Tag Archives: DC Comics

Wonder Woman Vs Hulk Part-4

முன்கதை சுருக்கம் :
ஒரு Worthy person-கான தேடலில் Captain America-வை‌ சந்தித்த டயானா கேப்டனின் அறிவுரையின் படி அரசியை சந்திக்க Themyscira சென்றார். Wildebots உடனான சண்டையில் Hulk-ன் ஆக்ரோசத்தை கண்டு பிரமித்த Caiera Hulk-ன் அறையில் Banner இருப்பதை கண்டு அதிர்ச்சியானாள்.

இனி…

“அப்ப நீ கோபம் வந்தா Hulk-ஆ மாறிடுவியா..?!”

“ஆமா…”

“காலையில கோபமா தான சண்டை போட்ட, இப்ப ஏன் மாறுன..?”

“Hulk கொஞ்சம் சந்தோஷமாயிட்டா அடங்கிவிடுவான் நான் பழைய நிலைக்கு திரும்பிடுவேன்”

“நீ எந்த கிரகத்த சேர்ந்தவன்”

“பூமி”

“ஓ..!!!”

“அந்தக் Red king ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு மரியாதை கொடுக்கிறான்”

“அவனுக்கு சின்ன வயசுல ஒரு Lantern Ring கிடைச்சது, ஆனா அவங்க அப்பாவால அதை இழந்துட்டான். என்னதான் அது அவன்கிட்ட இல்லன்னாலும் அதுல இருந்து கிடைச்ச intelligence-ம் Rage-ம் இன்னும் Side effects – ஆ அவனுக்குள்ள இருந்துகிட்டு தான் இருக்கு.
அத சரி பண்ணனும்னா மறுபடி அவனுக்கு அந்த Ring தேவை அதை உன் மூலமா சாதிக்க பார்க்கிறான்”

“ஆமா, இது என்ன இடம்”

“சஃகார்”

“அந்த குப்பைகளின் கிரகமா..!!”

“ம்ம்ம் அப்படியும் சொல்லலாம் ஆனால் இங்கேயும் பூர்வகுடிகள் இருக்காங்க நானும் அதில் ஒருத்தி என் பேரு Caiera the Oldstrong”

“Oldstrong…அப்படின்னா..?”

“அது எங்க ஜனங்களுக்கு இருக்கிற ஒரு சிறப்பு சக்தி அத வச்சு எங்கள பாதுகாக்கவும் மத்தவங்களுக்கு சக்தி கொடுக்கவும் முடியும் ஆனா எல்லாருக்கும் அது கிடைச்சுடாது!!”

“வித்தியாசமா இருக்கே..!!”

“இதுக்கே இப்படின்னா எப்படி, என்னோட உண்மையான உருவம் யாருக்கும் தெரியாது அவங்க எத ஆசைப்படுறாங்களோ அப்படி தான் நான் தெரிவேன்.”

“அதான் என் கண்ணுக்கு எப்பவும் நடாஷா மாதிரி தெரியுறியா..”

“நடாஷா யாரு..?”

“நான் தடம் மாறும்போதெல்லாம் உடன் மாறாமல் நேரெதிர் நின்று என்னை மாற்றியவள் சுருக்கமா சொல்லணும்னா அவ என்னோட Oldstrong.”

“அப்படிப்பட்டவள ஏன் விட்டுட்டு வந்த..??”

“என்னோட கோபம் அவளைக் கொன்றுமோன்னு பயமா இருந்துச்சு”

“எல்லாருக்கும் தான் நேசிக்கிற பொண்ணோட சேர்ந்து சுவாசிக்க கிடைக்கிற நேரம் ரொம்பவே குறைவு Banner..!!,
நீ Hulk-ஆ இருக்கும் போது கூட உன் கண்ணுக்கு நான் நடாஷாவாகதான் தெரிஞ்சேன். So என்ன பொறுத்தவரை உன்னால அவளுக்கு எந்த ஆபத்தும் வராது..!!

Banner கண்களில் கண்ணீர் பெருகியது, உடனே நடாஷாவை பார்க்க வேண்டும் போல இருந்தது அங்கிருந்து கிளம்ப திட்டமிட்டான்.

“நான் இந்த இடத்தைவிட்டு போக முடியுமா”

“முதல்ல நாளைக்கு நடக்க போற சண்டையில நீ உயிரோட இருக்கியான்னு பாரு..!!”

“நாளைக்கு யார் கூட..??”

“Egg Breaker..!!!”


