Batman and Ironman Part 4

Fox திரும்பி பார்த்து ஒரு அதிர்ச்சி பார்வை பார்த்து கொண்டு இருந்தார். Mr. Bruce சிறு புன்னகையுடன் அவரை வரவேற்றார்.

“Hello Victor”

‘Hi bruce, உன்கிட்ட ஒரு முக்கியமான விசியத்தை சொல்லணும். இந்த ultron எல்லாம் இப்ப New york ஓட old military base ல இருக்கு. இது தன்னை தானே பல மடங்கு பெருக்கி கிட்டே போகுது. இந்த கடை திருட்டே, ultron ஒரு army ய உருவாக்க தான். அந்த base ல, ஊடுருவி போகும் போது heat vision அதிகம் தெரிவதை, நீங்களே பாருங்க’

“Oh my god, இது ரொம்ப வேகமா உருவாகுது, இதை உடனே தடுக்கணும்”

‘என்னால, அதோட internet அ break பண்ண முடியல, நா break பண்ண முயற்சிக்கும் போது, அது என்கூட சண்டை போட்டுட்டு இருக்கு. நா அது கூட முடிஞ்ச வரைக்கும் போராடிட்டு இருக்கேன். But அதால என்னை control பண்ண முடியாது. Because நா முழு machine கிடையாது. சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க. நான் முடிஞ்ச வரைக்கும் internet மூலமா ultron எங்கயும் போகாம தடுத்து நிறுத்துறேன். எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியும் ன்னு தெரியல.’

“இப்ப நமக்கு பேச நேரம் இல்லை. நாம உடனடியாக ஏதாவது பண்ணனும். Mr. Fox நா உங்களை மறுபடியும் வந்து சந்திக்கிறேன். Victor நீங்க முடிஞ்ச வரைக்கும் சமாளிங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.”

‘Ok bruce’-cyborg.

“Ok Mr. Wayne. எனக்கும் ஒரு முக்கியமான meeting இருக்கு. நா மறுபடியும் உங்களை மீட் பன்றேன்”. -Fox

Cyborg மற்றும் fox இருவரும் அங்கு இருந்து சென்று விட்டனர். Bruce க்கு tony மீது மேலும் கோபம் அதிகமானது.
இன்னொரு பக்கம் Tony Stark, Nick fury ஐ சந்திக்க அவர் இருக்கும் base ற்கு சென்றார்.

“Hello Mr. Stark”

‘Hello fury’

“இப்ப எல்லாம் போர் கால ஆயுதங்களை தயாரிக்கிறதுல ரொம்ப busy ஆ இருக்க போல.”

‘நா என்னைக்குமே ஆயுதங்களை வித்தது இல்ல fury’

“அப்போ இதெல்லாம் என்ன Tony ?”

‘இது என்னோட ஒரு சிறந்த கண்டுபிடிப்பு. ஒரு Scientist ஓட படைப்புல சில தவறுகள் நடக்கலாம்.’

“உன்னோட இந்த தவறு, இந்த உலகத்துக்கே ஆபத்த விளைவிக்க போகுது”

‘அப்படியா, hey பியூரி ultron project இந்த உலகத்தை ஏலியன் கிட்ட இருந்து நம்மல காப்பாத்தும் ன்னு நினைச்சேன். ஆன அது இப்படி மாறும் ன்னு நினைக்கல. அதை உருவாக்குனது நான், இதை நானே அழிக்கிறேன். அதை எப்படி அழிக்கணும் ன்னு எனக்கு தெரியும்’

“உன்னோட பேச்சுல எனக்கு பயம் மட்டும் தான் தெரியுது”

‘வேணும்னா மறுபடியும் சொல்றேன். இப்ப என்ன தெரியுதுன்னு சொல்லு’

“இங்க பாரு Tony உன் அப்பா எனக்கு நல்ல friend, அதுக்காகத்தான் உன்ன இங்க கூப்பிட்டு வெச்சு பேசிட்டு இருக்கேன். உன்னோட செயல் எல்லாம் உன் அப்பா பேர கெடுக்குற மாதிரி இருக்கு”.

‘பியூரி என்ன நம்பு அந்த ultron project அ நான் கண்டிப்பா அழிக்கிறேன். எனக்கு இப்ப இருக்குற ஒரு பிரச்சனை அந்த security council தான்’.

“இங்க பாரு Tony, உன்கிட்ட இப்ப எதுவும் இல்லை, உன் நண்பர்களும் இப்ப இல்லை, இந்த ultron பிரச்சினைய நான் பாத்துக்குறேன். நீ அந்த council அ கவனி”

‘பியூரி, வரும் போது Thor ஆ பாத்துட்டு வந்தேன். அவனும் சில பிரச்சனைல இருக்குறதா சொன்னான்’

மேலும் தோர் உடன் நடந்த உரையாடல்களை அனைத்தையும் பியூரி இடம் கூறினான்.

“உன்னை ரெண்டு அடியாவது அவன் அடிச்சிருக்கணும், சும்மா விட்டுட்டான். உனக்கு ஒரு கடைசி வாய்ப்பு தரேன். அந்த ultron அ நீ மொத்தமா அழிச்சிடு, மறுபடியும் அதை உருவாக்க கூடாது. இந்த security council ல நான் பாத்துக்குறேன்”.

‘இது போதும் மத்ததை நா பாத்துக்குறேன்’

“நா உன்ன நம்ப மாட்டேன். உன்கூட நா ஒருத்தனை அனுப்புறேன். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து work பண்ணி ஆகணும்.”

‘யாரு கேப்டன் அமெரிக்கா வா’

“அவர் தலைமறைவா இருக்கார். எங்க இருக்கார்ன்னு தெரியல.”

‘Dr. Banner கூட இருந்தா நல்லா இருக்கும், நா அவரை ரொம்ப miss பன்றேன். எனக்கு ultron project க்கு ரொம்ப helpful ஆ இருக்கும்.’

“Tony…உன்னோட partner யாருன்னு கூடிய சீக்கிரம் உனக்கே தெரியும், எனக்கு முக்கியமான meeting இருக்கு நா கிளம்புறேன்”

‘Ok Mr. Fury நானும் கிளம்புறேன் எனக்கும் நிறைய work இருக்கு.’ என்று கூறி கை குலுக்கி அங்கு இருந்து விரைந்தார் Tony. அந்த நேரத்தில் தன் கையில் இருக்கும் watch இல் இருந்து ஒரு Ant size இல் இருக்கும் ஒரு எலெக்ட்ரிக் Ant பியூரி இன் சட்டை பாக்கெட் இல் பறந்து சென்றது. பியூரி இதை கவனிக்கவில்லை.

இன்னொரு பக்கம் கோதம் இன் எல்லைப் பகுதில் Joker, Harley ஐ தேடி சென்று கொண்டு இருக்கிறான். திடீர் என்று அவன் முன் ஒரு உருவம் தோன்றி ‘Hello Joker’ என்றது. Joker முகத்தில் ஒரு பயமும், அதே சமயத்தில் அதிர்ச்சி கலந்த ஒரு சிறு புன்னகையும் தோன்றியது…

அடுத்த பதிவில்…

Leave a comment