Tag Archives: Tamil Comics

Wonder Woman Vs Hulk Part-4

முன்கதை சுருக்கம் :
ஒரு Worthy person-கான தேடலில் Captain America-வை‌ சந்தித்த டயானா கேப்டனின் அறிவுரையின் படி அரசியை சந்திக்க Themyscira சென்றார். Wildebots உடனான சண்டையில் Hulk-ன் ஆக்ரோசத்தை கண்டு பிரமித்த Caiera Hulk-ன் அறையில் Banner இருப்பதை கண்டு அதிர்ச்சியானாள்.

இனி…

“அப்ப நீ கோபம் வந்தா Hulk-ஆ மாறிடுவியா..?!”

“ஆமா…”

“காலையில கோபமா தான சண்டை போட்ட, இப்ப ஏன் மாறுன..?”

“Hulk கொஞ்சம் சந்தோஷமாயிட்டா அடங்கிவிடுவான் நான் பழைய நிலைக்கு திரும்பிடுவேன்”

“நீ எந்த கிரகத்த சேர்ந்தவன்”

“பூமி”

“ஓ..!!!”

“அந்தக் Red king ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு மரியாதை கொடுக்கிறான்”

“அவனுக்கு சின்ன வயசுல ஒரு Lantern Ring கிடைச்சது, ஆனா அவங்க அப்பாவால அதை இழந்துட்டான். என்னதான் அது அவன்கிட்ட இல்லன்னாலும் அதுல இருந்து கிடைச்ச intelligence-ம் Rage-ம் இன்னும் Side effects – ஆ அவனுக்குள்ள இருந்துகிட்டு தான் இருக்கு.
அத சரி பண்ணனும்னா மறுபடி அவனுக்கு அந்த Ring தேவை அதை உன் மூலமா சாதிக்க பார்க்கிறான்”

“ஆமா, இது என்ன இடம்”

“சஃகார்”

“அந்த குப்பைகளின் கிரகமா..!!”

“ம்ம்ம் அப்படியும் சொல்லலாம் ஆனால் இங்கேயும் பூர்வகுடிகள் இருக்காங்க நானும் அதில் ஒருத்தி என் பேரு Caiera the Oldstrong”

“Oldstrong…அப்படின்னா..?”

“அது எங்க ஜனங்களுக்கு இருக்கிற ஒரு சிறப்பு சக்தி அத வச்சு எங்கள பாதுகாக்கவும் மத்தவங்களுக்கு சக்தி கொடுக்கவும் முடியும் ஆனா எல்லாருக்கும் அது கிடைச்சுடாது!!”

“வித்தியாசமா இருக்கே..!!”

“இதுக்கே இப்படின்னா எப்படி, என்னோட உண்மையான உருவம் யாருக்கும் தெரியாது அவங்க எத ஆசைப்படுறாங்களோ அப்படி தான் நான் தெரிவேன்.”

“அதான் என் கண்ணுக்கு எப்பவும் நடாஷா மாதிரி தெரியுறியா..”

“நடாஷா யாரு..?”

“நான் தடம் மாறும்போதெல்லாம் உடன் மாறாமல் நேரெதிர் நின்று என்னை மாற்றியவள் சுருக்கமா சொல்லணும்னா அவ என்னோட Oldstrong.”

“அப்படிப்பட்டவள ஏன் விட்டுட்டு வந்த..??”

“என்னோட கோபம் அவளைக் கொன்றுமோன்னு பயமா இருந்துச்சு”

“எல்லாருக்கும் தான் நேசிக்கிற பொண்ணோட சேர்ந்து சுவாசிக்க கிடைக்கிற நேரம் ரொம்பவே குறைவு Banner..!!,
நீ Hulk-ஆ இருக்கும் போது கூட உன் கண்ணுக்கு நான் நடாஷாவாகதான் தெரிஞ்சேன். So என்ன பொறுத்தவரை உன்னால அவளுக்கு எந்த ஆபத்தும் வராது..!!

Banner கண்களில் கண்ணீர் பெருகியது, உடனே நடாஷாவை பார்க்க வேண்டும் போல இருந்தது அங்கிருந்து கிளம்ப திட்டமிட்டான்.

“நான் இந்த இடத்தைவிட்டு போக முடியுமா”

“முதல்ல நாளைக்கு நடக்க போற சண்டையில நீ உயிரோட இருக்கியான்னு பாரு..!!”

“நாளைக்கு யார் கூட..??”

“Egg Breaker..!!!”


Themyscira சென்ற Diana, Amazonians பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதை கண்டு சற்று நிம்மதி அடைந்தாள், அதேசமயம் டயானாவுக்கு தன் தேசத்தை இப்படி ஆக்கியவன் மீது கோபமும் வெறியும் அதிகமாகிக்கொண்டே போனது. கோட்டைக்கு உள்ளே சென்று தன் தாயாரை சந்தித்தாள் இதுவரை தான் கண்டறிந்த அத்தனையும் கூறினாள்.

“Diana நீ சரியானத நோக்கிதான் போற ஆனால் நீ எவ்வளவு நெருங்குகிறியோ அதுல அவ்வளவு ஆபத்து இருக்கு.!!”

“அவன் பேர் என்ன..?”

“Firstborn !!!”

“யார் அவன்..?”

“Zeus ஓட முதல் மகன். நியாயப்படி zeus-க்கு அடுத்து அவன் தான் ஆட்சி செய்யனும்”

“அப்புறம் ஏன் அவன எதிர்க்குறீங்க..?”

“அவன் ஆட்சியில் இருக்கணும்னா Zeus சாகணும். அதை முன்னாடியே தெரிஞ்சுகிட்ட Zeus, Firstborn குழந்தையாய் இருக்கும்போதே அவன பூமியில விட்டெறுஞ்சுட்டாரு
ஆனாலும் அவன் மறுபடி தன்னோட அரியாசனத்தை அடைய வந்தான். அந்த நேரத்துல Appollo-வும் Zeus-ம் இருந்ததால அவனைத் தோற்கடித்து பூமியோட மையத்தில் தூக்கி போட்டுட்டாங்க. அங்க இருக்கிற வெப்பத்தை தன்னோட சக்தியை மாற்றிக் கொண்டவன் இப்ப முழு கெட்டவனாக மாறிட்டான்!!”

“அப்ப Zeus என்னை உருவாக்கினது தன்னுடைய கடந்த கால தவறுகளை சரிசெய்ய தான் இல்லையா..???”

“நீ ஒரு God killer டயானா உன்ன படைச்சது அதுக்குத்தான், இவன கொல்லனும்னா அதுக்கு இன்னொரு Worthy person ஓட துணை தேவை..!”

“நாம படைக்கப்பட்டது பூமியில இருக்குறவங்கள மகிழ்விக்க தான் திரும்பத் திரும்ப காயப்படுத்த இல்லை, மறுபடி இன்னொரு Steve-அ இழக்க நான் தயாராக இல்லை!!”

“உனக்கு வேற எந்த வழியும் இல்லை மகளே!!”

சிறிது நேர மவுனம் காத்த Diana…

“Firstborn கெட்டவனா மாறிட்டான்னா அவனால எப்படி Sunblade-a எடுத்திருக்க முடியும்..?”

“அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு வந்தது அவன் தான் அவனால எடுக்க முடியாதே வேற யார் எடுத்து இருப்பா…??!!!”

“தன் தாயின் பதிலைக் கேட்டு குழம்பி போனாள் Diana.”


கேப்டனும் Sam-ம் சென்ற ஜெட் Wakanda-வில் தரையிறங்கியது, வாசலில் காத்துக் கொண்டிருந்த Wakanda அரசர் T’Challa கேப்டனை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

(Feel the Wakanda bgm)

“உங்களைப் பார்த்ததுல மகிழ்ச்சி!!”

“வரவேற்புக்கு நன்றி நண்பா ஒரு உதவிக்காக உங்கள தேடி வந்து இருக்கேன்.!!

“நிச்சயமா செய்கிறேன் இத பத்தி பின்னாடி பேசுவோம் இப்போதைக்கு ஓய்வெடுங்க..”, என்றபடி தன் அலுவல் பணிகளை கவனிக்க சென்றார் T’Challa.

“War criminal ஆனதுக்கு அப்புறமும் நாட்டுக்காக உழைக்கிற போல”

“நமக்கு இது புதுசா என்ன…பழகிடுச்சு, எப்படி இருக்க Bucky..?”

“நீ வந்துட்டல்ல Steve, இனி நல்லாவே இருப்பேன்..!!”

விருந்தோம்பலுக்கு பின்னர் தன் திட்டத்தை பற்றி T’challa விடம் தனியாக உரையாடினார் கேப்டன்.

“கேப்டன் மறுபடியும் Team சேர்க்கிறார் என்று தெரிந்துகொண்ட Sam சிறிது நேரத்திற்குப் பின் அவரை தனியாக சந்தித்தார்”

“யாருன்னே தெரியாத ஒரு பொண்ணுக்காகவா மறுபடியும் Team சேர்க்குறீங்க..!! என்ன மோதலுக்கு பின் காதலா!!!”

“Team சேர்க்குறது அவளுக்காக இல்ல நமக்காக..!”

“புரியுற மாதிரி சொல்லுங்களேன்”

“போனவாரம் ஸ்பெயின்ல நம்ம புடிச்ச 43 பேரும் சாதாரண மனிதர்கள் கிடையாது !! அவங்க Skrulls இனத்தை சேர்ந்தவங்க.
விசாரிச்சதுல அவங்கள போலவே உருவம் கொண்ட ஒருத்தன் இருக்குறதாகவும் அவன் மிகவும் சக்தி வாய்ந்தவன்னும் சொல்லி இருக்காங்க இப்ப அவன கண்டுபிடிக்குற வேலை நம்மகிட்ட வந்திருக்கு..!!”

“சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?”

“முக்கியமான விஷயம் என்னன்னா அவன் யாரா வேணாலும் உருவம் மாறுவான் !!!”

“Cap நீங்க சந்தேகப்படுறது சரியில்ல இவளா இருக்க வாய்ப்பில்ல ரொம்ப அழகா வேற இருக்கா!!”

“அழகு இருக்கிற இடத்தில தான் ஆபத்தும் இருக்கும் Sam, ஒன்னு இவ அவனா இருக்கணும், இல்ல இவ தேடுறவன் அவனா இருக்கணும் !”

