Tag Archives: Cosmos Studios

Hulk Vs wonderman – 1

டயானா மனதில் பல குழப்பங்கள் ஓடிக்கொண்டிருந்தன. Steppenwolf எதற்காக Mother box-ஐ தேடி வந்தான், அவனுடைய வருகை யாரைப் பற்றியாவது எச்சரிக்கை செய்யவா என்று பல சிந்தனைகள் மனதில் ஓடிய சமயம் மீண்டும் Themyscira-வில் இருந்து எச்சரிக்கை நெருப்பு ஏற்றப்பட்டது, Stephenwolf Mother box-க்காக படையெடுத்த பொழுது ஏற்றப்பட்ட அதே நெருப்பு. ஏதோ ஆபத்து என்று உணர்ந்த டயானா அங்கிருந்து Themyscira புறப்பட்டாள்.

Ultron உடன் போர் முடிந்த சமயம்,

பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்தது Quinjet.

‌”என்ன மன்னிச்சிடு நடாஷா உன் கூட இருக்கும் ஒவ்வொரு நொடியும் என்னால உனக்கு எதுவும் ஆபத்து வந்துடும்னு பயமா இருக்கு, மனஅமைதிய தேடிய இந்த பயணத்தில நான் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக உன்ன வந்து சந்திக்கிறேன்” என்று மனதுக்குள் பேசிக் கொண்டார் Bruce.

நேசிக்கும் பெண்ணுடன் நொடி கூட இருக்க முடியாததை நினைத்து கண்களில் நீர் பெருகியது. ஏதோ ஒரு இனம்புரியாத வலி. இதுவரை Hulk அதை உணர்ந்ததே இல்லை, காத்திருப்பது மட்டுமல்ல கடந்து செல்வதும் காதல்தான் என்று வாழ்பவர்களுக்கு மட்டுமே இந்த வலியை புரிந்துகொள்ள முடியும்.

பூமியின் அனைத்து தகவல் தொடர்புகளில் இருந்தும் பிரிந்த Quinjet விண்வெளியில் மிதக்க ஆரம்பித்தது.

பல சிரமங்களை தாண்டி Themyscira சென்ற டயானா அதிர்ச்சியில் உறைந்து போனாள். Themyscira-வே சின்னா பின்னமாகி இருந்தது கோட்டைக்குள் சென்றவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி அவளது தாய் அரசி Hippolyta நிலைகுலைந்து படுத்திருந்தார் பதறிப்போன டயானா என்ன ஆயிற்று என்று விசாரிக்கும் பொழுது Hippolyta சொன்ன முதல் வார்த்தை “அது உன்னுடையது”

“என்னுடையதா”

“ஆம் அது உனக்கானது நீதான் அதை திரும்ப கொண்டு வரவேண்டும்”

“Mother box ஆ”

“இல்லை Sword of Apollo”

எதுவும் பேசாமல் அம்மாவையே பார்த்தாள் டயானா,

“Sword of Apollo ஒரு God killer Armour, முன்னோர்களால் Sunblade என்று அழைக்கப்படும். அதை வைத்து நம் மொத்த இனத்தையும் அழிக்க முடியும். அளப்பரிய சக்தி வாய்ந்த அந்த Sunblade திட்டத்துடன் எடுத்து செல்லப்பட்டுள்ளது எப்படியாவது அதை மீட்டுவிடு டயானா” என்றபடியே மயங்கி விழுந்தார் Queen Hippolyta.

அரசி சொன்னதைக் கேட்டு செய்வதறியாது மூர்ச்சையாகி நின்றாள் டயானா.

பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில்,

கண்களை மூடி கடந்தகாலத்தை நினைத்து கொண்டிருந்தவனை கணநேரத்தில் எழுப்பியது ஒரு கம்ப்யூட்டர் ஒலி,

“Location mislocated, MayDay”
“Location mislocated, MayDay”

என்ன ஆயிற்று என்று Hulk புரிந்து கொள்வதற்கு முன் எல்லாம் நடந்து முடிந்தது

சிறிது நேரத்திற்குப் பின் உடம்பு முழுக்க கனத்த வலியோடு எழுந்தான் Bruce. Quin jet பத்திரமாக தரை இறங்கி இருந்தது, வெளியே வந்து பார்த்தால் முழுவதும் குப்பை கூளங்களக இருந்தது. இந்த இடத்தை Bruce-க்கு தெரிந்து இருந்தது ஆம் இது முன்பு எங்கோ படித்த அதே சஃகார் தான்.

“Welcome Gladiator, சஃகார்க்கு உன்ன வரவேற்கிறோம்”

குரல் கேட்டு திரும்பி பார்த்தான்

அ.. அது.. நடாஷா…

தொடரும்…

Speed man – part 1

இந்த உலகம் பல சக்தி வாய்ந்த மனிதர்களை பார்த்திருக்கிறது. அவர்களின் ஒருவன் தான் இவன்.

