Wonder Woman Vs Hulk Part-4

முன்கதை சுருக்கம் :
ஒரு Worthy person-கான தேடலில் Captain America-வை‌ சந்தித்த டயானா கேப்டனின் அறிவுரையின் படி அரசியை சந்திக்க Themyscira சென்றார். Wildebots உடனான சண்டையில் Hulk-ன் ஆக்ரோசத்தை கண்டு பிரமித்த Caiera Hulk-ன் அறையில் Banner இருப்பதை கண்டு அதிர்ச்சியானாள்.

இனி…

“அப்ப நீ கோபம் வந்தா Hulk-ஆ மாறிடுவியா..?!”

“ஆமா…”

“காலையில கோபமா தான சண்டை போட்ட, இப்ப ஏன் மாறுன..?”

“Hulk கொஞ்சம் சந்தோஷமாயிட்டா அடங்கிவிடுவான் நான் பழைய நிலைக்கு திரும்பிடுவேன்”

“நீ எந்த கிரகத்த சேர்ந்தவன்”

“பூமி”

“ஓ..!!!”

“அந்தக் Red king ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு மரியாதை கொடுக்கிறான்”

“அவனுக்கு சின்ன வயசுல ஒரு Lantern Ring கிடைச்சது, ஆனா அவங்க அப்பாவால அதை இழந்துட்டான். என்னதான் அது அவன்கிட்ட இல்லன்னாலும் அதுல இருந்து கிடைச்ச intelligence-ம் Rage-ம் இன்னும் Side effects – ஆ அவனுக்குள்ள இருந்துகிட்டு தான் இருக்கு.
அத சரி பண்ணனும்னா மறுபடி அவனுக்கு அந்த Ring தேவை அதை உன் மூலமா சாதிக்க பார்க்கிறான்”

“ஆமா, இது என்ன இடம்”

“சஃகார்”

“அந்த குப்பைகளின் கிரகமா..!!”

“ம்ம்ம் அப்படியும் சொல்லலாம் ஆனால் இங்கேயும் பூர்வகுடிகள் இருக்காங்க நானும் அதில் ஒருத்தி என் பேரு Caiera the Oldstrong”

“Oldstrong…அப்படின்னா..?”

“அது எங்க ஜனங்களுக்கு இருக்கிற ஒரு சிறப்பு சக்தி அத வச்சு எங்கள பாதுகாக்கவும் மத்தவங்களுக்கு சக்தி கொடுக்கவும் முடியும் ஆனா எல்லாருக்கும் அது கிடைச்சுடாது!!”

“வித்தியாசமா இருக்கே..!!”

“இதுக்கே இப்படின்னா எப்படி, என்னோட உண்மையான உருவம் யாருக்கும் தெரியாது அவங்க எத ஆசைப்படுறாங்களோ அப்படி தான் நான் தெரிவேன்.”

“அதான் என் கண்ணுக்கு எப்பவும் நடாஷா மாதிரி தெரியுறியா..”

“நடாஷா யாரு..?”

“நான் தடம் மாறும்போதெல்லாம் உடன் மாறாமல் நேரெதிர் நின்று என்னை மாற்றியவள் சுருக்கமா சொல்லணும்னா அவ என்னோட Oldstrong.”

“அப்படிப்பட்டவள ஏன் விட்டுட்டு வந்த..??”

“என்னோட கோபம் அவளைக் கொன்றுமோன்னு பயமா இருந்துச்சு”

“எல்லாருக்கும் தான் நேசிக்கிற பொண்ணோட சேர்ந்து சுவாசிக்க கிடைக்கிற நேரம் ரொம்பவே குறைவு Banner..!!,
நீ Hulk-ஆ இருக்கும் போது கூட உன் கண்ணுக்கு நான் நடாஷாவாகதான் தெரிஞ்சேன். So என்ன பொறுத்தவரை உன்னால அவளுக்கு எந்த ஆபத்தும் வராது..!!

Banner கண்களில் கண்ணீர் பெருகியது, உடனே நடாஷாவை பார்க்க வேண்டும் போல இருந்தது அங்கிருந்து கிளம்ப திட்டமிட்டான்.

“நான் இந்த இடத்தைவிட்டு போக முடியுமா”

“முதல்ல நாளைக்கு நடக்க போற சண்டையில நீ உயிரோட இருக்கியான்னு பாரு..!!”

“நாளைக்கு யார் கூட..??”

“Egg Breaker..!!!”


Themyscira சென்ற Diana, Amazonians பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதை கண்டு சற்று நிம்மதி அடைந்தாள், அதேசமயம் டயானாவுக்கு தன் தேசத்தை இப்படி ஆக்கியவன் மீது கோபமும் வெறியும் அதிகமாகிக்கொண்டே போனது. கோட்டைக்கு உள்ளே சென்று தன் தாயாரை சந்தித்தாள் இதுவரை தான் கண்டறிந்த அத்தனையும் கூறினாள்.

“Diana நீ சரியானத நோக்கிதான் போற ஆனால் நீ எவ்வளவு நெருங்குகிறியோ அதுல அவ்வளவு ஆபத்து இருக்கு.!!”

“அவன் பேர் என்ன..?”

“Firstborn !!!”

“யார் அவன்..?”

“Zeus ஓட முதல் மகன். நியாயப்படி zeus-க்கு அடுத்து அவன் தான் ஆட்சி செய்யனும்”

“அப்புறம் ஏன் அவன எதிர்க்குறீங்க..?”

