Tag Archives: Iron man

Batman and Ironman Part 4

Fox திரும்பி பார்த்து ஒரு அதிர்ச்சி பார்வை பார்த்து கொண்டு இருந்தார். Mr. Bruce சிறு புன்னகையுடன் அவரை வரவேற்றார்.

“Hello Victor”

‘Hi bruce, உன்கிட்ட ஒரு முக்கியமான விசியத்தை சொல்லணும். இந்த ultron எல்லாம் இப்ப New york ஓட old military base ல இருக்கு. இது தன்னை தானே பல மடங்கு பெருக்கி கிட்டே போகுது. இந்த கடை திருட்டே, ultron ஒரு army ய உருவாக்க தான். அந்த base ல, ஊடுருவி போகும் போது heat vision அதிகம் தெரிவதை, நீங்களே பாருங்க’

“Oh my god, இது ரொம்ப வேகமா உருவாகுது, இதை உடனே தடுக்கணும்”

‘என்னால, அதோட internet அ break பண்ண முடியல, நா break பண்ண முயற்சிக்கும் போது, அது என்கூட சண்டை போட்டுட்டு இருக்கு. நா அது கூட முடிஞ்ச வரைக்கும் போராடிட்டு இருக்கேன். But அதால என்னை control பண்ண முடியாது. Because நா முழு machine கிடையாது. சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க. நான் முடிஞ்ச வரைக்கும் internet மூலமா ultron எங்கயும் போகாம தடுத்து நிறுத்துறேன். எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியும் ன்னு தெரியல.’

“இப்ப நமக்கு பேச நேரம் இல்லை. நாம உடனடியாக ஏதாவது பண்ணனும். Mr. Fox நா உங்களை மறுபடியும் வந்து சந்திக்கிறேன். Victor நீங்க முடிஞ்ச வரைக்கும் சமாளிங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.”

‘Ok bruce’-cyborg.

“Ok Mr. Wayne. எனக்கும் ஒரு முக்கியமான meeting இருக்கு. நா மறுபடியும் உங்களை மீட் பன்றேன்”. -Fox

Cyborg மற்றும் fox இருவரும் அங்கு இருந்து சென்று விட்டனர். Bruce க்கு tony மீது மேலும் கோபம் அதிகமானது.
இன்னொரு பக்கம் Tony Stark, Nick fury ஐ சந்திக்க அவர் இருக்கும் base ற்கு சென்றார்.

“Hello Mr. Stark”

‘Hello fury’

“இப்ப எல்லாம் போர் கால ஆயுதங்களை தயாரிக்கிறதுல ரொம்ப busy ஆ இருக்க போல.”

‘நா என்னைக்குமே ஆயுதங்களை வித்தது இல்ல fury’

“அப்போ இதெல்லாம் என்ன Tony ?”

‘இது என்னோட ஒரு சிறந்த கண்டுபிடிப்பு. ஒரு Scientist ஓட படைப்புல சில தவறுகள் நடக்கலாம்.’

“உன்னோட இந்த தவறு, இந்த உலகத்துக்கே ஆபத்த விளைவிக்க போகுது”

‘அப்படியா, hey பியூரி ultron project இந்த உலகத்தை ஏலியன் கிட்ட இருந்து நம்மல காப்பாத்தும் ன்னு நினைச்சேன். ஆன அது இப்படி மாறும் ன்னு நினைக்கல. அதை உருவாக்குனது நான், இதை நானே அழிக்கிறேன். அதை எப்படி அழிக்கணும் ன்னு எனக்கு தெரியும்’

“உன்னோட பேச்சுல எனக்கு பயம் மட்டும் தான் தெரியுது”

‘வேணும்னா மறுபடியும் சொல்றேன். இப்ப என்ன தெரியுதுன்னு சொல்லு’

“இங்க பாரு Tony உன் அப்பா எனக்கு நல்ல friend, அதுக்காகத்தான் உன்ன இங்க கூப்பிட்டு வெச்சு பேசிட்டு இருக்கேன். உன்னோட செயல் எல்லாம் உன் அப்பா பேர கெடுக்குற மாதிரி இருக்கு”.

‘பியூரி என்ன நம்பு அந்த ultron project அ நான் கண்டிப்பா அழிக்கிறேன். எனக்கு இப்ப இருக்குற ஒரு பிரச்சனை அந்த security council தான்’.

