Wonderwoman vs hulk – part 2

முன்கதை சுருக்கம் :
Themyscira-விற்கு ஆபத்து என்று உணர்ந்த டயானா அங்கு சென்ற பொழுது Sunblade (Sword of Apollo) காணாமல் போனதை அறிந்தாள். Ultron உடன் போர் முடிந்த சமயம் அனைவரையும் விட்டு பிரிந்து சென்ற Hulk சஃகாரில் தரையிறங்கினான்.

இனி…

“Master”

Red king : Caiera the oldstrong, வரவர உன் சக்தியோடு சேர்ந்து உன் அழகும் கூடுதுன்னு நினைக்கிறேன் !!

Caiera : இன்னைக்கு ஒருத்தன கண்டுபிடிச்சோம் அவன் பச்சை கலரில் இருந்தான் !

Red king : மோதிரம் ஏதாச்சும் கிடைச்சுதா ?!!

Caiera : இதுவர இல்லை.

Red king : எதுல வந்தான் ?

Caiera : ஒரு Ship-ல

Red king : அதுல தேடி பாத்தீங்களா ?

Caeira : நான் பார்த்த வரைக்கும் அதுல எதுவும் இல்ல, But Hologram-ல ஒருத்தன் மட்டும் லூசு மாதிரி பேசிட்டு இருந்தான்.

Red king : இவனை Observation-ல வைங்க, நாளைக்கு நடக்க போற சண்டையில் பார்த்துக்கலாம்.

அன்றைய நாளின் முன்னிரவில்…

Caiera : நீ Lantern கூட்டத்தை சேர்ந்தவனா ?!

Hulk : Lantern-ஆ நான் யாரையும் சார்ந்தவன் இல்லை, நா Hulk.

Caiera : Ship ல இருந்து இறங்கினதும் எதுக்காக என்னை பார்த்து அதிர்ச்சியான ??

Hulk : அது வந்து நீ பார்க்க நடாஷா மாதிரி…

Caiera : சரி அத விடு நாளைக்கு Colloseum-ல பெரிய சண்டை இருக்கு மறக்காம தயாராகிடு அத சொல்ல தான் வந்தேன்.

என்று கூறிக்கொண்டே வெளியேறினாள் Caiera.
_____________________

Themyscira-வில் இருந்து லண்டன் வந்த டயானா அங்கு Etta candy வீட்டிற்கு சென்றாள்.

“வாங்க டயானா”

Diana : சாரி நீங்க யாரு ??

“நான் Etta candy உடைய பொண்ணு Jenifer candy, அம்மா பத்து வருஷத்துக்கு முன்னாடியே தவறிட்டாங்க…”

Diana : மன்னிச்சிடுங்க நான் சில தகவல்கள் கேட்க வந்தேன் !

Jenifer : Actual-ஆ அம்மா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க Steve trevor ஓட நீங்க செய்த சாகசங்களை பத்தி, அம்மா A.R.G.U.S-ல இருந்ததால உங்களை பத்தின பழங்கால தகவல்களை சுலபமா சேகரிக்க முடிஞ்சது அது இப்ப என்கிட்ட தான் இருக்கு, So அம்மா எடத்துல என்னால உங்களுக்கு உதவ முடியும்னு நினைக்கிறேன்.

டயானா Themyscira-வின் நிலை பற்றியும் Sunblade பற்றியும் Jenifer இடம் கூறினாள்.

Jenifer : இதுவர அம்மா சேகரிச்சதுல நீங்க சொன்ன வார்த்தையே இல்லையே

Diana : கண்டிப்பா இருக்காது ஏன்னா அது மனிதர்களிடத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கு. History of Ancient Gods எதுலயாவது தேடி பாருங்க வாய்ப்பு இருக்கு.

Jenifer : நீங்க சொன்ன மாதிரி Ancient Books ல தேடி பார்த்தேன் அதுல 12 godsக்கு 12 Weapons இருந்ததாகவும் அந்த Weapons ஒவ்வொன்றும் அந்த God ஓட power-அ resemble பண்ணும்னு சொல்லப்பட்டிருக்கு

Diana : Apollo உடைய வாள் னு எதுவும் இருக்கா ?