“அவன் ஆட்சியில் இருக்கணும்னா Zeus சாகணும். அதை முன்னாடியே தெரிஞ்சுகிட்ட Zeus, Firstborn குழந்தையாய் இருக்கும்போதே அவன பூமியில விட்டெறுஞ்சுட்டாரு
ஆனாலும் அவன் மறுபடி தன்னோட அரியாசனத்தை அடைய வந்தான். அந்த நேரத்துல Appollo-வும் Zeus-ம் இருந்ததால அவனைத் தோற்கடித்து பூமியோட மையத்தில் தூக்கி போட்டுட்டாங்க. அங்க இருக்கிற வெப்பத்தை தன்னோட சக்தியை மாற்றிக் கொண்டவன் இப்ப முழு கெட்டவனாக மாறிட்டான்!!”

“அப்ப Zeus என்னை உருவாக்கினது தன்னுடைய கடந்த கால தவறுகளை சரிசெய்ய தான் இல்லையா..???”

“நீ ஒரு God killer டயானா உன்ன படைச்சது அதுக்குத்தான், இவன கொல்லனும்னா அதுக்கு இன்னொரு Worthy person ஓட துணை தேவை..!”

“நாம படைக்கப்பட்டது பூமியில இருக்குறவங்கள மகிழ்விக்க தான் திரும்பத் திரும்ப காயப்படுத்த இல்லை, மறுபடி இன்னொரு Steve-அ இழக்க நான் தயாராக இல்லை!!”

“உனக்கு வேற எந்த வழியும் இல்லை மகளே!!”

சிறிது நேர மவுனம் காத்த Diana…

“Firstborn கெட்டவனா மாறிட்டான்னா அவனால எப்படி Sunblade-a எடுத்திருக்க முடியும்..?”

“அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு வந்தது அவன் தான் அவனால எடுக்க முடியாதே வேற யார் எடுத்து இருப்பா…??!!!”

“தன் தாயின் பதிலைக் கேட்டு குழம்பி போனாள் Diana.”


கேப்டனும் Sam-ம் சென்ற ஜெட் Wakanda-வில் தரையிறங்கியது, வாசலில் காத்துக் கொண்டிருந்த Wakanda அரசர் T’Challa கேப்டனை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

(Feel the Wakanda bgm)

“உங்களைப் பார்த்ததுல மகிழ்ச்சி!!”

“வரவேற்புக்கு நன்றி நண்பா ஒரு உதவிக்காக உங்கள தேடி வந்து இருக்கேன்.!!

“நிச்சயமா செய்கிறேன் இத பத்தி பின்னாடி பேசுவோம் இப்போதைக்கு ஓய்வெடுங்க..”, என்றபடி தன் அலுவல் பணிகளை கவனிக்க சென்றார் T’Challa.

“War criminal ஆனதுக்கு அப்புறமும் நாட்டுக்காக உழைக்கிற போல”

“நமக்கு இது புதுசா என்ன…பழகிடுச்சு, எப்படி இருக்க Bucky..?”

“நீ வந்துட்டல்ல Steve, இனி நல்லாவே இருப்பேன்..!!”

விருந்தோம்பலுக்கு பின்னர் தன் திட்டத்தை பற்றி T’challa விடம் தனியாக உரையாடினார் கேப்டன்.

“கேப்டன் மறுபடியும் Team சேர்க்கிறார் என்று தெரிந்துகொண்ட Sam சிறிது நேரத்திற்குப் பின் அவரை தனியாக சந்தித்தார்”

“யாருன்னே தெரியாத ஒரு பொண்ணுக்காகவா மறுபடியும் Team சேர்க்குறீங்க..!! என்ன மோதலுக்கு பின் காதலா!!!”

“Team சேர்க்குறது அவளுக்காக இல்ல நமக்காக..!”

“புரியுற மாதிரி சொல்லுங்களேன்”

“போனவாரம் ஸ்பெயின்ல நம்ம புடிச்ச 43 பேரும் சாதாரண மனிதர்கள் கிடையாது !! அவங்க Skrulls இனத்தை சேர்ந்தவங்க.
விசாரிச்சதுல அவங்கள போலவே உருவம் கொண்ட ஒருத்தன் இருக்குறதாகவும் அவன் மிகவும் சக்தி வாய்ந்தவன்னும் சொல்லி இருக்காங்க இப்ப அவன கண்டுபிடிக்குற வேலை நம்மகிட்ட வந்திருக்கு..!!”

“சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?”

“முக்கியமான விஷயம் என்னன்னா அவன் யாரா வேணாலும் உருவம் மாறுவான் !!!”

“Cap நீங்க சந்தேகப்படுறது சரியில்ல இவளா இருக்க வாய்ப்பில்ல ரொம்ப அழகா வேற இருக்கா!!”

“அழகு இருக்கிற இடத்தில தான் ஆபத்தும் இருக்கும் Sam, ஒன்னு இவ அவனா இருக்கணும், இல்ல இவ தேடுறவன் அவனா இருக்கணும் !”

“சுருக்கமா ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்றீங்க”

“சீக்கிரம் தயாராகு நாம இன்னும் நிறைய பேரை சந்திக்க வேண்டி இருக்கு !”

“அப்ப நம்ம அடுத்த Target..?”

“Wonder Woman..!!!”

தொடரும்…

Leave a comment