்டுத்தள்ளனும்.Hera zeusகாக வாங்கி வெச்சு இருக்குற தங்க ஆப்பிள திருடனும் இந்த இடத்தில்தான் hercules மொத்த வானையும்(உலகையும் என எடுத்துக்கோள்ளலாம்) Atlasகு பதிலாக தூக்குவார்.
இப்படி என்னும் 9 challenges இருக்கு.

நாம இப்ப நம்ம Billy Batson கிட்ட வருவோம். இவருக்கும் இதே அளவுக்கு Power இருக்கா??? ஆமா இருக்கும். இவ்ளோ strength இருக்கும் போதா trailerல dr sivana shazamவுடைய punchஅ block பன்னாரு? Dr.Sivana ஒரு great scientist என்னமோ வித்தைய பன்னி அவருக்கும் super strength வர வைத்துள்ளார்.

இந்த வலிமையை வைத்துக்கொண்டு shazamஆல் இரும்பைக் கூட கரும்பு போல் உடைக்க முடியும். Shazamவுடைய ஒவ்வொரு attackயிலும் இந்த greatest strength இருக்கும்.

இந்த வலிமையை பயன்படுத்தி Hercules வானத்தை தாங்கியது போல காமிக்ஸில் shazam புயலில் சிக்கிய வீடு ஒன்றை சரிந்து விழாமல் தாங்கியுள்ளார். பிரம்மாண்டமான பனிப்பாறையை தனி ஒருவனாக நகர்த்தி சென்றுள்ளார்.இதனைவிட மேலாக தென் அமெரிக்க கண்டத்தையே இரண்டு கைகளால் நகர்த்தி சென்றுள்ளார் இவ்வாறு பல உள்ளன.

  1. Stamina of Atlas Shazamவுடைய சக்திகளில் wisdom of Solomon மற்றும் Strength of Hercules ஆகியவற்றை பார்த்துள்ளோம் தற்போது அவர் பெயரில் உள்ள எழுத்தான Aவை பற்றி பார்க்கலாம். இந்த எழுத்தில் மறைந்துள்ள கடவுள் Atlas. இவரும் ஒரு கிரேக்க கடவுள்தான்.

இந்த Atlasயிடமிருந்து பில்லி பேட்சன்னிற்கு கிடைத்த சக்தி Stamina of Atlas. இந்த Atlasதான் God of Endurance. இவர் ஒரு Titan. Titan கடவுள்களுக்கும் Olympiyan கடவுள்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் Titanகளை தலைமையேற்று வழிநடத்தியது Atlasதான்.

இவருடைய Staminaகு அளவேயில்லை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு Olympiyan கடவுள்களிடம் Titans தோற்க Zeusஆல் Atlasயிற்கு ஒரு தண்டனை கொடுக்கப்படுகிறது. அது என்னவெனில் இந்த வானத்தையும் அதனுடன் இணைந்த சொர்கத்தையும் Atlasதான் சுமக்க வேண்டும்.

Atlasவும் அதனை ஏற்று அவரது தோள்களில் மொத்த வானையும் சுமந்தார் . இது போல் Atlasஆல் எந்தவொரு வேலையையும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க முடியும்.

இதே போல் Shazamகும் Stamina மிகவும் அதிகம் அவரால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டே இருக்க முடியும். எவ்வளவு அழுத்தத்தை வேண்டுமானாலும் தொடர்ந்து தாங்க முடியும்.

  1. Power of Zeus Wizard shazamஆல் Billy Batsonற்கு கொடுக்கப்பட்ட 6 கடவுள்களின் சக்திகளில் மூன்றை பற்றி பார்த்துவிட்டோம். தற்போது நான்காவது சக்தியான Power of Zeusபற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

Zeus ஒரு கிரேக்க கடவுள். இவர்தான் Olympiyans கடவுள்களின் தலைவர். இவர் சண்டைக்கு பயன்படுத்தும் ஆயுதம் இடி. இவரால் இடி மின்னல்களை கட்டுப்படுத்த முடியும். இவர்தான் god of sky and thunder.
Atlasஐ மொத்த வானையும் சுமக்க வைத்ததும் zeus தான்.