“இங்க பாரு Tony, உன்கிட்ட இப்ப எதுவும் இல்லை, உன் நண்பர்களும் இப்ப இல்லை, இந்த ultron பிரச்சினைய நான் பாத்துக்குறேன். நீ அந்த council அ கவனி”

‘பியூரி, வரும் போது Thor ஆ பாத்துட்டு வந்தேன். அவனும் சில பிரச்சனைல இருக்குறதா சொன்னான்’

மேலும் தோர் உடன் நடந்த உரையாடல்களை அனைத்தையும் பியூரி இடம் கூறினான்.

“உன்னை ரெண்டு அடியாவது அவன் அடிச்சிருக்கணும், சும்மா விட்டுட்டான். உனக்கு ஒரு கடைசி வாய்ப்பு தரேன். அந்த ultron அ நீ மொத்தமா அழிச்சிடு, மறுபடியும் அதை உருவாக்க கூடாது. இந்த security council ல நான் பாத்துக்குறேன்”.

‘இது போதும் மத்ததை நா பாத்துக்குறேன்’

“நா உன்ன நம்ப மாட்டேன். உன்கூட நா ஒருத்தனை அனுப்புறேன். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து work பண்ணி ஆகணும்.”

‘யாரு கேப்டன் அமெரிக்கா வா’

“அவர் தலைமறைவா இருக்கார். எங்க இருக்கார்ன்னு தெரியல.”

‘Dr. Banner கூட இருந்தா நல்லா இருக்கும், நா அவரை ரொம்ப miss பன்றேன். எனக்கு ultron project க்கு ரொம்ப helpful ஆ இருக்கும்.’

“Tony…உன்னோட partner யாருன்னு கூடிய சீக்கிரம் உனக்கே தெரியும், எனக்கு முக்கியமான meeting இருக்கு நா கிளம்புறேன்”

‘Ok Mr. Fury நானும் கிளம்புறேன் எனக்கும் நிறைய work இருக்கு.’ என்று கூறி கை குலுக்கி அங்கு இருந்து விரைந்தார் Tony. அந்த நேரத்தில் தன் கையில் இருக்கும் watch இல் இருந்து ஒரு Ant size இல் இருக்கும் ஒரு எலெக்ட்ரிக் Ant பியூரி இன் சட்டை பாக்கெட் இல் பறந்து சென்றது. பியூரி இதை கவனிக்கவில்லை.

இன்னொரு பக்கம் கோதம் இன் எல்லைப் பகுதில் Joker, Harley ஐ தேடி சென்று கொண்டு இருக்கிறான். திடீர் என்று அவன் முன் ஒரு உருவம் தோன்றி ‘Hello Joker’ என்றது. Joker முகத்தில் ஒரு பயமும், அதே சமயத்தில் அதிர்ச்சி கலந்த ஒரு சிறு புன்னகையும் தோன்றியது…

அடுத்த பதிவில்…

Batman and ironman – 1

தீவிரவாதிகளால் பாகிஸ்தான் மக்களின் தவிப்பை, வேதனையை தொலைக்காட்சியில் பார்த்ததும் தனது Mark 30 Suit ஐ தனது டெக் இன் உதவியுடன் பயன்படுத்தி கொண்டு தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை அடைந்தான். பின் தனது Suit இல் உள்ள கருவி மற்றும் ஆயுதங்களால் அங்கு உள்ள தீவிரவாதிகளை அழித்து விட்டு மக்களை காப்பாற்றினான் ironman.

பின் அங்கு இருக்கும் ரகசிய குகைக்குள் செல்கிறான். அந்த குகையில் தீவிரவாதிகளின் உதவியுடன் Stucker எதையோ கண்டுபிடித்து கொண்டு இருந்தான் அந்த அறை முழுவதும், robot களின் புகைப்படமாக இருந்தன. ஆனால் அங்கு Strucker காணவில்லை. பின் ironman அனைத்தையும் தனது சிறிய missiles மூலம் அழித்து விட்டு அங்கு இருந்து தனது stark tower க்கு வந்தான். தனது டெக் இன் மூலம் suit ஐ கழட்டி விட்டு, சிறிது யோசனைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து