“சுருக்கமா ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்றீங்க”

“சீக்கிரம் தயாராகு நாம இன்னும் நிறைய பேரை சந்திக்க வேண்டி இருக்கு !”

“அப்ப நம்ம அடுத்த Target..?”

“Wonder Woman..!!!”

தொடரும்…

HENRY CAVILL aka SUPERMAN

அறிந்ததும் அறியாததும்


Cavill தன்னுடைய திரைப்பயணத்தை 2001 ஆம் ஆண்டு LAGUNA திரைப்படம் மூலம் தொடங்கினார் …அதன் பின்பு அவர் IMMORTAL
,STARDUST ,SAND CASTLE போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய hit என்றால் அது SUPERMAN கதாபாத்திரம் தான்…
2013 அம் ஆண்டு Zack snyder இயக்கத்தில் வெளியான Man of steel திரைப்படம்
DC FANS இடம் Cavill லை கொண்டு சேர்த்தது…
அனைவருமே henry cavill லை Perfect superman என்று புகழாரம் சூட்டினார்கள்…
ஆனால் அதற்க்கு பின் இருந்த cavill லின் உழைப்பு மிகவும் பெரியது…கிட்டதட்ட படத்தின் shooting ஆரமிப்பதர்க்கு 5 மாதத்துக்கு முன்பே superman கதாபாத்திரத்துக்காகா workout ஐ அரமித்துவிட்டார்….சொல்லப்போனால் ஒரு நாளுக்கு 5000 – 6000 calaries உணவில் எடுத்துக்கொள்வாராம்….என்னவாக இருந்தாலும்
இந்த கதாபாத்திரத்தை cavill நடித்த பின் இதற்க்கும் சில விமர்சனம் எழுந்தது , சூப்பர்மேன் என்ற ஒரு அமெரிக்க கதாபாத்திரத்தை எப்படி ஒரு British Actor நடிக்கலாம்..என்பது தான்…
இதற்க்கு cavill லே பதில் கூறியுள்ளார்
” சூப்பர்மேன் என்பவர் அமெரிக்கன் தான் ஆனால் அவர் அமெரிக்கர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அது ஒரு Universal கதாபாத்திரம் எல்லோருக்கும் பொதுவானது ….அது மட்டும் இல்லாமல் சூப்பர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கியது ஒரு Canadian. “
Henry Cavill Highschool படிக்கும்போது அவரின் Nickname ” fat cavill ” அவர் அப்போது சற்று குண்டாக இருந்ததால் எல்லோரும் அவரை அப்படி அழைத்து கேலி செய்துள்ளார்கள்
பின்நாளில் தன் உடல் எடையை குறைத்துள்ளார்.
Cavill 2014 அம் ஆண்டு அவர் adopt செய்த நாய்க்கு சூப்பர்மேனின் kal- El என்ற பெயரை வைத்துள்ளார்…இதுஎன்ன பிரமாதம் அவர் adopt செய்த வௌவால்களுக்கு BenBat என்று பெயர் வைத்துள்ளார் …
Cavill மிகவும் iconic role லானா James Bond கதாபாத்திரத்துக்கும் audition சென்றுள்ளார்….Casino Royale படத்துக்காக….
Harrypotter திரைப்படத்திலும் இவர் Cedric Diggory என்ற Role லில் நடித்திருக்கவேண்டியது…
ஆனால் பின்பு அந்த role லில் Robert pattinson
நடித்தார்….எல்லா நடிகர்களுக்கும் தன் வாழ்க்கையில் Dream Role என்ற ஒன்று இருக்கும்
Henry cavill லின் dream role “The great Alexander”
இதன் பின்பு cavill எத்தனை கதாப்பாத்திரங்களில் நடித்தாலும் அவரது Best என்றால் அது சூப்பர்மேன் நாகாத்தான் இருக்கும்….
Happybirthday HENRYCAVILL
#tonysiva

God emperor Doom – 1

நான் தான் George of Steel the Watcher சென்ற பதிவில் Mobius Chairயை பயன்படுத்தி இந்த cosmos crossover universeயினுள் நுழைய முற்பட்ட சக்தி யார் எனக் கண்டுபிடித்துவிட்டேன் அவன்தான் God Emperor Doom.

Doom ஒரு சாதாரண மனிதன் அவன் எப்படி கடவுளைப் போல் மாறினான் இவ்வளவு சக்திகள் அவனுக்கு எப்படி கிடைத்தது? அவனை நான் தொடர்ந்து கண்கானிக்க வேண்டும் என Mobius Chairயிடம் கேட்க. எனது எண்ணங்க god emperor doomவுடன் இணைந்தது

Latveria என்னும் நாட்டைத் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த மொத்த பிரபஞ்சத்தையுமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு அரசனைப் போல…..

அதே மனிதனுக்கு இந்த பிரபஞ்சமே அவனை வழிபட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ஒரு கடவுளைப் போல….

ஒரு சாதாரண மனிதனுக்கு இவை அனைத்தும் எட்ட முடியாத எல்லைகள், தகுதிக்கு மீறிய ஆசைகள். ஆனால் அது ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமே

victor von doomகு அல்ல

சிறு வயதிலேயே அவனது தாய் சாத்தானாலும் தந்தை சமூகத்தாலும் அவனை விட்டுப் பிரிந்தனர்.
ஆனாலும் doomயின் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவனை வளர்த்தது . அவனது ஆசையை அடைவதற்காக பயங்கரமாக உழைத்தான். ஒரே சமயத்தில் Magic மற்றும் Science இரண்டிலும் Master ஆனான். ஆனால் என்னதான் reed richards அளவிற்கு அறிவியலிலும் dr strange அளவிற்கு magicயிலும் பூந்து விளையாடினாலும் நினைத்த உடனே எல்லாம் கடவுளாகிவிட முடியாது. அதற்கு ஏற்ற நேரமும் அந்த நேரத்திற்கான கடினமான முடிவுகளும் தேவை

அந்த நேரம், ஒரு நாள் வந்தது. Beyonders என்னும் கடவுள்கள் இந்த மாபெரும் Multiverseயிலுள்ள பல Universeகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழித்துக்கொண்டு இருந்தார்கள். அதற்காக அவர்கள் அந்தந்த universeகளிலுள்ள தங்களால் உருவாக்கப்பட்ட molecule manஐ பயன்படுத்திக் கொண்டார்கள். Beyondersயின் அடுத்த இலக்கு பிரம்மாண்டமான Marvel மற்றும் DC universeயை அழிப்பது இதனை அறிந்து கொண்ட dr doom. Marvel universeஐ சேர்ந்த molecule manஐ beyondersஐ அழிக்கக்கூடிய ஆயுதமாக மாற்றினான்.

அந்த அழிவு நாள் நெருங்கியது marvel universeயின் மேல் வானத்தில் 8 மணி நேரம் Dc universe தெரிந்தது. அதே நேரம் Dc universeயின் வானில் Marvel universe தெரிந்தது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதத் தயாரானது. Marvelயின் mightiest heroesவும் DCயின் Greatest Heroesவும் என்ன செய்வது எனத் தெரியாமல் தினறிப் போனார்கள். ஆனால் dr doom என்னும் ஒருவனுக்கு மட்டும் இதற்கான தீர்வு தெரிந்திருந்தது.

Doom molecule manஐப் பயன்படுத்தி அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்களான beyondersயின் இடத்திற்கே சென்றான். இருள் சூழ்ந்த அவ்விடத்தில் மேடை போன்ற ஒன்று மிதந்து கொண்டிருந்தது அதில் ஏறி நின்றான் doom. உடனே அந்த இடம் முழுவதும் வெண்ணிற ஒளி சூழ்ந்தது இந்த பிரபஞ்சமே அவனிடம் பேசுவது போல் ஒரு குறல் கேட்டது

அந்த குறலுக்கு சொந்தக்காரர்கள் Beyonders. Beyonders Doomயை நோக்கி

“நாங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள், Dreamers, Destroyers, பிரபஞ்சங்களின் ரியாலிட்டிகள் அனைத்தும் எங்களின் திடீர் எண்ணங்கள். எங்களை எதிர்க்க யாருக்கு தைரியம் உள்ளது” எனக் கேட்க

“நான் Doom எனக்கு தைரியம் உள்ளது” எனக் கூறுகிறான் doom.

உடனே Beyonders Doomஐ நேருக்கு நேராக பார்க்க அவர்களின் realmஐ திறந்து வெளியே வருகிறார்கள். சுதாரித்து கொண்ட doom தான் ஆயுதமாக மாற்றிய molecule manஐ நொடிப்பொழுதில் beyonders realmயினுள் அனுப்பி வெடிக்க வைக்கிறான். Beyondersஆல் உருவாக்கப்பட்ட molecule manயிடமிருந்த ஏற்பட்ட explosionயில் கடவுள்களான அனைத்து beyondersவும் அழிந்து போகிறார்கள் அவர்களின் ஒட்டுமொத்த சக்திகளையும் தான் எடுத்துக்கொண்டு God Doomஆக உருவெடுக்கிறான் dr doom.

கடவுளானதும் இரண்டு universeகளுக்கு இடையே ஏற்பட இருந்த மோதலை தனது சக்திகளால் தடுத்து நிறுத்துகிறான் doom அதற்கென doomஐ ரொம்பவும் நல்லவன் என நினைத்துவிட வேண்டாம். Doomயின் அடுத்த நோக்கம் பிரபஞ்சங்களின் அரசனாக வேண்டும் அதற்கு marvel, dc மற்றும் மூன்றாவது universe ஆன ccuவை அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

Doom இப்போது கடவுளாக இருந்தாலும் அவனால் அவனது கடவுள் சக்திகளை முழுமையாக marvel மற்றும் dc universeயில் மட்டும்தான் பயன்படுத்த முடியும் CCUவில் முடியாது. அந்த CCUவில் உள்ள heroesஐ வீழ்த்துவதற்காக Marvel மற்றும் DC universeகளில் உள்ள முக்கியமான சிலரைத் தனது படையில் இணைத்துக்கொள்ள விரும்புகிறான் doom. அவனது பார்வை இப்போது Marvel universeயில் உள்ள Black Quadrantஐ நோக்கித் திரும்புகிறது. Black Quadrantதான் Thanosவுடைய Kingdom…………………

Thor Vs Aquaman – Part 3

Atlantis -இல் உருவாக்கிய ஒரு விஷம் jane – னின் உணவில் கலக்கப்படுகிறது…
Jane அந்த விஷத்தை சாப்பிடுவாளா ?
இல்ல thor அவளை காப்பாற்றுவரா…?
யார் விஷம் கலந்தது…? என்ற கேள்விகளோடு சென்ற பகுதி முடிந்திருந்தது

Thor இப்போ jane ஐ பார்த்து விட்டு Asgard செல்லலாம் என்ற முடிவுடன் jane னை பார்க்க அவள் வீட்டுக்கு வருகிறார்.
Jane-ஐ வந்து பார்த்ததும் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தோரின் கண் கலங்கியது.