Themyscira சென்ற Diana, Amazonians பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதை கண்டு சற்று நிம்மதி அடைந்தாள், அதேசமயம் டயானாவுக்கு தன் தேசத்தை இப்படி ஆக்கியவன் மீது கோபமும் வெறியும் அதிகமாகிக்கொண்டே போனது. கோட்டைக்கு உள்ளே சென்று தன் தாயாரை சந்தித்தாள் இதுவரை தான் கண்டறிந்த அத்தனையும் கூறினாள்.

“Diana நீ சரியானத நோக்கிதான் போற ஆனால் நீ எவ்வளவு நெருங்குகிறியோ அதுல அவ்வளவு ஆபத்து இருக்கு.!!”

“அவன் பேர் என்ன..?”

“Firstborn !!!”

“யார் அவன்..?”

“Zeus ஓட முதல் மகன். நியாயப்படி zeus-க்கு அடுத்து அவன் தான் ஆட்சி செய்யனும்”

“அப்புறம் ஏன் அவன எதிர்க்குறீங்க..?”

“அவன் ஆட்சியில் இருக்கணும்னா Zeus சாகணும். அதை முன்னாடியே தெரிஞ்சுகிட்ட Zeus, Firstborn குழந்தையாய் இருக்கும்போதே அவன பூமியில விட்டெறுஞ்சுட்டாரு
ஆனாலும் அவன் மறுபடி தன்னோட அரியாசனத்தை அடைய வந்தான். அந்த நேரத்துல Appollo-வும் Zeus-ம் இருந்ததால அவனைத் தோற்கடித்து பூமியோட மையத்தில் தூக்கி போட்டுட்டாங்க. அங்க இருக்கிற வெப்பத்தை தன்னோட சக்தியை மாற்றிக் கொண்டவன் இப்ப முழு கெட்டவனாக மாறிட்டான்!!”

“அப்ப Zeus என்னை உருவாக்கினது தன்னுடைய கடந்த கால தவறுகளை சரிசெய்ய தான் இல்லையா..???”

“நீ ஒரு God killer டயானா உன்ன படைச்சது அதுக்குத்தான், இவன கொல்லனும்னா அதுக்கு இன்னொரு Worthy person ஓட துணை தேவை..!”

“நாம படைக்கப்பட்டது பூமியில இருக்குறவங்கள மகிழ்விக்க தான் திரும்பத் திரும்ப காயப்படுத்த இல்லை, மறுபடி இன்னொரு Steve-அ இழக்க நான் தயாராக இல்லை!!”

“உனக்கு வேற எந்த வழியும் இல்லை மகளே!!”

சிறிது நேர மவுனம் காத்த Diana…

“Firstborn கெட்டவனா மாறிட்டான்னா அவனால எப்படி Sunblade-a எடுத்திருக்க முடியும்..?”

“அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு வந்தது அவன் தான் அவனால எடுக்க முடியாதே வேற யார் எடுத்து இருப்பா…??!!!”

“தன் தாயின் பதிலைக் கேட்டு குழம்பி போனாள் Diana.”


கேப்டனும் Sam-ம் சென்ற ஜெட் Wakanda-வில் தரையிறங்கியது, வாசலில் காத்துக் கொண்டிருந்த Wakanda அரசர் T’Challa கேப்டனை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

(Feel the Wakanda bgm)

“உங்களைப் பார்த்ததுல மகிழ்ச்சி!!”

“வரவேற்புக்கு நன்றி நண்பா ஒரு உதவிக்காக உங்கள தேடி வந்து இருக்கேன்.!!

“நிச்சயமா செய்கிறேன் இத பத்தி பின்னாடி பேசுவோம் இப்போதைக்கு ஓய்வெடுங்க..”, என்றபடி தன் அலுவல் பணிகளை கவனிக்க சென்றார் T’Challa.

“War criminal ஆனதுக்கு அப்புறமும் நாட்டுக்காக உழைக்கிற போல”

“நமக்கு இது புதுசா என்ன…பழகிடுச்சு, எப்படி இருக்க Bucky..?”

“நீ வந்துட்டல்ல Steve, இனி நல்லாவே இருப்பேன்..!!”

விருந்தோம்பலுக்கு பின்னர் தன் திட்டத்தை பற்றி T’challa விடம் தனியாக உரையாடினார் கேப்டன்.

“கேப்டன் மறுபடியும் Team சேர்க்கிறார் என்று தெரிந்துகொண்ட Sam சிறிது நேரத்திற்குப் பின் அவரை தனியாக சந்தித்தார்”

“யாருன்னே தெரியாத ஒரு பொண்ணுக்காகவா மறுபடியும் Team சேர்க்குறீங்க..!! என்ன மோதலுக்கு பின் காதலா!!!”