Power of zeusயின் மூலம் பில்லி பேட்சன்னால் Zeusஐ போலவே இடியை கட்டுப்படுத்தவும் தாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தவும் முடியும். Shazamயின் தனித்துவமான சக்தியே இந்த power of zeus தான்.இந்த சக்திதான் Justice Leagueயில் Shazamஐ வேறுபடுத்திக் காட்டுகிறது.

  1. Courage of Achilles Shazam என்னும் எழுத்தில் உள்ள ஒவ்வொரு கடவுளைப் பற்றியும். அவர்களிடமிருந்து கிடைத்த சக்திகளைப் பற்றியும் பார்த்துக்கொண்டுள்ளோம். இது வரை நான்கை முடித்துள்ளோம். தற்போது A என்னும் எழுத்தில் மறைந்துள்ள சக்திகளைப் பற்றி பார்க்கலாம்.

இப்பதிவில் நாம் பார்க்கவுள்ள சக்தி Courage of Achilles அதாவது Achillesவுடைய தைரியம். தைரியமா? இதைவெச்சுகிட்டு என்ன செய்வது? Achilles யாரு?

முதலில் Achilles பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். Achilles மிகவும் தைரியம் பொருந்திய மாவீரன்(கடவுள் கிடையாது). ஏகப்பட்ட போர்களுக்கு சென்று வென்று வந்துள்ளார். இவரோட ஒரே பலவீனம் கால் மூட்டுக்கு கீழே பலமாக தாக்கினால் இறந்துவிடுவார். இந்த Weakness அவருக்கே தெரியாது.

கிரேக்க நாடுகளில் தைரியம் என்னும் சொல்லை எடுத்தாலே அதிகமாக மேற்கோள் காட்டப்படுபவர் இவர்தான்.சரி இவரோட தைரியம் Billyகு அப்படி என்ன தைரியத்தை கொடுத்து இருக்கும்.

Achillesவுடைய சக்தி இருப்பதனால் Shazamஆல் எந்த ஒரு தடையாக இருந்தாலும் அது Shazamயை விட மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் Shazamஆல் அதனை துணிந்து எதிர்க்க முடியும்.

இவ்ளோ தைரியம் இருப்பதனால் Shazam முந்திக்கொண்டு சென்று நிறைய உதை வாங்குவதும் உண்டு.

மேலும் இந்த சக்தியை வைத்துக்கொண்டு shazamஆல் 12 மணிக்கு மேல் சுடுகாட்டுக்கு போய்ட்டு வரவும் முடியும் என நினைக்கிறேன்.

  1. Speed of Mercury Shazamவுடைய சக்திகளில் அவருடைய ஞானத்தில் இருந்து சுடுகாட்டுக்கு தனியாக செல்ல துணை புரியும் தைரியம் வரை பார்த்துவிட்டோம். இப்பதிவில் Shazamயின் இறுதி எழுத்தான Mயில் மறைந்துள்ள கடவுளைப் பற்றியும் அவரால் Shazamகு கிடைத்த சக்தியைப் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.

SHAZAMவுடைய 6ஆவது எழுத்தான Mயில் உள்ள சக்தி Speed and Flying இதை வழங்கியவர் Mercury ஆதலால் இந்த சக்தியின் பெயர் Speed of Mercury

Mercury Roman mythology சேர்ந்த ஒரு கடவுள். இவரை god of travel எனக் கூறுவர். ஒரு இடத்தில் இருக்கவே மாட்டார்.

மற்ற கடவுள்களைக் காட்டிலும் இவரால் இவரின் இறக்கையுடன்(design) கூடிய காலனிகளைக் கொண்டு அதிவேகமாக இயங்கவும் பறக்கவும் முடியும்.