Thor : jane உனக்கு என்ன ஆச்சு ?

jane கிட்டத்தட்ட உடல் நெளிந்து ஒரு வார்த்தை கூட பேசமுடியாத நிலையில் இருந்தாள் ,

Thor : jane கொஞ்ச நேரம் தாக்குபுடிச்சிக்கோ
இப்போவே நாம asgard போயிடலாம் ,
heimdall இப்போவே bifrost அ open பண்ணு

அவளை thor asgardக்கு கொண்டு செல்கின்றார்

Thor : இவளுக்கு உடனடியா மருத்துவ உதவி தேவை …

Asgard ல் அவளை பரிசோதனை செய்கிறார்கள்
மருத்துவர்கள்

Doctor : இது asgard கே ரொம்ப புதுசு,
இது நீரினால் உருவான ஒரு விஷம் , எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் இது கண்டிப்பா பூமியில் இருக்குற Atlantis ல தான் உருவாகிருக்கணும் இதுக்கான மருந்தும் அங்க தான் இருக்கணும் “

Thor : சரி இப்போவே நான் அங்க போய் மருந்த கொண்டுவரேன்.

Doctor : ஒரு நிமிஷம் இருங்க இவளையும் அழைச்சிட்டு போய்டுங்க விஷத்தோட வீரியம் ரொம்ப அதிகமாக இருக்கு நம்மகிட்ட நேரம் இல்லை .

Thor jane-ஐ பூமிக்கு கொண்டு செல்ல bifrost கு அழைத்து செல்கிறார்

Thor : heimdall bifrost அ open பண்ணு பூமிக்கு போகணும்

Heimdall : அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்
அரசர் odin ஓட நடவடிக்கைகள் ஏதோ சரி இல்லாத மாதிரி தோணுது

Thor : உன்னால தான் எல்லாத்தையும் தெளிவா பார்க்க முடியுமே இது என்னனு கண்டுபிடிக்க முடியலையா

Heimdall :ஆமா ஆனா ஏதோ தப்பா நடக்கப்போரமாறியே ஒரு உணர்வு

Thor : loki சிறையில தான இருக்கான்

Haimdall : ஆமா அவன் சிறையில் தான் இருக்கான்

Thor : அப்போ எல்லா சரியா தான் நடக்கும்

Haimdall :உலகம் இப்போ ஆபத்துல இருக்கு
பிரபஞ்சத்தோட பெரிய நிகழ்வுக்கான
தொடக்கம் இப்போ ஆரம்பிச்சுருக்கு அந்த நிகழ்வுல உன்னுடைய பங்கும் இருக்கும்..
நீ போய்ட்டு சீக்கிரம் வந்துடு

Thor : எனக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு, சரி நான் போய்ட்டு வந்து பாக்குறேன்

Jane-ஐ அழைத்து கொண்டு தோர் பூமிக்கு செல்கிறார்..அங்கு சென்றதும்
Jane-ஐ அவள் வீட்டில் விட்டுவிட்டு Professor Erik selvig ஐ அழைக்கிறார் thor , Erik யிடம் நடந்ததை கூறி இப்போது atlantis போக வேண்டும் என்று கூறுகிறார்

Erik : நீ ஏன் Tony stark கிட்ட உதவி கேக்கக்கூடாது
அவன் கிட்ட தண்ணிக்கு உள்ள போக ஏதாவது இருக்கலாம் இல்லயா..

Thor :Tony கே என்னோட உதவி தேவை படலாம். அதனால இதை நானே பாத்துக்குறேன் , tony இப்போ ஒரு பெரிய பிரச்சனைல இருக்கான் இப்போ அவன் Ultron அ சமாளிச்சாகனும்
அதனால தான் உங்க கிட்ட கேக்குறேன்
Erik என்கிட்ட இப்போ அதிக நேரம் இல்ல jane அ காப்பாதியே ஆகணும்…
Jane னுடைய இந்த நிலைமைக்கு யாரு காரணமா இருந்தாலும் சரி அவங்களுக்கு என் கையால தான் முடிவு

Erik : உன்னுடைய வருத்தமும் கோபமும் எனக்கு புரியுது , என்னால முடிந்த உதவிய நான் பண்ணுறேன் முதல்ல jane அ போய் பாக்கலாம் வா .

Thor , Erik இருவரும் jane-ஐ பார்க்க வருகிறார்கள் அதே சமயம் Aquaman உம்
Jane சந்திக்க வருகிறார்

Thor , Erik வீட்டுக்குள் வந்து jane-ஐ பார்க்கின்றார்கள்

Thor : jane இன்னும் கொஞ்ச நேரம் தான்
நாம் உனக்கான மருந்த சீக்கிரம் கிடைச்சிடும்
இருவரும் jane இடம் பேசிக்கொண்டிருக்க
அப்போது aquaman வீட்டுக்குள் வருகிறார்
வந்து jane ஐ பார்க்கிறார்.

Aquaman : jane உனக்கு என்ன ஆச்சு ?
Jane க்கு எப்புடி இது வந்துச்சு …

Thor : மொதல்ல நீ யாருனு சொல்லு ? உன்ன அன்னைக்கு jane கூட பாத்ததுநால தான் நான் jane அ விட்டுட்டு போனேன் இத்தன நாளா jane நல்ல தான் இருந்தா நீ வந்ததுக்கு அப்புறம் தான் jane க்கு இந்த நிலைமை உண்மைய சொல்லு யாரு நீ…

Aquaman : நான் arthur curry எல்லாரும் என்ன aquaman னு கூப்பிடுவாங்க நான் atlantis அ சேர்ந்தவன் ..

Thor : என்ன சொன்ன atlantis ஆ ……
நீ atlantis அ சேர்ந்தவன்னா அப்போ jane குள்ள இருக்குர விஷம் உன்னால தான் வந்துருக்கணும் நீ தான் குடுத்துருக்கணும்….
உண்மைய சொல்லு ….
என்று கத்திக்கொண்டு தன்னுடைய mjolnir ரை வைத்து Aquaman ஐ தாக்குகிறார்…இருவருக்கும் இடையே சண்டை தொடங்குகிரது

தொடரும்…….

wonder woman vs hulk – 3

முன்கதை சுருக்கம் :
காணாமல் போன Sunblade-ஐ தேடிச் சென்ற Diana கிடைத்த தகவல்களின் படி ஒரு Worthy person-ன் உதவிக்காக Captain America-வை தேடி செல்கிறாள். சஃகாரில் மாட்டிக்கொண்ட Hulk, Gladiator ஆக களமிறக்க படுகிறான். அங்கே Devil corker எனும் மிருகத்தை கொன்று அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறான்.

இனி…

SOMEWHERE IN EAST SPAIN

“On your left”

“Mission on fire, Captain”

“எத்தன Suspects..?”

“43 பேர்”

“Nearest outwings..?”

“12 பேர்”

“Coordinates..?”

“62° Northeast, 2 O’ clock at your left”

“Copy that…Sam”

“Cap..?”

“3rd floor உன் பொறுப்பு”

“Roger that”

“உன்ன பெரிய போர்வீரன்னு சொன்னாங்க, இப்படி 43 பேரை அடிக்க இவ்ளோ யோசிக்கிற..?”

“Sorry நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா..?!”

“இந்த சண்டையில் உயிரோடு இருந்தா வா, பேசலாம்”, என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள் டயானா.

“யார் Cap உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா..?”

“எனக்கு தெரிஞ்ச பொண்ணில்ல ஆனா என்ன பத்தி தெரிஞ்ச பொண்ணு”

“கொஞ்சம் திமிரு புடிச்சவ போல”

“வந்த வேலையை கவனி Sam”

“அதான பொண்ணுங்கள பத்தி பேசினா உடனே off பண்ணிடுவீங்களே, Alright Cap நான் என் Position-க்கு போறேன்”.

தூரத்தில் தன்னை அவள் கவனிப்பதை பார்த்த வண்ணம் Building-ன் உள் நுழைந்தார் கேப்டன் அமெரிக்கா.
_______________________

“நீங்க அவனுக்கு இவ்ளோ மரியாதை கொடுக்கிறது சரியில்ல Red king”

“அவன் ஒரு சிறந்த Gladiator, Caiera”

“அதுக்காக உங்கள தாக்க வந்தவன சும்மா விட சொல்றீங்களா..?”

“Caiera…காரியம் ஆகணும்னா சில சமயம் கம்முன்னு தான் இருக்கனும். அவன்கிட்ட ஒரு Rage இருக்கு”

“இன்னுமா அந்த Lanterns-அ நம்பிக்கிட்டு இருக்கீங்க..!!”

“நாளைக்கு இவனுக்கு Wildebots கூட ஒரு பெரிய Fight ஏற்பாடு பண்ணு”

“Wildebots-ஆ..!! அதெல்லாம் வெறும் தகர டப்பா, பார்த்தீங்கள்ள அவன் நம்ம Devil corker-அயே கொன்னுட்டான்”

“யானையோட பலம் யானை கூட தான் வேலை செய்யும் எறும்புங்க கூட இல்லை”

“புரிஞ்சது Master”, நமட்டு சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தாள் Caiera.

மறுநாள் Colloseum-ல்,

“Ladies and Gentlemen இன்னைக்கு உங்களுக்கு ஒரு Special Treat !! உங்க Favourite Hulk நம்ம Security Gaurds ஆன Wildebots கூட மோத போறாரு !!” என்றவுடன் கரவொலி விண்ணை தொட்டது.

Hulk-ம் மற்ற Gladiators-ம் மைதானத்தை வந்தடைந்தனர்.

நடக்கப்போகும் கூத்தை வேடிக்கை பார்க்க நக்கலாக நின்று கொண்டிருந்தாள் Caiera.

இன்று ஏனோ Hulk-கிற்கு மனசு சரியில்லை ஏன் இவள் நம் கண்ணிற்கு மட்டும் Natasha போலவே தெரிகிறாள் என்ற சிந்தனையில் கிடந்தான்.

