Batman and Ironman Rise of Super heroes Part – 3

Ultron, Howard Stark இன் அந்த பழைய பாழடைந்த, யாரும் பயன் படுத்தாத military base சென்று அங்கு இருக்கும் சிதைந்த robots parts களை வைத்து ஒரு முழு இயந்திர மனிதனாக உருவாகிறான். பின் இந்த பூமியில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், tony இன் satellite இன் உதவியுடன் தன் கண்ணில் உள்ள display வில் பார்க்கிறான். பின் Tony கூறிய வார்த்தையை அவன் கேட்டதும் Ultron தனக்குள் உரையாடுகிறான்.

“இல்ல இல்ல இப்படி நடக்க கூடாது, இப்படி நடந்த இந்த உலகத்தை மனிதர்கள் கிட்ட இருந்து காப்பாத்த முடியாது”

‘மனிதர்களுக்கு இந்த உலகத்தை எப்படி பாதுகாக்கணும் ன்னு தெரியாது, தேவை இல்லாத போர், போட்டி, பொறாமை ன்னு வாழ்ந்துட்டு இருக்காங்க.’

“அப்ப நாம தான் இந்த மனிதர்களின் அழிவின் மூலம் புது உலகத்தை உருவாக்கனும்”

‘Tony stark நம்ம திட்டத்துக்கு முட்டுக்கட்டையா நிப்பான்.’

” அவனை அழிப்பது மட்டுமே என் ஒரே இலக்கு. அதுக்கு ஒரு வழி இருக்கு, அதை இவன் பாத்துக்குவான்”

இவ்வாறு தனக்குள் பேசிக்கொண்டு அங்கு waste parts களை வைத்து பல Ultron army களை உருவாக்கி கொண்டு இருந்தான். மேலும் தனக்கு அதிகமாக robot parts தேவை என்பதால் வெளியில் உள்ள ஒவ்வொரு கடைகளிலும் தனது மற்ற ultron கள் மூலம் திருடினான்.

அடுத்தநாள் காலை

நடாஷா, ஸ்டார்க் இன் வீட்டிற்கு சென்று calling bell ஐ தட்ட, ஸ்டார்க் தன் mobile இல் யார் என்று அறிந்து கொண்டு கதவை திறக்கிறான்.

‘Hi டோனி உன் night பார்ட்டி எப்படி போச்சு, கண்ணை பார்த்த விடிய விடிய நடந்திருக்கும் போல.

“Hey அது ஒன்னும் பார்ட்டி இல்ல, அது என் அப்பா ஓட கனவு, அது அவர் இருக்கும் போது பண்ண முடியல, அதனால free education சொல்லி தர ஒரு அறக்கட்டளைய நேத்து open பண்ணேன்.”

‘Hey டோனி emotional ஆகாத, நா சும்மா தான் உன்ன கிண்டல் பண்ணேன்.’

“நா ஒன்னும் emotional ஆகளையே, என்ன பாரு ஜாலியா தானே இருக்கேன்”

‘ Tony, அவனை பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சதா’

“யாரு உன் boyfriend பத்தியா, Banner காணாம போன கொஞ்ச நாள்ல மறுபடி Quinjet-ல இருந்து சிக்னல் கிடைச்சது. ஆனா communicate பண்ண try பண்ணும்போது எதிர்ல தெரிஞ்சது என்னோட உருவம். it’s bit strange. கவலைப்படாத, சீக்கிரம் இங்க அவன் வருவான். இப்ப நீ தான் emotional ஆகிட்ட”

‘கஷ்டப்படுத்தாத tony, அப்புறம் உன்னை பியூரி உடனே வந்து பாக்க சொன்னாரு’

“அஹ என்னோட Secretary கிட்ட appointment வாங்கிக்க சொல்லு, அடுத்த 10 நாளைக்கு எனக்கு busy schedule தான், நா வேணா recommend பன்றேன். சீக்கிரமா appointment கிடைச்சுடும்.”

‘இப்ப அவர் appointment தான் உனக்கு தேவை, கொஞ்சம் நியூஸ் on பண்ணு டோனி.’