Mercuryயிடமிருந்து கிடைத்த சக்தியின் மூலம் Shazamஆல் வேகமாக இயங்க முடியும்.மேலும் Shazamகு பறக்கும் சக்தியும் இதனால்தான் கிடைத்தது.

எந்த அளவிற்கு வேகமாக Shazamஆல் செயல்பட அல்லது பயனிக்க முடியும்.

இதன் உதவியால் Shazamஆல் 5நிமிடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முடியும்.
சில நேரங்களில் ஒளியின் வேகத்தையும் Shazamஆல் அடைய முடியும்.

HENRY CAVILL aka SUPERMAN

அறிந்ததும் அறியாததும்


Cavill தன்னுடைய திரைப்பயணத்தை 2001 ஆம் ஆண்டு LAGUNA திரைப்படம் மூலம் தொடங்கினார் …அதன் பின்பு அவர் IMMORTAL
,STARDUST ,SAND CASTLE போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய hit என்றால் அது SUPERMAN கதாபாத்திரம் தான்…
2013 அம் ஆண்டு Zack snyder இயக்கத்தில் வெளியான Man of steel திரைப்படம்
DC FANS இடம் Cavill லை கொண்டு சேர்த்தது…
அனைவருமே henry cavill லை Perfect superman என்று புகழாரம் சூட்டினார்கள்…
ஆனால் அதற்க்கு பின் இருந்த cavill லின் உழைப்பு மிகவும் பெரியது…கிட்டதட்ட படத்தின் shooting ஆரமிப்பதர்க்கு 5 மாதத்துக்கு முன்பே superman கதாபாத்திரத்துக்காகா workout ஐ அரமித்துவிட்டார்….சொல்லப்போனால் ஒரு நாளுக்கு 5000 – 6000 calaries உணவில் எடுத்துக்கொள்வாராம்….என்னவாக இருந்தாலும்
இந்த கதாபாத்திரத்தை cavill நடித்த பின் இதற்க்கும் சில விமர்சனம் எழுந்தது , சூப்பர்மேன் என்ற ஒரு அமெரிக்க கதாபாத்திரத்தை எப்படி ஒரு British Actor நடிக்கலாம்..என்பது தான்…
இதற்க்கு cavill லே பதில் கூறியுள்ளார்
” சூப்பர்மேன் என்பவர் அமெரிக்கன் தான் ஆனால் அவர் அமெரிக்கர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அது ஒரு Universal கதாபாத்திரம் எல்லோருக்கும் பொதுவானது ….அது மட்டும் இல்லாமல் சூப்பர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கியது ஒரு Canadian. “
Henry Cavill Highschool படிக்கும்போது அவரின் Nickname ” fat cavill ” அவர் அப்போது சற்று குண்டாக இருந்ததால் எல்லோரும் அவரை அப்படி அழைத்து கேலி செய்துள்ளார்கள்
பின்நாளில் தன் உடல் எடையை குறைத்துள்ளார்.
Cavill 2014 அம் ஆண்டு அவர் adopt செய்த நாய்க்கு சூப்பர்மேனின் kal- El என்ற பெயரை வைத்துள்ளார்…இதுஎன்ன பிரமாதம் அவர் adopt செய்த வௌவால்களுக்கு BenBat என்று பெயர் வைத்துள்ளார் …
Cavill மிகவும் iconic role லானா James Bond கதாபாத்திரத்துக்கும் audition சென்றுள்ளார்….Casino Royale படத்துக்காக….
Harrypotter திரைப்படத்திலும் இவர் Cedric Diggory என்ற Role லில் நடித்திருக்கவேண்டியது…
ஆனால் பின்பு அந்த role லில் Robert pattinson
நடித்தார்….எல்லா நடிகர்களுக்கும் தன் வாழ்க்கையில் Dream Role என்ற ஒன்று இருக்கும்
Henry cavill லின் dream role “The great Alexander”
இதன் பின்பு cavill எத்தனை கதாப்பாத்திரங்களில் நடித்தாலும் அவரது Best என்றால் அது சூப்பர்மேன் நாகாத்தான் இருக்கும்….
Happybirthday HENRYCAVILL
#tonysiva