போட்டி ஆரம்பமானது Caiera நினைத்தது போலவே Wildebots-ஐ சமாளிக்க திணறினான் Hulk. மனிதனை விட சிறிய உருவம் ஆனால் இரண்டு மடங்கு பலம் கொண்ட Wildebots கூட்டமாக வந்து மொய்க்கவும் செய்வதறியாது திணறி போனான்.

புற்றீசல் போல Hulk-ன் மேல் ஏறிய Wildebots அவனை இயந்திர வெள்ளத்தில் மூழ்கடித்தன.

கடைசியாக அவன் கண்கள் பார்த்தது தூரத்தில் தன்னை பார்த்து சிரிக்கும் Natasha.
___________________

“பரவாயில்லையே நா நெனச்சத விட சீக்கிரமாவே முடிச்சுட்ட !!”

“அதான் எங்க Teamwork”

“உன்ன Captain-னு சொல்றதுல தப்பே இல்ல”

“நீங்க யார்னு சொல்றீங்களா..?”, என்றார் Captain

அதற்கு Sam, “Diana prince, 1918-ல Great Britain-க்காக Belgium-ல commander Steve trevor கூட வேல பாத்துருக்காங்க, இப்போ இருக்குறது Bruce Wayne Corporation-ல, Hi நான் Sam Wilson..!!”

“Hi sam, உன்ன எப்படி கூப்பிடுவாங்க Cap…Captain…”

“Steve rogers”

“Steve…Nice name…கொஞ்சம் பேசலாமா..?”

Diana இதுவரை நடந்த அத்தனையும் Captain-இடம் கூறினாள்.

“எனக்கு இது புரியல ஒரு Worthy ஆன Weapon அத ஒரு Worthy person தான் எடுக்க முடியும்னா How can someone take it like a piece of Cheese..??”

“Maybe அவனும் Worthy ஆ இருக்கலாம்”

“அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க”

“என் கவலையே அது தான் அப்படி Worthy ஆன ஒருத்தன எதுக்காக அரசி தடுக்கனும்..? ஏன் அவன் அரசிய தாக்கிட்டு அத எடுத்துட்டு போகனும்..?”

“இதுக்கு விடை உங்க அரசி கிட்ட மட்டும்தான் கிடைக்கும்”

“எனக்கு உன் உதவி தேவை Steve, இப்போ நா themyscira-விற்கு போறேன்…அதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம், Be active..!”

“நானும் ஒரு இடத்துக்கு போகணும்..!!”

“எங்க..?”

“Wakanda…!!!”
______________________

Wildebots மொத்தமா தன்னை ஆட்கொண்டதில் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழப்பதுபோல் உணர்ந்தான் Hulk.

இனியும் பொறுக்க முடியாது என்று முடிவெடுத்து தனக்குத் தெரிந்த ஒரே ஆயுதத்தை கையில் எடுத்தான்.

துவம்சம் செய்வது..!!!

முன்னர் Ultron bots-உடன் சண்டையிட்டது கொஞ்சம் கை கொடுத்தது. கையில் கிடைத்த அத்தனையும் நொறுக்கி தூக்கி எறிந்தான், சண்டை வெகுநேரம் தான் நடந்தது.

எஞ்சியிருந்த கடைசி Wildebot-ஐ இரண்டாக பிய்த்து எறிகையில் colloseum-ஏ கப்சிப் என்றானது.

Colloseum முழுவதும் இயந்திர குப்பைகள்,
அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தனர் சஃகார்வாசிகள். அந்த மக்கள் இப்படி ஒருவனை இதற்கு முன் பார்த்ததே இல்லை, அனைவரின் முகத்திலும் பயம் தொற்றிக்கொண்டது, caiera-வே சற்று நடுங்கி தான் போனாள்.

தன் கிரகத்தின் முக்கால்வாசி காவலர்களை ஒருவன் தனியாளாக கொன்றொழித்த பின்னும் அவனைப்பார்த்து விகாரமாக சிரித்துக்கொண்டிருந்தான் Red king.

அன்றைய நாளின் முன்னிரவில் Hulk-ஐ பார்க்க அவன் அறைக்குள் நுழைந்தாள் Caiera.

அவளை அறியாமலேயே தானாக உடல் நடுங்கிக்கொண்டிருந்தது,

உள்ளே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் Hulk-ஐ காணவில்லை..!!

‘எங்கே சென்றான் அந்த தடியன்’ என்று எண்ணியபடியே கொஞ்சம் முன்னேறினாள், கட்டிலுக்கு அருகில் கீழே ஏதோ அசைவது போல் தெரிந்தது,
அருகே சென்று பார்த்தாள்.

“கிட்ட வராத..!!!”

தீடீரென்று வந்த குரலை கேட்டு சற்று அதிர்ந்த caiera பின் தைரியத்தை வரவழைத்து கொண்டு,

“யார் நீ..?!!”, என்றாள்

“நான் Bruce… Bruce banner…”

Wonderwoman vs hulk – part 2

முன்கதை சுருக்கம் :
Themyscira-விற்கு ஆபத்து என்று உணர்ந்த டயானா அங்கு சென்ற பொழுது Sunblade (Sword of Apollo) காணாமல் போனதை அறிந்தாள். Ultron உடன் போர் முடிந்த சமயம் அனைவரையும் விட்டு பிரிந்து சென்ற Hulk சஃகாரில் தரையிறங்கினான்.

இனி…

“Master”

Red king : Caiera the oldstrong, வரவர உன் சக்தியோடு சேர்ந்து உன் அழகும் கூடுதுன்னு நினைக்கிறேன் !!

Caiera : இன்னைக்கு ஒருத்தன கண்டுபிடிச்சோம் அவன் பச்சை கலரில் இருந்தான் !

Red king : மோதிரம் ஏதாச்சும் கிடைச்சுதா ?!!

Caiera : இதுவர இல்லை.

Red king : எதுல வந்தான் ?

Caiera : ஒரு Ship-ல

Red king : அதுல தேடி பாத்தீங்களா ?

Caeira : நான் பார்த்த வரைக்கும் அதுல எதுவும் இல்ல, But Hologram-ல ஒருத்தன் மட்டும் லூசு மாதிரி பேசிட்டு இருந்தான்.

Red king : இவனை Observation-ல வைங்க, நாளைக்கு நடக்க போற சண்டையில் பார்த்துக்கலாம்.

அன்றைய நாளின் முன்னிரவில்…

Caiera : நீ Lantern கூட்டத்தை சேர்ந்தவனா ?!

Hulk : Lantern-ஆ நான் யாரையும் சார்ந்தவன் இல்லை, நா Hulk.

Caiera : Ship ல இருந்து இறங்கினதும் எதுக்காக என்னை பார்த்து அதிர்ச்சியான ??

Hulk : அது வந்து நீ பார்க்க நடாஷா மாதிரி…

Caiera : சரி அத விடு நாளைக்கு Colloseum-ல பெரிய சண்டை இருக்கு மறக்காம தயாராகிடு அத சொல்ல தான் வந்தேன்.

என்று கூறிக்கொண்டே வெளியேறினாள் Caiera.
_____________________

Themyscira-வில் இருந்து லண்டன் வந்த டயானா அங்கு Etta candy வீட்டிற்கு சென்றாள்.

“வாங்க டயானா”

Diana : சாரி நீங்க யாரு ??

“நான் Etta candy உடைய பொண்ணு Jenifer candy, அம்மா பத்து வருஷத்துக்கு முன்னாடியே தவறிட்டாங்க…”

Diana : மன்னிச்சிடுங்க நான் சில தகவல்கள் கேட்க வந்தேன் !

Jenifer : Actual-ஆ அம்மா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க Steve trevor ஓட நீங்க செய்த சாகசங்களை பத்தி, அம்மா A.R.G.U.S-ல இருந்ததால உங்களை பத்தின பழங்கால தகவல்களை சுலபமா சேகரிக்க முடிஞ்சது அது இப்ப என்கிட்ட தான் இருக்கு, So அம்மா எடத்துல என்னால உங்களுக்கு உதவ முடியும்னு நினைக்கிறேன்.

டயானா Themyscira-வின் நிலை பற்றியும் Sunblade பற்றியும் Jenifer இடம் கூறினாள்.

Jenifer : இதுவர அம்மா சேகரிச்சதுல நீங்க சொன்ன வார்த்தையே இல்லையே

Diana : கண்டிப்பா இருக்காது ஏன்னா அது மனிதர்களிடத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கு. History of Ancient Gods எதுலயாவது தேடி பாருங்க வாய்ப்பு இருக்கு.

Jenifer : நீங்க சொன்ன மாதிரி Ancient Books ல தேடி பார்த்தேன் அதுல 12 godsக்கு 12 Weapons இருந்ததாகவும் அந்த Weapons ஒவ்வொன்றும் அந்த God ஓட power-அ resemble பண்ணும்னு சொல்லப்பட்டிருக்கு

Diana : Apollo உடைய வாள் னு எதுவும் இருக்கா ?

Jenifer : ம்ம் இருக்கு

Diana : ஆனா Apollo-வே இல்லையே ஒரு வேளை அரியாசனதுக்கு ஆசைப்படுற யாராவது திருடி இருக்கலாம்

Jenifer : Ares-ஆ..?

Diana : அவன் இப்போதைக்கு வர மாட்டான்

Jenifer : Zeus..?

Diana : அவரும் இப்ப இல்ல

Jenifer : உங்களுக்கு நிறைய சகோதர சகோதரிகள் இருக்கிறதா கேள்விப்பட்டேன் அவங்கள்ல ஒருத்தரா இருக்குமோ..?

சட்டென்று டயானா க்கு பொறி தட்டியது,

Diana : சமீபத்தில் சந்தேகத்திற்கு இடம் தர்ற மாதிரி எதுவும் சம்பவம் நடந்துச்சா ?!

Jenifer : நா Retire ஆகிட்டேன் டயானா, So recent news-னா நீ A.R.G.U.S-அ தான் contact பண்ணனும்.

தகவலுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து A.R.G.U.S புறப்பட்டாள் டயானா.
_________________________

மறுநாள் காலை
Colloseum பார்வையாளர்களால் அதிர்ந்துகொண்டிருந்தது.

Red king : Hellooo Everyone…!!! இன்னைக்கு சஃகார்வாசிகளை சந்தோஷப்படுத்த புதுசா நிறைய பேர் வந்துருக்காங்க அவங்கள Welcome பண்ணுங்க.

