Tag Archives: Wonder Woman

Wonder Woman Vs Hulk Part-4

முன்கதை சுருக்கம் :
ஒரு Worthy person-கான தேடலில் Captain America-வை‌ சந்தித்த டயானா கேப்டனின் அறிவுரையின் படி அரசியை சந்திக்க Themyscira சென்றார். Wildebots உடனான சண்டையில் Hulk-ன் ஆக்ரோசத்தை கண்டு பிரமித்த Caiera Hulk-ன் அறையில் Banner இருப்பதை கண்டு அதிர்ச்சியானாள்.

இனி…

“அப்ப நீ கோபம் வந்தா Hulk-ஆ மாறிடுவியா..?!”

“ஆமா…”

“காலையில கோபமா தான சண்டை போட்ட, இப்ப ஏன் மாறுன..?”

“Hulk கொஞ்சம் சந்தோஷமாயிட்டா அடங்கிவிடுவான் நான் பழைய நிலைக்கு திரும்பிடுவேன்”

“நீ எந்த கிரகத்த சேர்ந்தவன்”

“பூமி”

“ஓ..!!!”

“அந்தக் Red king ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு மரியாதை கொடுக்கிறான்”

“அவனுக்கு சின்ன வயசுல ஒரு Lantern Ring கிடைச்சது, ஆனா அவங்க அப்பாவால அதை இழந்துட்டான். என்னதான் அது அவன்கிட்ட இல்லன்னாலும் அதுல இருந்து கிடைச்ச intelligence-ம் Rage-ம் இன்னும் Side effects – ஆ அவனுக்குள்ள இருந்துகிட்டு தான் இருக்கு.
அத சரி பண்ணனும்னா மறுபடி அவனுக்கு அந்த Ring தேவை அதை உன் மூலமா சாதிக்க பார்க்கிறான்”

“ஆமா, இது என்ன இடம்”

“சஃகார்”

“அந்த குப்பைகளின் கிரகமா..!!”

“ம்ம்ம் அப்படியும் சொல்லலாம் ஆனால் இங்கேயும் பூர்வகுடிகள் இருக்காங்க நானும் அதில் ஒருத்தி என் பேரு Caiera the Oldstrong”

“Oldstrong…அப்படின்னா..?”

“அது எங்க ஜனங்களுக்கு இருக்கிற ஒரு சிறப்பு சக்தி அத வச்சு எங்கள பாதுகாக்கவும் மத்தவங்களுக்கு சக்தி கொடுக்கவும் முடியும் ஆனா எல்லாருக்கும் அது கிடைச்சுடாது!!”

“வித்தியாசமா இருக்கே..!!”

“இதுக்கே இப்படின்னா எப்படி, என்னோட உண்மையான உருவம் யாருக்கும் தெரியாது அவங்க எத ஆசைப்படுறாங்களோ அப்படி தான் நான் தெரிவேன்.”

“அதான் என் கண்ணுக்கு எப்பவும் நடாஷா மாதிரி தெரியுறியா..”

“நடாஷா யாரு..?”

“நான் தடம் மாறும்போதெல்லாம் உடன் மாறாமல் நேரெதிர் நின்று என்னை மாற்றியவள் சுருக்கமா சொல்லணும்னா அவ என்னோட Oldstrong.”

“அப்படிப்பட்டவள ஏன் விட்டுட்டு வந்த..??”

“என்னோட கோபம் அவளைக் கொன்றுமோன்னு பயமா இருந்துச்சு”

“எல்லாருக்கும் தான் நேசிக்கிற பொண்ணோட சேர்ந்து சுவாசிக்க கிடைக்கிற நேரம் ரொம்பவே குறைவு Banner..!!,
நீ Hulk-ஆ இருக்கும் போது கூட உன் கண்ணுக்கு நான் நடாஷாவாகதான் தெரிஞ்சேன். So என்ன பொறுத்தவரை உன்னால அவளுக்கு எந்த ஆபத்தும் வராது..!!

Banner கண்களில் கண்ணீர் பெருகியது, உடனே நடாஷாவை பார்க்க வேண்டும் போல இருந்தது அங்கிருந்து கிளம்ப திட்டமிட்டான்.

“நான் இந்த இடத்தைவிட்டு போக முடியுமா”

“முதல்ல நாளைக்கு நடக்க போற சண்டையில நீ உயிரோட இருக்கியான்னு பாரு..!!”

“நாளைக்கு யார் கூட..??”

“Egg Breaker..!!!”