டெரிபல் என்ற கிரகத்தில் சாக்ஸ் என்ற அரசன் பல வருடம் ஆண்டு வந்தார். ஆனால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.. இதனால் அவருடைய மனைவி மற்றும் கிரக வாழ் மக்களும் வருத்தத்துடன் இருந்தார்கள்.

ஒரு நாள் அந்த கிரகத்தில் ஒரு ஒளி வானில் இருந்து விழுந்து மலையை தாக்கியது. ஒளி தாக்கிய மலை பகுதியில் இருந்து அந்த கிரகத்துக்கே இருட்டிலும் வெளிச்சம் கிடைத்தது. அந்த வெளிச்சம் அங்கு இருக்கும் அனைவரும் மேலும் ஊடுருவ முயற்சி செய்து அவர்களை அழித்தது. இதை அறிந்த அரசன் சாக்ஸ் அந்த வெளிச்சத்தை அனைக்க சென்றான்.

அவர் வந்த நொடி அந்த வெளிச்சம் ஒரு உருண்டை வடிவில் மாறி அவர் கால் அடியில் விழுந்தது. அனைவரும் பின் வாங்க அரசர் சாக்ஸ் அதை கையால் எடுத்தார். எடுத்த நொடி அவர் உடம்பில் தஞ்சம் அடைந்தது அந்த வெளிச்சம்.

அவர் எழுந்த நிமிடம் உடம்பில் வழு குடியது, கண் நெருப்பாய் எரிந்தது.
டெரிபல் கிரகத்தில் ‌‌ஜபூதங்கல் அடக்கி ஆண்ட அரசர் ஒலி, ஒளி‌ யும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அரசர் சாக்ஸ் யின் கர்ஜனை அந்த கிரகமோ அதிர்ந்தது.

அன்று முதல் சாக்ஸ் தான் அரசன் இல்லை உங்கள் கடவுள் நான் என்றே கூறினான். அரசிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

தாம்ஸ் டெரிபல் கிரகத்தில் உடல் இல்ல மந்திரவாதி. தாம்ஸ் அரசியின் முன் தோன்றி உங்கள் வயிற்றில் திசுக்களை உடனடியாக அழித்துவிடுங்கள்.இல்லையெனில் உங்கள் குழந்தை நம் கிரகத்தையும் நம் அரசரையும் அழித்துவிடும். அதை பார்க்க நிங்களும் இருக்கப்போவதில்லை என்றான்.

அரசி தன் வயிற்றில் இருப்பது குழந்தைகள் இல்லை என்றும் தனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று கூறினாள். சாக்ஸ் எனக்கு நீ வேண்டாம் குழந்தை தான் வேண்டும் என்று கர்ஜித்தான்.

குழந்தை பிறக்கும் நேரம் வந்தது. அரசிக்கு முதல் குழந்தை பிறந்த அடுத்த நெடி இன்னெறு குழந்தை பிறந்தது.. அரசியின் உயிர் பிரிந்தது.

மித்ரன், எமா என பெயர் வைத்து இரண்டு குழந்தைகளுடன் சாக்ஸ் நிம்மதியாக வாழ்ந்தான். ஆனால் சாக்ஸ் மக்களை அடிமை யாக்கி அவர்களை வைத்து விரத்தை இருவருக்கும் கற்று கொடுத்தான். அவர்கள் இருவரும் இரக்கம் இல்லாமல் வளர்க்கப்பட்டனர். மித்ரன் (ஒலி யின் சக்தி)பலத்துடன் மூளை யும் பயன்படுத்தி னான் , எமா(ஒளி யின் சக்தி)பலத்துடன் முயற்சி யை பயன்படுத்தினான். அவர்களுக்கு யார் அடுத்த டெரிபல் யின் கடவுள் என்று போட்டியிம் இருந்தது. டெரிபல் கிரகத்தில் யார் SPEED MAN ஆக இருக்கிறார்களே அவரே அரசர்.

இதை மந்திரவாதி மூலம் அறிந்த சாக்ஸ் அமைதி காத்திருக்க.இருவரும் சாக்ஸ் யை பார்க்க வந்தார்கள். அரசரே எங்கள் இருவருயில்.. யார் அடுத்த டெரிபல் யின் கடவுள் என்று நிங்கள் முடிவு செய்ய வேண்டும்.. சாக்ஸ் கண்கள் சூடு ஆகா பொருமை யாக சொன்னான் இங்கு நான் மட்டுமே கடவுள்.. டெரிபல் க்கு தேவை அரசர் மட்டுமே உங்கள் இருவரு யில் யார் அடுத்த அரசர் என்று முடிவு செய்யும் நேரம் வந்தது விட்டது.