Star Wars story

நம்மளை Marvel, DC கட்டிபோட்டது என்றால் நமக்கு முந்தைய தலைமுறையை Star Wars கட்டிபோட்டது. விண்வெளி எப்பவுமே நமக்கு எண்ணிலடங்கா குஷியை தரும். குறிப்பாக விண்வெளி படம் என்றால் அதில் ஆர்வம் சற்று தூக்கலாகவே இருக்கும். STANLEY KUBRICK Space Odessey எடுத்து மொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தினார். அதன் பின்பு, George Lucas எனும் மேதை Star Wars இல் உலகை கட்டிப்போட்டார். பொதுவாக மனிதர்களுக்கும், ஏலியன்களுக்கும் தான் சண்டை, பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் தான் சண்டை என்ற சாதாரண Trend ஐ உடைத்து நட்சத்திர மண்டலங்களில் இருக்கும் கிரகங்களுக்குள் சண்டை என்ற Fresh concept ஐ உள்ளே இறக்கினார். பூமியில் நடக்கும் அரசியல் சூதுகளை அந்த சண்டைக்குள் கதைகருவாக நுழைத்தார்.

புரட்சியாளர்கள் என்றுமே தீவிரவாதிகளாக தான் சித்தரிக்க படுவார்கள் ஆளும் அரசர்களால். அதுவும் முந்தைய அரச குடும்பமே புரட்சியாளராக இருந்தால் என்ற கதையே Star Wars. நட்சத்திர மண்டலங்களின் தலைவனாக சூதால் Dark Lord ஆகிறார் Palpatine. பொதுவாக அரசனுக்கு ஆகச்சிறந்த தளபதி ஒருவர் எப்பவுமே இருப்பார். சில இடத்தில் அரசரை விட அவரை தான் மக்கள் விரும்புவார்கள். வல்லவராயன் வந்தியத்தேவனா, அருன்மொழி வர்மனா என்றால் வந்தியன் தான் என்று கூறுவார்கள். தளபதியில் தேவா வா சூர்யாவா என்றால் சூர்யா தான் என்பார்கள். அதுபோல் தான் Darth Vader எனும் மரண மாஸ் வில்லன் கதாபாத்திரம். Resistance எனப்படும் புரட்சி கும்பலை ஒழிக்க முனைப்போடு சுத்துவார் Dark Vader. Resistance இல் இருப்பவர்கள் யார் என்றால் அது இளவரசி Leia அப்புறம் Luke. இதில் இருவருக்குமே Force அதிகமாக இருக்கும். FORCE என்பது ஒரு சக்தி அது positive என்றால் அதில் பிரச்சனை இல்ல Negative என்றால் முடிந்தது. Darth vader negative Force ஆல் ஆட்கொள்ளப்பட்டவர். Luke க்கு Force இருப்பதை அறிந்த Jedi Master Obi wan Kenobi அவருக்கு Jedi training கொடுக்குறார்.

ஒரு கட்டத்தில் அவனிடம் உள்ள Force ஐ வெளிக்கொனர Darth Vader இடம் சாவதை போல் அந்த உடம்பை விட்டு பிரியுறார். இதன்மூலம் Force கட்டுபடுத்த தெரிந்த Luke Darth vader இடம் மோதும் போது ஒரு கட்டத்தில் நீ தான் என் மகன் என்று எல்லாருக்கும் அதிர்ச்சியை தருகிறார் Darth Vader. Mystic Force இல் Koragg தான் Udonna வின் கனவர் மற்றும் Nick இன் அப்பா என்று twist வைப்பார்களே அது போல. பின்பு Luke தேடும் போது உண்மையாகவே Darth vader இன் பையன் என்பதையும் Leia தான் தனது தங்கை என்று தெரிந்து கொள்கிறார். Star wars இல் வந்த முதல் 3 episode கள் இதை தான் base பண்ணி இருக்கும். பிறகு Anakin Skywalker (Darth Vader), qui gon, Obin wan, Jedi என்று prequel இல் பயனிக்கும். இப்படி பயனித்த star wars ஐ மீண்டும் தொடங்கியது Disney ஆனால் அது Disaster என்றே சொல்லலாம். இருந்தாலும் கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான் என்பதை போல் கெட்டாலும் Star wars Star wars தான். Today is the STAR WARS day. May the force be upon us.