Themyscira சென்ற Diana, Amazonians பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதை கண்டு சற்று நிம்மதி அடைந்தாள், அதேசமயம் டயானாவுக்கு தன் தேசத்தை இப்படி ஆக்கியவன் மீது கோபமும் வெறியும் அதிகமாகிக்கொண்டே போனது. கோட்டைக்கு உள்ளே சென்று தன் தாயாரை சந்தித்தாள் இதுவரை தான் கண்டறிந்த அத்தனையும் கூறினாள்.

“Diana நீ சரியானத நோக்கிதான் போற ஆனால் நீ எவ்வளவு நெருங்குகிறியோ அதுல அவ்வளவு ஆபத்து இருக்கு.!!”

“அவன் பேர் என்ன..?”

“Firstborn !!!”

“யார் அவன்..?”

“Zeus ஓட முதல் மகன். நியாயப்படி zeus-க்கு அடுத்து அவன் தான் ஆட்சி செய்யனும்”

“அப்புறம் ஏன் அவன எதிர்க்குறீங்க..?”

“அவன் ஆட்சியில் இருக்கணும்னா Zeus சாகணும். அதை முன்னாடியே தெரிஞ்சுகிட்ட Zeus, Firstborn குழந்தையாய் இருக்கும்போதே அவன பூமியில விட்டெறுஞ்சுட்டாரு
ஆனாலும் அவன் மறுபடி தன்னோட அரியாசனத்தை அடைய வந்தான். அந்த நேரத்துல Appollo-வும் Zeus-ம் இருந்ததால அவனைத் தோற்கடித்து பூமியோட மையத்தில் தூக்கி போட்டுட்டாங்க. அங்க இருக்கிற வெப்பத்தை தன்னோட சக்தியை மாற்றிக் கொண்டவன் இப்ப முழு கெட்டவனாக மாறிட்டான்!!”

“அப்ப Zeus என்னை உருவாக்கினது தன்னுடைய கடந்த கால தவறுகளை சரிசெய்ய தான் இல்லையா..???”

“நீ ஒரு God killer டயானா உன்ன படைச்சது அதுக்குத்தான், இவன கொல்லனும்னா அதுக்கு இன்னொரு Worthy person ஓட துணை தேவை..!”

“நாம படைக்கப்பட்டது பூமியில இருக்குறவங்கள மகிழ்விக்க தான் திரும்பத் திரும்ப காயப்படுத்த இல்லை, மறுபடி இன்னொரு Steve-அ இழக்க நான் தயாராக இல்லை!!”

“உனக்கு வேற எந்த வழியும் இல்லை மகளே!!”

சிறிது நேர மவுனம் காத்த Diana…

“Firstborn கெட்டவனா மாறிட்டான்னா அவனால எப்படி Sunblade-a எடுத்திருக்க முடியும்..?”

“அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு வந்தது அவன் தான் அவனால எடுக்க முடியாதே வேற யார் எடுத்து இருப்பா…??!!!”

“தன் தாயின் பதிலைக் கேட்டு குழம்பி போனாள் Diana.”


கேப்டனும் Sam-ம் சென்ற ஜெட் Wakanda-வில் தரையிறங்கியது, வாசலில் காத்துக் கொண்டிருந்த Wakanda அரசர் T’Challa கேப்டனை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

(Feel the Wakanda bgm)

“உங்களைப் பார்த்ததுல மகிழ்ச்சி!!”

“வரவேற்புக்கு நன்றி நண்பா ஒரு உதவிக்காக உங்கள தேடி வந்து இருக்கேன்.!!

“நிச்சயமா செய்கிறேன் இத பத்தி பின்னாடி பேசுவோம் இப்போதைக்கு ஓய்வெடுங்க..”, என்றபடி தன் அலுவல் பணிகளை கவனிக்க சென்றார் T’Challa.

“War criminal ஆனதுக்கு அப்புறமும் நாட்டுக்காக உழைக்கிற போல”

“நமக்கு இது புதுசா என்ன…பழகிடுச்சு, எப்படி இருக்க Bucky..?”

“நீ வந்துட்டல்ல Steve, இனி நல்லாவே இருப்பேன்..!!”

விருந்தோம்பலுக்கு பின்னர் தன் திட்டத்தை பற்றி T’challa விடம் தனியாக உரையாடினார் கேப்டன்.

“கேப்டன் மறுபடியும் Team சேர்க்கிறார் என்று தெரிந்துகொண்ட Sam சிறிது நேரத்திற்குப் பின் அவரை தனியாக சந்தித்தார்”

“யாருன்னே தெரியாத ஒரு பொண்ணுக்காகவா மறுபடியும் Team சேர்க்குறீங்க..!! என்ன மோதலுக்கு பின் காதலா!!!”

“Team சேர்க்குறது அவளுக்காக இல்ல நமக்காக..!”