Jenifer : ம்ம் இருக்கு

Diana : ஆனா Apollo-வே இல்லையே ஒரு வேளை அரியாசனதுக்கு ஆசைப்படுற யாராவது திருடி இருக்கலாம்

Jenifer : Ares-ஆ..?

Diana : அவன் இப்போதைக்கு வர மாட்டான்

Jenifer : Zeus..?

Diana : அவரும் இப்ப இல்ல

Jenifer : உங்களுக்கு நிறைய சகோதர சகோதரிகள் இருக்கிறதா கேள்விப்பட்டேன் அவங்கள்ல ஒருத்தரா இருக்குமோ..?

சட்டென்று டயானா க்கு பொறி தட்டியது,

Diana : சமீபத்தில் சந்தேகத்திற்கு இடம் தர்ற மாதிரி எதுவும் சம்பவம் நடந்துச்சா ?!

Jenifer : நா Retire ஆகிட்டேன் டயானா, So recent news-னா நீ A.R.G.U.S-அ தான் contact பண்ணனும்.

தகவலுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து A.R.G.U.S புறப்பட்டாள் டயானா.
_________________________

மறுநாள் காலை
Colloseum பார்வையாளர்களால் அதிர்ந்துகொண்டிருந்தது.

Red king : Hellooo Everyone…!!! இன்னைக்கு சஃகார்வாசிகளை சந்தோஷப்படுத்த புதுசா நிறைய பேர் வந்துருக்காங்க அவங்கள Welcome பண்ணுங்க.

மறுபடி கரகோஷம் கூடியது,

கரவொலியின் போது மைதானத்தின் நடுவில் அனைத்து Gladiatorகளும் இறக்கி விடப்பட்டனர் வேண்டா வெறுப்பா Hulk-ம் நின்றுகொண்டிருந்தான்.

“எப்பா எப்டிப்பா இவ்ளோ பெருசா வளர்ந்த எனக்கும் சொல்லிக் கொடேன்” என்று தனக்கே உரிய பாணியில் தன்னை அறிமுகம் செய்தான் Korg.

“என் பேரு Korg-uh அந்த பூரான் பேரு miek-uh எங்க டீம்ல join பண்ணிக்கிறியா எல்லாரையும் பொலி போடலாம்”

Hulk : Hulk யார் கூடயும் சேர மாட்டான் என்ற படி பூட்டிய கதவை நோக்கி நகர்ந்தான்

“Mr. மாமிச மலை என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க” என்றபடி Miek-கும் பின்னாடியே சென்றான்

போட்டி ஆரம்பமானது,

Korg-ன் தோற்றத்தில் இருக்கும் மூன்று Kronan-கள் களமிறக்கப்பட்டனர்
தன்னை போன்றவர்களை பார்த்த மகிழ்ச்சியில்,

“கண்ணுங்களா என் பேரு korgu நாலு பேரும் Tag team போடலாமா” என்று ஆர்வமாக முன்னால் சென்றான்.

அவனை அலேக்காக தூக்கி மல்லாக்க படுக்க போட்டனர் மூவரும், திரும்பி Korg எந்திரிக்கவே இல்லை.

மேலே இருந்து Red king Hulk-ஐ பார்த்துக்கொண்டே இருந்தான், இதை கவனித்த Hulk Meik இடம்,
“யார் இந்த தீக்குச்சி மண்டையன்” என்று கேட்டான்.

Miek : பாக்க தான் ஆளு தீக்குச்சி மாதிரி இருப்பான் ஆனா பெரிய சைத்தான் கீ பச்சே, பேரு Angmo asan-II நாங்க Red king-னு கூப்பிடுவோம்.

சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்தது Kronan-கள் க்ரோதத்தில் ரெண்டு பேரை கொன்றே விட்டனர், வாங்கிய அடியிலிருந்து கொஞ்சம் மீண்ட Korg சமாளித்து எழுந்து நின்றான்.

Hulk மீண்டும் தன் கேள்விகளை தொடர்ந்தான்

Hulk : ஏண்டா இப்படி சூம்பிப் போய் இருக்கான் இவனா அரசன் ?!!