“Team சேர்க்குறது அவளுக்காக இல்ல நமக்காக..!”

“புரியுற மாதிரி சொல்லுங்களேன்”

“போனவாரம் ஸ்பெயின்ல நம்ம புடிச்ச 43 பேரும் சாதாரண மனிதர்கள் கிடையாது !! அவங்க Skrulls இனத்தை சேர்ந்தவங்க.
விசாரிச்சதுல அவங்கள போலவே உருவம் கொண்ட ஒருத்தன் இருக்குறதாகவும் அவன் மிகவும் சக்தி வாய்ந்தவன்னும் சொல்லி இருக்காங்க இப்ப அவன கண்டுபிடிக்குற வேலை நம்மகிட்ட வந்திருக்கு..!!”

“சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?”

“முக்கியமான விஷயம் என்னன்னா அவன் யாரா வேணாலும் உருவம் மாறுவான் !!!”

“Cap நீங்க சந்தேகப்படுறது சரியில்ல இவளா இருக்க வாய்ப்பில்ல ரொம்ப அழகா வேற இருக்கா!!”

“அழகு இருக்கிற இடத்தில தான் ஆபத்தும் இருக்கும் Sam, ஒன்னு இவ அவனா இருக்கணும், இல்ல இவ தேடுறவன் அவனா இருக்கணும் !”

“சுருக்கமா ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்றீங்க”

“சீக்கிரம் தயாராகு நாம இன்னும் நிறைய பேரை சந்திக்க வேண்டி இருக்கு !”

“அப்ப நம்ம அடுத்த Target..?”

“Wonder Woman..!!!”

தொடரும்…

Powers of Shazam

  1. The Wisdom of Solomon Shazam என்னும் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒரு கடவுளை குறிக்கும் . இந்த பெயரில் உள்ள முதல் எழுத்து குறிப்பது S-Solomon. இவரிடமிருந்து Shazamகு கிடைத்த சக்தி Wisdom of Solomon அதாவது சாலமொனின் ஞானம். இந்த சாலமோன் என்பவர் கடவுளா?. இல்லை கடவுளிடமிருந்து வரம் பெற்ற அரசர்.இவர் இஸ்ரேல் நாட்டின் இரண்டாம் அரசர். பேரரசர் டேவிட்டின் மகன்.இவருக்கு ஞானம் கடவுளிடமிருந்து கிடைத்தது(bible 1அரசர்,அதிகாரம்3)இந்த கதை நமக்கு தற்போது தேவையில்லை. நாம் இந்த சாலமோனின் ஞானத்தால் Shazamகு கிடைத்த ஞானம்தான் என்ன? என்று இதற்கு மேல் பார்க்கலாம்.

Billy shazamஆக மாறும் போது இவ்வுலக வரலாறு முதற்கொண்டு அனைத்தும் அவருக்கு தெரியும் என்னதான் தெரிந்தாலும் billyயின் சுட்டித் தனத்திற்கு முன்னால் சாலமோனின் சக்தியே தினறிவிடும் இதனாலேயே சில(பல) தவறுகளும் செய்வதுண்டு. அவ்வளவு குறும்புக்கார கதாப்பாத்திரம் billy.

Shazamஆல் இதனைப் பயன்படுத்தி எந்தவித கண்டுபிடிப்புகளையும் சுலபமாக உருவாக்க

Shazamஆல் பூமியில் உள்ள அனைத்து மொழிகளையும் புரிந்துகொள்ளவும், பேசவும் முடியும்.

Shazamவுடைய ஒவ்வொரு attackயிலும் ஒவ்வொரு யுக்தி இருக்கும். இதற்கு காரணமும் அதே wisdomதான்.

என்னும் இதே போன்று 5 உள்ளன அவற்றை வரப் போகும் பதிவுகளில் பார்க்கலாம். ஏப்ரல் துவக்க வாரத்தில் வெளியாகவிருக்கும் shazam திரைப்படத்தை end gameஐ பற்றி பேசிக்கொண்டே விட்டுவிட வேண்டாம்.

Marvel ரசிகர்களுக்கும் DCயின் வளர்ச்சி முக்கியமே. அப்போதுதான் இரு நிறுவனங்களிடமிருந்தும் என்னும் தரமான சம்பவங்களை நம்மால் காண முடியும்.

  1. Strength of Hercules சென்ற பதிவில் Shazamவுடைய S என்ற எழுத்திலுள்ள சக்தியான Wisdom of Solomonஐ பற்றி பார்த்தோம் தற்போது இரண்டாம் சக்தியான Strength of Hercules பற்றி பார்க்கலாம்

Shazamவுடைய வலிமை Herculesயிடமிருந்து கிடைத்தது. இந்த Herculesகு அப்படி என்ன Strength இருக்கு அவர் யார் என்று முதலில் பார்த்துவிடலாம்.