“புரியுற மாதிரி சொல்லுங்களேன்”

“போனவாரம் ஸ்பெயின்ல நம்ம புடிச்ச 43 பேரும் சாதாரண மனிதர்கள் கிடையாது !! அவங்க Skrulls இனத்தை சேர்ந்தவங்க.
விசாரிச்சதுல அவங்கள போலவே உருவம் கொண்ட ஒருத்தன் இருக்குறதாகவும் அவன் மிகவும் சக்தி வாய்ந்தவன்னும் சொல்லி இருக்காங்க இப்ப அவன கண்டுபிடிக்குற வேலை நம்மகிட்ட வந்திருக்கு..!!”

“சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?”

“முக்கியமான விஷயம் என்னன்னா அவன் யாரா வேணாலும் உருவம் மாறுவான் !!!”

“Cap நீங்க சந்தேகப்படுறது சரியில்ல இவளா இருக்க வாய்ப்பில்ல ரொம்ப அழகா வேற இருக்கா!!”

“அழகு இருக்கிற இடத்தில தான் ஆபத்தும் இருக்கும் Sam, ஒன்னு இவ அவனா இருக்கணும், இல்ல இவ தேடுறவன் அவனா இருக்கணும் !”

“சுருக்கமா ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்றீங்க”

“சீக்கிரம் தயாராகு நாம இன்னும் நிறைய பேரை சந்திக்க வேண்டி இருக்கு !”

“அப்ப நம்ம அடுத்த Target..?”

“Wonder Woman..!!!”

தொடரும்…

wonder woman vs hulk – 3

முன்கதை சுருக்கம் :
காணாமல் போன Sunblade-ஐ தேடிச் சென்ற Diana கிடைத்த தகவல்களின் படி ஒரு Worthy person-ன் உதவிக்காக Captain America-வை தேடி செல்கிறாள். சஃகாரில் மாட்டிக்கொண்ட Hulk, Gladiator ஆக களமிறக்க படுகிறான். அங்கே Devil corker எனும் மிருகத்தை கொன்று அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறான்.

இனி…

SOMEWHERE IN EAST SPAIN

“On your left”

“Mission on fire, Captain”

“எத்தன Suspects..?”

“43 பேர்”

“Nearest outwings..?”

“12 பேர்”

“Coordinates..?”

“62° Northeast, 2 O’ clock at your left”

“Copy that…Sam”

“Cap..?”

“3rd floor உன் பொறுப்பு”

“Roger that”

“உன்ன பெரிய போர்வீரன்னு சொன்னாங்க, இப்படி 43 பேரை அடிக்க இவ்ளோ யோசிக்கிற..?”

“Sorry நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா..?!”

“இந்த சண்டையில் உயிரோடு இருந்தா வா, பேசலாம்”, என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள் டயானா.

“யார் Cap உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா..?”

“எனக்கு தெரிஞ்ச பொண்ணில்ல ஆனா என்ன பத்தி தெரிஞ்ச பொண்ணு”

“கொஞ்சம் திமிரு புடிச்சவ போல”

“வந்த வேலையை கவனி Sam”

“அதான பொண்ணுங்கள பத்தி பேசினா உடனே off பண்ணிடுவீங்களே, Alright Cap நான் என் Position-க்கு போறேன்”.

தூரத்தில் தன்னை அவள் கவனிப்பதை பார்த்த வண்ணம் Building-ன் உள் நுழைந்தார் கேப்டன் அமெரிக்கா.
_______________________

“நீங்க அவனுக்கு இவ்ளோ மரியாதை கொடுக்கிறது சரியில்ல Red king”

“அவன் ஒரு சிறந்த Gladiator, Caiera”

“அதுக்காக உங்கள தாக்க வந்தவன சும்மா விட சொல்றீங்களா..?”

“Caiera…காரியம் ஆகணும்னா சில சமயம் கம்முன்னு தான் இருக்கனும். அவன்கிட்ட ஒரு Rage இருக்கு”

“இன்னுமா அந்த Lanterns-அ நம்பிக்கிட்டு இருக்கீங்க..!!”

“நாளைக்கு இவனுக்கு Wildebots கூட ஒரு பெரிய Fight ஏற்பாடு பண்ணு”

“Wildebots-ஆ..!! அதெல்லாம் வெறும் தகர டப்பா, பார்த்தீங்கள்ள அவன் நம்ம Devil corker-அயே கொன்னுட்டான்”

“யானையோட பலம் யானை கூட தான் வேலை செய்யும் எறும்புங்க கூட இல்லை”

“புரிஞ்சது Master”, நமட்டு சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தாள் Caiera.