நியூயார்க் நகரம் மாலை வேளையில் tony stark தனது புது Jarvis உடன் Strucker குகையில் எதையோ கண்டு பிடிப்பதை பார்த்து புதியதாக ஒரு Project ஐ உருவாக்கி அதன் முடிவு பகுதில் இருந்தார். புதியதாக Upgrade செய்ய பட்ட A. I உடன், புதியதாக உருவாக்கிய Jarvis ஐ இணைத்து Ultron version 2 என்னும் பெயர் கொண்ட புதிய A. I உருவாக்கி மொத்த உலகத்தையும் ஏலியன்களிடம் இருந்தும் தீயவர்களிடம் இருந்து காப்பதே இவர் நோக்கம். ஏற்கனவே ஏற்பட்ட Ultron விபத்தால் இந்த முறை தனது advanced Prototype computer மூலம் ஈடுபட்டு பழைய தவறுகளை சரி செய்து புதியதாக உருவாக்க முயற்சி செய்தான். மீண்டும் தோல்வியே வந்தது. எங்கே தவறு செய்தோம் என்பதை பார்த்து கொண்டு இருக்கும் போது pepper pots இடம் இருந்து அழைப்பு வர Tony, Jarvis இடம் என்னவென்று பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு தனது தந்தையின் கனவான Free Internship Research and Science Technology (FIRST) என்னும் Education foundation ஐ திறக்க சென்று விட்டார்.

அதே சமயம் Jarvis ப்ரோக்ராம் இல் ஏற்பட்ட தவறை சரி செய்யும் முயற்சியில் இருக்கும் போது, ப்ரோக்ராம் இல் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் Jarvis மற்றும் புதிய A. I உம் இணைந்து Ultron V2 என்னும் புதிய A. I ப்ரோக்ராம் உருவானது. இந்த முறை உலகத்தில் ultron கள் மட்டும் வாழவேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கத்துடனு, இந்த உலகம் ultron கள் இல்லாததால் மோசமாக உள்ளது அதை நாம் சரி செய்ய வேண்டும், என்ற தீய எண்ணத்துடன் அங்கு இருந்து internet உதவியுடன் தனக்கான உடலை தயார் செய்யசென்று விட்டது.

இன்னொரு புறம் Gotham நகரத்தில் இருக்கும் The Gotham State Penitentiary சிறைச்சாலையில் உள்ள அனைத்து சிறைகளும் தானாகவே திறக்கப்படுகின்றன. 100க்கும் மேற்ப்பட்ட கைதிகள் அனைவரும் அங்கு உள்ள சிறை அதிகாரிகளை தாக்கி விட்டு வெளியே தப்பி சென்று கொண்டு இருந்தனர். சிறைக்கு எதிரே இருந்த ஒருவன் கைதிகள் அனைவரும் வெளியே வருவதை பார்த்ததும் சிறையை நோக்கி நடந்து சென்றான். கைதிகள் தப்பி செல்வதை கண்ட Commissioner Gordon அருகில் இருக்கும் Building க்கு சென்று Bat Signal ஐ on செய்தார். இதை பார்த்த Alfred, Bruce Wayne ஐ வீடு முழுவதும் தேடி பின் Bat Cave க்கு சென்றார்.

சிறையில் உள்ள ஒவ்வொரு போலீஸ் ஐ உம் கொன்று விட்டு உள்ள சென்று கொண்டு இருந்தான். இறுதியாக Harvey dent இருக்கும் இடத்தை அடைந்து, சில கைதிகளின் உதவியுடன் Harvey dent ஐ கடத்தி வெளியே கொண்டு வந்தான். Bat Cave இல் Bruce Wayne தனது Bat suit மற்றும் Gadgets ஒவ்வொன்றாக அணிந்து கொண்டு இருந்தார். பின் தனது Bat Mobile ஐ Remote மூலம் இயக்கி, Grappling gun உதவியுடன் பறந்து batmobile இல் ஏறி சிறையை நோக்கி சென்றார். Harvey dent யார் நீ என்று கேட்டுக்கொண்டே இருக்க, அவன் அந்த Bat Signal ஐ ஒரு பார்வை பார்த்து விட்டு, முகமூடியை கழட்டி தனது Trade mark சிரிப்புடன் நான் தான் Joker என்று கூறி அவனை காரில் வைத்து கடத்தி சென்று விட்டான் ஜோக்கர்.

ஜோக்கர் ஏன் Harvey dent ஐ கடத்தினான், Batman கோதமில் அடுத்து என்ன செய்ய போகிறான், ultron எங்கே இருக்கிறான். Ironman இன் அடுத்த திட்டம் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.