Miek : அவன சாதாரணமா நெனைக்காத அதோ பக்கத்துல படுக்க போட்டு வச்சிருக்கான் பாரு ஒரு Armor அதுதான் அவனோட பலம், கூடவே ரெண்டு கத்தி வச்சிருக்கான் ஒன்னுல கரண்ட் வரும் இன்னொனுல நெருப்பு வரும் அத போட்டுக்கிட்டா அவனை யாராலயும் ஜெயிக்க முடியாது.

அதையும் பார்த்துவிடலாம் என்றபடி Kronan-களை நோக்கிப் பாய்ந்தான் Hulk, வந்த வேகத்தில் இரு Kronan-களின் கழுத்தை பிடித்து நெறித்தான் இரண்டும் தூள் தூளாகி விழுந்தன,

மீதியிருந்த ஒருவனை Korg பாய்ந்து சென்று தாக்க மற்றவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த Kronan-ஐ தூள் பக்கோடா ஆக்கினர்.

உடனடியாக Red king மேலிருந்து Devil corker-ஐ ரிலீஸ் செய்ய உத்தரவிட்டான்,
மக்களின் ஆரவாரத்தோடு பூமியைப் பிளந்து எரிமலை குழம்பிலிருந்து Devil corker என்ற மிருகம் மேலே வந்தது.

அது பார்க்க பெரிய சைஸ் ஆக்டோபஸ் போலவும், அதன் தலை Hulk-ஐ விட பெரியதாகவும் இருந்ததால் அனைவரும் சற்று மிரண்டு போனார்கள். வெளியே வந்த மிருகம் தன் கைகளை கொண்டு அனைத்து Gladiator-களையும் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கியது.

ஆனால் எதற்கும் அசராமல் பாய்ந்து வந்த Hulk அதன் தலையில் ஒரு குத்து விட்டான் அவ்வளவுதான் மொத்த கூட்டமும்
‘Hulk’
‘Hulk’ என்று கத்த ஆரம்பித்தனர், Devil corker சுருண்டு எரிமலை குழம்பிற்குள்ளே செத்து விழுந்தது.

Hulk அதே ஆத்திரத்தோடு Red king-ன் சிம்மாசனத்தை நோக்கி மேலே பாய்ந்தான், ஆனால் மேலே இருந்த Caiera அவனை தன் Sword-ஐ வைத்து தடுத்து கீழே தள்ளிவிட்டாள், அதற்குள் Armor-ஐ மாட்டிக்கொண்ட Red king கீழே பறந்து வந்து தன் Electrical Sword-ஐ வைத்து Hulk-க்கு shock கொடுத்து மயங்கச் செய்தான் தூரத்திலிருந்து Caiera தன்னை முறைப்பதை பார்த்தவண்ணம் மயங்கி விழுந்தான் Hulk.
______________________________

A.R.G.U.S ல்

Agent X : Welcome டயானா நீங்க வர்றதா Jenifer சொன்னாங்க

Diana : சமீபத்தில் Earthல நடந்த வித்தியாசமான சம்பவங்களை பற்றி கேட்க வந்தேன்

Agent X : சமீபத்திலனா தேரை இழுத்து தெருவுல விட்ட கதையா மறுபடி ultron வந்ததை சொல்லலாம்.

Diana : அது அந்த குறுந்தாடிகாரனோட சேட்ட, நான் கேட்கிறது Any new species invasion or activities தெரிஞ்சுதா ?

Agent X : அப்படி எதுவும் நடக்கல But நாங்க ஒரு Ancient Mummy-அ‌ Recent-ஆ கண்டுபிடிச்சோம், அதுல வித்தியாசமா பச்சை குத்தி இருந்தது. எங்களுக்கு அதை படிக்க தெரியல நான் வேணும்னா Permission தரேன் நீங்க Try பண்ணுங்க

டயானா எழுத்துக்களை படித்தாள். அதில் அவ்வளவாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை அவளால் படிக்க முடிந்ததோ,

“There is a child who is worthy to rule the world. but a Worthy for a Worthy, He is designed to destroy the last residue of intellect and humanity left in the world” என்பதுதான்.

Diana : அப்ப இவனைக் கண்டு பிடிக்கணும்னா எனக்கு இன்னொரு Worthy person-ஓட துணை தேவை,But அப்படி ஒருத்தன எனக்கு தெரியாதே…

Agent X : எனக்கு தெரியும் !

Diana : யாரு ?!

Agent X : Steve…

Diana : ……

Leave a comment