மறுநாள் Colloseum-ல்,

“Ladies and Gentlemen இன்னைக்கு உங்களுக்கு ஒரு Special Treat !! உங்க Favourite Hulk நம்ம Security Gaurds ஆன Wildebots கூட மோத போறாரு !!” என்றவுடன் கரவொலி விண்ணை தொட்டது.

Hulk-ம் மற்ற Gladiators-ம் மைதானத்தை வந்தடைந்தனர்.

நடக்கப்போகும் கூத்தை வேடிக்கை பார்க்க நக்கலாக நின்று கொண்டிருந்தாள் Caiera.

இன்று ஏனோ Hulk-கிற்கு மனசு சரியில்லை ஏன் இவள் நம் கண்ணிற்கு மட்டும் Natasha போலவே தெரிகிறாள் என்ற சிந்தனையில் கிடந்தான்.

போட்டி ஆரம்பமானது Caiera நினைத்தது போலவே Wildebots-ஐ சமாளிக்க திணறினான் Hulk. மனிதனை விட சிறிய உருவம் ஆனால் இரண்டு மடங்கு பலம் கொண்ட Wildebots கூட்டமாக வந்து மொய்க்கவும் செய்வதறியாது திணறி போனான்.

புற்றீசல் போல Hulk-ன் மேல் ஏறிய Wildebots அவனை இயந்திர வெள்ளத்தில் மூழ்கடித்தன.

கடைசியாக அவன் கண்கள் பார்த்தது தூரத்தில் தன்னை பார்த்து சிரிக்கும் Natasha.
___________________

“பரவாயில்லையே நா நெனச்சத விட சீக்கிரமாவே முடிச்சுட்ட !!”

“அதான் எங்க Teamwork”

“உன்ன Captain-னு சொல்றதுல தப்பே இல்ல”

“நீங்க யார்னு சொல்றீங்களா..?”, என்றார் Captain

அதற்கு Sam, “Diana prince, 1918-ல Great Britain-க்காக Belgium-ல commander Steve trevor கூட வேல பாத்துருக்காங்க, இப்போ இருக்குறது Bruce Wayne Corporation-ல, Hi நான் Sam Wilson..!!”

“Hi sam, உன்ன எப்படி கூப்பிடுவாங்க Cap…Captain…”

“Steve rogers”

“Steve…Nice name…கொஞ்சம் பேசலாமா..?”

Diana இதுவரை நடந்த அத்தனையும் Captain-இடம் கூறினாள்.

“எனக்கு இது புரியல ஒரு Worthy ஆன Weapon அத ஒரு Worthy person தான் எடுக்க முடியும்னா How can someone take it like a piece of Cheese..??”

“Maybe அவனும் Worthy ஆ இருக்கலாம்”

“அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க”

“என் கவலையே அது தான் அப்படி Worthy ஆன ஒருத்தன எதுக்காக அரசி தடுக்கனும்..? ஏன் அவன் அரசிய தாக்கிட்டு அத எடுத்துட்டு போகனும்..?”

“இதுக்கு விடை உங்க அரசி கிட்ட மட்டும்தான் கிடைக்கும்”

“எனக்கு உன் உதவி தேவை Steve, இப்போ நா themyscira-விற்கு போறேன்…அதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம், Be active..!”

“நானும் ஒரு இடத்துக்கு போகணும்..!!”

“எங்க..?”

“Wakanda…!!!”
______________________

Wildebots மொத்தமா தன்னை ஆட்கொண்டதில் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழப்பதுபோல் உணர்ந்தான் Hulk.

இனியும் பொறுக்க முடியாது என்று முடிவெடுத்து தனக்குத் தெரிந்த ஒரே ஆயுதத்தை கையில் எடுத்தான்.

துவம்சம் செய்வது..!!!

முன்னர் Ultron bots-உடன் சண்டையிட்டது கொஞ்சம் கை கொடுத்தது. கையில் கிடைத்த அத்தனையும் நொறுக்கி தூக்கி எறிந்தான், சண்டை வெகுநேரம் தான் நடந்தது.

எஞ்சியிருந்த கடைசி Wildebot-ஐ இரண்டாக பிய்த்து எறிகையில் colloseum-ஏ கப்சிப் என்றானது.

Colloseum முழுவதும் இயந்திர குப்பைகள்,
அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தனர் சஃகார்வாசிகள். அந்த மக்கள் இப்படி ஒருவனை இதற்கு முன் பார்த்ததே இல்லை, அனைவரின் முகத்திலும் பயம் தொற்றிக்கொண்டது, caiera-வே சற்று நடுங்கி தான் போனாள்.