மறுபடி கரகோஷம் கூடியது,

கரவொலியின் போது மைதானத்தின் நடுவில் அனைத்து Gladiatorகளும் இறக்கி விடப்பட்டனர் வேண்டா வெறுப்பா Hulk-ம் நின்றுகொண்டிருந்தான்.

“எப்பா எப்டிப்பா இவ்ளோ பெருசா வளர்ந்த எனக்கும் சொல்லிக் கொடேன்” என்று தனக்கே உரிய பாணியில் தன்னை அறிமுகம் செய்தான் Korg.

“என் பேரு Korg-uh அந்த பூரான் பேரு miek-uh எங்க டீம்ல join பண்ணிக்கிறியா எல்லாரையும் பொலி போடலாம்”

Hulk : Hulk யார் கூடயும் சேர மாட்டான் என்ற படி பூட்டிய கதவை நோக்கி நகர்ந்தான்

“Mr. மாமிச மலை என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க” என்றபடி Miek-கும் பின்னாடியே சென்றான்

போட்டி ஆரம்பமானது,

Korg-ன் தோற்றத்தில் இருக்கும் மூன்று Kronan-கள் களமிறக்கப்பட்டனர்
தன்னை போன்றவர்களை பார்த்த மகிழ்ச்சியில்,

“கண்ணுங்களா என் பேரு korgu நாலு பேரும் Tag team போடலாமா” என்று ஆர்வமாக முன்னால் சென்றான்.

அவனை அலேக்காக தூக்கி மல்லாக்க படுக்க போட்டனர் மூவரும், திரும்பி Korg எந்திரிக்கவே இல்லை.

மேலே இருந்து Red king Hulk-ஐ பார்த்துக்கொண்டே இருந்தான், இதை கவனித்த Hulk Meik இடம்,
“யார் இந்த தீக்குச்சி மண்டையன்” என்று கேட்டான்.

Miek : பாக்க தான் ஆளு தீக்குச்சி மாதிரி இருப்பான் ஆனா பெரிய சைத்தான் கீ பச்சே, பேரு Angmo asan-II நாங்க Red king-னு கூப்பிடுவோம்.

சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்தது Kronan-கள் க்ரோதத்தில் ரெண்டு பேரை கொன்றே விட்டனர், வாங்கிய அடியிலிருந்து கொஞ்சம் மீண்ட Korg சமாளித்து எழுந்து நின்றான்.

Hulk மீண்டும் தன் கேள்விகளை தொடர்ந்தான்

Hulk : ஏண்டா இப்படி சூம்பிப் போய் இருக்கான் இவனா அரசன் ?!!

Miek : அவன சாதாரணமா நெனைக்காத அதோ பக்கத்துல படுக்க போட்டு வச்சிருக்கான் பாரு ஒரு Armor அதுதான் அவனோட பலம், கூடவே ரெண்டு கத்தி வச்சிருக்கான் ஒன்னுல கரண்ட் வரும் இன்னொனுல நெருப்பு வரும் அத போட்டுக்கிட்டா அவனை யாராலயும் ஜெயிக்க முடியாது.

அதையும் பார்த்துவிடலாம் என்றபடி Kronan-களை நோக்கிப் பாய்ந்தான் Hulk, வந்த வேகத்தில் இரு Kronan-களின் கழுத்தை பிடித்து நெறித்தான் இரண்டும் தூள் தூளாகி விழுந்தன,

மீதியிருந்த ஒருவனை Korg பாய்ந்து சென்று தாக்க மற்றவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த Kronan-ஐ தூள் பக்கோடா ஆக்கினர்.

உடனடியாக Red king மேலிருந்து Devil corker-ஐ ரிலீஸ் செய்ய உத்தரவிட்டான்,
மக்களின் ஆரவாரத்தோடு பூமியைப் பிளந்து எரிமலை குழம்பிலிருந்து Devil corker என்ற மிருகம் மேலே வந்தது.

அது பார்க்க பெரிய சைஸ் ஆக்டோபஸ் போலவும், அதன் தலை Hulk-ஐ விட பெரியதாகவும் இருந்ததால் அனைவரும் சற்று மிரண்டு போனார்கள். வெளியே வந்த மிருகம் தன் கைகளை கொண்டு அனைத்து Gladiator-களையும் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கியது.

ஆனால் எதற்கும் அசராமல் பாய்ந்து வந்த Hulk அதன் தலையில் ஒரு குத்து விட்டான் அவ்வளவுதான் மொத்த கூட்டமும்
‘Hulk’
‘Hulk’ என்று கத்த ஆரம்பித்தனர், Devil corker சுருண்டு எரிமலை குழம்பிற்குள்ளே செத்து விழுந்தது.

Hulk அதே ஆத்திரத்தோடு Red king-ன் சிம்மாசனத்தை நோக்கி மேலே பாய்ந்தான், ஆனால் மேலே இருந்த Caiera அவனை தன் Sword-ஐ வைத்து தடுத்து கீழே தள்ளிவிட்டாள், அதற்குள் Armor-ஐ மாட்டிக்கொண்ட Red king கீழே பறந்து வந்து தன் Electrical Sword-ஐ வைத்து Hulk-க்கு shock கொடுத்து மயங்கச் செய்தான் தூரத்திலிருந்து Caiera தன்னை முறைப்பதை பார்த்தவண்ணம் மயங்கி விழுந்தான் Hulk.
______________________________

A.R.G.U.S ல்

Agent X : Welcome டயானா நீங்க வர்றதா Jenifer சொன்னாங்க

Diana : சமீபத்தில் Earthல நடந்த வித்தியாசமான சம்பவங்களை பற்றி கேட்க வந்தேன்

Agent X : சமீபத்திலனா தேரை இழுத்து தெருவுல விட்ட கதையா மறுபடி ultron வந்ததை சொல்லலாம்.

Diana : அது அந்த குறுந்தாடிகாரனோட சேட்ட, நான் கேட்கிறது Any new species invasion or activities தெரிஞ்சுதா ?

Agent X : அப்படி எதுவும் நடக்கல But நாங்க ஒரு Ancient Mummy-அ‌ Recent-ஆ கண்டுபிடிச்சோம், அதுல வித்தியாசமா பச்சை குத்தி இருந்தது. எங்களுக்கு அதை படிக்க தெரியல நான் வேணும்னா Permission தரேன் நீங்க Try பண்ணுங்க

டயானா எழுத்துக்களை படித்தாள். அதில் அவ்வளவாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை அவளால் படிக்க முடிந்ததோ,

“There is a child who is worthy to rule the world. but a Worthy for a Worthy, He is designed to destroy the last residue of intellect and humanity left in the world” என்பதுதான்.

Diana : அப்ப இவனைக் கண்டு பிடிக்கணும்னா எனக்கு இன்னொரு Worthy person-ஓட துணை தேவை,But அப்படி ஒருத்தன எனக்கு தெரியாதே…

Agent X : எனக்கு தெரியும் !

Diana : யாரு ?!

Agent X : Steve…

Diana : ……

SUPERMAN : GOD AMONG US – PART -2

Part 1 – கதை சுருக்கம்
சூப்பர்மேன் Rogue ஆகிவிட்டார் என்று உலக நாடுகள் அவரை கட்டுபடுத்த UN விவாதிக்குறார்கள். மறுபுறம் சூப்பர்மேன் கண்ணில் படும் கெட்டவர்களை கொலை செய்வதறக்கு நெருங்கும் தருவாயில் இருக்கார். இதற்கும் காரணம் Lex ம் Chinese ம் தான்.Lex இந்த முறை சீனாவை Superman எதிராக கொம்பு சீவி விடுகிறான்”

(Secret Bunker – Communist Party office of CHINA)

“Huanying” Party Officals

எதுக்காக எங்கள வர சொன்ன Lex உன்ன மாறி war criminal அ சந்திக்கிறது RISKY ஆன விஷயம்.

“கண்டிப்பா” Lex சிரிச்சுட்டே சொல்றான் “அதனாலதான் என்னால இந்த நேரத்த வீணடிக்க முடியாது”.

MONITORS ஓபன் ஆகுது. அதுல Superman as a weapon of US னு அது பத்தின classfied Documentary ஓடுது.

” எங்களுக்கு கிடைச்ச தகவல் படி அப்படி எதுவும் இல்லையே”
இத நாங்க எப்படி நம்புறது.

என்ன நம்ப வேண்டாம் உங்க CNSA கூப்பிட்டு இந்த Bunker ஓட COORDINATES மேல SUPERMAN நிக்குறானா இல்லையானு பாக்க சொல்லுங்க

Party Officials General கூப்பிட்டு சொல்ல, General CNSA கூப்பிட்டு order போட. சில நிமிடங்களில்

சார் அவர் சொல்றது உண்மைதான். சூப்பர்மேன் மேல Space ல தான் இருக்கான்.

(Tiangong footage பாருங்க)

Lex சிரிச்சுட்டே “Your GOD works for American because your god was raised in US and feeded with US patriotism”.

நீ War criminal ஆனது எதுக்குனு எங்களுக்கு நல்லா தெரியும் Lex உன்ன இங்க ஏன் உக்கார வெச்சு பேசிட்டு இருக்கோம் நினைக்க வெச்சுராத.

(After few minutes)
Officers பதட்டத்தோட ஓடி வந்து

Sir we got visual confirmation Superman was there. நம்ம Chengudu ஓட Suppliment Factories அழிஞ்சுடுச்சு. Initial investigation ல something like a Thermal beam from sky than அதுக்கு காரணம்னு சொல்றாங்க.
இப்ப என்ன பன்றது.

Officials எல்லாரும் பதட்டத்தோட அந்த CCTV Surveillance Footage அ பாக்குறாங்க.

பாத்துட்டே கொஞ்ச குழப்பதோடையே Lex அ பாக்குறாங்க.

(Lex evil smirk)

ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க பூமியை மட்டும் தான் மனுஷங்க உரிமை கொண்டாட முடியும் Space அ முடியாது. ஆனா Superman Space ல இருந்தா அமெரிக்கா னால முடியும்.

“So…..” Party Officials குழப்பமா கேக்குறாங்க

Initiate Operation Chengdu

Superman will rest in peace forever

அவங்க இதுக்கு ஒத்துகிட்டாங்கனு அவங்க மூஞ்சிய பாத்த உடனே Lex க்கு தெரியுது.