உங்கள் யில் யார் SPEED MAN என்று நீங்கள் நிருபிக்க வேண்டும். உங்களுடைய போட்டியால் இந்த கிரகத்துக்கு பாதிப்பு ஏற்படகூடாது. ஆகவே இந்த போட்டி நம் கிரகத்தி யில் இருந்து 25000 அடி உயரத்தில் நடக்க வேண்டும். உங்களின் ஒருவர் மட்டுமே டெரிபல் க்குள் உயிரேடு வர வேண்டும்.

மீறினால் இருவரும் என்னால் அழிக்க படுவீர்கள். கடைசி யாக இங்கு நான் மட்டுமே கடவுள்……….

இருவருக்கும் நடக்கும் போட்டி யின் கிழமை மந்திரவாதி தாம்ஸ் கூறினார். இன்னும் 24 மணி நேரத்தில் பேட்டி தொடங்கும். நீங்கள் இருவரும் அதற்கான பயிற்ச்சியை மேற் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சில ஆலோசனை சொல்ல நான் கடமைபட்டு உள்ளேன். நீங்கள் 25000 அடி மேலே சென்ற பின்னர் தான் போட்டி யிட வேண்டும். மேலும் 15000 அடி மேலே சென்றால் உங்களால் நம் கிரகத்துக்கு திரும்பி வர முடியாது. ஆகவே உங்களின் ஒருவர் 40000 அடி மேலே சென்றாள் மீதி இருக்கும் ஒருவனோ இங்கு அரசர்…

இங்கு வரும் ஒருவருக்கு டெரிபல் யின் கடவுள் ஆக வழி யை நான் காட்டுகிறோன்….

இருவரும் கடுமையான பயிற்சி மேற்கொண்டனர். ஆனால் மித்ரன் க்கு ஒலி யின் சக்தி மூலம் பறக்க முடியவில்லை. எமா ஒளி யின் சக்தி மூலம் பறக்க ஆரம்பித்தான். மித்ரன் க்கு மனதில் தோல்வி பயம் வந்தது.
மனம் திசை மாறியது. சிந்தித்தான் நமக்கு தேவை வெற்றி இல்லை டெரிபல் யின் அடுத்த கடவுள் பதவி.

மந்திரவாதியிடம் சென்றான் மித்ரன் நான் கடவுள் ஆக உங்களிடம் ஒரு வலி இருக்க..நான் ஏன் அரசர் ஆக முயற்சிக்க வேண்டும். நான் கடவுள் ஆக வலியை சொல்லுங்கள்.

அரசர் ஆக இருக்கும் ஒருவருக்கே டெரிபல் யின் கடவுள் ஆக முடியும். அதற்கு இந்த போட்டியில் வெற்றி பெற்று அரசர் ஆக வேண்டும்.

வெற்றி உன்னை நோக்கி காத்திருக்கும். வென்று வா உன்னை அரசர் ஆக்க காத்திருக்கிறோன் என்றர் மந்திரவாதி.

மித்ரன் நம்பிக்கை கூடியது. பறக்க முயற்சி செய்தான் அதிலும் வெற்றி மந்திரவாதி மாய வார்த்தை நம்பிக்கை கொடுத்தது. மித்ரனும், எமானும் போட்டிக்கு தயார் ஆகினர். இருவரும் சம பலத்துடன் பறந்தனார். 25000 அடி தான்டியதும் இருவருவுடைய கண்களும் சிவந்தன சன்டை இட்டனர். அவர்களின் நோக்கம் 15000 அடி மேல் ஒருவரை ஒருவர் தள்ளுவதே… சன்டை இரவும் பகலும் நடந்தது இன்னும் ஒரு சில அடிகளிள் டெரிபல் யின் ஆகயே எல்லை வெற்றி யின் விலும்பில் மித்ரன்…

எதிர் பார்க்கத நேரத்தில் ஒரு எரிக்கல் மோதி இருவரும் டெரிபல் யின் ஆகயே எல்லை தான்டி வீசா பட அவர்கள் உடம்பு எரிந்து ஒளி யாக மாறி பூமியை நேக்கி விழ ஆரம்பித்தது..

இவர்களின் போட்டி இனி நம் வாழும் பூமியில்….

Follower post : Gopala Krishnan

SUPERMAN : GOD AMONG US | PART – 1

The World is facing apocalypse ஆனா இந்த தடவை அது Darkseid னாலையோ Thanos னாலயோ இல்ல. யார இந்த பூமியோட பாதுகாவலனா கடவுளா நவநாகரீகத்தோட Jesus னு மக்கள் பாத்தாங்களோ அந்த Superman ஆள தான்.

எல்லா பத்திரிக்கைகளும் 24 hours ஷீப்டல வேலை பாத்தாங்க எல்லாரும் சொன்ன ஒரே Headline “Superman Gone Rogue”, “GOD turn against MEN” னு ஒரு பக்கம் “GOD is disappointed” னு இன்னொரு பக்கம் விவாதங்களும், தலைவர்களோட கண்டன அறிக்கைகளும் தேவைக்கு அதிகமாவே நடந்துச்சு.