“ஏன் கேப்டன் க்கு marriage ஆ, எனக்கு எந்த invitation உம் வரலையே” என்று கூறி கொண்டு,

Tony தனது மொபைலில் news on செய்து அருகில் இருக்கும் கண்ணாடி display இல் screen transfer மூலம் பெரிய திரையில் இருவரும் பார்க்க தொடங்கினர். அதில் ‘வானில் இருந்து பல இடங்களில் பல இயந்திரங்கள் ஒவ்வொரு கடையாக சென்று, அங்கு உள்ள பொருட்களை சூறையாடின. பல பொருட்கள் ஒரு robot ஐ தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் ஆகவே இருந்தது. சில இடங்களில் இந்த இயந்திரங்கள் பலரை தாக்கியுள்ளது. அதில் 10 பேர் icu வில் சீரியஸ் ஆக உள்ளனர். இவைகளின் மாதிரிகளை சோதனை இட்டதில் Stark Industries இன் இயந்திரங்கள் என்று தெரிய வருகிறது. Mr. Tony Stark நாளை Security Council முன் ஆஜராக வேண்டும்’ என்று செய்தி ஒளிபரப்பப்பட்டது. News feed இல் Mac Gargan இன் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதை New york மேயர் Mr. Martin li தட்டி கேட்க வேண்டும். அவனை பிடிக்கும் பொறுப்பை இப்பொழுது அரசாங்கம் Martin li இடம் ஒப்படைத்து உள்ளது. என்ற News உம் கீழே சென்று கொண்டு இருந்தது.

“இது அந்த Hammer ஓட வேலையா இருக்கும்”

‘Tony, Pepper எல்லாத்தையும் சொல்லிட்டாங்க, நீ உன் lab ல எதையோ பண்ணிருக்க, இப்பவாது சொல்லு.’

அந்த நேரத்தில் pepper அங்கே வந்தார்.

‘டோனி என்ன மன்னிச்சிடு, நீ இப்படி கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல. உண்ண தவிர வேற எதுவும் எனக்கு முக்கியம் இல்ல, அதான் fury கிட்ட சொல்லிட்டேன்’-பெப்பர்.

“Hey pep, its ok. Its ok. என் மேல உனக்கு எந்த அளவுக்கு அன்பு இருக்குன்னு தெரியும்..”

‘Hi பெப்பர், உங்க ரொமான்ஸ் அ கொஞ்சம் நிறுத்தி நீங்கனா, என்ன போற வழில Avengers Headquarters ல drop பன்ன முடியுமா’-நடாஷா

‘Hi நடாஷா, please வாங்க’ – பெப்பர்

” Wait நானும் Avengers headquarters வரேன் என்னையும் அங்க drop பன்னிடு, ஆமா Fury இப்ப எங்க இருப்பாரு”-டோனி

‘வழக்கமா நீங்க சந்திக்கிற இடம் தான்’- நடாஷா

‘நீ புதுசா ஏதோ ஒரு suit ரெடி பண்ணிட்டு இருந்தியே வரி வரியா, அதுக்கு தான் வரியா. உன் lab ல பாத்துட்டேன்’-பெப்பர்

“அதை நான் ஒரு சின்ன பையனுக்காக பன்றேன். அவனை நா பாக்குறப்ப என்ன சின்ன வயசுல பாத்த மாதிரி இருக்கு. வருங்காலத்துல என்ன விட பெரிய genius ஆ வருவான்”

டோனி Avengers Headquarters க்கு சென்று தனது வேலைகளை முடித்து விட்டு, திரும்பும் வேளையில் Thor அங்கு வந்தார். அவரை சந்தித்து விட்டு fury ஐ பார்க்க SHIELD Head quarters க்கு சென்றார். இன்னொரு பக்கம் Alfred Coffee உடன் தனது எஜமானரை எழுப்ப சென்று கொண்டு இருந்தார்.

“Good morning Alfred”

‘Good After noon Master Wayne’

“Oh God, இன்னைக்கு morning ஒரு முக்கியமான meeting இருக்கு, என்ன ஏன் எழுப்பல Alfred.”

‘என்னை மன்னிச்சுடுங்க மாஸ்டர் Wayne, நாளுக்கு நாள் நீங்க தூங்குறதையே மறந்துட்டீங்க. நீங்க கடைசியா நல்லா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. உங்க அப்பா, அம்மா இறக்கும் போது நீங்க சின்ன பையன். உங்களை நல்லா பாத்துக்குவேன்னு சத்தியம் பண்ணிருக்கேன். உங்க உடல் நலத்துல மேல எனக்கு அக்கறை இருக்கு sir. அப்புறம் meeting ஐ Mr. Fox நல்ல படியா முடிச்சுட்டார். நீங்க அதை நினைச்சு வருத்த படாதீங்க Master wayne’

“I am sorry alfred”

‘Its ok sir, அப்புறம் உங்களை பாக்க Mr. Fox இங்க வந்துருக்கார். கீழ wait பண்ணிட்டு இருக்கார்.’