“ஒரு வாரம் கழிச்சு உன்ன மறுபடியும் Meet பன்றோம்” னு Officials கிளம்புறாங்க.

(After a week)

“For the New President of People Republic of China, Zhinzhoung” னு vodka filled Glass அ தூக்கி காட்டுறான் Lex

எல்லாரும் Glass அ தூக்கி காட்டுறாங்க

அத குடித்துவிட்டு Lex ” உண்மையை சொல்லனும்னா உங்க Vodka ரொம்ப Strong Comparing Russians”

“LEX” Chengdu க்கான எல்லா Clearance ம் கொடுத்தாச்சுனு சொல்றார் President.

Superman இதுல வந்து மாட்டுவானா

“OF COURSE ” He will

Superman க்கு ரெண்டு Choice கொடுங்க

ஒரே நேரத்துல ஒன்னு Germany ல Hitler அ கொல்லனும் இல்ல London ல ஒரு பாட்டியை காப்பாத்தனும்னா அவன் பாட்டியை தான் காபாத்துவான்.

இன்னும் 10 நாள்ல நீங்க நினைச்சது நடக்கும்.

நீங்க எனக்கு செஞ்ச Help க்கு பிரதிபலனா

“Mickey” அத கொண்டுவா னு சொல்றான் Lex

Mickey ஒரு Briefcase அ கொண்டுவரா..

இந்தாங்க Lexcorp சார்பா ஒரு சின்ன அனபளிப்பு இது.

Officials அத துறந்து பாக்குறாங்க

“Mollyvirus – 1000 genome stranded”

Global Warming னால சைபீரியா உருகும்போது என் Team இத கண்டுபிடிச்சாங்க. HIV the strongest ever வெறும் 9 Genome தான் ஆனா இது 1000 Genome.

நேரம் வரும்போது இத எப்படி உபயோகிக்கனும்னு உங்களுக்கு தெரியும்.

Presidents and Party members சிரிச்சுட்டே ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துகிறாங்க.

Pleasure to have Deal with you Lex

மறுபடியும் Glass Refill பண்ணிட்டு “FOR SUPERMAN” னு lex Solraan.

The watcher – part 2

நான்தான் George of Steel The watcher இந்த பிரபஞ்சங்களில் நடக்கும் நிகழ்வுகளை observe செய்வதே என் வேலை இந்த CCU பத்தியும் இதில் நடக்கும் நிகழ்வுகளை பத்தியும் போன பதிவில் சொல்லி இருந்தேன். அதன் இறுதியில் நான் ஒரு பயங்கரமான சக்தி மற்றொரு universeயிலிருந்து CCUகுள் நுழைய முயல்வதைக் கண்டேன் அவன் என்னிடமிருந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அவனது சக்திகள் என்னை பாதித்தது.
அவன் யாரென்று பார்க்க எனது எண்ணங்களை அவனுக்கு அருகில் நான் அனுப்பிய போதுதான் எனக்கு அது dr doom எனத் தெரிந்தது.

ஆனால் இவன் CCUவின் Dr Doom கிடையாது உண்மையை சொல்லப் போனால் பல லட்சம் Dr Dooms சேர்ந்தாலும் இந்த dr doomவுக்கு ஈடாக முடியாது. இந்த dr doomயின் வெள்ளை உடை இவனை வழக்கமான
dr doomயிடமிருந்து எனக்கு வேறுபடுத்திக்காட்டியது. அவன் CCUவின் Source Wallஐ உடைத்து இந்த universeயினுள் வர முயற்சி செய்துகொண்டு இருந்தான் அவன் source wallஐ ஒவ்வொரு முறை குத்தும் போதும் இந்த பிரபஞ்சமே அதிர்ந்தது
எனக்கு இவன் எப்படி இவ்வளவு powerful ஆக உள்ளான் எனத் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமானது.

ஆனால் கொஞ்ச நேரத்தில் source wallஐ உடைப்பதை நிறுத்திக்கொண்டான் doom. அவனிடத்தில் ஒரு பயத்தை நான் கண்டேன். அவனது உடம்பு நடுங்கத் தொடங்கியது. அவனது கண்கள் Futureஐ பார்த்துக்கொண்டு இருந்தது. அந்த கண்களில் ஒரு பெரும் பேரழிவை என்னால் காண முடிந்தது. ஆனால் அவன் பயந்தது அந்த அழிவுக்கு அல்ல அந்த பேரழிவுக்கு நடுவில் தென்பட்ட நம்பிக்கையின் அடையாளத்திற்கு. அதுதான் supermanவுடைய Symbol of Hope. ஆனால் கொஞ்ச நேரத்தில் doomயின் முகத்தில் புன்னகையைக் கண்டேன். அவனது நடுக்கமும் நின்றுவிட்டது.

Doom தனக்குத்தானே ” நீ எனக்காக வருவாய். நான் உனக்காக காத்திருக்கிறேன் Hope” னு சொல்லிட்டு அங்க இருந்து கெளம்புறான். எதுக்கு supermanகு doom முதலில் பயப்பட்டான் ஒரு வகையில் சொல்லப் போனால் இந்த doom supermanஐ காட்டிலும் பல மடங்கு சக்திவாய்ந்தவனாக உள்ளான் அப்புறம்‌ ஏன் என யோசித்து கொண்டிருந்த போது என்னுடன் யாரோ தொடர்பு கொள்ள முயற்சி செய்வது எனக்குத் தெரிந்தது. அது dr strange.

Dr Strange என்னிடம் இந்த பிரபஞ்சத்தில் ஏற்பட்ட அதிர்வு பற்றி கேட்டார் நான் எதையெல்லாம் பார்த்தேனோ அதையெல்லாம் அவரிடம் கூறினேன். அதே சமயம் எனக்கும் dr strangeயிடம் கேக்க ஒரு சந்தேகம் இருந்தது

நான் அவரிடம்

” பிரபஞ்சங்களில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்த எதாவது ஒன்றை உங்களுக்கு தெரியுமா ” எனக் கேட்டேன்

அதற்கு அவர் ” அது அனைத்தும் உங்களுக்கே தெரிந்து இருக்கும் watcher ஆனால் நீங்கள் புது watcher என எனக்குத் தெரியும் உங்களை மாதிரியே இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்த பொருள் ஒன்று உள்ளது அது mobius Chair ” எனக் கூறினார்.

அவர் அதன் பெயரை சொன்ன அடுத்த நொடியில் நான் mobius Chair முன் நின்றேன் ஆனால் அதில் Metron என்னும் new god அமர்ந்து இருந்தான். No problem அடுத்த 5 நொடிகளில் அவனை mobius chairயிலிருந்து இறக்கி தரையில் உக்கார வைத்துவிட்டேன். இப்போது நான் mobius chairயில் அமர்ந்தேன் என்னால் அதிலுள்ள anti Monitorயின் கடவுள் சக்தியை உணர முடிந்தது. நான் எனது முதல் கேள்வியை அதனிடம் கேட்டேன்.

” CCUகு வெளியே நான் பார்த்தது Dr Doomதானா? இல்ல வேற எதாவது அழிக்கும் சக்தியா? ” அதற்கு எனக்கு கிடைத்த பதில்

நீ பாத்தது doomதான் ஆனா dr doom இல்ல அது God Emperor Doom😳……………………………….

THOR VS AQUAMAN பகுதி – 2

முதல் பாகம் படிக்காதவர்கள் அதற்கான பதிவை கேட்டு பெற்றுக்கொள்ளவும்
முதல் பகுதியின் முடிவு சில கேள்விகளோட
முடிந்திருக்கும் , Mera என்ன செய்ய போகிறாள் ?
Loki யின் அடுத்த திட்டம் என்ன?
Thor இன் அடுத்த முடிவு என்னவாக இருக்கும்?
இந்த கேள்விகளுக்கான பதிலை பகுதி 2 இல் பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன் சரி இப்போது பகுதி இரண்டை பார்க்கலாம்

Thor Asgard-டை விட்டு போனது Loki-கு தெரியவந்ததும் loki முகத்தில் ஒரு “புன்னகை”

Loki : “இது தான் சரியான சமயம்”

Thor Asgard – இல் இருக்கும் வரை நான் சிறையை விட்டு வெளியேவர முடியாது என்று loki கு தெரியும் இப்பொது thor இல்லாத காரணத்தால் loki சிறையில் இருந்து தப்பியுள்ளார் .அங்கு தன்னை போலவே ஒரு போலி உருவத்தை விட்டு செல்கிறார்

பூமியில் jane னை பார்த்ததும் கவலை அடைந்த தோர் ஒரு Bar ரில் உக்காந்து புலம்பிக்கொண்டுருக்கிறார்…

Stanlee : என்ன தம்பி..ரொம்ப சோகமா இருக்க ஏதாவது பிரச்சனையா..

Thor : இல்ல அதலாம் ஒன்னும் இல்ல

Stanlee : என்ன தம்பி எந்த பிரச்சனையும் இல்லாமலா..அரை drum Beer-அ 5 நிமிசத்துல குடிச்சிட்ட

Thor : நான் ரொம்ப குழப்பமா இருக்கேன்…

Stanlee : எதுவா இருந்தாலும்..தயங்காமல்..சொல்லு..என்னால முடிந்ததை பண்ணுறேன்..

Thor தன்னை பற்றியும் jane னை அவரது காதல் பற்றியும் பிறகு அவர் மனதில் உள்ள குழப்பத்தை பற்றியும் கூறுகின்றார்..
Thor : நான் ரொம்ப நாள் கழிச்சு..இப்போ அவள திரும்ப பாக்க வந்தேன்…ஆனா அவ வேற ஒருத்தன் கூட உக்காந்து சிரிச்சு பேசிட்டு இருந்தா

Stanlee : அவ Boy bestie ஆ இருக்கும்

Thor : வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதீங்க

Stanlee : இவ்ளோதான் உன் பிரச்சனையா

Thor : என்ன இத இவ்ளோ சாதாரணமா சொல்லுரிங்க….