சர்வதேச நாடுகள் கூடியிருந்த UN ல நிரந்தர உறுப்பினர்கள் அடிச்சுக்க ஆரம்பிச்சாங்க. SUPERMAN மக்களுக்காக வாழந்தவர் ங்கிறத மறந்துட்டு American ங்கிற அளவுலையே அவர வெச்சுருந்தாங்க. அவர அமெரிக்காவோட ஆயுதமா தான் பாத்தாங்க மக்களுக்காக வாழ்ந்த அவரை யாருமே புரிஞ்சுக்கல Even Batman. Superman is the symbol of HOPE ங்கிறது வாக்கிய அளவுல தான் இருந்துச்சு.

ஆனால் சூப்பர்மேனுக்கு எந்த நாட்டையோ அந்த மக்களையோ தாக்க விருப்பமில்ல மாறா கெட்டவங்கள விட்டுவெக்க கூடாது ங்கிற வெறி மட்டும் இருந்துட்டே இருந்துச்சு பல ஊர்ல அரசாங்கத்தோட தொடர்புடைய MAFIA க்கள் உருக்குலைக்க பட்டார்கள். அதுல corporates, Politicians, Pshycopaths, Blood Mongers, Mafia னு பாரபட்சம் பாக்காம வேட்டையாட பட்டாங்க. இது சர்வதேச அளவுல பதட்டத்த உண்டு பண்ணுச்சு. மேல் மட்டதுல இருக்குற கறை படா கரங்கள் ஒண்ணா சேர்நதாங்க. சூப்பரமேன கட்டுபடுத்த முடியாதா ங்கிற எண்ணம் எல்லா நாட்டவரையும் ஒண்ணு சேர்துச்சு. தலைசிறந்த சூப்பர்ஹீரோக்கள் சூப்பர்மேனால பலமா தாக்கப்பட்டார்கள்.

“கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சுட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க” அது நல்லதா இருகட்டும் கெட்டதா இருகட்டும்.

சூப்பர்மேன அடக்க இப்ப இங்க ஒருத்தரும் இல்ல. சூப்பர்மேன் கண்ணுல படுற கெட்டவங்கள கொல்ல ரொம்ப நேரம் ஆகாது ங்கிற stage ரொம்ப தூரம் இல்ல.

சரி அப்படி என்ன நடந்துச்சு…..

BEFORE FEW DAYS

(Somewhere a Secured Building in CHINA)

Vodka எடுத்த Glass ல ஊத்தி அத சிப் பண்ணிட்டே Zhinzhoun ” நீ ஒரு Lunatic lex” உன்ன எதுக்கு அமெரிக்கா ஜெயில்ல வெச்சுதுனு எல்லாருக்குமே தெரியும். சூப்பர்மேன கொல்றேனு இந்த பூமிக்கே நீ சமாதி கட்ட பாத்த. உன்னால எனனென்ன நடந்துச்சுனு எல்லாருக்குமே தெரியும். நம்ம Business ரகசியமா இருக்குற வரைக்கும் தான் உன் உயிர் உன் கையில என் உயிர் கையில.
(Glass அ கீழ வைக்குறார்)
Lex evil laugh ஓட Mr. Zhin நான் சூப்பர்மேன அழிக்கனும்னு தான் அந்த வௌவாலுக்கு என்னோட எல்லா Resources ம் கொடுத்தேன். ஆனா வௌவால் என்ன ஏமாத்திட்டான். அதனால தான் Doomsday வ உருவாக்குனேன் அதுவும் சூப்பர்மேன் யார கழுத்த உடச்சு கொன்னானோ அவன வெச்சே உருவாக்குனேன். “You are talking Bullshit” Lex இதையே எத்தனை தாட்டி தான் சொல்லுவ

Mr. Zhin சூப்பர்மேன் ஒரு அமெரிக்கன். அவன் Army அவங்கிட்ட உதவி கேட்டா அவன் போவான். அவனோட உலகம் ரொம்ப சின்னது. அவனோட Girlfriend, அவனோட அம்மா அவன சுத்தி இருக்குறவங்க. அவ்ளோ தான்.

America ஒருத்தன வில்லனா காமிக்கனும்னா they will go to any extent இது உங்களுக்கே தெரியும். நாளைக்கே China வ அழிக்க அவன அனுப்புனா உங்க ICBM’S, Bio Weapons, Fighter jets, Tanks வெச்சு அவன அழிக்க முடியும் நினைக்குறீங்க. (Zhin sharp அ பாக்குறார்)

என்ன தான் சொல்ல வர

“God is the Devil of World” .He is the most unstable powerful weapon in the universe. அவன் இருந்தா மனுஷங்க இருப்பாங்களோ தெரியாது ஆனா Americans இருப்பாங்க.

அதுக்கு

One word CHENGDU

You guys hit him with nuclear arsenal, 5 நிமிஷத்துக்குள்ள அவன் வந்துட்டான்.