இவர் கிரேக்க கடவுளாகிய Zeusற்கும் Alcmeneற்கும் பிறந்தவர். இவர்தான் God of Strength. இவருடைய வலிமைக்கு சிறந்த எ.கா: இவருக்கு apolloவால் கொடுக்கப்பட்ட 12 labors எனப்படும் 12 Taskகளை முடித்ததுதான். அவை ஒவ்வொன்றும் மிகக் கடினமானவை.

Nemean Lion எனப்படும் சிங்கத்தை கொல்லனும்.
Lernaean Hydra எனப்படும் 9 தலைகளைக் கொண்ட பாம்பைப் போட்டுத்தள்ளனும்.Hera zeusகாக வாங்கி வெச்சு இருக்குற தங்க ஆப்பிள திருடனும் இந்த இடத்தில்தான் hercules மொத்த வானையும்(உலகையும் என எடுத்துக்கோள்ளலாம்) Atlasகு பதிலாக தூக்குவார்.
இப்படி என்னும் 9 challenges இருக்கு.

நாம இப்ப நம்ம Billy Batson கிட்ட வருவோம். இவருக்கும் இதே அளவுக்கு Power இருக்கா??? ஆமா இருக்கும். இவ்ளோ strength இருக்கும் போதா trailerல dr sivana shazamவுடைய punchஅ block பன்னாரு? Dr.Sivana ஒரு great scientist என்னமோ வித்தைய பன்னி அவருக்கும் super strength வர வைத்துள்ளார்.

இந்த வலிமையை வைத்துக்கொண்டு shazamஆல் இரும்பைக் கூட கரும்பு போல் உடைக்க முடியும். Shazamவுடைய ஒவ்வொரு attackயிலும் இந்த greatest strength இருக்கும்.

இந்த வலிமையை பயன்படுத்தி Hercules வானத்தை தாங்கியது போல காமிக்ஸில் shazam புயலில் சிக்கிய வீடு ஒன்றை சரிந்து விழாமல் தாங்கியுள்ளார். பிரம்மாண்டமான பனிப்பாறையை தனி ஒருவனாக நகர்த்தி சென்றுள்ளார்.இதனைவிட மேலாக தென் அமெரிக்க கண்டத்தையே இரண்டு கைகளால் நகர்த்தி சென்றுள்ளார் இவ்வாறு பல உள்ளன.

  1. Stamina of Atlas Shazamவுடைய சக்திகளில் wisdom of Solomon மற்றும் Strength of Hercules ஆகியவற்றை பார்த்துள்ளோம் தற்போது அவர் பெயரில் உள்ள எழுத்தான Aவை பற்றி பார்க்கலாம். இந்த எழுத்தில் மறைந்துள்ள கடவுள் Atlas. இவரும் ஒரு கிரேக்க கடவுள்தான்.

இந்த Atlasயிடமிருந்து பில்லி பேட்சன்னிற்கு கிடைத்த சக்தி Stamina of Atlas. இந்த Atlasதான் God of Endurance. இவர் ஒரு Titan. Titan கடவுள்களுக்கும் Olympiyan கடவுள்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் Titanகளை தலைமையேற்று வழிநடத்தியது Atlasதான்.

இவருடைய Staminaகு அளவேயில்லை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு Olympiyan கடவுள்களிடம் Titans தோற்க Zeusஆல் Atlasயிற்கு ஒரு தண்டனை கொடுக்கப்படுகிறது. அது என்னவெனில் இந்த வானத்தையும் அதனுடன் இணைந்த சொர்கத்தையும் Atlasதான் சுமக்க வேண்டும்.

Atlasவும் அதனை ஏற்று அவரது தோள்களில் மொத்த வானையும் சுமந்தார் . இது போல் Atlasஆல் எந்தவொரு வேலையையும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க முடியும்.

இதே போல் Shazamகும் Stamina மிகவும் அதிகம் அவரால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டே இருக்க முடியும். எவ்வளவு அழுத்தத்தை வேண்டுமானாலும் தொடர்ந்து தாங்க முடியும்.

  1. Power of Zeus Wizard shazamஆல் Billy Batsonற்கு கொடுக்கப்பட்ட 6 கடவுள்களின் சக்திகளில் மூன்றை பற்றி பார்த்துவிட்டோம். தற்போது நான்காவது சக்தியான Power of Zeusபற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

Zeus ஒரு கிரேக்க கடவுள். இவர்தான் Olympiyans கடவுள்களின் தலைவர். இவர் சண்டைக்கு பயன்படுத்தும் ஆயுதம் இடி. இவரால் இடி மின்னல்களை கட்டுப்படுத்த முடியும். இவர்தான் god of sky and thunder.
Atlasஐ மொத்த வானையும் சுமக்க வைத்ததும் zeus தான்.