நேரமில்லாமையால் ரத்தின சுருக்காமாக எழுதியிருப்பேன் பின்பு Detailed ஆக எழுதுகிறேன்.

#Stephenstrange

ஜாக் கிர்பி: கூட்டுக்குள் அடங்காத பறவை

ஜாக் கிர்பியை வெறுமனே மார்வெலுக்கு வேலை செய்தார், டிசிக்கு வேலை செய்தார் என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது.  அப்படி ஒதுக்கிதான் அவருக்கு கொடுக்க வேண்டிய அங்கிகாரம் எதையும் கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என்று கூட சொல்லலாம்.

1917ல் இதேநாளில் பிறந்த ஜாக் கிர்பிக்கு இன்று 102வது பிறந்தநாள். ஸ்டான் லீயை பற்றி எழுதும்போதெல்லாம் “மார்வெல் காமிக்ஸின் பிதாமகன்” என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஜாக் கிர்பியை அமெரிக்க காமிக்ஸ் பிதாமகன் என்று கூட சொல்ல முடியாது. அவர் காமிக்ஸில் மட்டும் பணியாற்றவும் இல்லை. காமிக்ஸ் ஆசிரியர், ஓவியர், கார்ட்டூன் எழுத்தாளர், இரண்டாம் உலகபோர் காலத்தில் போராளி என்று பன்முகத்தன்மையோடு செயல்பட்டவர் ஜாக்.

சூப்பர் ஹீரோ கதைகளை எழுதும்போது வெறுமனே சூப்பர் சக்திகள், சூப்பர் வில்லன்களை மட்டும் எழுதாமல் அதற்குள் ஒரு ஆழமான அரசியல் பார்வையையும் கொண்டு வருபவர் ஜாக் கிர்பி. முதல்முதலில் ஜாக் கிர்பி தனது பயணத்தை கார்ட்டூன் தொடர்களுக்கு படம் வரைவதன் மூலமே தொடங்கினார். புகழ்பெற்ற மற்றொரு காமிக்ஸ் ஆசிரியரான ஜோ சைமனுடன் இணைந்து பல கதைகளை உருவாக்கினார். டிசி கிரேக்க கடவுள்களின் பிரதிபலிப்பாக சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி கொண்டிருந்த காலம். விற்பனை ரீதியாகவும் அது பெரும் வெற்றி பெற்றிருந்தது. அப்போதெல்லாம் வைகிங் இனத்தை காட்டுமிராண்டி கூட்டமாகவே மேற்கத்திய வர்க்கம் நினைத்து கொண்டிருந்தது. அந்த காலத்திலும் வைக்கிங்களின் கடவுளான தோர், ஓடின் போன்றவர்களை மார்வெல் காமிக்ஸ்களில் கொண்டு வந்து வெற்றிபெற செய்தார்.

முதல் கறுப்பின சூப்பர் ஹீரோ என்று இன்றுவரை கொண்டாடப்படும் “பிளாக் பாந்தர்” கதாப்பாத்திரத்தை உருவாக்கினார். மார்வெலுக்காக ஹல்க், தோர், எக்ஸ் மேன், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என பல கதாப்பாத்திரங்களை உருவாக்கினாலும், மார்வெல் என்னும் சின்ன வட்டத்திற்குள் சுற்றி வந்தவரல்ல கிர்பி. மார்வெல் டைம்லி காமிக்ஸ் என்ற பெயரில் இருந்த போது Mad magazine, Harvey Comics போன்றவற்றிற்கும் பல கதைகளை எழுதினார். பாப்பாய் தி செய்லர் மேன் கார்ட்டூனுக்கு ஜோ சைமனுடன் இணைந்து பணிபுரிந்தார்.