CHENGDU is the key

என்ன நம்பு zhin. Superman அழிக்க நான் கொடுக்குற ஒரு Weapon ஆ இத நினைச்சுக்கோ.

Zhin கிளம்புறார்…

“Get ready to meet the Party officials Lex”

To Be Continued……

Thor vs Aquaman பகுதி- 1

ஒரு கடற்கரை பகுதியில் கடலில் ஆராய்ச்சிகள் செய்ய jane Foster – ரும் அவளது நண்பர்களும் செல்கின்றார்.

Jane : நீங்கள் அந்த பக்கம் போய் பாருங்க..
நான்..இந்த..இடத்தை கொஞ்சம் check பண்ணிட்டு வரேன்..

என்று கூறிவிட்டு கடலின் ஓரத்தில் சென்று கொண்டிருந்தாள் …
அப்போது jane கால் தடுக்கி கடலில் விழுந்து மூழ்கின்றால் அவளது நண்பர்கள் அவளைவிட்டு தொலைவில் இருந்ததால் அவளை காப்பாற்ற
வரமுடியவில்லை , அப்போது கடலின் உள்ள சென்று கொண்டிருந்த Aquaman அவளை பார்க்கின்றான்.

Aquaman : “யாரோ இங்க தவறி விழுந்தது போல் தெரிகிறதே.”

கடலிலிருந்து அவளை வெளியே எடுத்து காப்பாற்றுகின்றான் aquaman.
Jane நின் நண்பர்கள் அங்கு வந்து பார்க்கும்போது jane அங்கு இல்லை அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது ,
பின் aquaman அவளை lighthouse பக்கம் இருக்கும் தன் தந்தை வீட்டுக்கு அழைத்து செல்கின்றான்

Aquaman : ஏய் பொண்ணு யாரு நீ…
கண்ணு தோரக்கமாற்ற…

பிறகு சிகிச்சை அளிக்கின்றான்.
jane கண் விழித்ததும் aquaman ஐ முதல்முதலாக பார்க்கிறாள்,

Aquaman : ஒரு வழியா கண்ணு முழிச்சிட்டிய
ஆமா நீ யாரு…?

Jane : நான் jane foster …ஒரு நிமிஷம் நீங்க தான aquaman அதாவது உங்களால தான… தண்ணிக்குள்ள..ரொம்பநேரம் இருக்க முடியும்..

Aquaman : என்ன உலரிக்கிட்டு இருக்க

Jane : இல்ல.. Actually..நான் உங்களை பத்தி தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்…
என்கிட்ட உங்களை பற்றிய தகவல் இருக்கு… போட்டோ கூட இருக்கு. மறைக்காதீங்க.

Aquaman : அது செறி…நீ ..ரொம்ப..புத்திசாலி தான்…

Jane : அப்பாடா..நான் உங்கள..இவ்ளோ சிக்கரம்
சந்திப்பேன்னு…நினைக்கவே இல்ல..
ஆமா..நீங்க…மீன்..கூடலாம்..பேசுவிங்கலா..?

Aquaman : (mind voice)அவன் கேட்ட அதே கேள்வி…
ஆமா..பேசுவேன்….
அது இருக்கட்டும் நீ..எதுக்கு..என்ன பத்தி ஆராய்ச்சி ..பண்ணுற…

Jane : அது.வந்து.. உங்க இனத்தை பற்றியும், அது இல்லாம நீருக்குள்ள..உங்களால எப்படி அவ்ளோ நேரம்..இருக்க முடியது…நீங்க மீன் கூடலாம் பேசறீங்க..அதுவும்..இல்லாம..நீங்க மத்தவங்க மாதிரி இல்ல..இதை எல்லாம்..எப்படி…அதை தெரிஞ்சிக்கத்தான்..

Aquman : சரி நான் உன் கேள்விகள்..எல்லாத்துக்கும் பதில் சொல்லுறேன்…
நான் ஆழ்கடலின் பாதுகாவலன் Aquaman..
Atlantis ஓட அரசன்…

என்று தன்னை பற்றிய தகவல்கலை கூறினார்
இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்…

Jane : என்ன காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி…

Aquman : இருக்கட்டும் பரவால்ல..
என்னமோ தெரியல உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு….

Jane : ஓ..அப்புடியா…thanks…

அதே சமயத்தில் தோர்(thor) Asgard ல் jane Foster ஐ பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்தோடு இருக்கிறார். Thor, jane Foster ரை சந்தித்து நான்கு வருடம் ஆகிவிட்டது odin னால் சபிக்கப்பட்டு, பூமிக்கு வந்து, தான் தோர் சக்திக்கு தகுதியானவன் என்பதை நிருபித்து பின் asgard சென்று loki இன் திட்டங்களை முறியடித்தார். இது நடந்து 4 வருடங்கள் ஆன நிலையில்
அழிந்து போன bifrost மீண்டும் asgard இல் உருவாக்கப்படுகின்றது. அதன் மூலமாக thor மீண்டும் பூமிக்கு janefoster ரை சந்திக்க வருகின்றார்.