“Oh அப்படியா, இதோ கீழே வரேன்”

Bruce wayne உடனே எழுந்து Fox ஐ சந்திக்க கீழே சென்றார். Fox, wayne ஐ சந்திக்க 1 மணி நேரத்துக்கும் மேல் இங்கேயே காத்திருந்தார். Bruce wayne கீழே வந்து Fox ஐ சந்தித்து Meeting ஐ பற்றி கேட்டு அறிந்தார்.

“I am sorry Mr. Fox உங்களை wait பண்ண வெச்சத்துக்கு.”

‘Its ok Mr. Wayne, பேட்மேன் பகல் ல தூங்குறது தப்பு இல்ல, but Multimillionaire Bruce wayne இவ்வளவு நேரம் தூங்குறது தப்பு.’

“Sorry Mr. Fox. நீங்க காரணம் இல்லாம வர மாட்டீங்க. ஏதாவது புதுசா கொண்டு வந்துருக்கிங்களா.”

‘Its ok wayne. நாம Bat cave க்கு போலாமா. சில விசயம் பேசணும்.’

பேட்மேன், Alfred மற்றும் Fox ஆகிய மூவரும் bat cave க்கு சென்றனர். அங்கே இருக்கும் மானிட்டர் ஐ on செய்ய, நடந்த நிகழ்வுகளை விவரிக்க தொடங்கியது கோதம் நியூஸ். “கோதம் இல் பல robots, பல கடைகளில் புகுந்து நிறைய Raw Materiels ஐ திருடி கொண்டு வானில் சென்று மறைந்தது. எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்று எதுவும் தெரிய வில்லை. இதில் கடையின் உரிமையாளர் முதல், பொருட்கள் வாங்க சென்ற சில மக்களுக்கும் அந்த ரோபோட் ஆல் தாக்கப்பட்டு உள்ளனர். இதை விவரிக்க Gotham City Police Mr. John Jones ஐ நியமித்து உள்ளனர்.” என்று செய்தி ஒலிபரப்பப்பட்டது. அதையே பார்த்த படி இருந்தார் Wayne.

‘Mr. Wayne இத கொஞ்சம் பாருங்க. அந்த footage நல்லா பாருங்க.’-Fox

இன்னும் உற்று நோக்கிய wayne “அந்த image அ கொஞ்சம் zoom பண்ணுங்க, அதோட arc அப்புறம் அதோட Npu ரெண்டையும் தனியா எடுங்க. அதுல இருக்குற core ஓட coding அ மட்டும் தனியா Rendering பண்ணி எடுங்க. Mr. Fox இந்த coding ஆ பாருங்க.”

‘Mr. Bruce இது பாக்க…’

“Yes Mr. Fox இது அந்த Ultron தான். மறுபடியும் Ultron project அ உருவாகிருக்காங்க. கொஞ்சம் Upgraded version. இந்த footage அ பாருங்க”

‘இது அந்த ultron உருவாகிய வீடியோ ஆச்சே, இது உங்களுக்கு எப்படி கிடைத்தது’

“Mr. Fox நாம போக கூடாத இடத்தில் கூட, நமது கண் அங்கு இருக்க வேண்டும்”

‘அப்ப அந்த இடத்துல CCTV கேமராவ fix பண்ணிட்டீங்களா’

“இல்ல Mr. Fox அந்த கேமராவை Hack பண்ணிட்டேன்”

‘Mr. Wayne’ என்று கூறி ஒரு புன்னகையை வெளியிட்டார் fox.

“Mr. Fox இத ஒடனே நிறுத்தியாகனும். இந்த உலகம் இப்ப ஆபத்துல இருக்கு”

‘ஆபத்துன்னு தெரிஞ்சும் இதை யாரு உருவாக்கி இருப்பாங்க Mr. Wayne’

“ஒருத்தன் இருக்கான்” என்று wayne கூறும் போதே, பின் பகுதில் இருந்து ஒரு சத்தம்.

‘அது Tony Stark, அவன் தான் இதுக்கு காரணம்’ என்ற ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்ததும் Fox க்கு ஒரே அதிர்ச்சி…

அடுத்த பதிவில்…

Leave a comment