Tag Archives: Speedman

Speed Man – Part 2

204‌0 பது நம் வாழும் பூமி இந்திய பெருங்கடல். Australia வை சார்ந்த சுற்றுலா கப்பல் 1000 பயணிகள் உடன் கடலில் விபத்துக்குள்ளானது. ஒரு சில பயணிகள் கடலிலும், பலர் கப்பலிலும் உயிர்க்கு போராடி கொண்டிருந்தனர். அருகில் உள்ள கடற்படை வீரர்கள் அவர்களை காப்பாற்ற விரைந்து வந்து கொண்டு இருந்தனர். கப்பல் இருந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் வானில் இருந்து ஒரு ஒளி கடலில் விழுந்தது. ஒளி விழுந்த அதிர்வில் கப்பல் விரைவாக மூழ்கியது. ஒளி அங்கு கடலில் உயிர்க்கு போராடிய மக்கள் மீது ஒளி தஞ்சம் அடைய முயற்சி செய்து அவர்கள் உடல் தாக்குப்பிடிக்காமல் உடல் எரிந்து கடலில் மிதந்தது. கடற்படை வீரர்கள் அங்கே வரும்பொழுது கப்பல் கடலில் முழுவதும் மூழ்கியது. பலர் கடலில் மூழ்கியும் சிலர் கடலில் தீயல் எரிந்தும் இறந்தனர் மற்றும் அந்த கடல் பகுதியில் வாழ்ந்த சில சுறாக்களும் தீயல் எரிந்து இறந்தது கடற்படை வீரர்களுக்கு தெரியவந்தது. பல நாடுகளை சார்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட இந்தியாவை சார்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர் அனைவரும் கப்பல் விபத்தில் இறந்து விட்டனர் என‌ அறிவிக்கப்பட்டது.

இலங்கை, தலரம்பா கடற்கரை காலை மணி 04:50. கடற்கரையில் ஒரு உடல் கரை ஒதுங்கி கிடைக்கிறது என அங்கு இருக்கும் கடல்சார் காவல் துறையினர்க்கு தகவல் கிடைக்கிறது ‌. மருத்துவ குழு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் விரைந்து சென்றனர். உடலில் உயிர் இருக்கிறது என்று அறிந்த மருத்துவர்கள் அரசு ஆஸ்பத்திரி யில் வைத்து சிகிச்சை கொடுக்கிறார்கள்.

சிகிச்சை அளிக்கும் போது அவர் தமிழ்மொழியில் முனகினார் என அறிந்த காவல்துறையினர் இலங்கை தூதரகம் மூலம் இந்தியா தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்தியா ‌‌‌தூதரகம் தமிழ் நாட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த நபரின் புகைப்படம் மட்டும் அங்கு அடையாளங்களை‌ அனுப்பி வைத்தனர்.

ஒரு சில நாட்களில் அந்த நபர் பெயர் அர்ஜுன், கப்பல் விபத்தில் இறந்து விட்டார் என அறிவிக்கபட்டவர் என்பது அனைவருக்கும்‌ தெரியவருகிறது.
அவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் முயற்சியில் அர்ஜுன் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகிறார்கள். இலங்கை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மருத்துவ குழு அர்ஜுனுக்கு கடந்த காலம் ஞாபகம் இல்லை என தெரிவித்தனர்.

அர்ஜுன் அவர் அக்கா, மாமா உடன் தன் கடந்த காலம் ஞாபகம் இல்லாமல் வாழ்க்கை ஆரம்பிக்கிறார்.‌ அர்ஜுன்‌ தனக்கு ஓதுக்கபட்ட அறையில் தனிமையில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இருந்தான் அனால் சுறுசுறுப்பாக
இருந்தான். அர்ஜுன் அறைக்கு‌ள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதுவே அர்ஜுன் மாமாக்கு அர்ஜுன் அறையில் கேமரா வைக்கும் என்னம் தோன்றியது. ஒரு நாள் அதுவும் கைக்கூடியது தன் நண்பனின் ஆலேசனை படி அர்ஜுன் அறை கதவில் சிறு தோளையிட்டு கேமரா பொருத்தப்பட்டது. அன்று முதல் அர்ஜுன்‌ மாமா கெஸ்வன் கேமரா மூலம் அர்ஜுனை‌ கண்காணித்து வந்தான். அர்ஜுன் தனது அறையின் சுவர்களியின் மீது நடந்து கொண்டுருந்தான் அர்ஜுன்‌ உடம்பில் இருந்து ஒரு விதமான ஒளியும் அறை முழுவதும் பரவி இருந்தது இதை சற்றும் எதிர்பார்க்காத கெஸ்வன்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்து இருந்தது அர்ஜுன் பல விதமான ஓவியங்களையும் வரைந்து வைத்துருந்தார். அர்ஜுன்‌க்கு ஏதோவொரு சக்தி இருக்கிறது என்று தெரிந்த கெஸ்வன்க்கு அன்று இரவு தூக்கம் பல கனவுகள் தந்தது. அர்ஜுனுக்குள் இருக்கும் திறமையை பணமாக மாற்றும் ஆசை உருவாக்கியது. இதுவே அர்ஜுன் மித்திரன் ஆக‌ மாற காரணமாகிறது.