Thor asgard டை விட்டு பூமிக்கு சென்றார் சிறையில் இருந்த loki கு இது தெரியவருகின்றது. loki முகத்தில் ஒரு சிறு “புன்னகை”
பூமிக்கு வந்த தோர் janefoster ரை காண செல்கின்றார். தோர் jane வீட்டுக்கு சென்று அங்கு பார்க்கும் போது jane னும், aquaman னும் சந்தோசமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

Thor : தப்பான நேரத்துல வந்துட்டேன்…
ரொம்ப தாமதமாவும் வந்துட்டேன்…
என்ன மன்னிச்சிடு jane…

இதை தூரத்தில் இருந்து பார்த்த thor இருவரும் காதலிக்குறார்கள் என்று நினைத்து கொண்டார்

Thor : இப்போ jane னை சந்திகுறது அவ நிம்மதியை கெடுத்துடும்.

என்று ..எண்ணி, அங்கிருந்து சென்றுவிடுகிறார். Thor க்கு, இருந்தாலும் jane னிடம் பேசி இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

Mera Aquaman னை பார்க்க வருகிறாள்..

Mera : யாரு அது…புதுசா இருக்கு…

Aquaman : யாரு அவளா..அவ..jane..என்னோட..girlfriend…

Mera : என்ன..சொன்ன..girlfriend..ஆ…

Aquaman : ஏய் எதுக்கு இப்போ இவ்ளோ கோவம்….சரி…just friend…
அவ..கடல்ல..தவறி..விழுந்துட்ட…நான்தான்..
காப்பாத்துனேன்….

Jane : ஹாய்..நீங்க யாரு…
Mera : நான்..mera…அவனோட..
Aquaman : friend..அவ..என்னோட..friend…
Mera : எது friend ஆ…

Jane : சரி நான் கிளம்புறேன்…bye…நீங்க..பேசிக்கிட்டு இருங்க…

Mera : ஏதுக்காகா..பொய் சொன்ன…

Aquaman : யாரு பொய் சொன்னா…
அவ ரொம்ப..நல்ல..பொண்ணு..
எண்ணனே தெரியல..அவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு….

Mera : எனக்கு அவள சுத்தமா..புடிக்கல..

Aquaman, jane னிடம் பழகுவது mera வுக்கு பிடிக்காமல் இருக்கிறது.

Mera : இதுக்கு கூடிய சீக்கிரம் நான் ஒரு முடிவு கட்டுறேன்…
Jane மீது மிகவும் கோபத்துடன் இருக்கின்றாள்.
Mera…

இதன் பிறகு mera என்ன செய்ய போகிறாள் ?
Loki யின் அடுத்த திட்டம் என்ன?
Thor இன் அடுத்த முடிவு என்னவாக இருக்கும்?
இந்த கேள்விகளுக்கான பதிலை பகுதி 2 இல் பார்க்கலாம் அதுவரை காத்திருங்கள்.

பிஸ்டலுக்கு பிரியாவிடை

வன்மேற்கு (வைல்ட் வெஸ்ட்) கதைகள் என்று சொன்னாலே முதலில் நியாபகம் வருவது அழுக்கு கௌபாய்கள் (மாடு மேய்க்கிறவைங்க). அடுத்தது துப்பாக்கி! சில நூற்றாண்டுகளாக பல கோடி உயிர்களை பலி வாங்கியுள்ள மோசமான ஆயுதம்.

அமெரிக்க சட்டத்திட்டங்கள் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் குடாக்குத்தனமானவை. நீங்கள் ஒரு ஆளை சுட்டால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு ஜோடி குதிரைகளை திருடிவிட்டால் தூக்கில் போட்டு விடுவார்கள். அல்லது உங்களுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து வெகுமதி வேட்டயர்களை ஏவி விடுவார்கள். வன்மேற்கின் சட்டத்திட்டங்களில் இருந்து, வாழ்க்கை முறை வரைக்கும் துப்பாக்கி பல வித மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படிப்பட்ட துப்பாக்கி கலாசாரத்தை மொத்தமாக துடைத்தெறிய கிளம்பும் மனோபாலா அளவுக்கு பாடியான ஒரு வக்கீலின் கதைதான் “பிஸ்டலுக்கு பிரியாவிடை”.

ஒட்டு மொத்த அமெரிக்காவின் மோசமான பக்கங்களை பல இடங்களில் பகடி செய்து கொண்டே செல்கிறார்கள் அந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும்! முக்கியமாக செவிந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த ஒவ்வொரு துரோகத்தையும், செவ்விந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டத்தையும் ஆங்காங்கே கதையில் சொல்லி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடியாக பயணிக்கும் இந்த கதையை பற்றி சுருக்கமாக எழுதி படித்து பார்த்தால் “ஜாங்கோ” போல சீரியஸான ஒரு கதையாக தெரியும். அதனால் கதையை விளக்க முயற்சிப்பது அர்த்தமற்றது.