நாட்டுப்பற்று மிக்கவர் ஜாக் கிர்பி. இரண்டாம் உலக போர் சமயத்தில் தனது வேலைகளை விட்டுவிட்டு அமெரிக்க ராணுவத்திற்கு சேவை செய்ய போய்விட்டார். சவான்னா கேம்பில் பணியில் ஈடுபட்டிருந்த ஜாக் கிர்பியை பற்றி கேள்விபட்ட லெப்டினென்ட், அவருக்கு அந்த பகுதியின் வரைப்படம் தயாரிக்கும் பணியை அளித்தார்.

உலக யுத்தம் முடிந்து மீண்டும் தனது காமிக்ஸ் பணியை தொடங்கிய ஜாக் கிர்பியிடம் அரசியல் தாக்கம் அதிகமாகவே இருந்தது. 1970களில் மார்வெல் காமிக்ஸ் உயர்ந்த இடத்தை அடைந்திருந்தது. படைப்புகளின் நேர்த்தியை தாண்டி வெறுமனே சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி கொண்டிருப்பதாக ஜாக் கிர்பி கருதினார். மேலும் அவரை ஒரு கலைஞனாக அவர்கள் சரியான அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது அவரது எண்ணமாக இருந்தது. மார்வெலில் இருந்து வெளியேறிய கிர்பி டிசியில் இணைந்தார்.

அப்போதுதான் இன்றுவரை கிர்பியின் மாஸ்டர் பீஸாக உலகம் புகழும் “நியூ காட்ஸ்” தொடரை உருவாக்கினார் கிர்பி. போஸ்ட் அபோகலிப்ஸ் ரக கதைகளை சோதித்து பார்க்க விரும்பிய கிர்பி “கமான்டி: தி லாஸ்ட் பாய் ஆன் எர்த்” என்னும் கதையையும் எழுதினார். அந்த கதை அவரது மற்ற சூப்பர் ஹீரோ கதைகளை போல இல்லாவிட்டாலும் அனைவராலும் கவனிக்க வேண்டிய ஒரு கதை.

இப்படி தொடர்ந்து அமெரிக்க காமிக்ஸிலும், கார்ட்டூனிலும் தனது ஆளுமையை செலுத்திய கிர்பிக்கு டிஸ்னி செய்ததுதான் மிக கேவலமான விஷயம். மார்வெலிடம் மொத்த உரிமைகளையும் வாங்கும்போது அதில் ஜாக் கிர்பி உருவாக்கிய எந்த கதாப்பாத்திரத்திற்காகவும் அவருக்கு காப்புரிமை தொகை தரவே இல்லை. இதுகுறித்து கிர்பியின் மகன் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். ஆனால் கிர்பி சம்பளம் பெற்றுக் கொண்டுதான் வேலை செய்தார் எனவும் அதனால் சூப்பர் ஹீரோக்களின் காப்புரிமையில் ஜாக் கிர்பிக்கு பங்கில்லை என்றும் மார்வெல் வாதிட்டது. நீதிமன்ற தீர்ப்பு மார்வெலுக்கு சாதகமாக இருந்தது. 2014ல் தொடரப்பட்ட மேல் முறையீட்டுக்கு பிறகே ஒரு கலைஞனாக, ஆசிரியராக ஜாக் கிர்பிக்கு அந்த கதாப்பாத்திரங்களில் உரிமை இருக்கிறது என தீர்ப்பு வெளியானது.ஒரு கலைஞன் தனது படைப்புக்காக உரிமை கேட்டு போராட நேர்ந்ததெல்லாம் மிகப்பெரிய அவலம்.

நிறைய எழுதினால் படிக்க சிரமப்படுவீர்கள் என்பதால் சுருக்கி எழுதியிருக்கிறேன். நன்றி!