தன் கிரகத்தின் முக்கால்வாசி காவலர்களை ஒருவன் தனியாளாக கொன்றொழித்த பின்னும் அவனைப்பார்த்து விகாரமாக சிரித்துக்கொண்டிருந்தான் Red king.

அன்றைய நாளின் முன்னிரவில் Hulk-ஐ பார்க்க அவன் அறைக்குள் நுழைந்தாள் Caiera.

அவளை அறியாமலேயே தானாக உடல் நடுங்கிக்கொண்டிருந்தது,

உள்ளே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் Hulk-ஐ காணவில்லை..!!

‘எங்கே சென்றான் அந்த தடியன்’ என்று எண்ணியபடியே கொஞ்சம் முன்னேறினாள், கட்டிலுக்கு அருகில் கீழே ஏதோ அசைவது போல் தெரிந்தது,
அருகே சென்று பார்த்தாள்.

“கிட்ட வராத..!!!”

தீடீரென்று வந்த குரலை கேட்டு சற்று அதிர்ந்த caiera பின் தைரியத்தை வரவழைத்து கொண்டு,

“யார் நீ..?!!”, என்றாள்

“நான் Bruce… Bruce banner…”

Wonderwoman vs hulk – part 2

முன்கதை சுருக்கம் :
Themyscira-விற்கு ஆபத்து என்று உணர்ந்த டயானா அங்கு சென்ற பொழுது Sunblade (Sword of Apollo) காணாமல் போனதை அறிந்தாள். Ultron உடன் போர் முடிந்த சமயம் அனைவரையும் விட்டு பிரிந்து சென்ற Hulk சஃகாரில் தரையிறங்கினான்.

இனி…

“Master”

Red king : Caiera the oldstrong, வரவர உன் சக்தியோடு சேர்ந்து உன் அழகும் கூடுதுன்னு நினைக்கிறேன் !!

Caiera : இன்னைக்கு ஒருத்தன கண்டுபிடிச்சோம் அவன் பச்சை கலரில் இருந்தான் !

Red king : மோதிரம் ஏதாச்சும் கிடைச்சுதா ?!!

Caiera : இதுவர இல்லை.

Red king : எதுல வந்தான் ?

Caiera : ஒரு Ship-ல

Red king : அதுல தேடி பாத்தீங்களா ?

Caeira : நான் பார்த்த வரைக்கும் அதுல எதுவும் இல்ல, But Hologram-ல ஒருத்தன் மட்டும் லூசு மாதிரி பேசிட்டு இருந்தான்.

Red king : இவனை Observation-ல வைங்க, நாளைக்கு நடக்க போற சண்டையில் பார்த்துக்கலாம்.

அன்றைய நாளின் முன்னிரவில்…

Caiera : நீ Lantern கூட்டத்தை சேர்ந்தவனா ?!

Hulk : Lantern-ஆ நான் யாரையும் சார்ந்தவன் இல்லை, நா Hulk.

Caiera : Ship ல இருந்து இறங்கினதும் எதுக்காக என்னை பார்த்து அதிர்ச்சியான ??

Hulk : அது வந்து நீ பார்க்க நடாஷா மாதிரி…

Caiera : சரி அத விடு நாளைக்கு Colloseum-ல பெரிய சண்டை இருக்கு மறக்காம தயாராகிடு அத சொல்ல தான் வந்தேன்.

என்று கூறிக்கொண்டே வெளியேறினாள் Caiera.
_____________________

Themyscira-வில் இருந்து லண்டன் வந்த டயானா அங்கு Etta candy வீட்டிற்கு சென்றாள்.

“வாங்க டயானா”

Diana : சாரி நீங்க யாரு ??

“நான் Etta candy உடைய பொண்ணு Jenifer candy, அம்மா பத்து வருஷத்துக்கு முன்னாடியே தவறிட்டாங்க…”

Diana : மன்னிச்சிடுங்க நான் சில தகவல்கள் கேட்க வந்தேன் !

Jenifer : Actual-ஆ அம்மா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க Steve trevor ஓட நீங்க செய்த சாகசங்களை பத்தி, அம்மா A.R.G.U.S-ல இருந்ததால உங்களை பத்தின பழங்கால தகவல்களை சுலபமா சேகரிக்க முடிஞ்சது அது இப்ப என்கிட்ட தான் இருக்கு, So அம்மா எடத்துல என்னால உங்களுக்கு உதவ முடியும்னு நினைக்கிறேன்.

டயானா Themyscira-வின் நிலை பற்றியும் Sunblade பற்றியும் Jenifer இடம் கூறினாள்.