ஆனால் காலம் காலமாக அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் நிறைவேற்றப்பட்ட கொடுமைகளை பற்றியும், சட்டம் எப்படியெல்லாம் மேல்வர்க்கத்தினருக்கு உதவியது என்பது பற்றியும் படிப்பவருக்கு புரியும் வண்ணம் நகைசுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு செவ்விந்திய சிறுமி இன்னொரு செவ்விந்திய பெண்ணிடம் வாஷிங்டன் சதுக்கத்தில் இருக்கும் சுதந்திர தேவி சிலையை காட்டி அது என்னவென்று கேட்பாள். அதற்கு பதில் தெரியாத அந்த பெண் “அது வெள்ளையர்களோட கடவுளா இருக்கும். பாரு அது தலையில் மலர் வளையம் மாதிரி இருக்கு” என சொல்வாள்.

உடனே அருகிலிருக்கும் வெள்ளைக்கார காவலன் ” இல்லை.. அதுதான் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை” என்பான்.

இடைமறித்து கறுப்பின ஆசாமி ஒருவர் “ஆமாம்.. சுதந்திர தேவி சிலை. ஆனா அதை கட்டினது அடிமைகளை வெச்சுதான்” என்று பதில் அளிப்பார்.

அமெரிக்காவின் சுதந்திரம், ஜனநாயகம் எல்லாம் பூர்விக மக்களின் எலும்பு கூடுகள் மீதும், கருப்பினத்தவரின் ரத்ததாலும்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன என்று சொல்லாமல் சொல்லும் காட்சிகள் அவை.

இதுபோல கதை முழுவதுமே ஒரு தீவிரமான அரசியல் பகடித்தான். சிரிக்க வைக்கும் அதே நேரம் சிந்திக்கவும் வைக்கும். 4 பாகம் கொண்ட இந்த கதையை படித்து முடித்த போது “டாவின்சி கோட்” மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை பார்த்து முடித்த உணர்வு..

கதையின் இறுதியில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, துப்பாக்கி – மனிதாபிமானமற்ற ஆயுதம். இரண்டு, சட்டம் – துப்பாக்கியை விட பலமான ஆயுதம். இரண்டுமே உபயோகிப்பவரின் வலிமையை பொறுத்து எதிராளி மீது பலமாக பாய்கிறது.

ஜாக் கிர்பி: கூட்டுக்குள் அடங்காத பறவை

ஜாக் கிர்பியை வெறுமனே மார்வெலுக்கு வேலை செய்தார், டிசிக்கு வேலை செய்தார் என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது.  அப்படி ஒதுக்கிதான் அவருக்கு கொடுக்க வேண்டிய அங்கிகாரம் எதையும் கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என்று கூட சொல்லலாம்.

1917ல் இதேநாளில் பிறந்த ஜாக் கிர்பிக்கு இன்று 102வது பிறந்தநாள். ஸ்டான் லீயை பற்றி எழுதும்போதெல்லாம் “மார்வெல் காமிக்ஸின் பிதாமகன்” என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஜாக் கிர்பியை அமெரிக்க காமிக்ஸ் பிதாமகன் என்று கூட சொல்ல முடியாது. அவர் காமிக்ஸில் மட்டும் பணியாற்றவும் இல்லை. காமிக்ஸ் ஆசிரியர், ஓவியர், கார்ட்டூன் எழுத்தாளர், இரண்டாம் உலகபோர் காலத்தில் போராளி என்று பன்முகத்தன்மையோடு செயல்பட்டவர் ஜாக்.

சூப்பர் ஹீரோ கதைகளை எழுதும்போது வெறுமனே சூப்பர் சக்திகள், சூப்பர் வில்லன்களை மட்டும் எழுதாமல் அதற்குள் ஒரு ஆழமான அரசியல் பார்வையையும் கொண்டு வருபவர் ஜாக் கிர்பி. முதல்முதலில் ஜாக் கிர்பி தனது பயணத்தை கார்ட்டூன் தொடர்களுக்கு படம் வரைவதன் மூலமே தொடங்கினார். புகழ்பெற்ற மற்றொரு காமிக்ஸ் ஆசிரியரான ஜோ சைமனுடன் இணைந்து பல கதைகளை உருவாக்கினார். டிசி கிரேக்க கடவுள்களின் பிரதிபலிப்பாக சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி கொண்டிருந்த காலம். விற்பனை ரீதியாகவும் அது பெரும் வெற்றி பெற்றிருந்தது. அப்போதெல்லாம் வைகிங் இனத்தை காட்டுமிராண்டி கூட்டமாகவே மேற்கத்திய வர்க்கம் நினைத்து கொண்டிருந்தது. அந்த காலத்திலும் வைக்கிங்களின் கடவுளான தோர், ஓடின் போன்றவர்களை மார்வெல் காமிக்ஸ்களில் கொண்டு வந்து வெற்றிபெற செய்தார்.