Power of zeusயின் மூலம் பில்லி பேட்சன்னால் Zeusஐ போலவே இடியை கட்டுப்படுத்தவும் தாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தவும் முடியும். Shazamயின் தனித்துவமான சக்தியே இந்த power of zeus தான்.இந்த சக்திதான் Justice Leagueயில் Shazamஐ வேறுபடுத்திக் காட்டுகிறது.

  1. Courage of Achilles Shazam என்னும் எழுத்தில் உள்ள ஒவ்வொரு கடவுளைப் பற்றியும். அவர்களிடமிருந்து கிடைத்த சக்திகளைப் பற்றியும் பார்த்துக்கொண்டுள்ளோம். இது வரை நான்கை முடித்துள்ளோம். தற்போது A என்னும் எழுத்தில் மறைந்துள்ள சக்திகளைப் பற்றி பார்க்கலாம்.

இப்பதிவில் நாம் பார்க்கவுள்ள சக்தி Courage of Achilles அதாவது Achillesவுடைய தைரியம். தைரியமா? இதைவெச்சுகிட்டு என்ன செய்வது? Achilles யாரு?

முதலில் Achilles பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். Achilles மிகவும் தைரியம் பொருந்திய மாவீரன்(கடவுள் கிடையாது). ஏகப்பட்ட போர்களுக்கு சென்று வென்று வந்துள்ளார். இவரோட ஒரே பலவீனம் கால் மூட்டுக்கு கீழே பலமாக தாக்கினால் இறந்துவிடுவார். இந்த Weakness அவருக்கே தெரியாது.

கிரேக்க நாடுகளில் தைரியம் என்னும் சொல்லை எடுத்தாலே அதிகமாக மேற்கோள் காட்டப்படுபவர் இவர்தான்.சரி இவரோட தைரியம் Billyகு அப்படி என்ன தைரியத்தை கொடுத்து இருக்கும்.

Achillesவுடைய சக்தி இருப்பதனால் Shazamஆல் எந்த ஒரு தடையாக இருந்தாலும் அது Shazamயை விட மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் Shazamஆல் அதனை துணிந்து எதிர்க்க முடியும்.

இவ்ளோ தைரியம் இருப்பதனால் Shazam முந்திக்கொண்டு சென்று நிறைய உதை வாங்குவதும் உண்டு.

மேலும் இந்த சக்தியை வைத்துக்கொண்டு shazamஆல் 12 மணிக்கு மேல் சுடுகாட்டுக்கு போய்ட்டு வரவும் முடியும் என நினைக்கிறேன்.

  1. Speed of Mercury Shazamவுடைய சக்திகளில் அவருடைய ஞானத்தில் இருந்து சுடுகாட்டுக்கு தனியாக செல்ல துணை புரியும் தைரியம் வரை பார்த்துவிட்டோம். இப்பதிவில் Shazamயின் இறுதி எழுத்தான Mயில் மறைந்துள்ள கடவுளைப் பற்றியும் அவரால் Shazamகு கிடைத்த சக்தியைப் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.

SHAZAMவுடைய 6ஆவது எழுத்தான Mயில் உள்ள சக்தி Speed and Flying இதை வழங்கியவர் Mercury ஆதலால் இந்த சக்தியின் பெயர் Speed of Mercury

Mercury Roman mythology சேர்ந்த ஒரு கடவுள். இவரை god of travel எனக் கூறுவர். ஒரு இடத்தில் இருக்கவே மாட்டார்.

மற்ற கடவுள்களைக் காட்டிலும் இவரால் இவரின் இறக்கையுடன்(design) கூடிய காலனிகளைக் கொண்டு அதிவேகமாக இயங்கவும் பறக்கவும் முடியும்.

Mercuryயிடமிருந்து கிடைத்த சக்தியின் மூலம் Shazamஆல் வேகமாக இயங்க முடியும்.மேலும் Shazamகு பறக்கும் சக்தியும் இதனால்தான் கிடைத்தது.

எந்த அளவிற்கு வேகமாக Shazamஆல் செயல்பட அல்லது பயனிக்க முடியும்.

இதன் உதவியால் Shazamஆல் 5நிமிடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முடியும்.
சில நேரங்களில் ஒளியின் வேகத்தையும் Shazamஆல் அடைய முடியும்.