Jenifer : இதுவர அம்மா சேகரிச்சதுல நீங்க சொன்ன வார்த்தையே இல்லையே

Diana : கண்டிப்பா இருக்காது ஏன்னா அது மனிதர்களிடத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கு. History of Ancient Gods எதுலயாவது தேடி பாருங்க வாய்ப்பு இருக்கு.

Jenifer : நீங்க சொன்ன மாதிரி Ancient Books ல தேடி பார்த்தேன் அதுல 12 godsக்கு 12 Weapons இருந்ததாகவும் அந்த Weapons ஒவ்வொன்றும் அந்த God ஓட power-அ resemble பண்ணும்னு சொல்லப்பட்டிருக்கு

Diana : Apollo உடைய வாள் னு எதுவும் இருக்கா ?

Jenifer : ம்ம் இருக்கு

Diana : ஆனா Apollo-வே இல்லையே ஒரு வேளை அரியாசனதுக்கு ஆசைப்படுற யாராவது திருடி இருக்கலாம்

Jenifer : Ares-ஆ..?

Diana : அவன் இப்போதைக்கு வர மாட்டான்

Jenifer : Zeus..?

Diana : அவரும் இப்ப இல்ல

Jenifer : உங்களுக்கு நிறைய சகோதர சகோதரிகள் இருக்கிறதா கேள்விப்பட்டேன் அவங்கள்ல ஒருத்தரா இருக்குமோ..?

சட்டென்று டயானா க்கு பொறி தட்டியது,

Diana : சமீபத்தில் சந்தேகத்திற்கு இடம் தர்ற மாதிரி எதுவும் சம்பவம் நடந்துச்சா ?!

Jenifer : நா Retire ஆகிட்டேன் டயானா, So recent news-னா நீ A.R.G.U.S-அ தான் contact பண்ணனும்.

தகவலுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து A.R.G.U.S புறப்பட்டாள் டயானா.
_________________________

மறுநாள் காலை
Colloseum பார்வையாளர்களால் அதிர்ந்துகொண்டிருந்தது.

Red king : Hellooo Everyone…!!! இன்னைக்கு சஃகார்வாசிகளை சந்தோஷப்படுத்த புதுசா நிறைய பேர் வந்துருக்காங்க அவங்கள Welcome பண்ணுங்க.

மறுபடி கரகோஷம் கூடியது,

கரவொலியின் போது மைதானத்தின் நடுவில் அனைத்து Gladiatorகளும் இறக்கி விடப்பட்டனர் வேண்டா வெறுப்பா Hulk-ம் நின்றுகொண்டிருந்தான்.

“எப்பா எப்டிப்பா இவ்ளோ பெருசா வளர்ந்த எனக்கும் சொல்லிக் கொடேன்” என்று தனக்கே உரிய பாணியில் தன்னை அறிமுகம் செய்தான் Korg.

“என் பேரு Korg-uh அந்த பூரான் பேரு miek-uh எங்க டீம்ல join பண்ணிக்கிறியா எல்லாரையும் பொலி போடலாம்”

Hulk : Hulk யார் கூடயும் சேர மாட்டான் என்ற படி பூட்டிய கதவை நோக்கி நகர்ந்தான்

“Mr. மாமிச மலை என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க” என்றபடி Miek-கும் பின்னாடியே சென்றான்

போட்டி ஆரம்பமானது,

Korg-ன் தோற்றத்தில் இருக்கும் மூன்று Kronan-கள் களமிறக்கப்பட்டனர்
தன்னை போன்றவர்களை பார்த்த மகிழ்ச்சியில்,

“கண்ணுங்களா என் பேரு korgu நாலு பேரும் Tag team போடலாமா” என்று ஆர்வமாக முன்னால் சென்றான்.

அவனை அலேக்காக தூக்கி மல்லாக்க படுக்க போட்டனர் மூவரும், திரும்பி Korg எந்திரிக்கவே இல்லை.

மேலே இருந்து Red king Hulk-ஐ பார்த்துக்கொண்டே இருந்தான், இதை கவனித்த Hulk Meik இடம்,
“யார் இந்த தீக்குச்சி மண்டையன்” என்று கேட்டான்.

Miek : பாக்க தான் ஆளு தீக்குச்சி மாதிரி இருப்பான் ஆனா பெரிய சைத்தான் கீ பச்சே, பேரு Angmo asan-II நாங்க Red king-னு கூப்பிடுவோம்.

சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்தது Kronan-கள் க்ரோதத்தில் ரெண்டு பேரை கொன்றே விட்டனர், வாங்கிய அடியிலிருந்து கொஞ்சம் மீண்ட Korg சமாளித்து எழுந்து நின்றான்.

