Speed Man – Part 2

204‌0 பது நம் வாழும் பூமி இந்திய பெருங்கடல். Australia வை சார்ந்த சுற்றுலா கப்பல் 1000 பயணிகள் உடன் கடலில் விபத்துக்குள்ளானது. ஒரு சில பயணிகள் கடலிலும், பலர் கப்பலிலும் உயிர்க்கு போராடி கொண்டிருந்தனர். அருகில் உள்ள கடற்படை வீரர்கள் அவர்களை காப்பாற்ற விரைந்து வந்து கொண்டு இருந்தனர். கப்பல் இருந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் வானில் இருந்து ஒரு ஒளி கடலில் விழுந்தது. ஒளி விழுந்த அதிர்வில் கப்பல் விரைவாக மூழ்கியது. ஒளி அங்கு கடலில் உயிர்க்கு போராடிய மக்கள் மீது ஒளி தஞ்சம் அடைய முயற்சி செய்து அவர்கள் உடல் தாக்குப்பிடிக்காமல் உடல் எரிந்து கடலில் மிதந்தது. கடற்படை வீரர்கள் அங்கே வரும்பொழுது கப்பல் கடலில் முழுவதும் மூழ்கியது. பலர் கடலில் மூழ்கியும் சிலர் கடலில் தீயல் எரிந்தும் இறந்தனர் மற்றும் அந்த கடல் பகுதியில் வாழ்ந்த சில சுறாக்களும் தீயல் எரிந்து இறந்தது கடற்படை வீரர்களுக்கு தெரியவந்தது. பல நாடுகளை சார்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட இந்தியாவை சார்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர் அனைவரும் கப்பல் விபத்தில் இறந்து விட்டனர் என‌ அறிவிக்கப்பட்டது.

இலங்கை, தலரம்பா கடற்கரை காலை மணி 04:50. கடற்கரையில் ஒரு உடல் கரை ஒதுங்கி கிடைக்கிறது என அங்கு இருக்கும் கடல்சார் காவல் துறையினர்க்கு தகவல் கிடைக்கிறது ‌. மருத்துவ குழு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் விரைந்து சென்றனர். உடலில் உயிர் இருக்கிறது என்று அறிந்த மருத்துவர்கள் அரசு ஆஸ்பத்திரி யில் வைத்து சிகிச்சை கொடுக்கிறார்கள்.

சிகிச்சை அளிக்கும் போது அவர் தமிழ்மொழியில் முனகினார் என அறிந்த காவல்துறையினர் இலங்கை தூதரகம் மூலம் இந்தியா தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்தியா ‌‌‌தூதரகம் தமிழ் நாட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த நபரின் புகைப்படம் மட்டும் அங்கு அடையாளங்களை‌ அனுப்பி வைத்தனர்.

ஒரு சில நாட்களில் அந்த நபர் பெயர் அர்ஜுன், கப்பல் விபத்தில் இறந்து விட்டார் என அறிவிக்கபட்டவர் என்பது அனைவருக்கும்‌ தெரியவருகிறது.
அவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் முயற்சியில் அர்ஜுன் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகிறார்கள். இலங்கை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மருத்துவ குழு அர்ஜுனுக்கு கடந்த காலம் ஞாபகம் இல்லை என தெரிவித்தனர்.

அர்ஜுன் அவர் அக்கா, மாமா உடன் தன் கடந்த காலம் ஞாபகம் இல்லாமல் வாழ்க்கை ஆரம்பிக்கிறார்.‌ அர்ஜுன்‌ தனக்கு ஓதுக்கபட்ட அறையில் தனிமையில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இருந்தான் அனால் சுறுசுறுப்பாக
இருந்தான். அர்ஜுன் அறைக்கு‌ள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதுவே அர்ஜுன் மாமாக்கு அர்ஜுன் அறையில் கேமரா வைக்கும் என்னம் தோன்றியது. ஒரு நாள் அதுவும் கைக்கூடியது தன் நண்பனின் ஆலேசனை படி அர்ஜுன் அறை கதவில் சிறு தோளையிட்டு கேமரா பொருத்தப்பட்டது. அன்று முதல் அர்ஜுன்‌ மாமா கெஸ்வன் கேமரா மூலம் அர்ஜுனை‌ கண்காணித்து வந்தான். அர்ஜுன் தனது அறையின் சுவர்களியின் மீது நடந்து கொண்டுருந்தான் அர்ஜுன்‌ உடம்பில் இருந்து ஒரு விதமான ஒளியும் அறை முழுவதும் பரவி இருந்தது இதை சற்றும் எதிர்பார்க்காத கெஸ்வன்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்து இருந்தது அர்ஜுன் பல விதமான ஓவியங்களையும் வரைந்து வைத்துருந்தார். அர்ஜுன்‌க்கு ஏதோவொரு சக்தி இருக்கிறது என்று தெரிந்த கெஸ்வன்க்கு அன்று இரவு தூக்கம் பல கனவுகள் தந்தது. அர்ஜுனுக்குள் இருக்கும் திறமையை பணமாக மாற்றும் ஆசை உருவாக்கியது. இதுவே அர்ஜுன் மித்திரன் ஆக‌ மாற காரணமாகிறது.

Leave a comment