முதல் கறுப்பின சூப்பர் ஹீரோ என்று இன்றுவரை கொண்டாடப்படும் “பிளாக் பாந்தர்” கதாப்பாத்திரத்தை உருவாக்கினார். மார்வெலுக்காக ஹல்க், தோர், எக்ஸ் மேன், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என பல கதாப்பாத்திரங்களை உருவாக்கினாலும், மார்வெல் என்னும் சின்ன வட்டத்திற்குள் சுற்றி வந்தவரல்ல கிர்பி. மார்வெல் டைம்லி காமிக்ஸ் என்ற பெயரில் இருந்த போது Mad magazine, Harvey Comics போன்றவற்றிற்கும் பல கதைகளை எழுதினார். பாப்பாய் தி செய்லர் மேன் கார்ட்டூனுக்கு ஜோ சைமனுடன் இணைந்து பணிபுரிந்தார்.

நாட்டுப்பற்று மிக்கவர் ஜாக் கிர்பி. இரண்டாம் உலக போர் சமயத்தில் தனது வேலைகளை விட்டுவிட்டு அமெரிக்க ராணுவத்திற்கு சேவை செய்ய போய்விட்டார். சவான்னா கேம்பில் பணியில் ஈடுபட்டிருந்த ஜாக் கிர்பியை பற்றி கேள்விபட்ட லெப்டினென்ட், அவருக்கு அந்த பகுதியின் வரைப்படம் தயாரிக்கும் பணியை அளித்தார்.

உலக யுத்தம் முடிந்து மீண்டும் தனது காமிக்ஸ் பணியை தொடங்கிய ஜாக் கிர்பியிடம் அரசியல் தாக்கம் அதிகமாகவே இருந்தது. 1970களில் மார்வெல் காமிக்ஸ் உயர்ந்த இடத்தை அடைந்திருந்தது. படைப்புகளின் நேர்த்தியை தாண்டி வெறுமனே சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி கொண்டிருப்பதாக ஜாக் கிர்பி கருதினார். மேலும் அவரை ஒரு கலைஞனாக அவர்கள் சரியான அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது அவரது எண்ணமாக இருந்தது. மார்வெலில் இருந்து வெளியேறிய கிர்பி டிசியில் இணைந்தார்.

அப்போதுதான் இன்றுவரை கிர்பியின் மாஸ்டர் பீஸாக உலகம் புகழும் “நியூ காட்ஸ்” தொடரை உருவாக்கினார் கிர்பி. போஸ்ட் அபோகலிப்ஸ் ரக கதைகளை சோதித்து பார்க்க விரும்பிய கிர்பி “கமான்டி: தி லாஸ்ட் பாய் ஆன் எர்த்” என்னும் கதையையும் எழுதினார். அந்த கதை அவரது மற்ற சூப்பர் ஹீரோ கதைகளை போல இல்லாவிட்டாலும் அனைவராலும் கவனிக்க வேண்டிய ஒரு கதை.

இப்படி தொடர்ந்து அமெரிக்க காமிக்ஸிலும், கார்ட்டூனிலும் தனது ஆளுமையை செலுத்திய கிர்பிக்கு டிஸ்னி செய்ததுதான் மிக கேவலமான விஷயம். மார்வெலிடம் மொத்த உரிமைகளையும் வாங்கும்போது அதில் ஜாக் கிர்பி உருவாக்கிய எந்த கதாப்பாத்திரத்திற்காகவும் அவருக்கு காப்புரிமை தொகை தரவே இல்லை. இதுகுறித்து கிர்பியின் மகன் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். ஆனால் கிர்பி சம்பளம் பெற்றுக் கொண்டுதான் வேலை செய்தார் எனவும் அதனால் சூப்பர் ஹீரோக்களின் காப்புரிமையில் ஜாக் கிர்பிக்கு பங்கில்லை என்றும் மார்வெல் வாதிட்டது. நீதிமன்ற தீர்ப்பு மார்வெலுக்கு சாதகமாக இருந்தது. 2014ல் தொடரப்பட்ட மேல் முறையீட்டுக்கு பிறகே ஒரு கலைஞனாக, ஆசிரியராக ஜாக் கிர்பிக்கு அந்த கதாப்பாத்திரங்களில் உரிமை இருக்கிறது என தீர்ப்பு வெளியானது.ஒரு கலைஞன் தனது படைப்புக்காக உரிமை கேட்டு போராட நேர்ந்ததெல்லாம் மிகப்பெரிய அவலம்.

நிறைய எழுதினால் படிக்க சிரமப்படுவீர்கள் என்பதால் சுருக்கி எழுதியிருக்கிறேன். நன்றி!