நான் தான் George of Steel the Watcher சென்ற பதிவில் Mobius Chairயை பயன்படுத்தி இந்த cosmos crossover universeயினுள் நுழைய முற்பட்ட சக்தி யார் எனக் கண்டுபிடித்துவிட்டேன் அவன்தான் God Emperor Doom.
Doom ஒரு சாதாரண மனிதன் அவன் எப்படி கடவுளைப் போல் மாறினான் இவ்வளவு சக்திகள் அவனுக்கு எப்படி கிடைத்தது? அவனை நான் தொடர்ந்து கண்கானிக்க வேண்டும் என Mobius Chairயிடம் கேட்க. எனது எண்ணங்க god emperor doomவுடன் இணைந்தது
Latveria என்னும் நாட்டைத் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த மொத்த பிரபஞ்சத்தையுமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு அரசனைப் போல…..
அதே மனிதனுக்கு இந்த பிரபஞ்சமே அவனை வழிபட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ஒரு கடவுளைப் போல….
ஒரு சாதாரண மனிதனுக்கு இவை அனைத்தும் எட்ட முடியாத எல்லைகள், தகுதிக்கு மீறிய ஆசைகள். ஆனால் அது ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமே
victor von doomகு அல்ல
சிறு வயதிலேயே அவனது தாய் சாத்தானாலும் தந்தை சமூகத்தாலும் அவனை விட்டுப் பிரிந்தனர்.
ஆனாலும் doomயின் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவனை வளர்த்தது . அவனது ஆசையை அடைவதற்காக பயங்கரமாக உழைத்தான். ஒரே சமயத்தில் Magic மற்றும் Science இரண்டிலும் Master ஆனான். ஆனால் என்னதான் reed richards அளவிற்கு அறிவியலிலும் dr strange அளவிற்கு magicயிலும் பூந்து விளையாடினாலும் நினைத்த உடனே எல்லாம் கடவுளாகிவிட முடியாது. அதற்கு ஏற்ற நேரமும் அந்த நேரத்திற்கான கடினமான முடிவுகளும் தேவை
அந்த நேரம், ஒரு நாள் வந்தது. Beyonders என்னும் கடவுள்கள் இந்த மாபெரும் Multiverseயிலுள்ள பல Universeகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழித்துக்கொண்டு இருந்தார்கள். அதற்காக அவர்கள் அந்தந்த universeகளிலுள்ள தங்களால் உருவாக்கப்பட்ட molecule manஐ பயன்படுத்திக் கொண்டார்கள். Beyondersயின் அடுத்த இலக்கு பிரம்மாண்டமான Marvel மற்றும் DC universeயை அழிப்பது இதனை அறிந்து கொண்ட dr doom. Marvel universeஐ சேர்ந்த molecule manஐ beyondersஐ அழிக்கக்கூடிய ஆயுதமாக மாற்றினான்.
அந்த அழிவு நாள் நெருங்கியது marvel universeயின் மேல் வானத்தில் 8 மணி நேரம் Dc universe தெரிந்தது. அதே நேரம் Dc universeயின் வானில் Marvel universe தெரிந்தது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதத் தயாரானது. Marvelயின் mightiest heroesவும் DCயின் Greatest Heroesவும் என்ன செய்வது எனத் தெரியாமல் தினறிப் போனார்கள். ஆனால் dr doom என்னும் ஒருவனுக்கு மட்டும் இதற்கான தீர்வு தெரிந்திருந்தது.
Doom molecule manஐப் பயன்படுத்தி அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்களான beyondersயின் இடத்திற்கே சென்றான். இருள் சூழ்ந்த அவ்விடத்தில் மேடை போன்ற ஒன்று மிதந்து கொண்டிருந்தது அதில் ஏறி நின்றான் doom. உடனே அந்த இடம் முழுவதும் வெண்ணிற ஒளி சூழ்ந்தது இந்த பிரபஞ்சமே அவனிடம் பேசுவது போல் ஒரு குறல் கேட்டது
அந்த குறலுக்கு சொந்தக்காரர்கள் Beyonders. Beyonders Doomயை நோக்கி
“நாங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள், Dreamers, Destroyers, பிரபஞ்சங்களின் ரியாலிட்டிகள் அனைத்தும் எங்களின் திடீர் எண்ணங்கள். எங்களை எதிர்க்க யாருக்கு தைரியம் உள்ளது” எனக் கேட்க
“நான் Doom எனக்கு தைரியம் உள்ளது” எனக் கூறுகிறான் doom.
உடனே Beyonders Doomஐ நேருக்கு நேராக பார்க்க அவர்களின் realmஐ திறந்து வெளியே வருகிறார்கள். சுதாரித்து கொண்ட doom தான் ஆயுதமாக மாற்றிய molecule manஐ நொடிப்பொழுதில் beyonders realmயினுள் அனுப்பி வெடிக்க வைக்கிறான். Beyondersஆல் உருவாக்கப்பட்ட molecule manயிடமிருந்த ஏற்பட்ட explosionயில் கடவுள்களான அனைத்து beyondersவும் அழிந்து போகிறார்கள் அவர்களின் ஒட்டுமொத்த சக்திகளையும் தான் எடுத்துக்கொண்டு God Doomஆக உருவெடுக்கிறான் dr doom.
கடவுளானதும் இரண்டு universeகளுக்கு இடையே ஏற்பட இருந்த மோதலை தனது சக்திகளால் தடுத்து நிறுத்துகிறான் doom அதற்கென doomஐ ரொம்பவும் நல்லவன் என நினைத்துவிட வேண்டாம். Doomயின் அடுத்த நோக்கம் பிரபஞ்சங்களின் அரசனாக வேண்டும் அதற்கு marvel, dc மற்றும் மூன்றாவது universe ஆன ccuவை அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
Doom இப்போது கடவுளாக இருந்தாலும் அவனால் அவனது கடவுள் சக்திகளை முழுமையாக marvel மற்றும் dc universeயில் மட்டும்தான் பயன்படுத்த முடியும் CCUவில் முடியாது. அந்த CCUவில் உள்ள heroesஐ வீழ்த்துவதற்காக Marvel மற்றும் DC universeகளில் உள்ள முக்கியமான சிலரைத் தனது படையில் இணைத்துக்கொள்ள விரும்புகிறான் doom. அவனது பார்வை இப்போது Marvel universeயில் உள்ள Black Quadrantஐ நோக்கித் திரும்புகிறது. Black Quadrantதான் Thanosவுடைய Kingdom…………………