Speed man – part 1

இந்த உலகம் பல சக்தி வாய்ந்த மனிதர்களை பார்த்திருக்கிறது. அவர்களின் ஒருவன் தான் இவன்.

டெரிபல் என்ற கிரகத்தில் சாக்ஸ் என்ற அரசன் பல வருடம் ஆண்டு வந்தார். ஆனால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.. இதனால் அவருடைய மனைவி மற்றும் கிரக வாழ் மக்களும் வருத்தத்துடன் இருந்தார்கள்.

ஒரு நாள் அந்த கிரகத்தில் ஒரு ஒளி வானில் இருந்து விழுந்து மலையை தாக்கியது. ஒளி தாக்கிய மலை பகுதியில் இருந்து அந்த கிரகத்துக்கே இருட்டிலும் வெளிச்சம் கிடைத்தது. அந்த வெளிச்சம் அங்கு இருக்கும் அனைவரும் மேலும் ஊடுருவ முயற்சி செய்து அவர்களை அழித்தது. இதை அறிந்த அரசன் சாக்ஸ் அந்த வெளிச்சத்தை அனைக்க சென்றான்.

அவர் வந்த நொடி அந்த வெளிச்சம் ஒரு உருண்டை வடிவில் மாறி அவர் கால் அடியில் விழுந்தது. அனைவரும் பின் வாங்க அரசர் சாக்ஸ் அதை கையால் எடுத்தார். எடுத்த நொடி அவர் உடம்பில் தஞ்சம் அடைந்தது அந்த வெளிச்சம்.

அவர் எழுந்த நிமிடம் உடம்பில் வழு குடியது, கண் நெருப்பாய் எரிந்தது.
டெரிபல் கிரகத்தில் ‌‌ஜபூதங்கல் அடக்கி ஆண்ட அரசர் ஒலி, ஒளி‌ யும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அரசர் சாக்ஸ் யின் கர்ஜனை அந்த கிரகமோ அதிர்ந்தது.

அன்று முதல் சாக்ஸ் தான் அரசன் இல்லை உங்கள் கடவுள் நான் என்றே கூறினான். அரசிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

தாம்ஸ் டெரிபல் கிரகத்தில் உடல் இல்ல மந்திரவாதி. தாம்ஸ் அரசியின் முன் தோன்றி உங்கள் வயிற்றில் திசுக்களை உடனடியாக அழித்துவிடுங்கள்.இல்லையெனில் உங்கள் குழந்தை நம் கிரகத்தையும் நம் அரசரையும் அழித்துவிடும். அதை பார்க்க நிங்களும் இருக்கப்போவதில்லை என்றான்.

அரசி தன் வயிற்றில் இருப்பது குழந்தைகள் இல்லை என்றும் தனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று கூறினாள். சாக்ஸ் எனக்கு நீ வேண்டாம் குழந்தை தான் வேண்டும் என்று கர்ஜித்தான்.

குழந்தை பிறக்கும் நேரம் வந்தது. அரசிக்கு முதல் குழந்தை பிறந்த அடுத்த நெடி இன்னெறு குழந்தை பிறந்தது.. அரசியின் உயிர் பிரிந்தது.

மித்ரன், எமா என பெயர் வைத்து இரண்டு குழந்தைகளுடன் சாக்ஸ் நிம்மதியாக வாழ்ந்தான். ஆனால் சாக்ஸ் மக்களை அடிமை யாக்கி அவர்களை வைத்து விரத்தை இருவருக்கும் கற்று கொடுத்தான். அவர்கள் இருவரும் இரக்கம் இல்லாமல் வளர்க்கப்பட்டனர். மித்ரன் (ஒலி யின் சக்தி)பலத்துடன் மூளை யும் பயன்படுத்தி னான் , எமா(ஒளி யின் சக்தி)பலத்துடன் முயற்சி யை பயன்படுத்தினான். அவர்களுக்கு யார் அடுத்த டெரிபல் யின் கடவுள் என்று போட்டியிம் இருந்தது. டெரிபல் கிரகத்தில் யார் SPEED MAN ஆக இருக்கிறார்களே அவரே அரசர்.