Hulk மீண்டும் தன் கேள்விகளை தொடர்ந்தான்

Hulk : ஏண்டா இப்படி சூம்பிப் போய் இருக்கான் இவனா அரசன் ?!!

Miek : அவன சாதாரணமா நெனைக்காத அதோ பக்கத்துல படுக்க போட்டு வச்சிருக்கான் பாரு ஒரு Armor அதுதான் அவனோட பலம், கூடவே ரெண்டு கத்தி வச்சிருக்கான் ஒன்னுல கரண்ட் வரும் இன்னொனுல நெருப்பு வரும் அத போட்டுக்கிட்டா அவனை யாராலயும் ஜெயிக்க முடியாது.

அதையும் பார்த்துவிடலாம் என்றபடி Kronan-களை நோக்கிப் பாய்ந்தான் Hulk, வந்த வேகத்தில் இரு Kronan-களின் கழுத்தை பிடித்து நெறித்தான் இரண்டும் தூள் தூளாகி விழுந்தன,

மீதியிருந்த ஒருவனை Korg பாய்ந்து சென்று தாக்க மற்றவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த Kronan-ஐ தூள் பக்கோடா ஆக்கினர்.

உடனடியாக Red king மேலிருந்து Devil corker-ஐ ரிலீஸ் செய்ய உத்தரவிட்டான்,
மக்களின் ஆரவாரத்தோடு பூமியைப் பிளந்து எரிமலை குழம்பிலிருந்து Devil corker என்ற மிருகம் மேலே வந்தது.

அது பார்க்க பெரிய சைஸ் ஆக்டோபஸ் போலவும், அதன் தலை Hulk-ஐ விட பெரியதாகவும் இருந்ததால் அனைவரும் சற்று மிரண்டு போனார்கள். வெளியே வந்த மிருகம் தன் கைகளை கொண்டு அனைத்து Gladiator-களையும் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கியது.

ஆனால் எதற்கும் அசராமல் பாய்ந்து வந்த Hulk அதன் தலையில் ஒரு குத்து விட்டான் அவ்வளவுதான் மொத்த கூட்டமும்
‘Hulk’
‘Hulk’ என்று கத்த ஆரம்பித்தனர், Devil corker சுருண்டு எரிமலை குழம்பிற்குள்ளே செத்து விழுந்தது.

Hulk அதே ஆத்திரத்தோடு Red king-ன் சிம்மாசனத்தை நோக்கி மேலே பாய்ந்தான், ஆனால் மேலே இருந்த Caiera அவனை தன் Sword-ஐ வைத்து தடுத்து கீழே தள்ளிவிட்டாள், அதற்குள் Armor-ஐ மாட்டிக்கொண்ட Red king கீழே பறந்து வந்து தன் Electrical Sword-ஐ வைத்து Hulk-க்கு shock கொடுத்து மயங்கச் செய்தான் தூரத்திலிருந்து Caiera தன்னை முறைப்பதை பார்த்தவண்ணம் மயங்கி விழுந்தான் Hulk.
______________________________

A.R.G.U.S ல்

Agent X : Welcome டயானா நீங்க வர்றதா Jenifer சொன்னாங்க

Diana : சமீபத்தில் Earthல நடந்த வித்தியாசமான சம்பவங்களை பற்றி கேட்க வந்தேன்

Agent X : சமீபத்திலனா தேரை இழுத்து தெருவுல விட்ட கதையா மறுபடி ultron வந்ததை சொல்லலாம்.

Diana : அது அந்த குறுந்தாடிகாரனோட சேட்ட, நான் கேட்கிறது Any new species invasion or activities தெரிஞ்சுதா ?

Agent X : அப்படி எதுவும் நடக்கல But நாங்க ஒரு Ancient Mummy-அ‌ Recent-ஆ கண்டுபிடிச்சோம், அதுல வித்தியாசமா பச்சை குத்தி இருந்தது. எங்களுக்கு அதை படிக்க தெரியல நான் வேணும்னா Permission தரேன் நீங்க Try பண்ணுங்க

டயானா எழுத்துக்களை படித்தாள். அதில் அவ்வளவாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை அவளால் படிக்க முடிந்ததோ,

“There is a child who is worthy to rule the world. but a Worthy for a Worthy, He is designed to destroy the last residue of intellect and humanity left in the world” என்பதுதான்.

Diana : அப்ப இவனைக் கண்டு பிடிக்கணும்னா எனக்கு இன்னொரு Worthy person-ஓட துணை தேவை,But அப்படி ஒருத்தன எனக்கு தெரியாதே…

Agent X : எனக்கு தெரியும் !

Diana : யாரு ?!

