Tag Archives: Disney

Star Wars story

நம்மளை Marvel, DC கட்டிபோட்டது என்றால் நமக்கு முந்தைய தலைமுறையை Star Wars கட்டிபோட்டது. விண்வெளி எப்பவுமே நமக்கு எண்ணிலடங்கா குஷியை தரும். குறிப்பாக விண்வெளி படம் என்றால் அதில் ஆர்வம் சற்று தூக்கலாகவே இருக்கும். STANLEY KUBRICK Space Odessey எடுத்து மொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தினார். அதன் பின்பு, George Lucas எனும் மேதை Star Wars இல் உலகை கட்டிப்போட்டார். பொதுவாக மனிதர்களுக்கும், ஏலியன்களுக்கும் தான் சண்டை, பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் தான் சண்டை என்ற சாதாரண Trend ஐ உடைத்து நட்சத்திர மண்டலங்களில் இருக்கும் கிரகங்களுக்குள் சண்டை என்ற Fresh concept ஐ உள்ளே இறக்கினார். பூமியில் நடக்கும் அரசியல் சூதுகளை அந்த சண்டைக்குள் கதைகருவாக நுழைத்தார்.

புரட்சியாளர்கள் என்றுமே தீவிரவாதிகளாக தான் சித்தரிக்க படுவார்கள் ஆளும் அரசர்களால். அதுவும் முந்தைய அரச குடும்பமே புரட்சியாளராக இருந்தால் என்ற கதையே Star Wars. நட்சத்திர மண்டலங்களின் தலைவனாக சூதால் Dark Lord ஆகிறார் Palpatine. பொதுவாக அரசனுக்கு ஆகச்சிறந்த தளபதி ஒருவர் எப்பவுமே இருப்பார். சில இடத்தில் அரசரை விட அவரை தான் மக்கள் விரும்புவார்கள். வல்லவராயன் வந்தியத்தேவனா, அருன்மொழி வர்மனா என்றால் வந்தியன் தான் என்று கூறுவார்கள். தளபதியில் தேவா வா சூர்யாவா என்றால் சூர்யா தான் என்பார்கள். அதுபோல் தான் Darth Vader எனும் மரண மாஸ் வில்லன் கதாபாத்திரம். Resistance எனப்படும் புரட்சி கும்பலை ஒழிக்க முனைப்போடு சுத்துவார் Dark Vader. Resistance இல் இருப்பவர்கள் யார் என்றால் அது இளவரசி Leia அப்புறம் Luke. இதில் இருவருக்குமே Force அதிகமாக இருக்கும். FORCE என்பது ஒரு சக்தி அது positive என்றால் அதில் பிரச்சனை இல்ல Negative என்றால் முடிந்தது. Darth vader negative Force ஆல் ஆட்கொள்ளப்பட்டவர். Luke க்கு Force இருப்பதை அறிந்த Jedi Master Obi wan Kenobi அவருக்கு Jedi training கொடுக்குறார்.

ஒரு கட்டத்தில் அவனிடம் உள்ள Force ஐ வெளிக்கொனர Darth Vader இடம் சாவதை போல் அந்த உடம்பை விட்டு பிரியுறார். இதன்மூலம் Force கட்டுபடுத்த தெரிந்த Luke Darth vader இடம் மோதும் போது ஒரு கட்டத்தில் நீ தான் என் மகன் என்று எல்லாருக்கும் அதிர்ச்சியை தருகிறார் Darth Vader. Mystic Force இல் Koragg தான் Udonna வின் கனவர் மற்றும் Nick இன் அப்பா என்று twist வைப்பார்களே அது போல. பின்பு Luke தேடும் போது உண்மையாகவே Darth vader இன் பையன் என்பதையும் Leia தான் தனது தங்கை என்று தெரிந்து கொள்கிறார். Star wars இல் வந்த முதல் 3 episode கள் இதை தான் base பண்ணி இருக்கும். பிறகு Anakin Skywalker (Darth Vader), qui gon, Obin wan, Jedi என்று prequel இல் பயனிக்கும். இப்படி பயனித்த star wars ஐ மீண்டும் தொடங்கியது Disney ஆனால் அது Disaster என்றே சொல்லலாம். இருந்தாலும் கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான் என்பதை போல் கெட்டாலும் Star wars Star wars தான். Today is the STAR WARS day. May the force be upon us.

நேரமில்லாமையால் ரத்தின சுருக்காமாக எழுதியிருப்பேன் பின்பு Detailed ஆக எழுதுகிறேன்.

#Stephenstrange