Stanlee :இங்க பாரு தாடிக்காரா முடி இருக்குற அளவுக்கு மூளையும் இருக்கணும்.
இது எல்லாருக்கும் ஏற்படுற ஒன்னு தான்..தன் காதலியை..இன்னொரு பையன்..கூட பார்த்த..ஒன்னு கோவம் வரும் இல்ல குழப்பம் வரும்..உனக்கு குழப்பம் வந்துருக்கு..அவ்ளோதான்…
இன்னும் உனக்கு புரியுற மாரி சொன்ன…
Possesiveness-ங்குறது மொட்ட மாதிரி அப்ப அப்ப போடலாம் பிரச்சனை இல்ல ஆனா சந்தேகங்குறது சொட்ட மாதிரி ஒரு தடவை வந்தா போகவும் செய்யாது பெருசாகிட்டேவும் போகும்,

Thor : சரியா தான் சொல்லுரிங்க நீங்கலும் நிறைய Love பண்ணீங்க போல பாதி மண்டய காணோம்…

Stanlee : ஏன் சொல்லமாட்ட..உனக்கு முடி நிறைய இருக்குல்ல..என்னைக்காவது ஒரு நாள்..இத இழுத்து வச்சு ஒருத்தன்..வேட்டதான் போறன்…
சரி அதைவிடு எதுவா இருந்தாலும்..அந்த பொண்ண பார்த்து..பேசிடு..குழப்பதுல..இருக்குற..உன் மனச
தெளிவு படுத்திக்கோ… கண்டிப்பா அவ உன்னவிட்டு போக மாட்டா நம்பிக்கையோட இரு

Thor : பரவால்ல நீங்க சொல்லுறதா கேக்குறதுக்கும்..நல்ல ..தான் இருக்கு..அப்புறம்
உங்க.. Advice க்கு ..ரொம்ப..நன்றி அரை drum Beer க்கும் தான்…

Stanlee : excelsior..(சிரிப்புடன்)

Stanlee யுடன் பேசிய பிறகு தோர் சிறு குழப்பத்துடனே Avengers Headquarters செல்கின்றார். அங்கு Tony Stark மட்டுமே இருந்தான் மற்ற அனைவரும் வேறு வேலையில் இருந்ததால் அங்கு யாரும் இல்லை.

Thor :என்னமோ பலமா யோசிச்சுட்டு இருக்க, போன முறை வந்தப்ப பெப்பர் கிட்ட எப்படியாவது love அ சொல்லணும் ன்னு ஐடியா கேட்ட எந்த முறை என்ன யோசிக்கிற”

Tony : இந்த முறை ஆகார்ட் ஐ எப்படி ஆட்சி பண்ணலாம் ன்னு யோசிச்சுட்டு இருக்கேன். அதுக்கு முன்னாடி அந்த சுத்தியல தூக்கனும் ல அதன் எப்படி ன்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன்

Thor : “உன்னோட இந்த வேடிக்கையான பேச்சை ரொம்ப miss பன்றேன் டோனி”

Tony : “அப்படியா, பாத்த அப்படி தெரியலையே, நல்லா தின்னு கொழுத்து தான போயிருக்க.”

Thor : “அது பீர் குடிச்சனால அப்படி தெரியுது. அப்புறம் எப்படி இருக்க டோனி, ரொம்ப நாள் ஆச்சு உன்ன பாத்து. ஏன் avengers building ல யாரும் இல்லை.”

Tony : உன்னை பாத்ததுல ரொம்ப சந்தோசம் தோர், avengers க்கு இன்னைக்கு ஒரு நாள் leave விட்டுட்டேன். தோர் மறுபடியும் Ultron Project உருவாகிடுச்சு.”

Thor : தோர் கோபத்துடன் ” முதல் முறை வந்தப்பவே அதை சமாளிக்க ரொம்ப கஷ்ட பட்டோம். அதை தான் உருவாக்க கூடாதுன்னு உங்க security council முடிவு பண்ணங்களே. யாரு உருவாக்கியது tony”.

Tony : தோர் I am sorry, நான் தான் உருவாக்குனேன்

தோர் இன்னும் கோவம் கொண்டு டோனியின் கழுத்தை பிடித்து “ஏன் இப்படி பண்ண, இந்த உலகம் அமைதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா. ஏன் இப்படி பண்ண…”

Tony : தோர் relax, ‘கொஞ்சம் மூச்சு வாங்கி கொண்டு’, இந்த உலகத்துல ஏலியன்கள் அதிகம் வர ஆரம்பிச்சுட்டாங்க, எல்லாரையும் நாம மானிட்டர் பண்ணி அழிக்க முடியாது, சில நல்ல ஏலியன் உம் இருக்காங்க உன்னை மாதிரி. நா கெட்ட ஏலியன் கிட்ட இருந்து காப்பாத்த தான் இப்படி பண்ணேன். அதை என்னால அழிக்க முடியும் நீ கவலை படாதே”

Thor : இங்க பாரு டோனி நீ என்ன சொன்னாலும் என் மனசு ஏத்துக்காது, நீ இதை சரி பண்ணியே ஆகணும், இல்லைனா நா உன்ன சும்மா விடமாட்டேன்

Tony : இதை உருவாக்குனது நான், இதை எப்படி அழிக்கணும் ன்னு எனக்கு தெரியுதும், நா உன்ன வரும் போதே பார்த்தேன். உன் மனசுல ஏதோ ஒரு சங்கடம் இருக்கு மறைக்காம சொல்லு தோர்

தோர் இங்கு வந்து நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான். பின் என்ன செய்வது என்று தெரியாமல் இங்கு வந்ததாக கூறினான்.

“இங்க பாரு தோர் நீ அவளை பல வருஷம் கழிச்சு பாக்குற, நீ அவளை சந்தேக படுறது தப்பு, ஒரு வேளை அது அவ friend ஆ கூட இருக்கலாம். அவ உன்கிட்ட வந்து love பன்றேன் ன்னு சொன்னலா, இல்லை ல, so you once see her”

Thor : பரவலை உன் ஐடியா வும் நல்லா இருக்கு
இதே தான் அந்த பெரியவரும் சொன்னாரு…
நான் போய் பாக்கிறேன். வந்துள்ள இருந்து கேட்கணும் ன்னு இருந்தேன், steve எங்க”

Tony : Hey தோர் எனக்கும், கேப்டன் க்கும் ஒரு சின்ன tough ஆகிடுச்சு, அதனால avengers விட்டே அவர் போயிட்டார். இப்ப எங்க இருக்கார் ன்னு தெரியல. அது பழைய கதை. உனக்கு அப்புறமா சொல்லறேன்.

Thor : உன்கூட யாரும் கடைசிவரைக்கும் இருக்க மாட்டாங்க போல, atleast பெப்பர் கூடையாவது ஒன்னா இரு. நா இங்க இருந்து கிளம்புறேன். முக்கியமான வேலை இருக்கு

Tony : அந்த decor அ அசிங்க படுத்தாம போ, அதை இப்ப தான் ரெடி பண்ணிருக்கு.

Thor : சரி..asgard.. போறதுக்கு முன்னாடி கடைசியா jane அ பாத்துட்டு போயிடலாம்.

இதே நேரத்தில் loki Asgard இல் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார் , loki Asgard கு அரசர் ஆகிவிட்டார் odin -ணை தோர்கடித்து , நேர்மையாக அல்ல , சூழ்ச்சி செய்து .இப்போது odin உருவத்தில் asgard இல் ஆட்சி செய்கிறார் loki.

Aquaman தன் தந்தை Thomas curry யுடன் பேசிக்கொண்டுரிக்கிறார்

Aquaman : அப்பா நீங்க முதல் முதல்ல
அம்மாவ எப்படி பாத்தேன்னு சொன்னிங்கள,
அதாவது..ஒரு விபத்தில் அவங்க light house பக்கம் ஒதுங்குநாங்க நீங்க அவங்கள காப்பத்துனது…

Thomas : ஆமா அதுக்கு அப்புறம் தான் என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு. “என்னக்கு அவளுக்கு காதல் மலர்ந்துச்சு”

Aquaman : அப்பா போது திரும்பவும்..உங்க flashback அ ஆரம்பிச்சுடாதிங்க…
நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்…

Thomas : சரி சொல்லு கேப்போம்

Aquaman : நானும் ..ஒரு பொண்ண கடலிருந்து காப்பற்றினேன் …அவ பேரு jane , ரொம்ப நல்ல பொண்ணு…இதுக்கு முன்னாடி நானும் நிறைய பேரை காப்பாத்திருக்கேன்…ஆனா என்னாமோ…தெரியல..இவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு…

Thomas : கேக்குறதுக்கு நல்ல தான் இருக்கு உன் கதை….ஆனா..mera..வ..நீ காதலிக்கலையா…என்ன

Aquaman : இல்ல..mera..மேல..உள்ள காதல்..எனக்கு..இன்னும்..குறையவில்லை ஆனா..mera வுக்கு..jane அ சுத்தமா..புடிக்கலை..

Thomas : யாருக்கு தன் புடிக்கும் ஒரு பெண்ணுக்கு, இன்னொரு பொண்ணுகிட்ட பேசுறதை …இது எல்லாருக்கும் இருக்குற…பிரச்சனை..தான்…
இதுக்கு பெரு தான் possessiveness னு சொல்லுவாங்க…நீ..jane மேல காட்டுர..அன்பு..mera..வ..மனதளவில்
காயப்படுத்தி இருக்கும்.

Aquaman : இப்போதான்…எனக்கு..எல்லாமே புரியுது..நான்..ரொம்ப..பெரிய..தப்பு பண்ணிட்டேன்…

Thomas : ஏன் என்னாச்சு…?

Aquaman : நான்..jane கிட்ட.. mera என்னோட friend னு சொல்லிட்டேன்..

Thomas : இது mera வ கண்டிப்பா பாதிச்சிருக்கும்…
நீ…உடனடியா..அவளை சமாதான படுத்து

தன் தந்தையிடம்…பேசிய பிறகு
Mera வை பார்க்க செல்கிறார் aquaman

Aquman : என்ன mera என் மேல ரொம்ப கோவமா இருக்கியா..

Mera : cha cha அப்படி எல்லாம்…எதுவும் இல்லை

Aquaman : ஆனா உன் முகத்தை பார்த்தா அப்புடி தெரியலையே…

Mera : இப்போ என்ன என் கூட நீ சண்டை போட்டே ஆகணுமா

Aquman : …சரி அதை பத்தி பேசல நீ என் கூட
westfjords iceland கு வறிய நான் அங்க இருக்குற கிராம மக்களை பார்க்கபோறேன்
நீயும் வாரிய..