Agent X : Steve…

Diana : ……

Hulk Vs wonderman – 1

டயானா மனதில் பல குழப்பங்கள் ஓடிக்கொண்டிருந்தன. Steppenwolf எதற்காக Mother box-ஐ தேடி வந்தான், அவனுடைய வருகை யாரைப் பற்றியாவது எச்சரிக்கை செய்யவா என்று பல சிந்தனைகள் மனதில் ஓடிய சமயம் மீண்டும் Themyscira-வில் இருந்து எச்சரிக்கை நெருப்பு ஏற்றப்பட்டது, Stephenwolf Mother box-க்காக படையெடுத்த பொழுது ஏற்றப்பட்ட அதே நெருப்பு. ஏதோ ஆபத்து என்று உணர்ந்த டயானா அங்கிருந்து Themyscira புறப்பட்டாள்.

Ultron உடன் போர் முடிந்த சமயம்,

பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்தது Quinjet.

‌”என்ன மன்னிச்சிடு நடாஷா உன் கூட இருக்கும் ஒவ்வொரு நொடியும் என்னால உனக்கு எதுவும் ஆபத்து வந்துடும்னு பயமா இருக்கு, மனஅமைதிய தேடிய இந்த பயணத்தில நான் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக உன்ன வந்து சந்திக்கிறேன்” என்று மனதுக்குள் பேசிக் கொண்டார் Bruce.

நேசிக்கும் பெண்ணுடன் நொடி கூட இருக்க முடியாததை நினைத்து கண்களில் நீர் பெருகியது. ஏதோ ஒரு இனம்புரியாத வலி. இதுவரை Hulk அதை உணர்ந்ததே இல்லை, காத்திருப்பது மட்டுமல்ல கடந்து செல்வதும் காதல்தான் என்று வாழ்பவர்களுக்கு மட்டுமே இந்த வலியை புரிந்துகொள்ள முடியும்.

பூமியின் அனைத்து தகவல் தொடர்புகளில் இருந்தும் பிரிந்த Quinjet விண்வெளியில் மிதக்க ஆரம்பித்தது.

பல சிரமங்களை தாண்டி Themyscira சென்ற டயானா அதிர்ச்சியில் உறைந்து போனாள். Themyscira-வே சின்னா பின்னமாகி இருந்தது கோட்டைக்குள் சென்றவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி அவளது தாய் அரசி Hippolyta நிலைகுலைந்து படுத்திருந்தார் பதறிப்போன டயானா என்ன ஆயிற்று என்று விசாரிக்கும் பொழுது Hippolyta சொன்ன முதல் வார்த்தை “அது உன்னுடையது”

“என்னுடையதா”

“ஆம் அது உனக்கானது நீதான் அதை திரும்ப கொண்டு வரவேண்டும்”

“Mother box ஆ”

“இல்லை Sword of Apollo”

எதுவும் பேசாமல் அம்மாவையே பார்த்தாள் டயானா,

“Sword of Apollo ஒரு God killer Armour, முன்னோர்களால் Sunblade என்று அழைக்கப்படும். அதை வைத்து நம் மொத்த இனத்தையும் அழிக்க முடியும். அளப்பரிய சக்தி வாய்ந்த அந்த Sunblade திட்டத்துடன் எடுத்து செல்லப்பட்டுள்ளது எப்படியாவது அதை மீட்டுவிடு டயானா” என்றபடியே மயங்கி விழுந்தார் Queen Hippolyta.

அரசி சொன்னதைக் கேட்டு செய்வதறியாது மூர்ச்சையாகி நின்றாள் டயானா.

பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில்,

கண்களை மூடி கடந்தகாலத்தை நினைத்து கொண்டிருந்தவனை கணநேரத்தில் எழுப்பியது ஒரு கம்ப்யூட்டர் ஒலி,

“Location mislocated, MayDay”
“Location mislocated, MayDay”

என்ன ஆயிற்று என்று Hulk புரிந்து கொள்வதற்கு முன் எல்லாம் நடந்து முடிந்தது

சிறிது நேரத்திற்குப் பின் உடம்பு முழுக்க கனத்த வலியோடு எழுந்தான் Bruce. Quin jet பத்திரமாக தரை இறங்கி இருந்தது, வெளியே வந்து பார்த்தால் முழுவதும் குப்பை கூளங்களக இருந்தது. இந்த இடத்தை Bruce-க்கு தெரிந்து இருந்தது ஆம் இது முன்பு எங்கோ படித்த அதே சஃகார் தான்.

“Welcome Gladiator, சஃகார்க்கு உன்ன வரவேற்கிறோம்”

குரல் கேட்டு திரும்பி பார்த்தான்

அ.. அது.. நடாஷா…

தொடரும்…