இதை மந்திரவாதி மூலம் அறிந்த சாக்ஸ் அமைதி காத்திருக்க.இருவரும் சாக்ஸ் யை பார்க்க வந்தார்கள். அரசரே எங்கள் இருவருயில்.. யார் அடுத்த டெரிபல் யின் கடவுள் என்று நிங்கள் முடிவு செய்ய வேண்டும்.. சாக்ஸ் கண்கள் சூடு ஆகா பொருமை யாக சொன்னான் இங்கு நான் மட்டுமே கடவுள்.. டெரிபல் க்கு தேவை அரசர் மட்டுமே உங்கள் இருவரு யில் யார் அடுத்த அரசர் என்று முடிவு செய்யும் நேரம் வந்தது விட்டது.

உங்கள் யில் யார் SPEED MAN என்று நீங்கள் நிருபிக்க வேண்டும். உங்களுடைய போட்டியால் இந்த கிரகத்துக்கு பாதிப்பு ஏற்படகூடாது. ஆகவே இந்த போட்டி நம் கிரகத்தி யில் இருந்து 25000 அடி உயரத்தில் நடக்க வேண்டும். உங்களின் ஒருவர் மட்டுமே டெரிபல் க்குள் உயிரேடு வர வேண்டும்.

மீறினால் இருவரும் என்னால் அழிக்க படுவீர்கள். கடைசி யாக இங்கு நான் மட்டுமே கடவுள்……….

இருவருக்கும் நடக்கும் போட்டி யின் கிழமை மந்திரவாதி தாம்ஸ் கூறினார். இன்னும் 24 மணி நேரத்தில் பேட்டி தொடங்கும். நீங்கள் இருவரும் அதற்கான பயிற்ச்சியை மேற் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சில ஆலோசனை சொல்ல நான் கடமைபட்டு உள்ளேன். நீங்கள் 25000 அடி மேலே சென்ற பின்னர் தான் போட்டி யிட வேண்டும். மேலும் 15000 அடி மேலே சென்றால் உங்களால் நம் கிரகத்துக்கு திரும்பி வர முடியாது. ஆகவே உங்களின் ஒருவர் 40000 அடி மேலே சென்றாள் மீதி இருக்கும் ஒருவனோ இங்கு அரசர்…

இங்கு வரும் ஒருவருக்கு டெரிபல் யின் கடவுள் ஆக வழி யை நான் காட்டுகிறோன்….

இருவரும் கடுமையான பயிற்சி மேற்கொண்டனர். ஆனால் மித்ரன் க்கு ஒலி யின் சக்தி மூலம் பறக்க முடியவில்லை. எமா ஒளி யின் சக்தி மூலம் பறக்க ஆரம்பித்தான். மித்ரன் க்கு மனதில் தோல்வி பயம் வந்தது.
மனம் திசை மாறியது. சிந்தித்தான் நமக்கு தேவை வெற்றி இல்லை டெரிபல் யின் அடுத்த கடவுள் பதவி.

மந்திரவாதியிடம் சென்றான் மித்ரன் நான் கடவுள் ஆக உங்களிடம் ஒரு வலி இருக்க..நான் ஏன் அரசர் ஆக முயற்சிக்க வேண்டும். நான் கடவுள் ஆக வலியை சொல்லுங்கள்.

அரசர் ஆக இருக்கும் ஒருவருக்கே டெரிபல் யின் கடவுள் ஆக முடியும். அதற்கு இந்த போட்டியில் வெற்றி பெற்று அரசர் ஆக வேண்டும்.

வெற்றி உன்னை நோக்கி காத்திருக்கும். வென்று வா உன்னை அரசர் ஆக்க காத்திருக்கிறோன் என்றர் மந்திரவாதி.

மித்ரன் நம்பிக்கை கூடியது. பறக்க முயற்சி செய்தான் அதிலும் வெற்றி மந்திரவாதி மாய வார்த்தை நம்பிக்கை கொடுத்தது. மித்ரனும், எமானும் போட்டிக்கு தயார் ஆகினர். இருவரும் சம பலத்துடன் பறந்தனார். 25000 அடி தான்டியதும் இருவருவுடைய கண்களும் சிவந்தன சன்டை இட்டனர். அவர்களின் நோக்கம் 15000 அடி மேல் ஒருவரை ஒருவர் தள்ளுவதே… சன்டை இரவும் பகலும் நடந்தது இன்னும் ஒரு சில அடிகளிள் டெரிபல் யின் ஆகயே எல்லை வெற்றி யின் விலும்பில் மித்ரன்…

எதிர் பார்க்கத நேரத்தில் ஒரு எரிக்கல் மோதி இருவரும் டெரிபல் யின் ஆகயே எல்லை தான்டி வீசா பட அவர்கள் உடம்பு எரிந்து ஒளி யாக மாறி பூமியை நேக்கி விழ ஆரம்பித்தது..

இவர்களின் போட்டி இனி நம் வாழும் பூமியில்….

Follower post : Gopala Krishnan