Mera : நீ போயிட்டுவா எனக்கு இங்க ஒரு சின்ன வேலை

Aquaman : சரி உனக்கு இன்னும் கோவம் குறையலனு நினைக்குறேன்…நான் போய்ட்டுவரேன்…

atlantis -இல் உருவாக்கிய ஒரு விஷம் jane – னின் உணவில் கலக்கப்படுகிறது…

இந்த விஷம் ஒருவர் உடலுக்கு சென்று அவரை கொஞ்சம் கொஞ்சமாக நோய் வரச்செய்து கொள்ளும்.

Jane அந்த விஷத்தை சாப்பிடுவால ?
இல்ல thor அவளை காப்பாற்றுவரா…?
யார் விஷம் கலந்தது…? என்ற கேள்விகளுக்கு…அடுத்த ..பகுதியில்..விடை காணலாம்..

Batman And Iron Man – Part 2

Tony Stark ” என் சிறு வயதில் Newyork Military Base இல் இருக்கும் என் தந்தையின் Garage க்கு சென்றேன். அப்பொழுது ஜெனரல் இடம் தனது வருங்கால திட்டத்தை பற்றி கூறிக்கொண்டு இருந்தார். வருங்காலத்தில் ரோபோட் களின் தேவை அதிகம் இருக்கும் என்றும், அதை வருங்கால மாணவர்கள் தான் செயல் படுத்த முடியும் என்றும் அவர்களுக்காக ஒரு புதிய Foundation ஐ உருவாக்கி அதில் ஏழை மாணவர்களுக்கு இலவச அறிவியல் கல்வி தர விரும்புவதாக கூறினார். அன்று என் தந்தை தனது ஆசைகளை கூறாமல் இருந்திருந்தால், இன்று இந்த FIRST Foundation உருவாக்கி இருக்காது” என்று மேடையில் கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.

Batman சிறைக்கு வருவதற்குள் பாதி கைதிகள் தப்பித்துவிட்டனர். மீதி கைதிகள் தப்பிப்பதற்குள் தன்னிடம் இருந்த Smoking gas ஐ பயன்படுத்தி அனைத்து கைதிகளையும் மயக்கமடைய செய்தார். பின் கோர்டன் இடம் மயங்கியவர்களை சிறையில் அடையுங்கள். இரவுக்குள் தப்பித்த அனைவரையும் பிடித்து விடலாம் என்று கூறிவிட்டு கோதம் நகரின் எல்லையில் பாதுகாப்பை அதிக படுத்துங்கள் என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே, கோர்டன், பேட்மேனிடம் ஹார்வி யை ஜோக்கர் கடத்தி சென்று விட்டான், அவரை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். ஹார்வி ஐ நான் கொண்டு வருகிறேன் என்று கூறி பேட்மேன் மறைந்துவிட்டார்.

பேட்மேன், Alfrad இடம் இப்போது நமக்கு அவளின் உதவி தேவை என்று கூறுகிறார். அதற்கு alfrad, எது அந்த ஜெகஜால திருடியா, Brother Eye satellite போதுமே என்றதும். பேட்மேன் இல்லை அவளை அழையுங்கள் என்கிறார். அதற்கு Alfrad இந்த ரணகளதுளையும் உங்களுக்கு ரொமென்ஸ் தேவைப்படுகிறது, என்று கூற சிறு புன்னகையுடன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு என்று கூறி ஜோக்கர் ஐ தேட செல்கிறார் பேட்மேன். Alfrad catwoman இடம் நடந்ததை கூறி கைதிகளை பிடிக்க உதவி கேக்கிறார். Catwoman உம் கைதிகளை பிடிக்க செல்கிறார்.

உலகின் No.1 Detective ஆன பேட்மேன் க்கு ஜோக்கர் இருக்கும் இடத்தை பற்றி அறிய கஷ்டமாக இருக்காது. கோதம் சிட்டி க்குள் இருக்கும் அனைத்து நபர்களின் விவரங்களையும், அவர்கள் எங்கே சென்றாலும் விரைவில் Track செய்ய இயலும். தனது brother eye மூலம் அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருப்பார். தன்னிடம் இருக்கும் Tracking Device ஐ பயன்படுத்தி ஹார்வி இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு ஜோக்கர் ஐ தேடி செல்கிறான் பேட்மேன்.

கோதம் சிட்டியின் எல்லைப்பகுதில் அமைந்திருந்த பல காலம் காலமாக செயல் படாத building இல் ஹார்வி ஐ கடத்தி ஜோக்கர் அவனிடம் Harley quinn ஐ எங்கே அடைத்து வைத்திருக்கீர்கள் என்று கேட்டு சித்திரவதை செய்தான். ஹார்வி டெண்ட் இடம் இருந்து எந்த பதிலும் இல்லை. உடனே ஜோக்கர் ஹார்வி டெண்ட் இடம் ஒருமுறை எனக்கும் என் மனைவிக்கும் இடையே பெரிய கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிறகு பெரிய சண்டையாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பலி போட்டு கொண்டோம். இறுதியில் பொறுமை இழந்து அவள் வாய் பகுதியை இரண்டாக பிளந்து விட்டேன். அவள் வலியால் துடித்து பின் இறந்துவிட்டால். காதலித்த மனைவியை நானே கொன்று விட்டேன் என்று எண்ணி நானும் அவ்வாறே இறக்க வேண்டும் அவள் பட்ட துன்பத்தை நானும் பெற வேண்டும் என்று வாய்யை நானே பிளக்க முயன்றேன். இறுதியில் என்னால் வலி தாங்காமல் பாதியில் விட்டுவிட்டேன் என்று தனது வாய் எவ்வாறு கிழிந்தது என்று கூறி கொண்டு இருந்தார். இது போல் உன் மனைவியின் வாய் பகுதியும் கிழித்து கொன்றால் எப்படி இருக்கும் என்று கூறி கொண்டு harvey dent இன் மனைவின் வாய் பகுதியை இரண்டு பக்கமும் கம்பியால் கட்டி ஒரு ice பெட்டியின் மேல் வைத்திருந்தான். அதை அங்கு இருக்கும் TV இல் ஒளிபரப்ப பட்டிருந்தது. அங்கே ஐஸ் உருக உருக உன் மனைவி சாவை நோக்கி செல்வாள். Harley quinn எங்கே இருக்கிறாள் என்று கூறினால் அவளை விட்டு விடுவேன் என்று கூறி சிரித்தான். Harvey dent இறுதியில் Harley quinn இருக்கும் இடத்தை ஜோக்கர் இடம் கூறினான்.

Tony மேடையில் FIRST(Free Internship Research and Science Technology) இல் அடுத்தடுத்து என்ன என்ன திட்டங்கள் எதிர்காலத்தில் மாணவர்களின் பங்கு என்ன என்பதை பற்றி உரையாடி கொண்டுருந்தார். Meeting முடிந்ததும் அங்கு இருக்கும் பத்திரிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க சென்றார். அந்த சமயத்தில் அவருடைய mobile க்கு ஒரு warning message வந்தது. வந்ததும் உடனே அங்கு இருந்து தன்னுடைய lab க்கு விரைந்தார். அவர் lab க்கு வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அனைத்து பொருள்களும் அலங்கோலமாக இருந்தது. Jarvis, Jarvis என்று பல முறை அழைத்தும் வரவில்லை. பின் அங்கு இருக்கும் CCTV இல் இருக்கும் பதிவுகளை பார்வை இட்டார். பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, நாம் உலகத்தை ஏலியன்களிடம் இருந்தும், தீயவர்களிடம் இருந்தும் காப்பாற்ற உருவாக்கிய ultron v2 என்னும் A. I, இந்த உலகை மக்களின் அழிவாலும் மேலும் Ultron கள் மட்டுமே இந்த உலகை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டத்தை பார்த்து அதிர்ந்து உட்கார்ந்திருந்தான். வெளியே calling bell சத்தம் கேட்டது. தனது mobile screen ஐ எடுத்து பார்த்தான். அடுத்த நாள் காலை 8 மணி. வெளியே natasha romanoff நின்று கொண்டிருந்தார்.

Harley quinn இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட ஜோக்கர் பலமாக சிரித்தான். பின்னர் ஹார்வி டெண்ட் இன் மனைவியை கொல்லாமல் விடுத்தான். அந்த நேரத்தில் building இன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பேட்மேன் உள்ளே நுழைந்து, உள்ளே இருந்த கைதிகளை தொம்சம் செய்தார். ஒவ்வொரு கைதிகளும் அவரின் இடியில் அதாவது அடியில் சிதறி மயங்கி விழுந்தனர். சண்டையில் அங்கு இருக்கும் ஒவ்வொரு பொருளும் உடைந்து நொறுங்கியது. மூலையில் இருந்த பெட்ரோல் barrer உம் கீழே விழுந்து பெட்ரோல் சிதறி கீழே பாய்ந்தன. பேட்மேன் ஜோக்கர் ஐ அடிக்க நெருங்கும் போது, ஜோக்கர் ஹார்வி டெண்ட் ஐ கீழே தள்ளி, தன் கையில் இருந்த Gun ஐ எடுத்தான். ஹார்வி இன் ஒரு பகுதி முழுவதும் பெட்ரோல் பரவி இருந்தது.

இன்னொரு பக்கம் selina(Catwomen) Alfrad மற்றும் Brothers eye என்னும் பேட்மேன் இன் satellite உதவியுடன் வெளியே தப்பித்த ஒவ்வொரு கைதிகளையும் பிடித்து மீண்டும் சிறைக்கே அனுப்பினர்.

மறுமுனையில் ஜோக்கரும், பேட்மேனும் பார்த்து கொண்டு இருக்கும் போதே, ஜோக்கர் பேட்மேன் ஐ பார்த்து ஹலோ bruce என்று கூறும் போது, பேட்மேன் சில வினாடி சுய நினைவை இழந்து திரும்புவதற்குள் தன் கையில் இருந்த Gun ஐ சிந்திய பெட்ரோல் மீது சுட்டு விட்டு பேட்மேனிடம் இருந்து தப்பித்து விட்டான். அவன் தப்பிக்கும் போது அவன் சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தது. தீ பிடித்து எரிய ஆரம்பித்தது, ஹார்வி இன் ஒரு பகுதி முழுவதும் எரிந்து கொண்டு இருந்தது. ஹார்வி வலியால் கத்திக்கொண்டு இருந்தான். பேட்மேன் அவன் மீது இருந்த நெருப்பை அனைத்து அவனை அங்கு இருந்து தூக்கி கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு சென்று விட்டார்.

அடுத்தப்பகுதில்…